Sunday, November 17, 2013

நாட்டையே வித்துட்டு இருக்கற ஆளுங்க மட்டும் தான் PM ஆகனுமா

1. இந்தியப் பொருளாதார நிலை மேம்படும்: சிதம்பரம் நம்பிக்கை # இப்டியே 10 வருசமா சொல்லிட்டு இருக்கீங்க , கிளி ஜோசியக்காரன் தோத்தான் போங்க


=======================


2 நேரடி ஒளிபரப்பில் விஜதாரணி (காங் MLA).இடம் தரக்குறைவாக பேசிய தமிழ்வாணன் மீது நடவடிக்கை # போலீஸ் மேலிட உத்தரவுப்படி “கை” வெச்சிருக்கும்==========================


3  கோலியான் கி ரஸ்லீலா ராம்-லீலா'  டைட்டிலில் ராம் லீலா வை நீக்கனும் - கோர்ட் # இதுல காமெடி என்னான்னா இப்போ ராம் லீலா தான் மெயின் டைட்டிலே


==========================


4 தாலிக்கு தங்கம் கொடுக்கும் அரசு முதலிரவுக்கு பெட் சீட் கொடுக்காமல் இருக்கிறது-அன்புமணி # லந்து மணிய்யா இவரு


===================


5 மதுரையில் 5 பவுன் நகையைக்கொள்ளை அடிக்க சார்பதிவாளர் மனைவியை கொலை செய்த கும்பல் # கட்டுபடி ஆகாதே, விசாரிங்க,வேற மேட்டரா இருக்கும்=====================


6 6 மணி நேர மின்வெட்டு மீண்டும் அமலுக்கு வந்துவிட்டது -கருணாநிதி  # தலைவருக்கு மெல்ல அவல் கிடைச்சிடுச்சு , அசத்துங்க


====================


7  ராகுலின் தாத்தா, பாட்டி, அம்மா அனைவரும் இந்தியாவை நாசமாக்கிவிட்டனர்: மோடி # பையனுக்கும் ஒரு வாய்ப்புக்குடுன்னு கேட்பாங்க போல


============================


8  கடல் நாயகன் கவுதம் கார்த்திக்கும் நானும் ஓடிப் பிடிச்சு விளையாடுவோம்:- லட்சுமி மேனன் # எனக்கு நம்பிக்கை இல்லை, ஏதாவது வீடியோ ஆதாரம்?


================

9 நாட்டை விற்பவர்களை விட டீ விற்பவர் எவ்வளவோ மேல் : மோடி # இப்போ எதுக்கு சம்பந்தமே இல்லாம டீக்கடை ஓனர்சை வம்புக்கு இழுக்கறீங்க?


==================


10 ஆர்வத்தில் கவர்ச்சி நடிகை உதட்டைக் கடித்த கஞ்சா கருப்பு! # ஓஹோ, இதுதான் ஆர்வக்கோளாறா?


=====================11 டீ வித்துட்டு இருந்தவங்க எல்லாம் பிரதமர் ஆக முடியாது - காங்கிரஸ் # நாட்டையே வித்துட்டு இருக்கற ஆளுங்க மட்டும் தான் PM ஆகனுமா?=====================


12 காந்திக்குப் பிறகு சிறந்த தலைவர் ராமதாஸ் தான் - அன்புமணி # நல்ல வேளை, காந்தி ஆல்ரெடி போய்ட்டாரு, இருந்தா ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார்


===================


13 சென்னையில் விரைவில் ஆகாய நடைபாதைகள் # டிராபிக் போலீஸ் பாரசூட் கட்டியாவது மாமூல் வாங்க அங்கே வந்துடுவாங்க


=====================


14 35 வருடங்களுக்கு முன் வெளிவந்த ‘சங்கராபரணம்’ படம் தமிழில் வருகிறது # மெருகேத்தறோம்னு சந்தானம் காமெடி டிராக் அட்டாச் பண்ணிடாதீங்க


===================

15  தேநீர் விற்றவன் தேச தலைவனா? - அரவிந்தன் நீலகண்டன் # பஞ்சமாபாதகம் செஞ்சவரை பாசத்தலைவா னு கூப்ட்டதுக்கு இது தேவலை


=================

16 கொல்கத்தாவின் தெருவோர வண்டி கடையில் வடை சாப்பிட்டார் இங்கிலாந்து பிரதமர் # அவராவது காசு குடுத்துட்டாரு. சிலர் ஓசி லயே கூழ் குடிக்கறாங்க=====================


17 நல்ல பெயரை எடுங்கள்: ஜெயலலிதாவுக்கு வீரமணி அறிவுரை"# ஆட்சிக்கு வந்ததும் எல்லா அரசு அலுவலகங்களிலும் இருந்த மு க பேரை எடுத்துட்டேனே? -ஜெ


================

18 தமிழக காங்கிரஸ் வரும் திங்கட்கிழமை முதல் உச்சம்! புத்திசாலி ராகுல் புதிய திட்டம்! #,என்ன திட்டம் போட்டாலும் நோ யூஸ்.சனி உச்சத்துல


==================

19  ராஜராஜசோழன் வன்னியர் தான் -வன்னியர் சங்கம் # நல்ல வேளை.நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ வை வன்னியர்னு சொல்லலை.


=================

20 கமல் ன் உத்தம வில்லன் ல் கிரேசிமோகன் # காமெடி அதகளம் தான் ;-)))))


==================

0 comments: