Tuesday, March 06, 2012

நடிகை அல்போன்சாதான் கொலையாளியா? மர்ம முடிச்சுகள்-காதலன் கொலை வழக்கு விபரங்கள்

http://1.bp.blogspot.com/_iHt5iQ3TUFA/TNgct2hb3yI/AAAAAAAATws/p2f6BK4PXDc/s1600/alfonsa2.jpgஎனது காதல் நிஜமானது. வினோத் குமார் எடுத்த முடிவு எதிர்பாராதது. சாவதற்கு முன்பு என்னை விதம் விதமாக ஆடைகள் கட்டி வரச் சொல்லி எனது அழகை ரசித்தார். நான் கடைசியாக சேலையில் அவர் முன்பு வந்து நின்றபோது அதையும் ரசித்தார். பிறகுதான் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று நடிகை அல்போன்சா கூறியுள்ளார்.


சி.பி - அடப்பாவமே! என்னா அழகு..!! சாவடிக்கறாடா! அப்டின்னு சொல்வாங்களே.. அது இதுதானா?


தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடன நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. பாட்ஷா, பஞ்சதந்திரம், ஸ்ரீ உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவரது தம்பிதான் நடன மாஸ்டர் ராபர்ட்.

இவருக்கு ஏற்கனவே துபாயைச் சேர்ந்த ஒருவருடன் கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருப்பினும் தற்போது கணவரைப் பிரிந்து விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார் அல்போன்சா.

சி.பி - வீ வாண்ட் மோர் டீட்டெயில்ஸ்..  அவர் இவரை பிரிஞ்சாரா? இவர் அவரை பிரிஞ்சாரா?


இவரது தம்பி ராபர்ட் மூலம் சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் பழக்கமானார். 

சி.பி - பேக்கரியை நீ பார்த்துக்கோ, அக்காவை நான் பார்த்துக்கறேன்னு  வினோத் சொல்லிட்டார் போல..  நடனம் கற்க வந்த வினோத்குமார், அல்போன்சாவுடன் காதலில் விழுந்தார். இருவரும் ஆரம்பத்தில் நட்புடன் பழகி பின்னர் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் அளவுக்கு தீவிரக் காதலில் விழுந்து விட்டனர். கடந்த ஒரு வருடமாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனராம்.


சி.பி - டான்ஸ் பழகறேன்னு உடான்ஸ் விட்டு ஃபிகரை கரெக்ட் பண்ணி இருக்கார்.. ஓக்கே, ஒண்ணும் தப்பில்லை,. எல்லாரும் பண்றதுதான்


இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு தூக்கில் தொங்கிய நிலையில் அல்போன்சா வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் வினோத்குமார். இது தற்கொலை என அல்போன்சா கூறுகிறார். ஆனால் வினோத்குமாரின் குடும்பத்தினர் இது கொலை, அல்போன்சாவும், அவரது தம்பி ராபர்ட்டும் சேர்ந்து வினோத்குமாரை அடித்துக் கொலை செய்து விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இதை சந்தேக மரணம் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சி.பி - எனக்கும் இது கொலைன்னுதான் தோணுது.. பொதுவா ஆம்பளைங்க , அதுவும் வினோத் மாதிரி ஆளுங்க தற்கொலை செய்யற மாதிரி இருந்தா மதுவுல விஷம் கலந்து தான் குடிப்பாங்க.. பொண்ணுங்கதான் சேலை தலைப்புல் தூக்கு போட்டுக்குவாங்க.. அதுவும் இல்லாம தூக்கு போட்டு சாகறது என்பது தனிமையில் , துக்கத்தில், விரக்தியில் இருக்கும்போது எடுக்கப்படும் முடிவு.. யாரும் வீட்ல பலரை வெச்சுக்கிட்டு தூக்கு போட்டுக்க மாட்டாங்க.. லெட்டர் எதும் எழுதி வைக்கலை 


வினோத்குமாரின் தந்தை பெயர் பாண்டியன். இவர் திருக்கழுக்குன்றம் நகர எம்ஜிஆர் பேரவை செயலாளராக இருக்கிறார்.

இந்த நிலையில், காதலர் மரணம் குறித்து அல்போன்சா போலீஸாரிடம் சில தகவல்களைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

நானும், வினோத்குமாரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தோம். எனது சகோதரர் ராபர்ட்ராஜ், வினோத்குமாருக்கு நெருங்கிய நண்பர். அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள வினோத் வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் முதலில் காதலை சொன்னார்.

எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தை இருந்ததால், முதலில் அவரது காதலை ஏற்க தயங்கினேன். எனது வீட்டில் இந்த காதலை ஆதரித்தார்கள். முதல் கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு ஒருவருட காலம் பிரிந்து வாழவேண்டும் என்று எனது வக்கீல் சொன்னார். இதனால் எனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து ஒரு வருடத்துக்காக காத்திருந்தோம்.

