Friday, July 27, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27.7..2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/22138_1.jpg1.பொல்லாங்கு -அடர்ந்த காட்டுப் பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களிடம் ஒரு காதல் ஜோடி மாட்டிக் கொள்கிறது.
அந்த ஜோடி அவர்களிடமிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பது படத்தின் கதை. ரவிராகுல், நிஷா லால்வாணி நடித்துள்ளனர்
பி.ஆர். எண்டர்டைன்மெண்ட் சார்பில் எம். பிரகாஷ், இ. ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் பொல்லாங்கு.

இதில் நாயகனாக ரவிராகுல், நாயகியாக நிஷா லால்வாணி நடிக்கின்றனர். வெற்றி, யாத்ரா, ரஞ்சித், நாராயணன், ஸ்ருதி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி காந்தி மார்க்ஸ் இயக்குகிறார். இவர் பிரபல ஓவியர். குறும்படங்களையும் இயக்கி உள்ளார்.

புதிதாக திருமணமான ஜோடி தேனிலவு கொண்டாட காட்டுக்குள் செல்கின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் பயங்கரங்களே கதை. திகில் படமாக தயாராகிறது.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. காட்சிக்கு காட்சி இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் என்றும் தொழில்நுட்ப ரீதியில் உயரிய படமாக தயாராகிறது என்றும் இயக்குனர் கூறினார்.

ஒளிப்பதிவு: வினோத்குமார், இசை: ஜுபின்.ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்


http://4.bp.blogspot.com/-u-XjgAS4Dyc/T1hRlxPYPyI/AAAAAAAABB8/7ZjoKm7mit8/s1600/Maalai-Pozhudhin-Mayakathilaey.jpg

2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே - திரைத்தமிழின் தந்தை கவியரசு கண்ணதாசனின் பேரனும், மூத்த இயக்குநர் கலைவாணனின்  மகனுமான, ஆதவ் கண்ணதாசன், தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகும் படம்தான் மாலைப்பொழுதின் மயக்கத்திலே. இந்தப் படத்தின் இசையை இன்று சென்னையில் வெளியிட்டு, கண்ணதாசனின் பேரனை வாழ்த்தினார்  கமல்! இந்த விழாவின் இன்னோரு அட்ராக்‌ஷன் கவிபேரரசு வைரமுத்து! கண்ணதாசனின் காதலரான வைரமுத்து அவரது பேரனின் இசையை பெற்றுக்கொள்ள வந்தது  ஆச்சர்யம்!


ஈரோடு அன்னபூரணி, ஸ்ரீநிவாசா 2 தியேட்டர்களில் ரிலீஸ்


http://3.bp.blogspot.com/-m3qgbZWNiJY/UA7J1EF0x1I/AAAAAAAA9Fw/JsRGOztYUyE/s320/Suzhal+Movie+Release+Date+Posters+Mycineworld+Com+(1).jpg
3. சுழல் -ரன், கேடி, படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல இந்தி நடிகர் அதுல் குல்கர்னி ஆக்ஷன் நாயகனாக அவதாரம் செய்திருக்கும் படம் தான் சுழல். நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவைகளை சீர்குலைக்க சர்வதேச தீவிரவாத கும்பல் முயற்சிக்கிறது. இதுபற்றி துப்புதுலக்கி, தீவிரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் ஒரு அதிகாரியை பற்றிய கதை இது. படத்தில் துப்பறியும் அதிகாரியாக அதுல் குல்கர்னி நடித்துள்ளார்.


அவருடன் பிரதாப்போத்தன், நிழல்கள் ரவி, காவேரி, மீரா கிருஷ்ணன், மீனாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன், விறுவிறுப்பு, அதிரடி, சாகஸங்கள் நிறைந்த கதையாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார், இதன் இயக்குநரான ஜெயின் ஆர்.கிருஷ்ணா. அதுல் ஜேம்ஸ் கிருஷ் ஒளிப்பதிவு செய்ய, எல்.வி.கணேசன் இசையமைக்க, பிறைசூடன், சினேகன், முத்துவிஜயன், யுகபாரதி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.ஈரோடு அண்ணாவில் ரிலிஸ்


http://f7.mb-content.com/pictures/608/02/8/1802608_RKMNDJQEMUFGKWU.jpg
4. ICE AGE 4 -உலக அளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த அனிமேஷன் படம், அதிக அளவில் வசூலைக் குவித்த அனிமேஷன் பட வரிசைகளில் ஒன்று என்று சொன்னால் அது ‘ஐஸ் ஏஜ்’ படவரிசையாகத்தான் இருக்கும்.


கடந்த 2002-ல் ஐஸ் ஏஜ் பட வரிசையின் முதல் படமான 'ஐஸ் ஏஜ்' திரைக்கு வந்தது. இப்படத்தின் வெற்றியை அடுத்து 'ஐஸ் ஏஜ் 2 - மெல்டிங் டவுன்' கடந்த 2006-ல் வெளிவந்தது. இப்படத்தை அடுத்து 'ஐஸ் ஏஜ் 3 - டான் ஆப் தி டைனோசிரஸ்' கடந்த 2009-ல் வெளிவந்தது.

இந்த மூன்று அனிமேஷன் படங்களும் வசூலில் சாதனை படைத்தது மட்டுமின்றி உலக அளவில் மெகா ஹிட்டானது. இந்த வரிசையில் தற்போது 'ஐஸ் ஏஜ் 4  - கான்டினென்டல் ட்ரிப்ட்' என்ற படம் திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தின் கதையாவது, ஐஸ் ஏஜ் காலம் இருந்த போது, கண்டங்கள் அனைத்தும் ஒன்றாக இருந்தன. 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக ஏழு கண்டங்களாக நிலப்பரப்புக்கள் பிரிகின்றன.

அப்போது இப்படத்தில் வரும் ஐஸ் ஏஜ் காலத்து விலங்குகளான மேன்னி( யானை), டியாகோ (புலி), சிட் (சிறு கரடி) ஆகியவை கண்டங்கள் பிரியும் போது அவர்களது குடும்பத்தினர்களை விடுத்து தனிக்கண்டத்தில் மாட்டிக் கொள்கின்றன. இவைகள் மீண்டும் தங்களது குடும்பத்தினரோடு ஒன்று சேர்வது போல் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ் 'சாரா' எனும் பெண்புலி கேரக்டருக்கு குரல் கொடுத்திருக்கிறார். உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் ஜூலை 13-ம் தேதி அமெரிக்காவில் திரைக்கு வந்தது.

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் இத்திரைப்படம் இந்தியாவில்  ஜூலை 27-ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை, பள்ளிபாளையத்தில் ரிலீஸ், தியேட்டர் எதுன்னு மாலை தான் தெரியும், அப்போ அப்டேட் பண்றேன்
5. bloody mary - (2006) 6 வருஷங்கள் முன்னே ரிலீஸ் ஆன படம் இப்போ ஏன் இந்தியாவுக்கு வருதுன்னு தெரியலை.. ஹாஸ்பிடல்ல ஒரு நர்ஸ் திடீர்னு காணாம போயிடறா.. அதை தொடர்ந்து அங்கே இருக்கற நர்ஸ்ங்களூக்கு எல்லாம் ஏதோ ஆபத்து வருது... பேஷண்ட்ஸ் எல்லாம் திகில்ல இருக்காங்க.. மேரின்னு ஒரு நர்ஸ் ஆவி எதுக்காக இப்படி பழி வாங்குதுங்கரதுதான் கதை.. தமிழ்ல கண்ணாடி பிசாசுன்னு மொழி பெயர்த்து வருது.. ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ் http://imovies4you.net/wp-content/uploads/2008/08/the-legend-of-bloody-mary.jpg

3 comments:

குரங்குபெடல் said...

" 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே - திரைத்தமிழின் தந்தை கவியரசு கண்ணதாசனின் பேரனும், மூத்த இயக்குநர் கலைவாணனின் மகனுமான, ஆதவ் கண்ணதாசன், தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகும் படம்தான் மாலைப்பொழுதின் மயக்கத்திலே. இந்தப் படத்தின் இசையை இன்று சென்னையில் வெளியிட்டு, கண்ணதாசனின் பேரனை வாழ்த்தினார் கமல்! இந்த விழாவின் இன்னோரு அட்ராக்‌ஷன் கவிபேரரசு வைரமுத்து! கண்ணதாசனின் காதலரான வைரமுத்து அவரது பேரனின் இசையை பெற்றுக்கொள்ள வந்தது ஆச்சர்யம்!

புதுமுக இயக்குநர் ஏ.சி.துரை இயக்கத்தில், ஆதவ், காயத்ரி நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்மாலைப் பொழுது படத்தின் மூலம் நடிப்பை தேர்ந்தெடுத்தது ஏன் என ஆதவிடம் கேட்டபோது, “எல்லாரும் ஏன் தாத்தா மாதிரி பாடலாசிரியர் ஆகவில்லை என்று கேட்கின்றனர். அவர் நிறைய சாதித்துவிட்டார், இனி என்னால் அது சாத்தியமில்லை. எனவே நான் நடிகனாக களமிறங்கி விட்டேன். வெற்றி பெற எவ்வளவு உழைக்க வேண்டுமானால் தயார்” என்கிறார். "


தம்பி என்ன இது . . . ?

Unknown said...

ஹிஹிஹி

”தளிர் சுரேஷ்” said...

பொல்லாங்கு படத்தின் தயாரிப்பாளர் இ. ரவிச்சந்திரன் எங்க ஊரு கவுன்சிலர்! இவர் நடிக்கவும் செய்கிறாராம்! எங்க பக்கம் பேனர் வச்சி அசத்துறாங்க!