Friday, November 01, 2013

KRISH 3 -சினிமா விமர்சனம்

 

ஹீரோ  ஒரு சூப்பர்  மேன்.அநியாயம் எங்கே நடந்தாலும் பறந்து போய் அதைதட்டிக்கேட்பவர் .ஹீரோவோட அப்பா  ஒரு சயிண்டிஸ்ட். சூரிய ஒளிக்கதிர்களை வெச்சு ஆராய்ச்சி பண்ணி புதுசா  1 கண்டு பிடிக்கறாரு. இறந்து போன  மனித உடல் ல அல்லது தாவர, விலங்கு உடல் ல  சூரிய ஒளியை  குறிப்பிட்ட விகிதத்துல  செலுத்தினா  இறந்த உடல் உயிர் பெறும் .இந்த அபாரமான கண்டு பிடிப்பை அவர் உலகத்துக்கு டெமோ பண்ணி காட்டி  நிரூபிக்கிறார்.

வில்லன் கழுத்துக்கு கீழே மன்மோகன் சிங்க் ,அதாவது செயல்படாதவர் .ஆனா கழுத்துக்கு மேல ஜெ மாதிரி, அபாரமான  அறிவு.ஆளுமைத்திறன்.அவர் லட்சியமே தன் செயல் இழந்த உடல் உறுப்புகளை எப்படி  இயங்க வைப்பது ?என்பது பற்றித்தான். 

 அது போக அவர் உலகம் பூரா மனித உடல் ல வைரஸ் மூலமா நோயைப்பரப்பி  மனித இனத்தைஅழிக்கனும் , புதிய உயிர் இனங்களை உருவாக்கனும்னு நினைக்கறார். வைரஸ் நோயை மனிதனிடம் பரப்பனும் , பின் அந்த  நோயை குணம் ஆக்க ஆண்ட்டி பயோடிக் மருந்தை விற்பனை செய்யனும் . இந்த உயர்ந்த லட்சியத்தோட  வில்லன் ஆராய்ச்சியளர்களை வெச்சு  வேலை வாங்கிட்டு இருக்கார் 


தன் திட்டப்படிஉலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள சீனாவை விட்டுட்டு இந்தியாவில்  மும்பையில்  வைரஸ் பரப்பறார். .மும்பை மக்கள் எல்லாருக்கும்  நோய் பரவுது . ஆனா  ஹீரோ , அவங்கப்பா வுக்கு மட்டும் பரவலை 

 உடனே ஹீரோவோட  அப்பா  தன் ரத்தத்துல  ஏதோ சக்தி இருக்கு, அந்த ரத்தம் மூலமா மருந்து கண்டு பிடிக்கனும்னு  ஆராய்ச்சி பண்ணி மருந்து கண்டு பிடிச்சு  எல்லாரையும் குணம் ஆக்கிடறார். 


 வில்லன் செம காண்ட் ஆகிடறான். இது எப்படி நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க தன் கிட்டே இருக்கும் ஒரு லேடியை  அனுப்பறான் 


புராண கதைல  சூர்ப்பனகை கேள்விப்பட்டிருப்பீங்க. தன் விருப்பப்படி தோற்றம் எடுக்கும் சக்தி உள்ள பெண் . அந்த மாதிரி சக்தி உள்ள  பெண் ஹீரோ இடத்துக்குப்போய்   அங்கே   மாசமா  இருக்கும் ஹீரோவோட மனைவியை வில்லன் ப்ளேஸ்க்கு அனுப்பி ஹீரோ மனைவி மாதிரி ஆள் மாறாட்டம்  பண்ணி அங்கே  இருக்கறா.


ராவணன்  ராமர் உருவம் எடுத்து சீதையைஅடைய நினைக்கும்போது  ராமன் குணம் ராவணனுக்கும் வந்த மாதிரி வில்லிக்கு ஹீரோ மேல ஏற்பட்ட காதலாலோ அல்லது  ஈர்ப்பினாலோ  வில்லனுக்கு சாதகமா எதுவும்  செய்யலை 


ஹீரோ  தன் மனைவி  மாறிடுச்சுன்னு கண்டு பிடிச்சாரா? ஹீரோவும் , வில்லனும் அண்ணன்  தம்பி தான் என்ற சஸ்பென்ஸை தெரிஞ்சு  ஹீரோ என்ன செஞ்சார் ? வில்லன்  தன்  தன் தம்பி சம்சாரத்தை  தன் இடத்தில் வெச்சிருந்தும் எதுவும் செய்யாம  ஏன் சும்மா இருந்தார் ? என்பதை எல்லாம் வெண் திரையில் காண்க.. 


ஹிருத்திக் ரோஷன் தான்  ஹீரோ . டபுள் ஆக்டிங்க் . கமல் தான் இவருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கனும் . பாடி லேங்குவேஜ் , குரல் எல்லாத்துலயும் நல்ல வித்தியாசம் காட்டி நடிச்சிருக்கார் . ஹிந்திப்படம் அதிகம் பார்க்காதவர் படம் பார்த்தால்   அப்பா, மகன் இருவரும் வேறு  வேறு ஆள் என்று நினைப்பாங்க . வெரிகுட் நடிப்பு .ஆனா  அவர்  ஒரு பாடல் காட்சியில்  குத்தாட்ட நடிகை ரேஞ்சுக்கு லோ லோ ஹிப் ஜீன்சில் டாப்லெஸ்சாக வருவதெல்லாம்  ஓவரோ ஓவர் . அதுக்கு டீன் ஏஜ் பொண்ணுங்க  விசில் வேற 


ப்ரியங்கா சோப்ரா தான் நாயகி . நாயகனுக்கு மனைவியா வர்றார். பிரமாதமான நடிப்பு என அள்ளிக்கவும்  முடியாது, மோசமான நடிப்பு என தள்ளிவிடவும்  முடியாது . வந்தவரை  ஓக்கே . பாடல் காட்சிகளில் இவர் பெரிதாக கிளாமர் காட்டாமலேயே  கண்ணியம் காட்டியது ஆச்சரியம் . 


ஒல்லி நல்ல வில்லியாக  கங்கனாரண்வத். இவர் படம்  முழுக்க புறமுதுகு முழுவதும் காட்டிய இளவரசியாக வலம் வருகிறார். செம கிளாமர் நடிப்பு . இவருக்கு மேலாடை வடிவமைத்தவர் கஞ்ச மகாப்ரபுவாக இருந்தது ரசிக மகா கார்த்திகளுக்கு அதிர்ஷ்டம் . ப்ளச்  ப்ளச்

வில்லனாக  விவேக்  ஓபராய். எக்ஸ் மேன் படங்களில் வருவது போல் இவர் படம் முழுக்க வீல் சேரிலேயே வந்தாலும்  கடைசி அரை மணி நேரம் பட்டாசு கிளப்பி விடுகிறார்.


பாடல் காட்சிகள் பிரமாதம் என்று சொல்லும் அளவு இல்லை . கிராஃபிக் காட்சிகள் கன கச்சிதம் . ட்ரெய்லரில் மிரட்டிய அளவு   படத்தில் மிரட்டவில்லை . பின்னணி இசையில் பாலிவுட்காரர்கள் தமிழர்களிடம் கத்துக்க நிறைய இருக்கு .ஹீரோ எண்ட்ரி , பில்டப் காட்சிகளுக்கு பிஜிஎம் எப்படி இருக்கனும் என்பதற்கு இலக்கணம் வகுக்கும் யுவன் சங்கர் ராஜாவின்  பில்லா ,மங்காத்தா ,பிஜிஎம் எல்லாம் கேட்கனும் .அதே போல் பின்னணி இசையிலும் இளையராஜாவின்  100 வது நாள் , ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களை எல்லாம் பார்க்கனும்  இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.   ஹாலிவுட்டின்  சூப்பர் ஹிட் படங்களான  டெர்மினேட்டர் 1, 2 , ஸ்பீசஸ் ,1,2,3 , எம் ஐ 2 , , I AM LEGEND, RESIDENT EVIL, THE TUXEDO, WORLD WAR Z, Contagion  என மானாவாரியாக படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு நேர்த்தியாக அட்டாச் செய்தது


2 . வில்லன் கேரக்டரை ஏழாம் அறிவு  வில்லன் போல் வடிவமைத்தது 3. கதைக்குத்தேவை இருக்கோ இல்லையோ  கங்கனாரனவத்க்கு வலியனாஒரு பாடல் காட்சி புகுத்தியது. கிளாமர் காட்ட வைத்தது 


4 ஓப்பனிங்க் சீனில் ஃபிளைட்டில் பயணிக்கும் அனைவர்  உயிரையும் காப்பாற்ரும் ஹீரோ பில்டப் சீன் 


5. அட்டகாசமான ட்ரெய்லர்  ரெடி செய்தது . அந்த ட்ரெய்லர் பார்த்தால் கதையை யூகிக்க முடியாத படியும் , பார்க்கத்தூண்டும் விதத்திலும்   இருக்கும் 


6 ஹீரோ - வில்லனின் அடியாள் முதல் ஃபைட் , வில்லன் - ஹீரோ க்லைமாக்ஸ் ஃபைட் சீன் ஸ்டண்ட் ,மாஸ்டர் உழைப்பு அருமை 
த டாம்ப் ரைடர் ஏஞ்சலீனா ஜூலிதான் கங்கணாரனவத் கேரடக்ருக்கு இன்ஸ்பிரேசன் போல 


இயக்குநரிடம்  சில  கேள்விகள் 

1. ஐஸ்க்ரீம் கடையில்  ஒவ்வொரு கப்பாக , கோன் ஐஸாக வில்லனனின் விநோத ஜந்து லபக்கும் காட்சி படு அபத்தம் . அத்தனை சக்தி உள்ள விநோத ஜந்து ஏன் பிச்சைக்காரத்தனமாய் கோன் ஐசை பிடுங்கி சாப்பிடனும் . ஐஸ்க்ரீம் கடையில் புகுந்து பல்க்கா அடிச்சு சாப்பிடலாமே? 


2 ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் புருஷன் , பொண்டாட்டி . சந்தோஷமா  தனிக்குடித்தனம்  நடத்திட்டு இருக்காங்க   . ஏன் தனித்தனி   ரூம் ல இருக்காங்க . ஒரு சீன் ல  மனைவி  ஒரு ரூம் ல இருந்து வருது . இவர் ஒரு ரூம் ல இருந்து வர்றாரு . 2 பேரும்  குட்மார்னிங்க் சொல்லிக்கறாங்க .. மும்பைல எல்லாம்  தம்பதிகள் தனித்தனி  ரூம் ல தான் இருப்பாங்களோ ( அவங்களுக்கு குழந்தையும் இல்லை ) 


3 மனைவி ஆள் மாறாட்டம் ஆகிடுது. ஹீரோவுக்கு டவுட் .அதை ஈசியா க்ளியர் பண்ணி இருக்கலாமே?  ஆள் மாறாட்டம் செஞ்ச லேடி  மனிதப்பிறவி அல்ல . கில்மாவுக்கு  கூப்பிட்டா மேட்டர்தெரிஞ்சுடும் . இதுல 2 பிளஸ் இருக்கு . மனைவியா ? இல்லையா? அப்டிங்கற மேட்டரும்  தெரிஞ்சுடும் ,4  ஹீரோவின் அப்பா எதுக்கு ஒரு லாங்க் லெக்சர் அடிச்சுட்டு அவரா வான் உலகம் கிளம்பறார்?

5  பட விளம்பரங்கள் ல  ஹிருத்திக் 3 வேடங்களில் நடிக்கும் படம்னு பில்டப் குடுத்து ஏன் ரசிகர்களை ஏமாற்றனும் ?  2 வேடம்  தான் . க்ளைமாக்சில் ஒரேஒரு சீனில்  4 செகண்ட் 3 வது ஆள் காட்டறாங்க  


6  வில்லன்  ஹீரோ வீட்டுக்கு வில்லியைஅனுப்பி அப்டியே அவ்ளை அம்போன்னு விட்டுடறானே? அவ என்ன பண்றா? என்பதை அப்டேட்டா தெரிஞ்சுக்க ,மாட்டானா? அவ்ளவ் தத்தியா? 7  வில்லன்  அவ்ளவ் சக்தி உள்ளவன் . எதுக்கு வைரஸ் மூலம்  நோய் பரப்பி  மருந்து வித்து சம்பாதிச்சு  இப்டி  சுத்தி வளைக்கனும்?  நேரடியா தன் சக்தியை பயன் படுத்தி  ஒரு பேங்க்கை கொள்ளை அடிச்சா போதுமே? 


8 . வில்லன்  தன் அப்பா கிட்டே பேசிட்டு  இருக்கும்போது  “ சபாஷ் பாஸ் “ அப்டினு பாராடும் சயிண்டிஸ்ட் 2 பேரை எதுக்கு சம்பந்தம் இல்லாம  ஷீட் பண்ணி கொலை பண்றான் ? அவன் லூசா? இல்லை எதுக்கு சம்பளம் எல்லாம் கொடுக்கனும்னு முடிச்சுட்டீங்களா?

 


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. இயற்கை ல ஏகப்பட்ட மேஜிக்கல் காம்பினேசன்ஸ் இருக்கு.அது நமக்குத்தெரியறதில்லை2. கண்ணீர் இருக்கும் இடத்தில் யார் புன்னகையை வர வைக்கறாங்களோ அவன் தான் கடவுள்


3 இந்த உலகத்துல கெட்டவங்களை விட நல்லவங்க தான் அதிகம் . நிஜமா ? அப்டி இருக்க பிரார்த்திக்கிறேன் 


4 நீ என்னை ராங்கா  புரிஞ்சிட்டு இருக்கே? ரைட்? 

 ஹைட் . அவன் ஹைட் என்ன?  உன் ஹைட் என்ன? அதை வெச்சுதான் கண்டு பிடிச்சேன் 5 வில்லன் - மனுஷங்களோட தைரியம்  குறையக்குறைய நம்ம பிராஃபிட் ஏறிக்கிட்டே இருக்கு 6. நான்  உன் கிட்டே இருந்து தான் கத்துக்கிட்டேன் , கைகள் சின்னதா  இருந்தாலும் தைரியம் பெருசா இருக்கும் 


7 தன்  கிட்டே உள்ள பலத்தை வெச்சு அடுத்தவங்களுக்கு உதவி பண்றவன் தான் க்ருஷ் 


8 டியர் , நீ என் பக்கத்துல தான்  இருக்கே, ஆனா என் கூட இ;ல்லை 


9  வில்லன் -பிறந்தவன்  தான் இறப்பான் , ஆனா  நான்  தான் பிறக்கவே  இல்லையே?


10 தீய சக்தி  வலிமையானதுதான் , ஆனா அதுக்கு அழிவு காலம் நல்ல சக்தியாலதான் வரும்


 
சி பி கமெண்ட்-முன் பாதி சுமார் ,பின் பாதி வேகம் .பல ஹாலிவுட்டின் காக்டெய்ல் - பாலிவுட்டில் செம ஹிட் ஆகிடும் . பெண்கள் , குழந்தைகள் பார்க்கும் விதமாத்தான் இருக்கு . ஃபேண்ட்டசி , மேஜிக் ரியலிசம் வகையறாப்படங்கள் ரசிப்பவர்கள் பார்க்கலாம் . சரியா 2 1/2 மணி நேரம் ஓடுது. ஈரோடு ஸ்ரீகிருஷ்ணா வில் படம் பார்த்தேன்ரேட்டிங் -  2.75 / 5

0 comments: