Thursday, November 28, 2013

தெஹல்கா மேனேஜிங் எடிட்டர் ராஜினாமா; போலீஸ் முன்பு தேஜ்பால் இன்று ஆஜராகிறார்

புதுடில்லி: பிரபல புலனாய்வு பத்திரிகையான தெஹல்கா மேனேஜிங் எடிட்டர் தனது பொறுப்பில் இருந்து விலகினார். தன்மீதான நம்பிக்கையில் சிலருக்கு சந்தேகம் ஏற்படுவதால் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட மற்றும் அரசு தரப்பில் நடந்த ஊழல்கள், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தமது புலனாய்வு நிருபர்கள் மூலம் அம்பலப்படுத்தவதில் தெஹல்காவுக்கு என தனி இடம் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பத்திரிகை நிர்வாக ஆசிரியர் தருண்தேஜ்பால் மீது சக பெண் நிருபர் ஒருவர் செக்ஸ் புகார் தெரிவித்திருந்தார். இதனை கோவா போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தவறுக்கு வருந்துவதாகவும், தேஜ்பால் தமது ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார்.

தேஜ்பால் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவா போலீசார் நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று மதியம் 3 மணிக்குள் அந்த கெடு முடிகிறது.

இதனால் தேஜ்பால் இன்று ஆஜராவார். விசாரணைக்கு பின்னர் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குவர்.

சக ஊழியர்களுக்கு இமெயில் : இதற்கிடையில் தேஜ்பால் மீதான புகாரை மூடி மறைக்க தெஹல்காவின் மேனேஜிங் எடிட்டர் ஷோமா சவுத்ரி மீது சிலர் சந்தேகம் தெரிவித்தனர். இதனை நிராகரித்த சவுத்ரி இன்று ராஜினாமா செய்துள்ளார். இவர் இன்று நிர்வாக சக ஊழியர்களுக்கு இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் தெஹல்கா ஊழியர்கள் மற்றும் நிறுவனத்திற்கு ஏற்பட்ள்ள துயரமான நேரம் இது. தமது சக பெண் ஊழியர் அளித்த புகார் அடிப்படையில் தான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளேன். கமிட்டி அமைக்கப்பட்டு விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இருப்பினும் என் மீதான நேர்மையில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நான் தேஜ்பாலை காப்பாற்ற முயற்சிப்பதாக சொல்கின்றனர். என்னை பொறுத்தவரை எனது நேர்மையில் சந்தேகமும், பத்திரிகையின் மீது களங்கம் ஏற்பட நான் விரும்பவில்லை. இதனால் எனது மேனேஜிங் எடிட்டர் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன். - ஷோமா . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தேஜ்பால் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம்: தேஜ்பாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் டில்லியில் உள்ள அவரது வீடடின முன் கூடினர். இங்கு அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனையடுத்து தேஜ்பால் வீட்டு முன்பு பரபரப்பு எற்பட்டது.

நன்றி : தினமலர்

0 comments: