Wednesday, November 13, 2013

பொண்டாட்டின்னா தகராறு ,ராக்கெட்னா கோளாறு

1. தமிழர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை தவறி விட்டது: நாராயணசாமி # என்னது? இலங்கை அரசு "தவறிடுச்சா?" நல்ல சேதி தான்


====================

2 ஈரான் மந்திரியை பாதுகாவலரே சுட்டுக் கொன்றார் # செக் மேட் வெச்சதே செக் யூரிட்டிதானா?


=====================


3 தனிப்பட்ட காரணங்களால் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள இயலாது-பிரதமர்# பலரிடம் எதிர்ப்பு அடி பட்ட காரணங்களால்?


========================


4 தலைசிறந்த சீக்கியர்கள் பட்டியலில் பிரதமருக்கு முதலிடம் # இந்த மாதிரி ஒரு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை சீக்கிய ஜில்லா எங்கேயும்் இல்லையாம்==========================


5 தனிப்பட்ட காரனங்களால் மாநாட்டில் கலந்துகொள்ள முடியவில்லை - பிரதமர்
# கேப்டன் தண்ணி போட்ட காரணத்தால் னு அர்த்தம் புரிஞ்சிருப்பாரு=======================================


6 இரண்டாம் உலகம் படத்தில் ஹங்கேரி நாட்டு இசை கலைஞர்களை பயன்படுத்திருக்கிறார் அனிருத். # ஹங்கேரி படத்தில் இருந்தே எடுக்காம இருந்தா சரி===================================


7 அதிமுக இணையதளத்தை முடக்கிய சென்னை இளைஞர் கைது .பொழுதுபோக்குக்காக செய்தாராம் # போடி போ.உன் ஆயுசுல பாதி பொழுது ஜெயில்ல தாண்டி====================================


8 மன்மோகன் புறக்கணிப்பால் பின்னடைவு இல்லை: இலங்கை கருத்து # இழவு வீட்டுக்கு சாவுமேளம் அடிக்கறவர் வர்லைன்னாலும் காரியம் நடக்கும்கறாரு===================================


9 ஓரினச் சேர்க்கை வாழ்க்கை முறை: விவாதிக்க போப்பாண்டவர் முடிவு # இதெல்லாம் ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாய்யா? , கவுண்டர் ராக்ஸ்=====================================


10 அனிரூத்,மலையாள நடிகர், பகத் பாசில் ,சிம்பு இந்த 3 பேரையும் நான் லவ் பண்ணலை - ஆண்டிரியா # சபாஷ் , நயன் தாராவை அசால்ட்டா முந்திட்டாரே?=============================

11 வேலையில் டெடிக்கேட்டிவா இருப்பதில் ஹன்சிகா குஷ்பு மாதிரி இருக்காங்க - சுந்தர் சி # இந்த விஷயம் சிம்புவுக்கும், குஷ்பூவுக்கும் தெரியுமா?=====================================


12 உலகின் சக்தி வாய்ந்த நூறு
சீக்கியர்களில் மன்மோகன் சிங் முதலிடம் !# நான் படிச்ச சர்தார் ஜோக் ஸ்லயே இதுக்குத்தான் முதலிடம்.======================================13 மோடியைப் பார்த்து யாரும் பயப்படவேண்டாம்- ஈ.வி.கே.எஸ் # தாலி கட்டின லேடி யைப்பார்த்தே பயப்படாத தமிழன் மோடியைப்பார்த்தா பயப்படுவான்?===================================14 காதல் என்பது ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது - ஹன்சிகா # மே ஐ ஹெல்ப் யூ -னு இனி ஆளாளுக்கு கேப்பாங்களே?=====================================15 கார்த்தியின் புதிய படத்தை இயக்குகிறார் சாந்த குமார் # டைட்டில் பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் ?================================


16 லைட்டா தான் முத்தம் தரனும் - கஞ்சா கருப்புக்கு ரகஸ்யா கண்டிஷன் # டீ மட்டும் ஸ்ட்ராங்கா கேட்கறீங்க.கிஸ் மட்டும் லைட்டா கேட்டா எப்டி?


================


17 மங்கள்யானில் 'திடீர்' கோளாறு:..# பொண்டாட்டின்னா தகராறு பண்றதும் ,ராக்கெட்னா கோளாறு செய்வதும் சகஜம் தானே!


==================


18 சிபிஐ அமைப்பை மத்திய அரசு பாதுகாக்கும்: மன்மோகன்சிங் # ஆஹா அபாரம் பரிமளா.மேல சொல்லு.ஊழல் வழக்கில் ம அரசை சிபிஐ பாதுகாக்கும்?


=================


19 CBIசட்டப்பூர்வமாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவது குறித்து உறுதி செய்யப்படும்-் மன்மோகன் ் "# இந்த ஸ்டேட்மென்ட் நீங்க சுதந்தரமா சொன்னதா?


=======================

20  துப்பாக்கி', 'சிங்கம் 2' வை வசூலில் முந்திய 'ஆரம்பம்' - த தமிழ் ஹிந்து # இது முடிவல்ல .ஆரம்பம் கற பஞ்ச் வசூலுக்கும் பொருந்தும் போல


==================


21 தெலுங்குதேசம் -பாஜக கூட்டணி அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது # நலங்கு வைக்கறவங்களே இப்பவெல்லாம் நல்ல நாள் பார்க்கறதில்லை


================1 comments:

நம்பள்கி said...

17. மங்கல்யானிலும் கோளாறு! மங்களநானைகட்டினாலே கோளாறு!
____________:
கோளாறு அவரவர் வசித்கேற்ப எந்த அர்த்தம் ( மதுரை தமிழ் அல்லது கொங்குதமிழ் ) வேண்டுமானலும் எடுத்துக்கொள்ளலாம்.