Saturday, May 06, 2017

திருச்சி முக்கொம்பு டேம்

பாகுபலி படத்தில் சமுதாய கருத்து
இல்லை- பா.ரஞ்சித் # கபாலி ல நாம சொன்ன சமுதாயக்கருத்துக்கள் என்னென்னெ?

===============

2 ஈழத்தமிழருக்காக ஐ.நாவில் ஸ்டாலின் பேசுவார்:அறிவாலயம்.
# மேடை ஏறி பேசுவாரா?சும்மா பக்கத்து சீட் துரை முருகன்ட்ட பேசுவாரா?

=================

3 ஜெ வின் கோடநாடு எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய், உயில், ஆவணங்கள் கொள்ளையா? - கேரள சாமியாரிடம் தீவிர விசாரணை # கேரளம்.ரணகளம்

===============

4 OPS,EPS இடையே கருத்து மோதல்: ADMK 2 அணிகள் இணைவது சாத்தியம் இல்லை # ஆளுங்கட்சி ரெண்டு பட்டா எதிர்க்கட்சிக்கு கொண்டாட்டம்


==================

5 ADMKவால் தமிழக அரசு ஸ்தம்பிப்பு: பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; திருநாவுக்கரசர் # மோடி எடுத்த நடவடிக்கையால்தாம் அப்டி ஆச்சாமே?

==============

6 ADMK,DMKவின் காலம் முடிந்து விட்டது- பொன்.ராதா# 7PM ஆனதும் இனி சூரியன் அவ்ளோதான் கற மாதிரி.அடுத்த நாள் உதிக்குமே

==============

7 எந்த கட்சிக்கும் நிரந்தர சின்னம் கூடாது தலைமை தேர்தல் ஆணையரிடம் அன்புமணி # சின்னத்துக்கான.வாக்கு வங்கியை சின்னாபின்னம் ஆக்க முயற்சி?

==============

8 முகநூல் மூலம் காதலித்து சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது எல்லா வகையிலும் பெண்ணுக்கு கேடு தரும்.

===============

9 யார்அதிகம்வெளிநாடு சென்றுள்ளனர்?மன்மோகனை கிண்டல்செய்தஅமித் ஷா # மமோ மாசம்.1,தடவை டூர்,ந மோ 2 மாசத்துக்கு 1,தடவைதான் இந்தியாவே.வர்றார்


==================

10 720 சவரன் நகை கொள்ளை உறவினர் கைது:திருப்பதிக்கு அனுப்பிவிட்டுதிட்டத்தை அரங்கேற்றம்# அங்கே மொட்டை அடிக்க அனுப்பிட்டு இங்கே இவர் அடிச்ட்டாரா?


==================

11 தியேட்டரில்
வலம்புரிஜான் மகன் கிரண்பிரபு பெண்ணுக்கு தொல்லை தந்ததாக கைது # அப்பா சம்பாதிச்ச நல்ல பேருக்கு (வலம்புரி)சங்கு ஊதிட்டாரு மகன்


==================

12 உ.பி மதுராவில்
போன் பேசியபடி பெண்கள் தெருவில் நடந்தால் 21,000 பைன் # பெண்களின் பேச்சு சுதந்திரம்னு தப்பா நினைச்ட்டாக போல

=================

13 பொது இடத்தில் அமைச்சர்கள் மத்திய அரசை விமர்சிக்க கூடாது - எடப்பாடி ப்ளேஸ் -வீட்ல ரூம் கதவை சாத்தி மெல்லமா விமர்சிச்சுக்கலாமா?


==================

14 தமிழகத்தில் BJP மிக வேகமாக வளர்ந்து வருகிறது - பொன்.ராதா
# திருச்சி முக்கொம்பு டேம் ல 4 தாமரைக்குளத்துலயும் தாமரை வேணா வளருது


====================

15 அமைச்சர் காமராஜ் சட்டத்திற்கு மேலானவரா,-உச்ச நீதிமன்றம் கேள்வி.#,சட்டத்தை மதித்தால் MALE ஆனவர்.இல்லைன்னா FEMALE ஆனவர்

=================

16 அமைச்சர் காமராஜ் மீது வழக்கு போடாதது ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் # காமராஜர் பேருக்கு களங்கம்வந்துடக்கூடாதுனுதான்


====================

17 தமிழகத்தில் ஊழல் முற்றிலுமாக ஒழியப் போகிறது - ஸ்டாலின்.
#,2ஜி தீர்ப்பு (ஜூன் மாசம்)வரப்போகுது ங்கறத சூசகமா சொல்றாரு

===================

18 தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது-பொன்.ராதா # அதுக்குப்பரிகாரமாத்தான் டாஸ்மாக் புதுசு புதுசா திறக்கறமே?


====================

19 சென்னையில் 113 பேரை ஏமாற்றிய பெண் மீது புகார்!
பசங்களை ஏமாத்துவதும் பசங்க பொண்ணுங்க கிட்டே ஏமாறுவதும் சகஜம் தானே?

===================

20 அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும்!” : புகழேந்தி# CG ஒர்க் இன் ப்ராக்ரஸ்


==================

0 comments: