Monday, November 04, 2013

ஆல் இன் ஆல் அழகு ராஜா - காமெடி கும்மி

1. பிகைன்ட் வுட் அழகுராஜாவுக்கு 2.25 /5 # இந்த மூஞ்சிக்கே பொண்ணு பிடிகலையே மொமென்ட்


===============


2 சார், படம் ஃபேமிலி எண்ட்டர்டெயின்மெண்ட்னீங்க , ஊத்திக்குச்சே?ஹி ஹி , டி வி ல சீக்கிரம் போட்ருவான், அப்போ ஃபேமிலியோட பார்க்கலாமே?


=================


3 க்ரீன் ! இனி ரெட் கூட மோதுவீங்க ?


=================


4 பில்டப் யார் வேணாலும் குடுக்கலாம்.ஆனா ஹிட் படம் எல்லாரும் குடுத்துட முடியாது # க்ரீன் ஊ ஊ======================


5 ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவரையே கவுத்துட்டார்னா அவர் எப்பேர்ப்பட்ட ராசிக்காரரா இருக்கும்?


===================


6 பிரியாணி பொங்கலுக்கு வருதாம்.இந்தப்பக்கம் ஜில்லா .அந்தப்பக்கம் வீரம் .அய்யோ பாவம்====================


7 தமிழ் நாடு பூரா மெயின் தியேட்டர் ஓனர்ஸ் எல்லாம் சைடு கேட் வழியா தான் வீட்டுக்குப்போறாங்களாம் # க்ரீன் டீ நல்லது.ஆனா.,


==================


8  வாங்க சார் வாங்க 100 ரூபா டிக்கெட் 50 ரூபா தான். மனைவிக்கு டிக்கெட் எடுத்தா மச்சினிக்கு ப்ரீ


===============

9  தமனா - என் படம் எதுவும் ரிலீஸ் ஆகலை.ஆனாலும் இந்த தீபாவளி எனக்கு சந்தோசமான தீபாவளி தான்.கடவுள் இருக்கான் கொமாரு====================

10  கார்த்தி டூ சந்தானம் - உள்ளூர் ல நம்ம பப்பு வேகாதுன்னு சொல்றியா ? # எந்த ஊர்ல யும் இந்த பப்பு வேகாது.போட்ட டப்பு ஊ ஊ


========================


11  எம் ராஜேஷ் தொடர்ந்து 3 ஹிட் படம் கொடுத்திருக்காரு.கார்த்தி தொடர்ந்து 3 பிளாப் படம் கொடுத்துட்டாரு.எப்டி ஜோடிப்பொருத்தம் ?


=================


12  ஆல் இன் ஆல் அழகுராஜா தயாரிப்பாளர் ஆல் இன் ஆல் அடகு வைக்கப்போகும் ராஜா


===================


13  அழகுராஜாவின் தோல்வி கார்த்தியை பாதிக்காது.ஏன் னா சந்தானம் தான் படத்தின் ஹீரோ - தோசையைத்திருப்பிப்போட்ட சிவகுமார் # சும்மா


===================


14  ஆரம்பம் எடுங்க னு ஈரோடு அபிராமி தியேட்டர் மேனேஜர் ட்ட சொன்னப்ப " தம்பி ! நான் 20 வருசமா பீல்டுல இருக்கேன்.எனக்குத்தெரியாதா?ன்னார்


=====================


15 சந்தானம் - ரஜினி ,கமல் எல்லாம் தர்பூசணிப்பழம் மாதிரி .சீசனுக்கு வந்துட்டுப்போய்டுவாங்க # கண்டிக்கத்தக்க வசனம்=====================


16 மழை வந்தா மயில் தோகை விரிச்சு ஆடுமாம்.அதைப்பார்த்து வான் கோழிக்கும் ஆட ஆசை வருமாம்.ஆனா தோகை இல்லையே ! என்ன பண்ணும்?


====================


17 தீபாவளிக்குப்பின் காமெடிக்கு டிராஜடி .ஆக்சன் னா அதிரடி


==================


18 ஆர்ப்பாட்டம் பண்ணிட்டிருந்தவங்களுக்கு ஆண்டவன் நல்ல நல்ல தியேட்டரைக்குடுப்பான், ஆனா ஆடியன்சை கொடுக்க மாட்டான்


================


19  இனிமே டிராஃபிக் ல க்ரீன் சிக்னல் பார்த்தாக்கூட அவன் அவன் தெறிச்சு ஓடனும் ;-))


=====================


20  பேசன்ட்டை காப்பாத்த முடியாது.ரொம்ப க்ரிட்டிக்கல் கண்டிசன்.சாரி.டாக்டர்.பேசன்ட் தாடியை ட்ரிம் பண்ணிட்டோம்.இப்போக்காப்பாத்த முடியுமா?=====================


21  பொங்கலுக்கு வருவதாக இருந்த பிரியாணி டிசம்பர் ரிலீஸ் - செய்தி #,இது தானா சார் உங்க வீரம்.? ஜில்லா முழுக்க சிரிக்கப்போறாங்க======================


22  தீபா முன் - ஆல் இன் ஆல் அழகுராஜா . தீபா பின் - ஆல் அவுட் ஆள் அடகு ராஜா
================


23  இவர் பேரு அழகு ராஜா.3 மாசமா ஓவரா பில்டப் குடுத்துட்டு இருந்தாரு.சோகம் என்னான்னா 3 ் சந்தானம் இருந்தும்் யாராலும் இவரைக்காப்பாத்த முடியல======================


24  தீபாவளி ரிசல்ட்டில் நான் கற்றுக்கொண்டது - உலக மகா அழகு ராணியா இருந்தாலும் ,அழகு ராஜா வா இருந்தாலும் ஓவரா துள்ளக்கூடாது.======================


25 டைரக்டர் - ரோஸ்ட் 1 கொண்டு வாப்பா .சர்வர் - ஊத்தப்பம் கொண்டு வரவா சார்.படமும் ஊத்திக்குச்சு.மேட்சுக்கு மேட்ச்========================


26 25 கோடி செலவு பண்ணி கல்யாண மண்டபம் பிரமாதமா புக் பண்ணாங்களாம்.சோகம் என்னான்னா பொண்ணு ஓடிப்போயிடுச்சு


====================


27 விடிய விடிய அழகுராஜா படம் பார்த்துட்டு விடிஞ்சதும் இந்தப்படத்துல கார்த்திக்கு என்ன வேலை? னு கேட்ட கதையா.,=====================


28 ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.அவர் தொட்டது துலங்காதாம்.கை பட்டது விளங்காதாம் # பசுமை யான நினைவுகள்=====================


29 அத்தை.எனக்கு உங்க பொண்ணை பிடிக்கலை.சாரி.
மாப்ளை.பொண்ணோட புருவத்தை ட்ரிம் பண்ணி இருக்கோம் .இப்போ பாருங்க  # அழகுராஜா 28 நிமிட காட்சிகள் ட்ரிம் செய்யப்பட்டது -செய்தி


===========================

 30  ஸார்.ஒரு காமெடி சப்ஜெக்ட் வெச்சிருக்கேன்.,நீங்க ஓக்கெ ன்னா பண்ணிடலாம். எது? திவசமா?


=======================


31  ரஜினி ,சத்யராஜ் ,விஜய் ( ப்ரியமுடன் ) ,அஜித் ( மங்காத்தா) எல்லாரும் படத்துல வில்லனா நடிச்சிருக்காங்க.கார்த்தி தான் படத்துக்கே வில்லனா !=======================


32 பிரியாணி என்ன ரேட் ? ஏதோ குடுக்கறதைக்குடுங்க. ரேட் பேசற நிலைமை ல இல்லை=======================


33 மழை வந்தா மயில் தோகை விரிச்சு ஆடுமாம்.அதைப்பார்த்து வான் கோழிக்கும் ஆட ஆசை வருமாம்.ஆனா தோகை இல்லையே ! என்ன பண்ணும்?


=======================


;-)) RT : சென்னியாரின் 3தீபாவளி சிரிப்பு வெடிகள் "
Embedded image permalink
ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்துக்கு வரிவிலக்கு வழங்கியது தொடர்பாக பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. 


நடிகர்கள் கார்த்தி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்துக்கு வழங்கப்பட்ட வரி விலக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ஆர்.சிங்காரவடிவேலன் (வயது 48) என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், 'ஆல் இன் ஆல் அழகுராஜா படம் வர்த்தக நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 


தமிழக அரசு தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் விதமான திரைப்படங்களுக்கும் வரி விலக்கு அளித்து வருகிறது. பத்திரிகை, டி.வி.களில் வெளியாகும் விளம்பரங்களிலும், சாலையோரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களிலும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படத்தின் பெயரை 'அழகுராஜா' என்று குறிப்பிட்டு, தமிழக அரசிடம் வரி விலக்கு பெறப்பட்டுள்ளார். 


வரி விலக்கு சலுகை வழங்கப்படவில்லை என்றால், இந்த படத்தின் தயாரிப்பாளர் ரூ.18 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், படத்தின் தலைப்பை மாற்றி, அரசை ஏமாற்றி தயாரிப்பாளர் வரி விலக்கை பெற்றுள்ளார். இதனால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 


எனவே, இந்த படத்துக்கு வரிவிலக்கு அளித்து தமிழக அரசு 29–10–2013 அன்று பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தப் பொது நல மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நிதிமன்றம், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர், வணிக வரித்துறை கமிஷனர், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பின்னர், இம்மனு மீதான விசாரணையை இம்மாதம் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

 நன்றி - த தமிழ் ஹிந்து


0 comments: