Thursday, July 26, 2012

ரஜினி ராணாவுல நடிக்கறதுல என்னா பிரச்சனைனா.... ஜோக்ஸ்

1.மாமியாருக்கு உடல்நிலை எப்படி இருக்கு?ங்குறதைப் பற்றி என் எல்லா டவுட்ஸையும் டாக்டர் தீர்த்துட்டார்சரி, மாமியாரை எப்போ தீர்க்க போறாராம்?
............
2. உங்க படத்துல எல்லா கேரக்டரும் இலக்கண சுத்தமா பேசறாங்களே?


படத்துல கிளாமரும் இல்லை, கிராமரும் இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாதுனுதான்.
.....
3. இன்ஸ்பெக்டர் பழைய கொலைக்கேஸ்ல ஒரு டவுட். தூசு தட்டனும்.


வேணாம் சார், எனக்கு டஸ்ட் அலர்ஜி.
....4.உங்க பையன் அடிக்கடி செல்ஃபோன்ல பேசிக்கிட்டே இருக்கானே?


நல்ல வேளை ,பொண்ணுங்க கூட பேசலையே?!
....
5.என் படம் ரிலீஸ் ஆனா ஆடியன்ஸிடம் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


எனக்கென்னவோ புரொடியூஸர்ஸைத்தான் அதிகம் பாதிக்கும்ன்னு தோணுது.


.....

· · · 26 minutes ago ·

6. டைரக்டர் ரொம்ப நீட்டான சுத்தபத்தமான ஆளுன்னு எப்படி சொல்றீங்க?
அவர் படத்துல குளிக்குற சீன் அதிகமா வருதே?!
.....7.கட்சி கொஞ்சம் கொஞ்சமா வளருதுன்னு எப்படி தலைவரே சொல்றீங்க?


கட்சில தொண்டர்களோட எண்ணிக்கையைவிட கோஷ்டிகளோட எண்ணிக்கை அதிகமா இருக்கே.


....
8. தலைவரே! கட்சில இப்போ வளர்ச்சி எப்படி இருக்கு?மகளிர் அணித்தலைவி வயத்துல 3 மாச கரு இப்போ 6 மாசமா வளர்ச்சி அடைஞ்சிருக்கு....
9. தலைவருக்கு சினிமா நாலெட்ஜ் சுத்தமா இல்லைன்னு எப்படி சொல்றே?


ரஜினி ராணா படத்துல நடிக்கிறார்ன்னு நியூஸ் வந்ததும் ஆனா, ஆவன்னா-ல நடிக்காம திடுதிப்புன்னு ராணால நடிக்கிறாரே ஏன்? அப்படின்னு கேட்குறாரே ஏன்?
....


10. தலைவர் 5ங் கிளாஸ் படிக்குறப்பவே காப்பி அடிச்சு பரிட்சை எழுதுனவராம்.


ஓஹோ... அதுக்காக, தேர்தல் அறிக்கை, தேர்தல் பிரச்சார உத்தி எல்லாவற்றையும் காப்பி அடிக்கனுமா?


.....
Kozhi oda Nadatha sari illa :-(


11. கூட்டணி கட்சித் தலைவர்களை அவரு மதிக்கறதில்லையே ஏன்?ச்சே! ச்சே! அவரைப் பற்றி தப்பா பேசாதே! அவரு  பொதுவாவே யாரையும் மதிக்கறது இல்லையே!...
12. கூட்டணிக் கட்சினு சொல்றீங்க? அவர்கூட சேர்ந்து பிரச்சாரம் பண்ண மாட்டேன்னுசொல்றீங்களே ஏன்?


எதுக்குங்க வம்பு? திடீர்ன்னு எதாவது சண்டை வந்துட்டா?..., துஷ்டனைக் கண்டால் தூர விலகுனு பழமொழியே இருக்கு.....


13 உன் கண்கள் அழகாக இருந்தால் மற்றவர்கள் அழகாகத் தெரிவர்கள். உன் மனம்  அழகாக இருந்தால் மற்றவர்களுக்கு நீ  அழகாக தெரிவாய்.
.....14. இன்பத்திலயும், துன்பத்திலும் மனம் விட்டு பேச துணை இல்லாத போதுதான் தெரிகிறது அன்பின் பெருமை.
........15. லைஃப்ல கேர்ள் ஃப்ரெண்ட் கிடைச்சா லைஃப் ஜாலி.
அதே கேர்ள் ஃப்ரெண்ட் லவ்வரா கிடைச்சா பாக்கட் காலி,
அதே லவ்வர் மனைவியா கிடைச்சா.., மவனே லைஃபே காலி. ஜாக்கிரதையா இருந்துக்கோ...,
...
வர்ணங்களின் நெரிசலில்
சிக்கித்திணறுகின்றன
அலகும் கண்களும் கால்களும்
கொஞ்சம் உயிரும்
வாய்க்கப்பெற்ற பஞ்சுகள்


16. மனிதன் செய்யும் மிகப்பெரிய தவறு பாதிதான் கேட்கிறான்(கவனிக்கிறான்)
கால்வாசிதான் புரிஞ்சுக்குறான். ஆனா,  டபுள் அளவு பேசறான்.
..............
17. ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த தவறுகளை கண்டறிவதில் குருடனாய் இருக்கிறான்.
....18. உன் அன்புக்குரிய நபரின் மதிப்பு என்ன? என்பதை உணர வேண்டுமா?
அவங்களை மிஸ் பண்ணி பார்... தெரிஞ்சுடும்.
.......19. ஆடியன்ஸ் ஜோக்கரை(கோமாளி) எப்பவும் ஜோக்கராத்தான் பாக்குது. ஆனா, அந்த ஜோக்கர் தன்னை ஒரு பர்ஃபார்மரா பார்க்குறான்.

நீதி: மத்தவங்க என்ன நினைக்குறங்கன்னு கவலைப்படாதே.., உன் வழியில் நீ போ...
.....
20. உன் விரல் நகம் போல நான்....

நீ வெட்டி எறிந்தாலும் கூட உன் மீது நான் வைத்துள்ள அன்பு வளர்ந்து கொண்டே இருக்கும்.

Like here first -->> இன்று ஒரு தகவல். Today A Message.
ஓர் இடத்தின் சூழ்நிலை உங்களை

கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்காதீர்கள்.

அந்த இடத்தை விட்டு மாறுங்கள்


4 comments:

கோவை நேரம் said...

முதல் வணக்கம்.,...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அழகான வாக்கியங்கள்.

அம்பாளடியாள் said...

நகைச்சுவைகளும் தத்துவங்களும் அருமையாக இருந்தது தொடர வாழ்த்துக்கள் .

kutti said...

Vanakam na