Friday, July 20, 2012

THE DARK KNIGHT RISES - ஹாலிவுட் சினிமா விமர்சனம்



http://cinemalebnen.org/Content/cinema-media/pictures/the-dark-knight-rises-poster.jpg 

பேட் மேன் பிகின்ஸ் (2005) ,  த டார்க் நைட் ( 2008)  ஆகிய 2 படங்களின் தொடர்ச்சியா இந்தப்படம் வருது.. த இன்செப்ஷன் பட டைரக்டர் கிறிஸ்டோபர் நோலன் தான் இதன் டைரக்டர்.. அதனால ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்.. உலகமே கடுமையாக கூச்சல்போட்டுக்கொண்டிருக்கும்போது, அந்தக் கூச்சலின் நடுவே அமர்ந்து ஒரு நாவல் எழுதற ஆள் தான்  நோலன்,  செல்ஃபோனோ அல்லது மின்னஞ்சலோ இல்லாதவர், அது எல்லாம் தேவை இல்லாத தொந்தரவுன்னு சொல்றவர், இவர் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் அதிகமா யூஸ் பண்ணாதவர்.. நம்ம ஊர்ல எப்படி மணிரத்னம், ஷங்கரோ அந்த மாதிரி ஹாலிவுட்ல இவர் ஃபேமஸ்.. 


படத்தோட கதை என்ன?

இதுக்கு முந்தைய பாகத்தில் வந்த வில்லன் அந்த நகரத்துல ஒரு பாம் போட ட்ரை பண்றான்.. அதை நகர மக்களும் பேட்மேனும் சேர்ந்து முறியடிச்சு அவனை முடிச்சுக்கட்டிடறாங்க.அவனோட வாரிசு ஒண்ணு பெருசு ஆகி அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்குன்னு காட்ட அதே மாதிரி பிளான் பண்ணி நியூக்ளியர் பாம் செட் பண்ணி வெடிக்க  ட்ரை பண்ணுது.. அதை எப்படி ஹீரோ முறியடிக்கறார் என்ற சாதாரண கதைதான்.. நாம எல்லாம் எத்தனை அர்ஜூன் படம், கேப்டன் படம் ,ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பார்த்தாச்சு.. ஆனா கிறிஸ்டோபர் நோலன் பிரமாதமான திரைக்கதையால ரெண்டே  முக்கால் மணி நேரம் நம்மை உக்கார வெச்சுடறாரு.. வில்லன் யாருங்கறதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு.. அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்..

இந்த மாதிரி படத்துல என்ன ஒரு பாசிட்டிவான அம்சம்னா ஹீரோவுக்கு முகபாவனை சரியாவே வர்லைன்னு குறை சொல்ல முடியாது,, ஏன்னா  படத்துல பாதி நேரம் ஹீரோ  மாஸ்க்கோட தானே வர்றார்? ஆனா ஆள் ஜைஜாண்டிக்கான உருவம்..  மகாநதி கமல் மாதிரி இவர் அடி வாங்கற சீன் தான் அதிகம்.. படத்துல வர்ற 70 மார்க் ஃபிகர் கிட்டே 2 லிப் கிஸ் பண்றார்.. ரொமான்ஸ்க்கு ட்ரை பண்றார்.. ஆனா டைரக்டர் விடலை..ரொம்ப வயசான பேட் மேன்
http://collider.com/wp-content/uploads/the-dark-knight-rises-anne-hathaway-prison.jpg


வில்லன் படம் பூரா அவர் பங்குக்கு ஒரு முகமூடி மாதிரி கேட்டா ஆக்சிஜன் சிலிண்டராம்.. மூச்சு விடவே கஷ்டப்படற ஆள் போல..முகம் எல்லாம் சிதைஞ்சதால அப்படி ஒரு மாஸ்க்னு க்ளைமாக்ஸ்ல சொல்றாங்க, ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாமே?லோ பட்ஜெட் படமா என்ன?ஆனா ஆள் ஆளவந்தான் கமல் மாதிரி ஆஜானுபாகவமான தோற்றம் ( ஏன்னா இங்க்லீஷ்ல ஜைஜாண்டிக்னு ஆல்ரெடி ஹீரோவை சொல்லியாச்சு


லேடி ராபின் ஹூட்டா வர்ற ஃபிகருதான் ஹீரோயின்  70 மார்க் போடலாம்.. ரொம்ப டைட்டா டிரஸ் போட்டுட்டு வந்து பாவம் அவங்களும் கஷ்டப்பட்டு நம்மையும் இன்ப அவஸ்தைல மூழ்க வைக்குது.. அது போட்டுட்டு வர்ற லிப்ஸ்டிக் கண்ணை பறிக்குது.. ஹை ஹீல்ஸ் செப்பல் உயரம் மட்டும் 6  இஞ்ச்..  32 பல்லுல ஒரு பல் கூட கடைசி வரைக்கும் தெரியலை  அவ்ளவ் அமுக்கி போல.. 

 படத்துல இன்னொரு ஃபிகரு வருது. அது இதை விட நல்ல ஹோம்லி ஃபிகரு.. ஆனா அது எப்பவும் சிடு மூஞ்சியாவே இருக்கு.. நோ யூஸ்..மிராண்டா 4 சீன் வந்தாலும் நச்சுன்னு இருக்கு, நான் டைரக்டரா இருந்தா படம் பூரா வர்ற மாதிரி சீன்ஸ் வெச்சிருப்பேன், ஏன்னே கோடிக்கணக்குல சம்பளம் கொடுத்துட்டு தொட்டுக்கோ தொடைச்சுக்கோன்னா எப்டி?





http://www.filmofilia.com/wp-content/uploads/2012/06/THE-DARK-KNIGHT-RISES-poster.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1. நம்ம 2 பேர்ல  ஒருத்தராவது உயிரோட இருக்கனும்..

அப்போ சாவு பயம் வந்துடுச்சுன்னு சொல்லு.. 




2. ஹாய் ஸ்வீட் ஹார்ட்.. நான் அதை டேஸ்ட் பண்ணவா?  ( எதை?)



3. அந்தப்பொண்ணு உங்களைப்பார்க்க ஆசைப்படுது..

அவ ரொம்ப அடமண்ட்டான கேரக்டர் ஆச்சே?

எல்லா அழகிகளும் அடமன்ட் தான்.. ( சி பி - ஆனா எல்லா அடமண்ட் கேர்ள்சும் அழகிகளா இருக்க மாட்டங்க )




4. கை ரேகையை வெச்சு ஆளை அடையாளம் கண்டு பிடிக்கலாம்னு நினைச்சேன், ஆனா வந்தவ புத்திசாலி.. வேற ஒருவரோட ஃபிங்கர் பிரிண்ட்ஸை வெச்சு திருடி இருக்கா..

5.  அப்போ அவ நல்ல டெக்னிக்கல் திருடிதான்..

 இப்போ அவளை கண்டுபிடிக்கனுமா? பாராட்டு விழா நடத்தனுமா?

6. உலகத்துல இருக்கற எல்லா லவர்ஸூம் ஒண்ணு சேர்றதில்லை.. அப்படி சேர்ந்தாலும் கடைசி வரை ஒத்துமையா வாழ்ந்துடறதும் இல்லை

7. அவன் கண்டிப்பா செத்து இருப்பான்.. 

 அப்போ டெட் பாடியை என் கண்ல காட்டு.. அப்போத்தான் நம்புவேன்..

இந்த தண்ணி 4 திசைல போகுது.. அதை எங்கேன்னு போய்த்தேட?

 சரி ஃபாலோ பண்ணு ( புடுச்சு தள்ளி விட்டுடறான்)


8.  அவரை இப்போ நேர்ல பார்க்கனும்


ஆனா அவர் யாரையும் சந்திக்க விரும்பலை


அரெஸ்ட் வாரண்ட் இருந்தாக்கூடவா?



9. பர்ஸ்ல ஜஸ்ட் 10 ரூபா தான் வெச்சிருக்கான்.. வேற யாரும் உனக்கு சிக்கலையா?


10  பார்ட்டிங்கறது பகட்டை வெளீல காட்டிக்கறதுக்கும், பணக்காரங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து கூத்தடிக்கவும் தான்



http://2.bp.blogspot.com/_y4TqX9RvuOM/TLPxegpGccI/AAAAAAAACTg/gEDoQGjrccw/s1600/MarionCotillard_Inception2.jpg


11.. ஊரை ஏமாத்தும் சாகசக்காரி நீ.. உனக்கு ஏழை கிடைச்சாலும் சரி, பணக்காரன் கிடைச்சாலும் சரி, அவனை ஏமாத்தி பணம் பறிப்பே..

 ச்சே ச்சே இருக்கறவங்க கிட்டே இருந்து பறிச்சு  இல்லாதவங்க கிட்டே கொடுக்கப்போறேன்

 அப்போ நீ லேடி ராபின் ஹூட்டா?

12.  என் கார் கீ மிஸ் ஆகிடுச்சு..

 ஜஸ்ட் நவ் உங்க ஒயிஃப் காரை ஓட்டிட்டு போனாங்க

 சுத்தம், காரை சுட்டுட்டுப்போய்ட்டாளா?

13. உங்க கிட்டே இருக்கற நரை முடி குறைஞ்சாலும் அந்த நக்கல் இன்னும் குறையவே இல்லை..

14. ஆஆஆ

என்ன? வலிக்குதா?

பின்னே? பொழுது போகாம கத்தறேன்னு நினைக்கிறியா?

15. கண்ணா,.. இது ஸ்டாக் ஏஜென்சி.. இங்கே நீ நினைக்கற  மாதிரி பணம் ஏதும் கிடையாது..

 அப்படியா?அப்போ உனக்கு இங்கே என்ன வேலை? கிளம்பு!

16. அங்கே எல்லார் பணமும் மாட்டிக்கிச்சு.. மக்கள் எல்லாரும் தங்களோட பணத்தை அங்கே தான் இன்வெஸ்ட் பண்ணி வெச்சிருக்காங்க..

 உஷ் அப்பாடா.. நல்ல வேளை, நான் ஏதும் பணம் போடலை..

17.  எத்தனை ஆஃபீசர்ஸ் லீவ்ல போய் இருக்காங்களோ எல்லாரையும் இப்போ வரவழை.. சீரியஸ் ஆர்டர்..

18. நான் விரிச்ச வலைல பேட்மேன் மாட்டிக்குவான்னு நினைக்கறென், பாரு.

 மாட்டிக்க அவன் எலி இல்லை சார் , புலி; பாருங்க,  உங்க கண் முன்னால தப்பிச்சுட்டான்.. இதுக்கு நீங்க தூக்குல தொங்கலாம்

19. அடடா.. இப்போ இருக்கற சிச்சுவேஷனுக்கு கூட ஒரு ஃபிகர் இருந்தா எவ்ளவ் நல்லா இருக்கும்?

 ஏன்? என்னைப்பார்த்தா ஃபிகரா தெரியலையா?

20.ச்சே.. நீ யாரையும் கொல்ல மாட்டியா?

 என் வழி தனி  வழி

 வெத்து வேட்டுன்னு சொல்லு



http://cdn.screenrant.com/wp-content/uploads/Marion-Cotillard-Joseph-Gordon-Levitt-The-Dark-Knight-Rises.jpg

21.  முகம் தெரியாத ஆள் கூட கார்ல போகக்கூடாதுன்னு மம்மி சொல்லி இருக்காங்க..

நோ பிராப்ளம், இது கார் இல்லை

22. நான் இருக்கற வரை என் பேச்சை கேட்க மாட்டே.. நான் செத்துட்டா அதுக்குப்பின் என் பேச்சைக்கேட்காம போய்ட்டோமேன்னு வருத்தப்படுவே

23. நீ எதுக்காக பேட்மேனா மாறுனே?

 எனக்கு நெருக்கமான வங்களை ஆபத்துல இருந்து காப்பாத்த

உனக்குத்தான் சொந்த பந்தம் யாரும் இல்லைன்னியே?

இந்த உலகத்துல இருக்கற  எல்லா நல்லவர்களும் என் சொந்தம் தான்

24.  எனக்கு வர்ற கோபத்துக்கு... நற நற..

 கூல்.. பேசாம நீ செத்துடேன்

25.  என்ன அங்கே இருட்டா இருக்கு?

 டோட்டல் ஃபியூசும் போயிடுச்சுன்னு நினைக்கறேன் ( ஃபிகர் அருகில், இரவில், முன் கூட்டிய உறவில்)


26.  அவன் ஒண்ணும் நீ நினைக்கறது மாதிரி சாதாரண ஆள் இல்லை.. 

 நான் கூட அப்படித்தான்...


27. இருட்டை பார்த்து நான் பயப்பட்டதே இல்லை, ஏன்னா நான் பொறந்ததே இருட்டுல தான் ( டெண்ட் கொட்டாய்ல படம் ஓடிட்டு இருக்கும்போது பொறந்த  பயல் போல )
28. நீயும் நிறைய தப்பு பண்ணி இருக்கே..

நானும் வாழனும் இல்லை?

இவ்ளவ் கேவலமாவா?மோசமான ரெக்கார்ட்சை கைல வெச்சுக்கிட்டு எங்க கிட்டே இருந்து தப்பிச்சு போய்ட்டு இருக்கியே?

28
28. நீ இங்கே இருந்து தப்பிச்சு போகவே முடியாது

ஜஸ்ட் ஒரு குழந்தையே இங்கே இருந்து தப்பிப்போச்சுன்னு சொன்னியே?குழந்தையே தப்பிக்கும்போது  நான் தப்பிக்க மாட்டேனா?

அது சாதாரண குழந்தை இல்லை.. வலியிலேயே பிறந்து வலியிலேயே வளர்ந்த குழந்தை ( ராமராஜன், பவர் ஸ்டார் படம் பார்த்துட்டே இருந்திருக்குமோ? )

29.   எது உன் பலம்னு நினைக்கறியோ அதுதான் உன் பலவீனம்.. எதை நீ பலவீனம்னு நினைக்கறியோ அதையே உன் பலமா மாத்து

 புரியலையே?

அடுத்து என்ன நடக்கும்னு முடிவு தெரியாதவரை நீ பலசாலியா இருந்தே.. முடிவு தெரிஞ்சதும் உனக்கு சலிப்பு வந்துடுச்சு, ஆர்வம் போயிடுச்சு

30. மனோபலம் தான் ஒரு மனிதனின் முக்கியத்தேவை





http://www.filmophilia.com/wp-content/uploads/2012/07/the-dark-knight-rises-anne-hathaway-image.jpg


31.  உன் கிட்டே வாக்கு மூலம் கேட்கறதுக்காக இங்கே நாம கூடலை. தண்டனை கொடுக்க.. கூடி இருக்கோம்.  உனக்கு என்ன தண்டனை வேணும்னு நீயே தீர்மானிச்சுக்கோ.. மரணமா?நாடு கடத்தலா? ஒன்லி ஒன் சாய்ஸ்

32.  கை வைக்கறது தப்பில்லை, ஆள் யார்னு பார்த்து கை வைக்கனும்

 அதை நீ சொல்றியா? எல்லாம் நேரம் தான்

33.  இது ஒழுங்கா பறக்குமா?

யா, ஆட்டோ பைலட்டே தேவை இல்லை..

 ஆட்டோ பைலட்டா? அது எதுக்கு? அப்புறம் அது இருந்தா நீ எதுக்கு?


34.  நீயும் என் கூட வந்துடு..
 நோ, நான் நாட்டை காப்பாத்தனும்
 முதல்ல உன்னை நீ காப்பாத்திக்கோ
 என் நாடு, என் மக்கள்

35.  கஷ்டத்துல இருக்கறவங்களுக்கு உதவறவங்க, பசில இருக்கறவங்களுக்கு சாப்பாடு போடறவங்க யார் வேணாலும் ஹீரோ ஆகலாம்






http://moviesmedia.ign.com/movies/image/article/114/1144798/the-dark-knight-rises-20110119103041795.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  லேடி ராபின் ஹூட் ஹீரோயின் அந்த பங்களாவுக்குள்ளே நுழைஞ்சு வைர மாலையை லபக்கும் சீன் செம விறு விறுப்பு 


2. போலீஸ் உள்ளே நுழைந்ததும் கொள்ளை அடிச்சவளே எதுவுமே தெரியாத மாதிரி அலறி ஆர்ப்பாட்ட்டம் செய்வது கலக்கல் காட்சி


3. அதே போல் வில்லன்குரூப்  எஸ் ஆகும்போது பைக்கில் முன் பின் பணயக்கைதியாக ஆட்களை வைத்து செல்லும் சீன்.. இனி தமிழ்ப்படங்களில் அதை சுட்டு சீன் வரும் என எதிர்பார்க்கலாம்


4. படத்தின் முக்கிய முடிச்சை யார் வில்லன் என்பதை யூகிக்க முடியாத புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பு, படத்தில்  எல்லாரும் அந்த மாஸ்க் ஆள் தான் மெயின் வில்லன் என நினைக்கையில் க்ளைமாக்சில் அந்த ட்விஸ்ட்


5. அட்டகாசமான இசை, அருமையான ஒளிப்பதிவு, ஆர்ப்பாட்டமான  லொக்கேஷன்ஸ், காட்சி அமைப்புகள் எல்லாம்  அசத்தல்.. தொழில் நுட்பத்தில் கரை கண்ட டீம் தான்.. 



http://images.contactmusic.com/newsimages/the_dark_knight_rises_director_christopher_nolan_1211356.jpg


 இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனிடம் சில கேள்விகள்


1.  ஆல்ரெடி சூப்பர் ஹிட் படங்கள் 7 கொடுத்த நீங்க சாதாரண பாம் பிளாஸ்ட் கதையை ஏன் செலக்ட் செஞ்சீங்க? அதே போல் படத்துல ஸ்பீடு கம்மி.. ஏ செண்டர் ரசிகர்கள் மட்டும் தான் பார்க்க முடியும்.. 


2. பொய்யான ஃபிங்கர் பிரிண்ட்டை யூஸ் பண்றது ஓக்கே ஆனா வர்றவ ஒரு லேடி.. அவ ஏன் ஒரு ஆணின் கை ரேகையை யூஸ் பண்ணனும்? போலீஸ்ல செக் பண்ணா கண்டு பிடிப்பாங்கன்னு தெரியாதா? ஒரு பெண்ணின் கை ரேகையை யூஸ்பண்ணி இருந்தா ட்விஸ்ட் பண்ணி இருக்கலாமே?


3.  ஒரு சீன்ல வீடு வீடா போய் பாம் வெடிக்கப்போகுதுன்னு சொல்லுங்கனு சின்னப்பசங்க கிட்டே சொல்ற மாதிரி சீன் வருது..  அந்த 7 பேர் எத்தனை வீட்ல போய் சொல்லி  எத்தனை பேரை உஷார் பண்ணி விட முடியும்? இதுக்கு டேம் 999 படத்துல வர்ற ஐடியாவே பெட்டர் ஆச்சே?


4. வில்லன் எதுக்காக அந்த ஆக்சிஜன் மாஸ்க் போட்டிருக்கான்கறதை கடைசி வரை சொல்லவே இல்லை.. லாஸ்ட்ல ஒரே ஒரு சீன்ல 2 செகண்ட் அது பற்றி வருது,, அதை எத்தன பேர் கவனிச்சாங்கன்னு  தெரில.. கதைக்கு வில்லன் மாஸ்க் அவசியமா? ஏன்னா பாதி நேரம் ஹீரோ, ஹீரோயின், வில்லன் எல்லாரும் மாஸ்க்கோட சுத்திட்டு இருந்தா மக்கள் எப்படி அவங்க முகத்தை  ரசிப்பாங்க?


5. வில்லன் கைல ஹீரோ சிக்கிடறான்.. அப்பவே அவனை போட்டுத்தள்ளாம  இந்த நகரம் அழியறதை நீ பார்த்துட்டு போன்னு தேவை இல்லாம எதுக்கு அவனுக்கு டைம் குடுக்கனும்?மாமூல் மசாலா டைரக்டர்ஸ் அந்த தப்பை பண்ணலாம்.. யூ டூ?



சி.பி. கமென்ட் - பி சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்பிடிக்காது.. ரெண்டே முக்கால் மணி நேரப்படத்துல ஒன்றரை மணி நேரம் பேசிட்டே இருக்காங்க.. மற்றபடி ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்,  கிறிஸ்டோபர்  ஃபேன்ஸ், பேட் மேன் ரசிகர்கள் பார்க்கலாம்.. லேடீஸ், குழந்தைகள் பார்க்கும் தரத்தில் தான் இருக்கு.. ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் படம் பார்த்தேன். டைம்ஸ் ஆஃப் இண்டியா எதிர்பார்க்கப்படும் ரேட்டிங்க்  - 3/5 , டெக்கான் க்ரானிக்கல்  7 /10


இதன் முதல் பாகம் படிக்க - THE DARK KNIGHT  -நோலனின் ஆக்‌ஷன் கலக்கல் - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/07/the-dark-knight.html

11 comments:

thatswhyiamhere said...

டயலாக் எல்லாம் எப்பிடி நியாபகம் வைச்சு எழுதுறீங்க பாஸ் ..

சேகர் said...

ரெண்டு பெரும் ஒன்னா தான தியேட்டர்ர விட்டு வெளியே வந்தோம். அதுக்குல்லையேவா...

நானும் விமர்சனம் எழுதிட்டேன் வந்து படிச்சு எப்டின்னு சொல்லுங்கோ...
http://eththanam.blogspot.in/2012/07/epic-concluded.html

Senthil said...

Gud

கேரளாக்காரன் said...

Bro don't follow the same Tamil film review style for Hollywood movies it won't work

John said...

புதிதாக வெப்சைட் தொடங்க வேண்டுமா...?

http://zhosting.in சென்று உங்களின் புதிய வெப்சைட்டை நிறுவுங்கள். உங்களுக்கு தமிழிலேயே உதவிகள் வழங்கப்படும்.

angusamy said...

christoper nolan ஸ்டைல் அதான். ரொம்பவே வசனம்கள் இருக்கும்!!

அதே போல ஏற்கனவே ஒருத்தர் சொன்னது போல தமிழ் படம் விமர்சனம் எழுதற ஸ்டைல் ஆங்கில படத்துக்கு உதவாது சார்!!

ippa புதுசா times of india and decon chronicle ரேட்டிங்க? கலக்குங்க!!!

இப்படி உங்களை அப்டேட் பண்ணிக்கிறதுதான் உங்க ஸ்பெஷல்

nellai அண்ணாச்சி said...

என்ன அண்ணாச்சி இன்னைக்கு கி .ரா .வின் நடு நிசி கதைய காணோம்

angusamy said...

அதென்ன TTHE dark knight rises? it is supposed to be THE???

Bala Ganesan said...

இந்த விமர்சனத்தை மட்டும் இயக்குனர் நோலன் படிச்சாரு ங்கொய்யால தற்கொலை பண்ணி செத்துருவாரு..........தமிழ் தெரியாது அப்படிங்கிறதால தப்பிச்சாரு...அய்யா சாமி தமிழ் படத்திற்கு (அதுவும் ஏதேனும் மசாலா படத்திற்கு) விமர்சனம் எழுதுறதோட நிறுத்திக்கோங்க...இந்த விபரீத விளையாட்டெல்லாம் வேண்டாம்.

Unknown said...

Who invented blogs, gonna kill him. neenga yarunea therila athanala ungala thita mudila. en friend ah iruntha keta keta varthaila thitirupean. Manichurunga neenga ithuku sariya varamateenga.

Unknown said...

bad
please stop your review