Tuesday, November 26, 2013

X: Night of Vengeance (2011) - சினிமா விமர்சனம் 18 +

 

ஹீரோயினுக்கு 17 வயசு. சாப்பாட்டுக்குக்கூட வழி இல்லை . ரொம்ப கஷ்டத்துல இருக்கறதால பெண்களுக்கான பாரம்பரியத்தொழில் ல இறங்கலாம்னு முடிவு பண்றா. 


இன்னொரு ஹீரோயின் , பேசிக்கலாவே இவர் ஒரு தொழில் அதிபர் . எழில் அதிபரா இருக்கும் சில  பெண்கள் என்ன தொழில் செய்வாங்களோ அந்த தொழில் .  அந்த தொழில் அதிபர் . தன்னோட தொழிலை விட்டுட்டு வாழ்க்கைல செட்டில் ஆக முடிவு பண்றா. கடைசி கடைசியா ஒரே ஒரு டைம் தொழில் பண்ணிட்டு பொட்டியைக்கட்ட பிளான். அப்போ கஸ்டமர்  இன்னொரு பொண்ணு வேணும்னு கேட்க யாராவது சிக்கறாங்களா?ன்னு  பார்த்துட்டு வரும்போது ஹீரோயின் சிக்குது.

2 பேரும் இணைந்த கைகள் ராம்கி , அருண் பாண்டியன் மாதிரி தோஸ்ட் ஆகிடறாங்க . அந்த கஸ்டமர் இருக்கும் ஹோட்டல் ரூம்க்கு போறாங்க . 


 அவன் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலைச்சேர்ந்தவன் . அவன் ரூம் ல போதை மருந்து இருக்கு . அதை வெச்சு தன் பாஸ் கிட்டே டபுள் கேம் ஆடப்பார்க்கறான் //


 பாஸ் அங்கே வந்து அவனை கொலை பண்றார். அந்தக்கொலையை  2 தொழில் அதிபர்ங்களும்  பார்த்துடறாங்க . அவங்க பார்த்துட்டாங்க என்பதை கொலையாளியும் பார்த்துடறான்.ஹீரோயின் போதை மருந்தை லபக்கிட்டான்னு இவன் சந்தேகப்படறான்


 இப்போ  இந்த 2 பேரையும் வில்லன் துரத்தும் கதை தான் மிச்ச மீதி திரைக்கதைஹீரோயின் சீன பர்பி பொம்மை மாதிரி இருக்கு .  அப்பாவித்தனமான நடிப்பு , நல்லா பண்ணி இருக்கு . 


இன்னொரு ஹீரோயினுக்கு  ஆக்‌ஷன் ஹீரோயின் விஜய சாந்தி மாதிரி கேரக்டர் . அவரும் ஓக்கே 


 வில்லன்க  2 பேரும்  அவங்களுக்குக்கொடுக்கப்பட்ட பணியை கச்சிதமா செஞ்சுட்டாங்க 
பலே பரிமளா


1. படத்தில் மெயின் கேரக்டர்களே மொத்தம் 4 பேர் தான் . அதுலயும்  ஒருத்தன் பாதிலயே  பரலோகம் போய்டறதால மீதி இருக்கும் 3 பேரை வெச்சே படத்தை ஸ்பீடா கொண்டு போய் இருக்காங்க . குட் ட்ரை 2  ஒரு கொலையை பார்த்த சாட்சிங்க 2 பேரை  வில்லன் சேஸ் பண்றது பல படங்களில் பார்த்த கதை தான் . ஆனா கிளாமருக்காக , ஆடியன்சை தியேட்டருக்கு வரவழைக்க சாட்சிங்க 2 பேரும் கில்மா லேடீஸ் என்பதாக காட்டி இருப்பது இயக்குநரின் கமர்ஷியல் உத்தி 


3.  படத்தில் கிளாமர் காட்சிகள் இருந்தாலும் அது எந்த வகையிலும்  பாலியல் உணர்வைத்தூண்டலை . திரைக்கதையில் அந்த 2 பேருக்கும் என்ன ஆகுமோ என்ற பதை பதைப்புத்தான் ,மேலோங்கி இருக்கு . அந்த உணர்வை படம் பார்க்கும் அனைவரிடமும் கொண்டு வரப்பாடுபட்ட திரைக்கதை ஆசிரியருக்கு ஒரு சொட்டு

4  போஸ்டர் டிசைன் குட் . எக்ஸ் என்பது படத்தின் டைட்டில் என்பதால் ஒரு பெண்ணின் பின்னிப்பிணைந்த கால்களையே எக்ஸ் குறியீடாகக்காட்டிய டெக்னிக் ஆஹா!

சொதப்பிட்டியே சொப்னா1.  ஹீரோயின்  தனக்கு தொழிலில் அனுபவம் இல்லை , ஃபிரெஷ் கேண்டிடேட் என்றதும்  அந்த கஸ்டமர் “ நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே, நல்ல அனுபவம் உள்ள ஆள் தான் வேணும் “ என கேட்பது ஆண்கள் சைக்காலஜிக்கு முற்றிலும் மாறா இருக்கு , பொதுவா   ஃபிரெஸ் பீஸ் தான் வேணும் -னு ஆண்கள் விரும்புவாங்கன்னு மனவியல் சாஸ்திரம் சொல்லுது 


2 ரெண்டாவது  ஹீரோயின்  ஒரு சீன் ல முதல் ஹீரோயின் கிட்டே “ நீ யாரோ, நான் யாரோ, நீ கிளம்பு , உன் வழில நீ, என் வழில நான் “ அப்டினு அம்போன்னு அவரைக்கழட்டி விட்டுடறா. அடுத்த சீன்ல யே வில்லன்கிட்டே மாட்டினதும் “ நான் அவளை காட்டிக்குடுக்க மாட்டேன் , உயிரே போனாலும் சரி , எனக்கு நட்பு தான் முக்கியம்னு டயலாக் பேசறா. அந்த  அளவு நட்பு  இருவருக்கும் ஏற்படவில்லையே . 20 நிமிட பழக்கம் ஆன ஒரு பொண்ணுக்காக யாராவது ஒரு பெண் தன் உயிரே போனாலும்  பரவாயில்லைன்னு ரிஸ்க் எடுப்பாங்களா? அது சரின்னா அதை நம்பும்படி இருவருக்கும் நட்பு இறுகிய விதத்தை காட்சிப்படுத்தாதது ஏன் ? 


3 கொலையாளி அந்த ரூம் ;ல வேற யாரோ இருக்காங்கன்னு சந்தேகப்பட்டும் ஏன் பாத்ரூமைக்கூட தி்றந்து பார்த்து செக் பண்ணலை ? அந்த ரூம்ல இருந்து ஹீரோயின்ஸ் 2 பேரும் எப்படித்தப்பி ஓடறாங்க . அந்த சீன் டீட்டெயில் பத்தலை 


4  ஹீரோயின் தங்கி இருக்கும் அறைக்கு பக்கத்து அறையில் போதை மருந்துக்கு அடிமையான ஒரு ஜோடி இருப்பதும் அவர்களுக்கு ஹீரோயின் உதவி செய்வதும் திரைக்கதைக்கு தேவை இல்லாத காட்சிகள் . சூர சம்ஹாரம் படத்திலும் இதே போல் தவறுகள் இருக்கும் 


5 பொதுவா போதை மருந்து பழக்கம் உள்ளவர்கள்னு மேலோட்டமா சொன்னாப்ப்போதாதா? அவ்வளவு டீட்டெய்லாக போதை மருந்து உபயோகிப்பதை காட்டியே ஆகனுமா? சென்சார் இதை எல்லாம் கண்டுக்க மாட்டாங்களா? 


6  வில்லன் 2 வது  ஹீரோயினை கார்ல கூட்டிட்டு ரோடு ரோடா ரவுண்டிங்க் . முதல் ஹீரோயினை த்தேடி . அப்போ எதேச்சையா  முதல்  ஹீரோயின் எதிர்ல வர்றா. அப்போ 2 வது  ஹீரோயின் “ ஆபத்து , ஓடிடு” அப்டினு எச்சரிக்கறா. அது தேவையே இல்லை . வில்லன் முத ஹீரோயினை நேர்ல பார்த்ததே இல்லை . வலியனா இவளே ஏன் காட்டிக்குடுக்கனும் ? கேசுவலா பேசி அனுப்பி இருக்கலாம் . சும்மா கண் ஜாடைல யே சொல்லி இருக்கலாம்சி பி கமெண்ட் =ஆக்சன்சேசிங்க் த்ரில்லர்கள் பார்க்கலாம் . கில்மா சீன்களுக்காக பார்ப்பவர்கள் நெட்டில் டவுன்லோடி பார்க்கவும்  4 சீன் இருக்கு . ஆனா தியேட்டர்ல அது கட் . திருப்பூர் நடராஜா தியேட்டர்ல பார்த்தேன் . இந்த மாதிரி கில்மா படங்களை திரையிடும் தியேட்டர்கள் பெரும்பாலும் நடராஜா வாக இருப்பதன் மர்மம் என்னவோ ? ஈரோட்டிலும் இதே போல் ஒரு நடராசா இருந்தது . இப்போ சீல் வெச்சு க்ளோஸ்டு 


ரேட்டிங்க் =   2.5 / 5

Director: