Tuesday, July 24, 2012

வேணாம் மச்சான் வேணாம்... இந்தப் பொண்ணுங்க காதலு(ஓகேஓகே) வேல் முருகன் பேட்டி’

வேணாம் மச்சான் வேணாம்... இந்தப் பொண்ணுங்க காதலு(ஓகேஓகே)’ பாடலுக்கு ஆடாத குழந்தை ஒன்று உண்டா? ‘ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் (கழுகு)’, ‘போட்டது பத்தலை மாப்பிள்ளை (சகுனி)’ பாடல்களுக்கு ஆடாத இளைஞர்கள் உண்டா? வேல்முருகன் பாடிய சமீபத்திய மூன்று பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். குக்கிராமத்திலிருந்து கிளம்பி வந்து தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவரின் முத்து முத்தான அனுபவங்கள்:

விருத்தாசலத்துக்குப் பக்கமுள்ள முதனை கிராமத்தைச் சேர்ந்தவன் நான். 10-ம் வகுப்பு வரை உள்ளூரில் படித்துவிட்டு, கோயம்புத்தூரில் .டி.. சேர்ந்தேன். பள்ளி, கல்லூரிகளில் நான் பாடும் மண் சார்ந்த பாடல்களுக்கு எப்போதும் வரவேற்பும் மரியாதையும் இருக்கும். இந்த ஊக்கத்தால், இசையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்து அடையாறு இசைக் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரிப் படிப்பை முடித்து எல்லா இசையமைப்பாளர்களிடமும் சென்று வாய்ப்பு கேட்டேன். தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தேன்.


விஜய் டி.வி.யில், யார் மனசுல யாருநிகழ்ச்சிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு ஒரு கிராமியப் பாடலைப் பாடினேன். என் குரலைக் கேட்ட ஜேம்ஸ் வசந்தன், ‘சுப்ரமணிய புரம்படத்துக்காகமதுரை குலுங்கக் குலுங்கபாடலைப் பாட வாய்ப்புத் தந்தார். அந்தப் படமும் பாட்டும் ஹிட்டானாலும்கூட, பிறகு எனக்குப் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. திருமணம் வேறு ஆகிவிட்டது.


இயக்குனர் சசிகுமாரைச் சந்தித்தேன். ‘இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். பட வாய்ப்பும் மேடை நிகழ்ச்சி வாய்ப்பும் சரியாகக் கிடைப்பதில்லைஎன்று வேண்டுகோள் வைத்தேன். ‘நாடோடிகள்படத்தில் வருகிறஆடுங்கடா மச்சான் ஆடுங்கடாபாடலை வேறொரு பாடகர் பாடி முடித்துவிட்டார். ஆனாலும், எனக்காக சமுத்திரக்கனியுடன் பேசி, வாய்ப்பு வாங்கித் தந்தார் சசிகுமார். அவர் செய்த பேருதவியால், அந்தப் பாடல் ஹிட்டாகி, எனக்கு வாய்ப்புகள் பெருக ஆரம்பித்தன.



‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்படத்தில் நான் பாடிய பாடலைக் கேட்ட ஆடுகளம் தயாரிப்பாளர், ‘ஒத்த சோல்லால...’ பாடலுக்கு என்னைப் பரிந்துரைத்தார். அந்தப் பாட்டில் வருகிற பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழைபேஞ்சிஎன்கிற வரியை ஹைபிட்சில் மற்றவர்களால் பாடமுடியவில்லை.



 ஜி.வி. பிரகாஷ் இந்த வரியை முதலில் பாடச் சொல்லி டெஸ்ட் செய்தார். என் குரல் எகிறிப் போய் பாடிய விதத்தைக் கண்டு, ‘நீங்கதான் இந்தப் பாட்டைப் பாடறீங்கஎன்று சொல்லிவிட்டார். ‘விஷுவலுக்கு ஏத்த வாய்ஸ். பாடலை அருமையாய் படமாக்க முடியும்னு தோணுதுஎன்றார் வெற்றிமாறன். சிறந்த நடனத்துக்கான தேசிய விருதை அப்பாடல் பெற்றது.


ஓகே ஓகேபடத்தில்வேணாம் மச்சான் பாடலைவேறொரு வரை வைத்துப் பாட வைத்தும் ஹாரிஸ் ஜெயராஜுக்குத் திருப்தி வரவில்லை. அந்தப் படத்தின் வேறொரு பாடலுக்காக அழைத்தவர், பிறகு, இந்தப் பாடலைப் பாடவைத்தார். ஹைபிட்சில் நான் பாடியதைக் கேட்டுப் பெரிதாக மகிழ்ச்சியடைந்தார். ‘உங்க ஹைபிட்சுல ஸ்டூடியோவுல இருக்குற எல்லா இசைக் கருவிகளும் அதிருதுஎன்று பாராட்டி உற்சாகப் படுத்தினார். இப்போ, இந்தப் பாட்டை ரசிக்காதவர்களே தமிழ்நாட்டில் இல்லை.
இளையராஜா இசையில் நாலைந்து படத்தில் பாடினதையெல்லாம் மறக்கவே முடியாது. ‘என் குழந்தைங்க உங்க பாடல்களின் ரசிகர்கள்னு விக்ரம் ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார். ரஹ்மானிடம் அறிமுகப்படுத்துறேன் என்று சுஹாசினி சொல்லியிருக்காங்க.
சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ரக்ஷனா என்று பெயர் சூட்டியிருக்கிறேன். 500 ரூபாய் பணத்தோடு சென்னைக்கு வந்தவன், இப்போது, ஒரு சாண்ட்ரோ காரும் .சி.ஆர். ரோட்டில் ஒரு ஃபிளாட்டும் வாங்கிக் கடுமையான உழைப்பால் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறேன். கிராமத்திலிருந்து வந்ததால் சில இடங்களில் மரியாதை கிடைக்காது. சார் என்றுகூட கூப்பிடத் தயங்குவார்கள். ஆனாலும், என் பாடல்களால் எனக்கான மரியாதை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது."






நன்றி - கல்கி வார இதழ்  

4  வருடங்க ளுக்கு முன் அவரது பேட்டி





"செக்கச் சிவந்தவளே கண்ணம்மா ‍என்
பக்கம் வந்து பேசினாக்கா என்னம்மா
கண்ஜாடை காட்டுற காலில் கோலம் போடுற
தாவித் தாவி நடக்குற தாவணிய முறுக்குற''

கண்கள் முழுக்க காதலோடு கலாவைப் பார்த்து வேல்முருகன் பாடினால் மெட்டி ஒலி நெஞ்சைத் தழுவும்படி ஆடுகிறது கால்கள். வீட்டுக்குள் மூடுக்கேத்த மாதிரி தெம்மாங்குப் பாட்டு, திரையிசை பாட்டு, கர்னாடக இசை என மாறி மாறி ஒலிக்கிறது. தாளத்திற்குத் தகுந்தபடி ஆட்டம் மாறினாலும், மாறாத அன்போடு ஜொலிக்கிறது காதல்.

சென்னை குட்டி கிராமணித் தெருவில், அந்த ஒண்டுக் குடித்தனத்தில் உலை கொதிக்கும் ஓசைகூட ராகத்தை அடிப்படையாகக் கொண்டே ஒலிக்கிறது. மூடியிருக்கும் தட்டு கலாவைக் காப்பியடித்து 'தையத் தக்கா, தையத் தக்கா'வென ஆடிக்கொண்டிருக்கிறது. எத்தனை பேருக்கு வாய்க்கும்? இந்த "இசைபட வாழ்தல்".


விஜயகாந்த் ஜெயித்த விருத்தாசலம் அருகே முதனை கிராமம் தான் வேல்முருகன் பிறந்தது. "காலைல பனம்பழம் சாப்டுட்டு பள்ளிக்கூடம் போனா, மத்தியானம் மாங்கா அடிக்கிறது, வேப்பங்கொட்டைய வெரல்ல நசுக்கி ரத்தம் வரவக்கிறது, திரும்பி வரும்போது சோறு வாங்குற‌த் தட்டுல மோளம் அடிச்சிக்கிட்டே பாட்டுப் பாடுறதுனு கள்ளங் கபடமில்லாத கிராமத்து வாழ்க்கை அது.

வருஷா வருஷம் எங்கப்பா ஐய்யப்பன் கோயிலுக்கு மாலை போடுவாரு. எனக்கு அம்மா இல்ல. அவருகூடவே எந்த நேரமும் 'சாமியே! அய்யப்பா...'ன்னு பாடிக்கிட்டே திரிவேன். அப்ப நான் எட்டாவது படிச்சினு இருந்தேன். புஷ்பவனம் குப்புசாமி பாட்டு ஊரெல்லாம் பேமஸா இருந்தது. வகுப்புல வாத்தியாரு இல்லாத நேரமாப் பாத்து 'ராசாத்தி உன்ன என்னி ராப்பகலா கண் விழிச்சேன், ராப்பகலா கண் விழிச்சேன் ராணி உன்ன கைப்புடிச்சேன்'னு ராகத்தோட பாடினேன்.

திடீர்னு வாத்யார் வந்துட்டாரு. 'யார்ரா அவம் பாட்டுப் பாடுனது? மரியாதையா எழுந்து நில்லு. இல்லனா தொலச்சிருவேன்'ன்னு மெரட்டி, 'வாடா எச்.எம்.கிட்ட'ன்னு இழுத்தும் போய்ட்டாரு. என்னை வெளியில நிக்க வச்சிட்டு எச்.எம்.மும் அவரும் குசுகுசுன்னு பேசிக்கிட்டாங்க. நான் நடுங்கிக்கிட்டே நிக்கிறேன். எச்.எம். என்ன‌க் கூப்ட்டு 'என்னாடா! ஆளில்லாத நேரம் பாத்து க்ளாஸ்ல பாட்டுப் பாடறியாமே... எங்க, பாடு பாப்போம்'னு கேட்டாரு. நான், 'ராசாத்தி உன்ன என்னி' பாடினேன். அடிக்கப் போறார்னு பாத்தா! எம் முதுகுல தட்டிக் குடுத்துட்டு, 'நம்ம ஸ்கூல் திறப்பு விழாவுக்கு கலெக்டர் வர்ராரு. அப்ப இதப் பாடி அசத்துற. உனக்குத் தான் பர்ஸ்ட் பிரைஸ்'னு சொல்லிட்டாரு. அதே மாதிரி கலெக்டர் முன்னாடி மேடைல பாடி பரிசு வாங்கினேன். அது தான் என்னோட முதல் அங்கீகாரம்'' என்று தன் ஆசிரியர் ராஜேந்திரனைப் பற்றி நெகிழ்ந்து கூறுகிறார் வேல்முருகன்.

"அதுக்கப்புறம் எங்கப் போனாலும் பாட்டுத்தான். விருத்தாசலத்துல சில நன்பர்கள் டீ வாங்கித் தருவாங்க, நாம் பாடுவேன். 'வேல் முருகா! உன் தெறமைக்கு எங்களால டீ தான்டா வாங்கித் தர முடியும். அதனால எப்பாடு பட்டாவது நீ மெட்ராஸ் போய் முறைப்படி சங்கீதம் கத்துக்கடா. நிச்சயம் பெரியாளா வருவே'ன்னு ஊக்கப்படுத்துவாங்க. அதன் பிறகு அடையாறு அரசு இசைக் கல்லூரில சேர்ந்து வாய்ப்பாட்டு கத்துக்க ஆரம்பிச்சேன்.

சைதாப்பேட்டை எம்.சி.ராஜா ஆஸ்டல்தான் நான் தங்கிப் படிச்சது. காலேஜ்ல இருந்து ஹாஸ்டலுக்கு நடந்தே போவேன். ஏன்னா, பஸ் காசு மிச்சம். அதோட ஹாஸ்டல்ல சாதகம், பிராக்டீஸ்னு பண்ண முடியாது. சினிமாப் பாட்டுன்னா பசங்க கேப்பாங்க. அங்க போய் ச..ரி..க..ம..னு சொன்னா அவ்ளோ தான். அதனால இப்டி வழியில நடக்கும் போதே பிராக்டீஸ் பண்ணிக்குவேன். இப்படி நடக்குறதுல இன்னொரு அட்வான்டேஜும் இருக்கு. வழி நெடுக ஒரு போஸ்டர் விடாம படிச்சிக்கிட்டே வருவேன். எங்கயாவது இசை நிகழ்ச்சி நடந்தா, போய் ஆஜராகிடுவேன்.

அப்படித்தான் ஒரு நாள் காமராஜர் அரங்குல ஜானகி அம்மாவோட கச்சேரி. கொறஞ்சது 50 ரூபா டிக்கெட். எங்கிட்ட நையா பைசா இல்ல. எப்படியாவது உள்ள போய்டனும்னு தவிக்கிறேன். அப்பத்தான் கடவுள் மாதிரி அந்த போட்டோகிராபர் உதவி பண்ணாரு. அவர் பேர் சந்ரு. 'அய்யா! அய்யா! இந்த மாதிரி நான் மியூசிக் காலேஜ்ல படிக்கிறேன். ஜானகி அம்மாவ நேர்ல பாக்கனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. நீங்க தான் உதவனும்'னு அவர்கிட்ட கெஞ்சினேன். என்ன உத்துப் பாத்துட்டு, அவரோட கேமிரா பேகை தூக்கி என் தோள்ல மாட்டி, உள்ள கூட்டிட்டுப் போய்டாரு. நிகழ்ச்சி முடிஞ்சு ஜானகியம்மா வர்றப்போ தொபீர்னு போய் கால்ல விழுந்துட்டேன். இதே போல எஸ்.பி.பி, இளையராஜா, எம்.எஸ்.வி'னு எல்லாரையும் நேர்ல பாத்துட்டேன்.


பர்ஸ்ட் இயர் படிக்கும் போது ஒரு நாள் சன் டி.வி. பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சில கலந்துக்க வாய்ப்புக் கெடச்சிது. அந்தப் போட்டியில சிறந்த குரல் வளம் மற்றும் முதல் பரிசு, ஒரு பவுன் தங்கக் காசு ஜெயிச்சேன். 'எவ்ளோ பெரிய சாதனை பண்ணிட்டோம்'னு மனசு பூரா சந்தோஷம். இந்த வெற்றிதான் என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு போச்சு'' என்ற வேல்முருகனை இடை மறித்து உங்கள் காதல் எப்ப ஆரம்பிச்சது? என்றோம்.

"ஒரு சமயம் கார்கில் போர் வீரர்கள் பத்தி கவிதை எழுதி, அதை நம்ம அப்துல் கலாம் சாருக்கு அனுப்பி வச்சேன். 'ரொம்ப நல்லா இருந்தது'ன்னு அவர் பதில் கடிதம் போட்டார். அந்தக் கவிதைகளை காலேஜ் ப்ரேயர்ல பிரின்சிபல் வாசிச்சுக் காட்டினாங்க. எங்க காலேஜ்லயே பரதநாட்டியம் பதிச்சிட்டிருந்த கலா, அப்போ என்னை சந்திச்சு வாழ்த்து தெரிவிச்சாங்க. அது தான் நாங்க முதன் முதலா அறிமுகம் ஆனது. எதிர் பாராத விதமா ஒரு நிகழ்ச்சி முடிஞ்சு நாங்க ரெண்டு பேரும் புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு தனியா வந்துட்டிருந்தோம். அப்போதான் 'என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்கள?'ன்னு கலாவிடம் கேட்டேன்'' என்பவரை கையமர்த்திவிட்டு

"இப்படி திடீர்னு கேட்டது உங்களுக்குக் கோபத்தை உண்டாக்கலையா?" என கலாவிடம் கேட்டால், "இல்லை. ஏன்னா, அவர் எங்கிட்ட 'ஐ லவ் யூ'ன்னு சொல்லாம 'பிடிச்சிருந்தா வீட்ல கேட்டுட்டு பதில் சொல்லு'ன்னார். அதோட இவரைப் பத்தி காலேஜ் முழுக்க நல்ல அபிப்ராயம் இருந்ததும் தெரியும். அதனால, 'யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டேன்'' என்கிறார்.

"அதுக்கப்புறம் ஒரு மாசத்துக்கு மேல ஆயிருச்சி. ஊருக்குப் போறதுக்காக காலேஜ் பஸ் ஸ்டாப்ல கலா நின்னுட்டிருந்தாங்க. வேலூர் பக்கத்துல வாலாஜாப்பேட்டைதான் கலாவோட சொந்த ஊர். சரி வாஙக, நான் வந்து பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன்னு சொல்லிட்டு, புரசைவாக்கத்துல இருக்கிற சிவன் கோவிலுக்குப் கூட்டிட்டுப் போனேன். அங்க வச்சி தான் என்னைப் பத்தின எல்லாத் தகவல்களையும் கலாவிடம் சொன்னேன். நான், என்னோட வீடு, எனக்கு இப்ப அப்பா, அம்மா யாருமே இல்லை என்பது, மாங்கா திருடி அடி வாங்கினதுன்னு ஆரம்பிச்சி கடைசியா நான் ஒரு 'தலித்' என்பதையும் சொன்னேன்" என்கிற வேல்முருகனிடம்,

"நீங்க ஒரு தலித். அதுவும் ஏழைன்னு வேற சொல்றீங்க. இவங்களோ பணக்கார குடும்பம். ஜாதியிலயும் சௌராஷ்டிரா. கண்டிப்பா ஜாதி பிரச்சினை வரும். அப்படி இருக்கிறப்போ எந்த தைரியத்துல நீங்க காதலைத் தெரிவிச்சீங்க?"

"நீங்க சொல்றது வாஸ்தவம்தான். ஆரம்பத்துல எனக்கு பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப தாழ்வு மனப்பாண்மை இருந்தது. நாம கருப்பா, உயரம் இல்லாம, அழகில்லாம இருக்கோம்னு வருத்தப்பட்டிருக்கேன். ஆனா பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கச்சேரிகள்னு பண்ண ஆரம்பிச்சேன். எம்மேல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வந்துட்டது. கண்டிப்பா நாம பெரிய ஆளா வருவோம். இவளை ரொம்ப சந்தோஷமா வச்சுக்குவோம்ன்ற தெம்பு வந்தது. அதோட கலா என்ன ஜாதி, எவ்ளோ வசதிங்கறது பத்தி சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது சார்" என்கிறார் வேல்முருகன்.

விட்டதைத் தொடர்கிற கலா, "ஊர் போய் சேர்ந்ததும் இவர் சொன்ன மாதிரியே வேல்முருகனைப் பத்தி எடுத்துச் சொல்லி வீட்ல பர்மிஷன் கேட்டேன். 'உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா படிக்க அனுப்பிச்சா, லவ் பண்றதைப் பத்தி எங்ககிட்டயே சொல்லுவ. நீ படிக்கவே வேணாம்'னு சொல்லி ஹவுஸ் அரஸ்ட் வச்சிட்டாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு இவருக்கு தவல் அனுப்பிச்சேன். அதுக்குப் பிறகு..." கலாவை இடைமறித்துவிட்டு வேல்முருகன் சொல்கிறார்...

"கலா வீட்டுக்குப் போன் பண்ணி நானே அவங்க அப்பா, அம்மாகிட்ட பேசினேன். இதப் பாருங்க. நீங்க நெனைக்கிற மாதிரி நாங்க மோசமான ஆளா இருந்தா, இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எங்கயாவது ஓடிப் போயிருப்போம். இப்ப எக்ஸாம் ஆரம்பிக்கப் போறாங்க. நீங்க உங்க பொண்ண காலேஜ் அனுப்பலைன்னா பாதிக்கப்படப்போறது நீங்கதான். கலாவோட மூனு வருஷப் படிப்பு வீணாப் போயிரும். ஏன் எக்ஸாம் எழுதப் போகலைன்னு அக்கம் பக்கத்துல சந்தேகமா பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. அதனால எங்க மேல நம்பிக்கை இருந்தா தயவு செஞ்சு காலேஜ் அனுப்புங்கன்னு கேட்டேன். அவங்களும் அனுப்பிச்சுட்டாங்க. கலா இங்க வந்த பிறகு, 'கண்டிப்பா எங்க வீட்ல இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க எனக்கு வேற மாப்பிள்ளை தேடுறாங்க. அதன்னால நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்'னு கேட்டாங்க. ரொம்ப யோசனைக்குப் பிறகு பரிட்சைக்கு பத்து நாள் முன்னாடி பதிவுத் திருமணம் பண்ணிக்கிட்டோம்".

"அது சரி. எந்தப் பெற்றோர்தான் எடுத்த உடனே காதலுக்குப் பச்சைக் கொடி காட்டுவாங்க. இத்தனை வருஷமா பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை மறந்து இப்படி செய்தது நியாயமா?" கலாவிடம் கேட்டால்,

"அவங்க ஜாதியை மட்டும்தான் பெரிய குற்றமா பாத்தாங்க. அது எனக்கு சுத்தமா பிடிக்கல. வேல்முருகன் மீது வேறு எந்தக் குற்றமும் சொல்ல முடியல. மிஞ்சிப் போனா அவங்க என்ன பண்ணியிருப்பாங்க. அவசர அவசரமா ஒரு பையனைப் பாத்து கல்யாணம் முடிச்சிருப்பாங்க. அவன் நல்லவனா இருப்பாங்கறது என்ன நிச்சயம்? என்னோட பரதநாட்டியத்தை தொடர வாய்ப்பு கிடைச்சிருக்குமா? இல்ல... மேற்கொண்டு மாஸ்டர் டிகிரி தான் படிச்சிருக்க முடியுமா? இப்ப நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம். எத்தனை கோடி செலவழிச்சிருந்தாலும் இது எனக்கு கிடைச்சிருக்காது. இப்பவும் எங்க குடும்பத்து மேல பாசம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக வேல்முருகனையா விட்டுக் கொடுக்க முடியும்?'' என்று நெத்தியடியாகக் கேட்கிறார்.

இன்றுவரை இவர்களை கலாவின் குடும்பம் ஏற்றுக் கொள்ளவில்லை. பதிவுத் திருமணத்திற்கு பிறகு தாலி கட்டாமல் ஒரு வருடம் குடும்பம் நடத்திய இந்த ஜோடி, கடந்த ஆண்டு மே 13ம் தேதி விருத்தாசலத்தில் வைத்து விமரிசையாக கல்யாணம் செய்து கோண்டது. வரவேற்பில் "மனமகன் பாடினார், மனமகள் ஆடினார்'. என்ற தலைப்பிட்டு நாளிதழ்கள் இந்த ஜோடியை அமர்க்களப்படுத்தின. பிறகு நிறைய பத்திரிகைகள் இவர்களை தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளாமல் செய்தி வெளியிட்டிருக்கின்றன. குங்குமம் ரெண்டு பக்கம், ராணி ஒரு பக்கம் என்று அவர்களாகவே பேட்டி என்று எழுதிக்கொண்டார்களாம்.

தற்போது டி.வி. நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள் ஆகியவற்றில் கிராமியப் பாடல்கள், கர்னாடக இசைப்பாடல்கள் என்று வேல்முருகன் பொளந்துகட்ட, பரதநாட்டியத்தால் அரங்கத்தைக் கட்டிப் போடுகிறார் கலா. தூர்தர்ஷன் வேல்முருகனது பாடலை பதிவு செய்தபின் அவரது கிராமத்திற்கே போய் அவரது யதார்த்தமான வாழ்வியல் பின்னனியோடு ஒளிபரப்பிய‌து குறிப்பிடத்தக்கது. தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தேவராட்டம் என்று சகல ஆட்டங்களும் கலாவுக்கு அத்துப்படி. இன்று வேல்முருக்கனுக்கு அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லை. கலாவுக்கு இருவரும் இருந்தும் யாருமில்லை. ஆனால் ரசிகர்கள் இருக்கிறார்கள். தொடர்புக்கு 98408 31341.





நன்றி - திங்கள் சத்யா