Saturday, May 20, 2017

ஆம் ஆத்மி ஷேம் ஷேம் ஆத்மி

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது -CM பழனிசாமி # மோடி சொல்வதை ஓடோடி செயல்படுத்துறோம்னு சொல்லுங்க


===============2 ரூ.362 கோடி வழங்கினால் தான் கிருஷ்ணா நீரை திறப்போம்: தமிழக அரசிடம் ஆந்திர அதிகாரிகள் உறுதி # தவிச்ச.வாய்க்கு தண்ணி தர பேரமா?
=================3 அரவிந்த் கெஜ்ரிவால் கறுப்பு பணம் மாற்றினார் - கபில் மிஷ்ரா நிரூபிக்கப்பட்டால் ஆம் ஆத்மி ஷேம் ஷேம் ஆத்மி
=================
4ஒரு குடும்பத்தில், சகோதரர்களுக்கு இடையே மன வேறுபாடு இருக்கும். விரைவில் ஒன்று கூடுவோம்-தமிழக சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் # அழகிரி-ஸ்டாலின் கதை போலவா?===================

சென்னை மாநகர பஸ்களுக்கான தற்காலிக பணி # ஏற்கனவே வேலை செஞ்சவங்களுக்கே சேர வேண்டிய பணம் தர முடியலை, இவங்களுக்கு எப்டி சம்பளம் தருவீங்க?


====================


அ.தி.மு.க., அணிகளுக்குள் மோதல் இல்லை: OPS #  கை கலப்பு வேணா நடக்கும், ஆனா 2 அணிகள் கலப்பு நடக்காது போல


==================

லண்டன் தொழில்அதிபர் மீது விவாகரத்து வழக்கு தொடர்ந்த மனைவிக்கு ரூ. 3,750 கோடி வழங்க உத்தரவு # அவரோட சொத்து மதிப்பில் 41% ,பிளான் பண்ணி சண்டை போட்டிருக்கு


=====================

தமிழகத்தின் தேவையை மத்திய அரசு உடனுக்குடன் பூர்த்தி செய்கிறது: அமைச்சர் தங்கமணி # தமிழகத்தின் தேவை திறமையா சுயமா முடிவெடுக்கும் சிஎம்


================
9 அரசியலுக்கு வந்தால் நியாயமாக இருப்பேன்; பணம் சம்பாதிக்க தமது ரசிகர்களை விட மாட்டேன்- ரஜினி # வேலைக்குப்போயாவது சம்பாதிக்கலாமா?
===============10 ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம்-ஸ்டாலின் #"சினிமா தளபதி " VS.அரசியல் தளபதி ன்னு செம போட்டியா இருக்கும்ல?
==============11 ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் சிபிஐ சோதனை

# சிதம்பர ரகசியம் எதுனா வெளில வருமா?


=============

12 ரஜினி் அரசியலுக்கு / பாஜகவுக்கு வந்தால் மிக்க மகிழ்ச்சி - பொன்.ராதா # 20 வருட ரஜினிவரலாறு தெரியாம சந்தோசப்பட்டுட்டு இருக்காரு


==================

13 சோதனையில் எந்த ஆவணத்தையும் கைப்பற்றவில்லை - கார்த்தி சிதம்பரம்...
நடந்த எல்லா ஹவுஸ் ஓனரும் இதே தான் சொல்றாங்க

==============

14 ஆட்சி தொடருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது - ஸ்டாலின். ஏற்பட்டுள்ளதுனு சொல்லுங்க


==================

15 என் மீதான

குற்றச்சாட்டுக்களை
நிருபிக்க முடியாது
-கார்த்தி சிதம்பரம்
# சாணக்கியத்தனமா இவரும் ஊழல் சாமார்த்தியமா செஞ்சிருப்பாரோ?


===================

16 அரசு பேருந்துகளை

இயக்க மணல் லாரி
ஓட்டுனர்களுக்கு அழைப்பு
லோடு இறக்கற மாதிரி ஜனங்களை ஒரே முட்டா ஒரே இடத்துல இறக்கிவிட்றப்போறாக


==============

17 ரஜினி தமிழரே கிடையாது

அரசியலுக்குவந்தால்
தோல்வியடைவார்-சு.சுவாமி
MGR ஐ மலையாளினு கலைஞர் சொல்லி வாங்கிக்கட்டிக்கிட்டாரு==============

18 காங்கிரஸ் இல்லாத

இந்தியாவை உருவாக்க
பாஜக நினைக்கிறது
# அடுத்த ரெய்டு இவர் வீடாத்தான் இருக்கும்
-பீட்டர் அல்போன்ஸ்


================

19 ரஜினி காங்கிரசில் சேர்ந்து அகில இந்திய அளவில் வழி நடத்த வேண்டும்: விஜயதாரணி பகிரங்க அழைப்பு # டூ லேட்.மோடி முந்திக்கிட்டாரே=================

20 ப.சிதம்பரம் இல்லத்தில் நடந்த சிபிஐ சோதனையில் அரசுக்கு தொடர்பில்லை : வெங்கையா நாயுடு#,அப்போ சிபிஐ பிரைவேட் லிமிட்டடா?


=========================

0 comments: