Monday, July 30, 2012

ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம்

 India First Medal London Olympics Gagan Narang Wins

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ககன் நரங், வெண்கலப்பதக்கம் வென்றார்.



லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுதான் என்பதால் இந்தியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் களமிறங்கினர்.


இன்று மதியம் நடைபெற்ற தகுதி சுற்றில் மொத்தம் 47 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா அதிர்ச்சித் தோல்வியுற்று வெளியேறினார். அதே சமயம், தகுதி சுற்றில் 3வது இடத்தை பிடித்த இந்தியாவின் ககன் நரங் இறுதி சுற்றிற்கு முன்னேறினார்.


மாலையில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா, ருமேனியா உட்பட 8 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக புள்ளிகளை சேர்த்த ருமேனிய வீரர் அலின் ஜார்ஜ் 702.1 புள்ளிகளை சேர்த்து தங்கப்பதக்கத்தை வென்றார்.


அவரை தொடர்ந்து இத்தாலிய வீரர் நிக்கோலோ கேம்பிரினி 701.5 புள்ளிகளை பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் ககன் நராங் 701.1 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார்.


இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்தது.


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் பெற்று தந்துள்ள ககன் நரங், கடந்த 2006 மெல்போர்னில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை வென்றவர். அதேபோல கடந்த 2010ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டியிலும் ககன் நரங் 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

நன்றி - தட்ஸ் தமிழ் 




லண்டன், ஜூலை 30: லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் துப்பாக்கி சுடுதலில் அபிநவ் பிந்த்ரா 594 புள்ளிகளுடன் 16வது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ககன் நரங் துப்பாக்கி சுடுதலில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ககன் நரங் 701,1 புள்ளிகள் பெற்று 3வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாகும். 

ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு கிடைக்கும் 3வது பதக்கம் ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவின் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் மூலம் வெள்ளிப்பதக்கமும், கடந்த 2008ம் ஆண்டு அபினவ் பிந்த்ரா மூலம் தங்கப்பதக்கமும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.


கடந்த 2004 மற்றும் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லத் தவறிய ககன் நரங், இந்த ஆண்டு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



 நன்றி - தினமணி

4 comments:

Unknown said...

Super தல ....

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் ககன்! பகிர்வுக்கு நன்றி சி.பி!

இன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! http://thalirssb.blogspot.in

ராஜி said...

விருது பட்டியல் தங்கத்தை நோக்கி நீள ஆண்டவனை வேண்டிக்குறேன்.

Unknown said...

தொடரட்டும்