Friday, November 08, 2013

ரஜினியா? அஜித்தா? - யார் கலெக்சன் ஸ்டார் ?ஆராய்ச்சி முடிவு

1. கவர்ச்சிக்கு மாறினா சார்மி .-செய்தி # இதுக்கு முன்னால அவர் குணச்சித்திரத்துல குடி இருந்தாராமா?================


2 ரீமா கல்லிங்கல் திருமணம் இன்று கொச்சியில்  நடந்தது -செய்தி #  ஆகா! தலை தீபாவளியை ரொம்ப நெருக்கத்துல கொண்டாடுறது ஷாலினிக்குப்பின் இவர்


====================

3 தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதியுங்கள்: - காங்கிரஸ் ் # தடை விதிச்சுட்டா் இந்தியாவோட தலை எழுத்தையே மாத்தி எழுதிடுவீங்களா?


===================


4 இறப்பதற்குள் தனி ஈழம் வாங்கித் தருவேன் -முக # பதவியில் இருக்கும்போது டியூட்டிக்குப்போகாம இப்போ போய் என்ன பயன்?


=================5 கேரளாவில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி - முஸ்லீம் லீக் # நல்ல வேளை.2க்கும் மேல் எப்போதும் வேண்டாம்னு கவர்மென்ட் சொல்லுச்சு====================


6 திருப்பூரில் சாக்கு குடோனில் தீ விபத்து...# எதனால் விபத்து னு கேட்டா ஏதாவது சாக்கு சொல்வாங்க


===================


7 நான் சிகப்பு மனிதன்’ படத்தில் மீண்டும் இணையும் விஷால்–லட்சுமி மேனன்# ரீ மேக் மனிதன்? புது மனிதன்===================


8 உளவு துறை எச்சரிக்கை; "ஆபரேஷன் அம்லா" துவங்கியது :பயங்கரவாதிகள் போர்வையில் 47 பேர் சிக்கினர் # நாகார்ஜூன் கிட்டே அனுமதி வாங்கியாச்சா?


====================
9  ஐ' படத்துக்கு எமி ஜாக்சனை தேர்ந்தெடுத்தது ஏன்? ஷங்கர் விளக்கம் # பொதுவாவே அண்ணன் தமிழ்ப்பொண்ணை ஹீரோயின் ஆக்கமாட்டாரு,இதுல என்ன விளக்கம்?
===================
10  முத்தக்காட்சியில் நடிக்க ஜி.வி.பிரகாஷ்க்கு அவர் மனைவி  தடை # “மத்த” காட்சில நடிக்க தடை இல்லையே?
===================
11 திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்.- ரீமா கல்லிங்கல் #  இன்னும் எங்களை கொல்வீங்கள் ?


=====================
12 மோசடி செய்து வரிவிலக்கு பெற்றுள்ளது: அழகுராஜாவை எதிர்த்து வழக்கு! # கதைல தான் மோசடின்னா டைட்டில் லயும் மோசடியா? 18 கோடி போச்சா?
=====================
13 சேனல் 4 வெளியிட்ட வீடியோவைப் பார்த்து கண்ணீர் வருகிறது-கருணாநிதி #  உங்க உருக்கத்தைப்பார்த்து எங்களுக்கு ரத்தக்கண்ணீரே வருது தலைவா
=====================
14 ஒரு ராத்திரி என்கூட தங்கினா, பிறவிப் பயனை அடைவாய்! ''திருவள்ளுரில் இருக்கும் ஒரு போலி சாமியார் வலை # திருட்டு லொள்ளு சாமியார்


===================


15 ஸ்வேதா மேனனை உரசியதாக புகாருக்குள்ளான 73 வயது எம்.பி மீது வழக்கு # சொர்க்கத்துக்குப்போக வேண்டிய வயசுல பெருசு ஜெயிலுக்குப்போக தலை எழுத்து


===================


14 வாட்சனைத் திட்டுவதா.. ரவீந்திர ஜடேஜாவுக்கு 10 பர்சன்ட் சம்பளம் அபராதம் # பாராட்டிப்பேசினா 20% சம்பளத்தில் சேர்த்துக்கொடுத்துடுவாங்களோ?=================


15 தீபாவளி -3 தினங்களில் டாஸ்மாக் விற்பனை 370 கோடி - செய்தி # கலெக்ஷன் ஸ்டார் ரஜினியோ அஜித்தோ இல்லை போல.டாஸ்மாக் தான் நெம்பர் ஒன் கலெக்சன்


=================


16 தமிழ் மக்களின் உணர்வுகளை அறிந்து பிரதமர் நல்ல முடிவு எடுப்பார்- ஜெயந்தி நடராஜன் #ஒரு தமிழராலயே தமிழனோட உணர்வை புரிஞ்சுக்க முடியாதப்ப )....


================


17 குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களில் 300பெண்களும் அடங்குவர்-செய்தி# என்னது? பொண்ணுங்க அடங்குவாங்களா? வாட் எ மெடிக்கல் மிராக்கிள்


====================


 18 காங் எம் பி சில்மிஷ புகாரை வாபஸ் பெற்றார் ஸ்வேதாமேனன் - செய்தி # அதுக்குள்ளே என்ன கல்மிஷம் நடந்தது மேடம்?===================


19 பள்ளி பிரார்த்தனையில் கை கூப்பி நிற்கும்படி கட்டாயப்படுத்த முடியாது:உயர்நீதிமன்றம் # நல்ல வேளை.போயஸ் தோட்டம் பத்தி சொல்லி இருந்தா "==================


20 நரேந்திர மோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: மத்திய அரசு முடிவு: # சோனியா,ராகுல் ,ப்ரியங்கா 3 பேரும் சேர்ந்து எடுத்த முடிவு போல


========================

0 comments: