Monday, July 30, 2012

மு.க. ஸ்டாலின் சமாளிஃபிகேஷன் பேட்டி @ கல்கி - 60 வயசாகியும் ஏன் இளைஞர் அணித்தலைவர் போஸ்ட்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYML7yE0zxUeED6eWA_yuDMGHIoCoY352zlsIs3hh_MBD0OeCyvert9X-cnjNagMaaZzEwQsxx2cJCppIqCxc6UQQtqVTHOk3irMrVTIky5_AdmVA-rEHClK7Xpkk93fQWRsABLMxNpdk/s1600/thuglak+dated+14.04.2010.jpg 


இளைஞர் அணிக்கு வயது 33!



எங்கள் எழுச்சி எதிரிகள் வீழ்ச்சி!



ஸ்டாலினுடன் ஒரு சந்திப்பு!

ப்ரியன்



தி.மு.க. பொருளாளரும், அதன் நம்பிக்கை நட்சத்திரமுமான மு.க. ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். அவரது குஷிக்குக் காரணங்கள் இரண்டு


. ஒன்று, தமிழகமெங்கும் உள்ள மாவட்டங்களுக்கு விஸிட் செய்து ஒன்றிய, நகர, பகுதி, மற்றும் பேரூர் இளைஞர் அணிக்கு, அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்தது;


 அடுத்து, சமீபத்தில் நடத்திய சிறை நிரப்புப் போராட்டம் இளைஞர்களின் பங்களிப்பால் வெற்றிகரமாக நடந்தது. எங்கள் இளைஞர்களின் எழுச்சியால் எதிரிகள் நடுங்குகிறார்கள்" என்கிறார் ஸ்டாலின்.


 முப்பத்தி இரண்டு ஆண்டுகள் முடித்து முப்பத்தி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞர் அணி குறித்து இங்கே பேசுகிறார் ஸ்டாலின்.



சென்ற சட்டமன்றத் தேர்தலில் கழகம் தோல்வியடைந்த பின் இளைஞர் அணியை இன்னமும் பலப்படுத்தி, அதற்கு புத்துணர்வு ஊட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. கழகம் தோல்வியடைந்திருந்த நிலையில், தொண்டர்கள் விரக்தியினால் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்று பலர் சொன்னார்கள். இருந்தாலும் கழக இளைஞர்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கை தளரவில்லை. மாவட்டம் மாவட்டமாக விஸிட் செய்தேன். ஆளும்கட்சி கிளப்பிய கைது பயத்தை தூக்கியெறிந்து விட்டு இளைஞர்கள் வெள்ளமென திரண்டார்கள். தமிழகமெங்கும் 4649 அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமித்திருக்கிறோம்.


 ஒன்றிரண்டு மாவட்டங்களில், சில உரசல்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் வெற்றிகரமாக சமாளித்து அந்த மாவட்டங்களிலும் நிர்வாகிகளைப் போட்டிருக்கிறோம். இப்போது மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் போடுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன" என்கிறார் இளைஞர் அணியின் செயலாளராக விளங்கும் ஸ்டாலின். 1984 முதல் இந்தப் பொறுப்பில் இருக்கிறார் ஸ்டாலின்.

http://www.tamilhindu.com/wp-content/uploads/cartoon-kagidha-odam.jpg


1949-ல் தோன்றிய தி.மு.க.வில் 1980ல்தான் இளைஞர் அணி உருவாக்கப்பட்டது என்பது ஆச்சர்யமாக இருக்கிறதே!



பேரறிஞர் அண்ணாவின் பின்னால் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் அணி திரண்டார்கள். மொழி, இன உணர்வு, சமூக நீதி என்று கழகத்தின் இலட்சியப் பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழர்களின் மொழி உணர்வின் உச்சகட்ட வெளிப்பாடு. தொடர்ந்து 1967ல் கழகம் ஆட்சியைப் பிடித்தது. அதற்குப் பிறகு, கழகத்தில் இளைஞர்களின் புது வரவு கணிசமாக குறைந்து வருவது தெரியவந்தது.


 அண்ணாவின் பின் அணிவகுத்த இளைஞர்களும் முதியவர்களாகி வர, இந்த விஷயத்தில் புதிய பார்வையும், அணுகுமுறையும் தேவை என்று உணரப்பட்டது. மாறிவரும் சூழலை முற்றும் உணர்ந்து, காலத்திற்கேற்ற தேவையாக டாக்டர் கலைஞர் அவர்களால், கழகத்தில் மற்றொரு அணியாக இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. மதுரை ஜான்சி ராணி திடலில் இளைஞர் அணி தொடங்கப்பட்ட போது கழகம் ஆட்சியில் இல்லை. இருந்தும் அந்தத் தொடக்கம் மிகப் பெரிய எழுச்சியாக இருந்தது




உடனேயே நீங்கள் அதன் செயலாளர் ஆகிவிட்டீர்களா?!



இல்லையில்லை... இரண்டு வருட காலம் நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. 1982ல் திருச்சி வாசவி மகாலில் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பலரும் என்னை செயலாளர் ஆக்க வேண்டும் என்று மிக வலியுறுத்திப் பேசினார்கள். ஆனால் தலைவர் ஒப்புக்கொள்ளவேயில்லை. ‘மகனை நியமித்து விட்டார்’ என்ற விமர்சனம் வரும் என்று கடைசி வரை ஒப்புக் கொள்ள மறுத்தார். எனவே பேராசிரியர் மாற்று ஏற்பாடாக நானும் உள்ளிட்ட ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவில் திருச்சி சிவா, பரிதிஇளம் வழுதி, தாரை மணியன், வாலாஜா அசேன், ஜெயம் ஜூலியஸ், பஞ்ச வர்ணம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


 அடுத்த இரண்டு வருடம் நாங்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்ட அளவில் நிர்வாகிகள் போட்டோம். அந்தக் காலகட்டம் மறக்க முடியாதது. ஒரே காரில் நாங்கள் செல்வோம். பெரும்பாலும் நான்தான் கார் ஓட்டுவேன். இந்தச் சமயத்தில் என் நெஞ்சில் என்றும் பசுமையாக இருக்கும் ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.



1967-68ல் கோபாலபுரம் பகுதியில் இளைஞர் தி.மு.க. என்ற பெயரில் சார்பு மன்றம் வைத்திருந்தோம். அதன் சார்பாக அண்ணா பொன்விழா கொண்டாட முடிவு செய்தோம். ம.பொ.சியை அணுகினோம். அவர் வர ஒப்புக் கொண்டார். நான் நண்பர்களுடன் அண்ணா அவர்களை விழாவுக்கு அழைக்கச் சென்றேன். அண்ணா மாடியில் உடம்பு முடியாமல் படுத்திருந்தார். கீழே என்.வி. நடராசன், சத்தியவாணி முத்து ஆகிய தலைவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ‘அண்ணாவைப் பார்க்க முடியாது’ என்று சொல்லி விட்டார்கள். ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து, அண்ணாவின் கார் என் வீட்டுக்கு வந்தது. ஓட்டுநர் வந்து, ‘அண்ணா அழைத்தார்’ என்று கூப்பிட்ட போது பிரமிப்பு; ஆச்சர்யம். சந்தித்து விழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்



 ‘ஏற்பாடு செய்... வருகிறேன்’ என்றார். ஆனால் அண்ணாவின் உடல்நிலை மேலும் மோசமாக அவர் விழாவுக்கு வர முடியவில்லை. ம.பொ.சி. தலைமையில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்தச் சம்பவத்தை எதற்குச் சொல்கிறேன் என்றால் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. போன்று தமிழகமெங்கும் இளைஞர் மன்றங்கள் இயங்கி வந்தன. எனவே, நாங்கள் மாநிலம் முழுதும் இளைஞர் அணியை கட்டமைப்பது சுலபமாக இருந்தது. 1984-ல் நான் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டேன். இன்று கிட்டத்தட்ட ஒரு கோடி கழக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 25 லட்சம் பேர் இளைஞர் அணி. கழகக் கோட்டையின் காவல் அரணாக இளைஞர் அணி உருவாகியிருப்பது மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது."

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHmxMbhxFIQZGqbQTJpDKuug3J4VLZlaAyGBQoS37xFVFRby1JXHF6hQ-WzlaBjdUHDMeJginPzXWwS8CTI3bx1UXTPIj8dkHaMPWAVcR-6oE559c4e9bz4y7de2683ByFtMrelyHpGCs/s1600/karuna+retair.jpg

கழகப் பிரமுகர்களின் மகன்கள்தான் இளைஞர் அணியில் பிரகாசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறதே?



தவறான கருத்து. உழைப்பும் பொது நல அர்ப்பணிப்பும் மிக்க இளைஞர்கள் எந்தவித பின்புலமுமின்றி உயர்ந்திருக்கிறார்கள். பொன்முடி, அன்பரசன், மா. சுப்பிரமணியன், முபாரக், கார்த்தி என்று சொல்லிக் கொண்டே போகலாம்."



தேர்தல் வந்தால் பெரும்பாலான சீட்கள் இளைஞரணிக்கு என்பதால்தான் ‘அணி திரள்கிறார்கள்’ என்பது உண்மைதானா?



நான் ஏற்கெனவே சொன்னது போல கழகத்தில் உள்ள மற்ற அணிகளைப் போலத்தான் இளைஞர் அணியும் இருக்கிறது. தேர்தலில் சீட் என்பது வெற்றி வாய்ப்பை மனத்தில் வைத்துத்தான் கொடுக்கப்படும். இளைஞர் அணியில் உள்ள திறமையாளர்களைப் போல மற்ற அணிகளிலும் திறமையானவர்கள், விசுவாசமிக்கவர்கள் இருக்கிறார்கள். எனவே இளைஞர் அணியில் இடம்பெற்றிருந்தாலே தேர்தல் சீட் கிடைக்கும் என்பது சரியல்ல."



வர்த்தகமயமாகி விட்ட அரசியலில் பொதுநல அர்ப்பணிப்புடன் இளைஞர்கள் வருகிறார்களா?



சமூகத்தில் பல துறைகள் சீரழிவைச் சந்தித்து வருவதைப் போன்று அரசியலிலும் சறுக்கல் இருக்கத்தான் செய்கிறது. சுயநல நோக்கத்துடன் ஒருசிலர் வரக்கூடும். பாசறைக் கூட்டம் என்று பெயரில் இளைஞர்களின் உரத்த சிந்தனையையும், சமூக நோக்கங்களையும் செழுமைப்படுத்துகிறோம். கழகத்தின் அடித்தள லட்சியங்களை அவர்கள் மனத்தில் வேர் ஊன்றக்கூடிய அளவில் விதைக்கிறோம். எங்களை நோக்கி வீசப்படும் விமர்சனக் கணைகளை எப்படி எதிர்ப்பது என்ற பயிற்சியும் கொடுக்கிறோம்."



அது சரி ஸார். மாவட்ட அளவில் அமைப்பாளர்களுக்கு முப்பது வயது என்று வரம்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் மேல்மட்ட அளவில் பார்த்தால் அறுபது வயது ஆனவர் கூட பொறுப்பில் இருக்கிறார்களே. உங்களுக்கே கூட அறுபது ஆகிவிட்டதே...?




பொதுவாகவே இதுபோன்ற விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் முப்பது வயதுக்குள்தான் இருக்க வேண்டும். மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கு வயது வரம்பு நாற்பது. ஆனால் கழக சட்டத்தின்படி தலைமைக் கழகத்தில் பொறுப்பில் உள்ள எங்களுக்கு வயது வரம்பு இல்லை. களத்தில் இருப்பவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், மேலே வழி காட்டக்கூடிய இடங்களில் இருப்பவர்கள் அனுபவமும், முதிர்ச்சியும் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்த ஏற்பாடாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்."

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja6y-3oPMROkp8KZRsI4Y259Nsm1W869BVx93x_BtXD-F-fhvnwVmSYjx-ulshXIIuYYnhtYQj3wG50K8FEknlIhQd0YwH9K4BEb-BVKm3_zdScedp-RSffJfnqGrw_D8eHccnlWq1LeE/s400/p7b2.jpg

கழகத்தில் எதிர்பார்க்கப்படும் உயரத்தைத் தொட காத்திருக்கும் நீங்கள் தகுதிவாய்ந்த மற்றொருவருக்கு இளைஞர் அணி பொறுப்பைக் கொடுக்கும் காலம் வந்துவிட்டதா?



பொருளாளர் பதவியுடன் கூடுதல் பொறுப்பாகவே இளைஞர் அணி செயலாளர் பொறுப்பையும் வகிக்கிறேன். கொடுக்கப்பட்ட பொறுப்புகளை அனைவரது ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகிறேன். மற்றபடி இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க வேண்டியவர்கள் தலைவரும், பேராசிரியரும்தான். அவர்கள் தக்க நேரத்தில் முடிவெடுப்பார்கள்."





தலைவரது மகனாக இருப்பதால் இளைஞர் அணி சிறப்புச் சலுகைகளைப் பெறுகிறதா?




தலைவரைப் பொறுத்தவரை எல்லா அணிகளையும் சமநோக்கோடுதான் பார்க்கிறார். ஒரு உதாரணம்: அறிவாலயத்துக்கு கழக அலுவலகம் மாற்றப்பட்ட பின் அன்பகத்தை இளைஞர் அணி பயன்பாட்டுக்குக் கேட்டோம். அப்போது அங்கே தொழிற்சங்கமும் இயங்கி வந்தது. எந்த அணி பத்து லட்சம் கொடுக்கிறதோ அதற்குத்தான் அன்பகம் கொடுக்கப்படும்" என்று சொல்லிவிட்டார் தலைவர். அதன்பின் தமிழகமெங்கும் அலைந்து திரிந்து ரூபாய், ரூபாயாக சேர்த்து பதினொரு லட்சத் தைக் கொடுத்துதான் இளைஞர் அணிக்காக அன்பகத்தைப் பெற்றோம். தலைவர் மகனென்று தூக்கிக் கொடுக்கப்படவில்லை."



இளைஞர் அணியின் அடுத்தகட்ட நடவடிக்கை?



அமைப்பாளர்கள் போடுவது கூடிய விரைவில் முழுவதுமாக முடிந்துவிடும். அடுத்து இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு விரைவில் நடைபெறப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேதியும், இடமும், தலைவர், பேராசிரியர் ஒப்புதலுடன் அறிவிக்கப்படும்!"



அடேங்கப்பா!


இளைஞர் அணி சார்பாக அறக்கட்டளையொன்றை நிறுவியிருக்கிறார்கள். அண்ணா, கலைஞர் பிறந்த நாளின் போது பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி என்று அசத்துகிறார்கள். பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையில் அறக்கட்டளையின் சார்பாக இரண்டு கோடியே பதினேழு லட்ச ரூபாய் பரிசுத் தொகை இதுவரை வழங்கப்பட்டிருக்கிறதாம்.



நன்றி - கல்கி, சீதாரவி,அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி,புலவர் தருமி,அன்னா கண்ணன்


http://img.photobucket.com/albums/v144/annakannan/ulalal.jpg

2 comments:

Unknown said...

ரூபாய் ரூபாய்யாக பிட்சை எடுத்து ...ஹிஹிஹி

Unknown said...

மாநாடு விரைவில் ..... ஐயோயோ