Tuesday, July 03, 2012

இண்ட்டர்நெட்டில் கில்மா படம் பார்ப்பவர்கள் யார்? ஒரு சர்வே

1.அம்மா உங்கள் பெயரை சொன்னால் உமிழ்நீரும் தமிழ்நீராய் ஓடுகிறது - அதிமுகவின் வைகை செல்வன்! #  உம் பேரு என்ன ஜொள்ளு ஜக்கா?


--------------------------------

2. நான்  பொஞ்சாதியே வேண்டாம் என வாழ நினைத்தவன்ங்க. ஆனா எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சு கட்டி வெச்சுட்டாங்க  # பேச நினைத்தது

------------------------


3. பொஞ்சாதி இரண்டொழிய இப்போதைக்கு வேறெதுவும் சிக்கவில்லை - செல்வராகவன், பிரபுதேவா, தனுஷ்------------------------------

4. ஒருமுறை ஃபிகரிடம் கடலை போடும் ருசி அறிந்துவிட்டால் நீ வாழ்நாள் முழுக்க அந்த பழக்கத்தை விட்டு விட முடியாது # கேவலமான தத்ஸ்


-----------------------------


5. சேஃப்டிபின் கைல வாங்கினா சண்டை வருமாம் # ஓ சி ல வாங்குனா அப்படித்தான், காசு கொடுத்து கடையில் வாங்கவும்


------------------------------

இப்டி இருந்தா கண்ண மூடிட்டே சொல்லிடலாம், நம்ம சேவல் பண்ணை-காளையர் குடியிருப்பு என்று....;)

6. கையில்  சம்சாரத்தோட ஏ டி எம் கார்டு இருக்கும் போது வரும் தைரியம் வேறு எதுவும் தருவதில்லை.# ஹி ஹி 


---------------------


7. நையாண்டி - கடன் வாங்கினவுடனே செல் நெம்பரை மாத்திடனுமா? 


தேவையில்லை, கடன் கொடுத்தவன் நெம்பர் வந்தா மட்டும் அட்டெண்ட் பண்ணாம விட்டா போதும்


-------------------------------------

8. கடன் வாங்கி அதை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்ற நினைப்பவர்கள் செல் ஃபோனில் புது நெம்பர் வந்தால் எடுப்பதில்லை # அவதானிப்பு


--------------------------


9. என்னது? சைட் அடிக்கறதுக்கு ஆண்கள் வெட்கப்படனுமா?அய்யய்யோ, அப்போ நாங்க மற்ற எந்த வேலையும் செய்யவே முடியாதே?


---------------------------

10. ஒரு பொண்ணுக்குத்தெரியாம அவளை சைட் அடிப்பது என்பது போஸ்டர் ஒட்டாம, விளம்பரம் ஏதும் செய்யாம படம் ரிலீஸ் பண்ற மாதிரி, நோ யூஸ்


--------------------------------11. ஒரே சமயத்தில் 6 ஃபிகர்களிடம் நீ கடலை போட்டால், நீ ஓவராக வழிவதாக வரலாற்றில்  பதிவு செய்யப்படுவாய்! # ஜொள்ளாலஜி


---------------------------

12. சரிதாவுக்கு பின் ஏன் தமிழ் சினிமா கருப்பு அழகிகளை அறிமுகப்படுத்தவில்லை? ஏன்? 


சிம்ரன்,நந்திதாதாஸ், ரஞ்சிதா, ரோஜா, நந்திதாதாஸ்  எல்லாம் கறுப்புதானே?


--------------------

13. போருக்கு முடிவு உண்டு, போராட்டத்துக்கு முடிவு இல்லை.வானத்துக்கு விடிவு உண்டு, ஈழத்தமிழன் வாழ்வுக்கு விடிவே இல்லை


--------------------------------

14. வித்தாரகள்ளி சீன் படம் பார்க்கப்போனாளாம், இடைவேளை முடிஞ்சதும் ஓடி வந்தாளாம் # ங்கொய்யால, சீனே இடைவேளைக்கு முன்னால தானே


----------------------------

15. ஜம்மு காஷ்மீர்ல இருக்கறதெல்லாம்ஜம்முனு இருக்கற ஃபிகர் அல்ல,கும்பகோணத்துல இருக்கற ஃபிகர் எல்லாம்  கும்முனு இருக்கற ஃபிகரும் அல்ல # எகீ


----------------------------

16.நானே ராஜா நானே மந்திரி படத்துக்கு தடை? ஜெ ஆய்வு.. போட்டியாக நானே ராணி நானே தந்திரி எடுக்க முடிவு


---------------------------

17. குடும்பத்துடன் டிவி பார்க்கும்போது பாப்பா  கையில் தான் டிவி ரிமோட் இருக்கும்,அது நாம பெத்தபாப்பாவா, மாமனார் பெத்தபாப்பாவா அதுதான் மாறும்


--------------------------

18. 
சில பேரோட கல்யாண போட்டோ பார்த்த இப்படிதான் இருக்கும் :))
18.இயற்கை வேளாண்மை என்பது எந்த விதமான செயற்கையான பாவனையும் இன்றி வயல் வரப்பில் நின்று வில்லேஜ் ஃபிகருடன் கடலை போடுவதே


----------------------------


19.  எங்கப்பா மீதுள்ள கோபத்தை என் படம் மீது காட்டுகிறார் ஜெ. -உ.ஸ்டாலின் # எங்களுக்கு உங்கப்பா மேல இருக்கற கோபத்தை காட்டி இருந்தா!


------------------
20. .அகிலேஷ் பதவியேற்ற 24 நாளில் ஆயிரம் அதிகாரிகள் மாற்றம் # அடேங்கப்பா, நம்ம அகிலாண்டேஸ்வரி  ஜெவுக்கே அண்ணன் போல -----------------------------

21. ஆழ்துளை கிணறு போட்டு, இனி  தண்ணீர் எடுக்க முடியாது: வருகிறது புதிய சட்டம்  # ஹூம், மக்கள் கிணற்றுத்தவளையா இருக்கறவரை..


----------------------

22. சட்டசபையில் மீண்டும் மோதலுக்கு தயாராகிறார் விஜயகாந்த் # இனி லொள்ளு பண்ணுனா என் டார்கெட் சம்முகப்பாண்டிதான் ,ரெடியா கேப்டன்? - ஜெ!


---------------------------------

23. அட்டெம்ப்ட் ரேப்புக்கு முயன்ற எம்.எல்.ஏ.வை கொன்ற ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை # போங்கய்யா யோவ், முதல்ல எம் எல் வை மினிஸ்டர் ஆக்குங்க------------------------

24 வாய்க்காலின் இரு கரைகளிலும் பெண்கள் துவைக்கையில், குளிக்கையில் நடுவே நீரில் நீந்திச்செல்வது மன்னர் நகர் உலா போவது போல் இருக்கு------------------------------------


25 பூப்போல் மனசுள்ள பெண்களை பூவையர் என அழைக்கும்போது, அவர்களை எப்போ பாரு வையும் (திட்டும்)ஆண்களை ஏன் பூவையர் வையர் என அழைக்கக்கூடாது?


--------------------------------

26. இண்ட்டர்வியூவில் டேமேஜர் - என்னது? உனக்கு 3 மொழிகள் தெரியுமா? யூ மீன் தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி?


 மீ - நோ சார், தேன் மொழி, கனி மொழி, தமிழ் மொழி


------------------------------------

27. இண்ட்டர்நெட் யூசர்ஸ் 30% பேர் அதில் கில்மா படம் பார்க்கறாங்க - சர்வே # மீதி 70% பேரு சர்வே எடுத்தவங்க போன பின்னாடி பார்த்திருப்பாங்க


------------------------------5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு தல...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதுல முதல் ஆளு சிபி செந்தி்ல் குமார்...

ரைட்டு தானே...

princely said...

#12
What abt Amala Paul ?

'பரிவை' சே.குமார் said...

தல (சிபி அண்ணா) ராக்ஸ்...

முத்துசிவா said...

அண்ணே...உங்களுடைய எக்ஜ்குளூஜிவ் பேட்டிக்கான எனது சில கேள்விகள்

1. உங்களுடைய திரைப்பட விமர்சனங்களை போல (முழு கதை வசனத்துடன் 5 பக்கத்திற்கு) வேறு
எவரேனும் விமர்சனம் எழுதினால் அதை நீங்கள் படிப்பீர்களா?

2. முன்பு நீங்கள் எழுதிய பதிவுகள் எதயாவது திரும்ப வாசிக்கும் பழக்கம் உண்டா?

3. உங்கள் பதிவுகளை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்றுதான் எழுதுகிறீர்களா அல்லது பதிவு போட்டாக வேண்டும் என்ற கட்டாயதிற்காகவோ, தமிழ்மணம் தரவரிசையை தக்கவைப்பதறகாகவோ எழுதுகிறீர்களா?

4. நீங்கள் எழுதிய ஜோக்குகளை படித்து தங்களுக்கு எப்போதாவது சிரிப்பு வந்திருக்கிறதா?

5. தங்கள் பதிவுகளுக்கு வந்து பதிவை பற்றி எதுவும் கூறாமல், "வணக்கம்ணே" "வந்தாச்சு"
"ஓட்டு போட்டாச்சு" என்று பின்னூட்டமிடும் பதிவர்களை பற்றிய தங்கள் கருத்து என்ன?

6. நீங்களும் மற்றவர்கள் பதிவுகளில் "முதல் வெட்டு" "கெடா வெட்டு" என்று கமெண்ட் போடுகின்றீர்களே..
அது பதிவை படித்து விட்டு போடுகின்றீர்களா அல்லது பதிவை படிக்காமல் அவர்கள் உங்களுக்கு
இட்ட பின்னூட்டங்களுக்காக நீங்கள் திருமப இடும் பின்னூட்டங்களா?

7. தாங்கள் இதுவரை எழுதிய ஆயிரத்துக்கும் அதிகமான பதிவுகளில் மிக தரமான பதிவுகள் என்று தாங்கள் கருதுபவை எவை? (ஹிட்ஸ் அடிப்படையில் அல்ல)
ஒரு மூன்று பதிவுகளை குறிப்பிடுங்கள்

8. தங்கள் வலைக்கு வந்து செல்லும் வாசகர்களை ஏமாற்றாத வண்ணம் உங்கள் பதிவுகள் அமைகின்றது என எண்ணுகின்றீர்களா?

9. மற்ற வலைப்பதிவுகளில் இல்லாமல், உங்கள் வலையில் இருக்கும் தனித்தன்மை என எதை நீங்கள் கருதுகின்றீர்கள்?