இந்த நிலையில் என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வினோத் விரும்பினார். என்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டார். துபாய்க்கு நடன நிகழ்ச்சி நடத்த போகக்கூடாது என்று சொன்னார். திருமணத்துக்குப்பிறகு அதை ஏற்றுக்கொள்வதாக நான் சொன்னேன்.

தற்கொலை செய்வதற்கு முன்பு இரவு 8 மணி அளவில் வினோத் அவரது தாயாருடன் காரசாரமாக செல்போனில் பேசி சண்டை போட்டார். பின்னர் போனை வைத்துவிட்டு, எனது வீட்டில் வேறு பெண் பார்க்கிறார்கள் என்று கோபமாக சொன்னார். அவரது கோபத்தை தணிக்க நான் அவரை படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றேன். உங்கள் விருப்பப்படி நடக்கிறேன். தயவு செய்து கோபத்தை விடுங்கள் என்றேன்.

சி.பி - இந்த சீன்ல என்ன நடந்திருக்கும்னா வினோத் அம்மா பேச்சை கேட்டுட்டு அல்போன்சாவை கழட்டி விடலாம்னு பிளான் போட்டிருப்பார்.. அம்மா கிட்டே ஓக்கே சொல்லி இருப்பார்.. உடனே அல்போன்சா சண்டைக்கு வந்திருப்பார்.. வாக்குவாதம் முற்றி இருக்கும்.. அவங்க வினோத்தை போட்டுத்தள்ளி இருப்பாங்க

http://4.bp.blogspot.com/_Ec7Kmf8ebXc/Sgal6R2-fOI/AAAAAAAAAEM/9S_gCGZBrRY/s1600/thirupachi-aruva.jpg


என்னை வித விதமான ஆடை அணிந்து அழகு காட்டும்படி ஆசையாக கேட்டார். நானும் அதன்படி நடந்தேன். கடைசியாக சேலை கட்டி வரும்படி கூறினார். நானும் சேலை கட்டி வந்தேன். எனது அழகை ரசித்தார். இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம்.

சி.பி - போறதுக்கு முன்னால கடைசி ஆசையை பாப்பா நிறைவேத்தி இருக்காங்க.. 


பின்னர் சிகரெட் குடிக்க பாத்ரூம் சென்றார். நான் சேலையை கழற்றிவிட்டு, துண்டை கட்டிக்கொண்டு, வேறு உடை அணிய முயற்சித்தேன். பாத்ரூம் சென்ற அவரை நீண்ட நேரம் காணாததால், துண்டோடு படுக்கை அறையைவிட்டு வெளியில் வந்தேன். அப்போது எதிரில் உள்ள இன்னொரு படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது தான், வினோத்குமார் அங்கு தூக்கில் தொங்கியதை பார்த்து, மார்பில் கட்டியிருந்த துண்டோடு வெளியே ஓடி வந்து உதவி கேட்டேன்.

சி.பி - சும்மா ரீல் ரீலா விடாதீங்க.. பெட்ரூம்ல 2 பேருதான், எதுக்கு துண்டு கட்டுனேன், டிரஸ் மாத்துனேன்னு கதை விடறீங்க?இது எல்லாம் செட்டப்.  தூக்குல காதலன் கம் கணவன் உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது எந்த பொண்ணும் பதறி அவரை காப்பாத்த போய் தாங்கிப்பிடிப்பாங்க.. வெளீல ஓடி வந்து உதவி கேட்க ஏது டைம்? அதுக்குள்ள அவர் போய்ச்சேர்ந்துடமாட்டாரா?காமரா இருக்கறதை தெரிஞ்சுக்கிட்டு ஒரு அலிபி கிரியேட் பண்ண பாப்பா ஆக்ட் குடுத்திருக்கு..


காவலாளி உள்ளிட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் முன்னிலையில்தான், அவரது உடலை தூக்கில் இருந்து இறக்கினோம். அவர் இதுபோல் ஒரு முடிவை எடுப்பார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எனது காதல் நிஜமானது என்று அல்போன்சா கூறியுள்ளாராம்.

சி.பி - உங்க காதல் நிஜமானதுதான், ஆனா வினோத் உங்களூக்கு துரோகம் பண்ண நினைச்சிருக்காரு.. அது உங்களுக்கு பொறுக்கலை
அல்போன்சா வசிக்கும் வீடு சியாமளா கார்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் 3வது மாடியில் உள்ளது. இது பெரும் பணக்காரர்கள், சினிமாக்காரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு வளாகமாகும். பல நடிகர், நடிகையர் இங்கு வசிக்கிறார்களாம்.

இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் கண்காணிப்புக் கேமரா உள்ளது. அல்போன்சா வீட்டின் தளத்திலும் கூட கேமரா உள்ளது. அதில் வினோத்குமார் மரணத்திற்கு முன்பும், பின்பும் யாரும் வீட்டுக்குள் வந்ததாக பதிவு இல்லை. அதேசமயம், அல்போன்சா கட்டிய துண்டுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வரும் படம் உள்ளதாக போலீஸார் கூறுகிறார்கள்.

சி.பி - நல்லா உன்னிப்பா பாருங்க.. அல்போன்சா கேமராவை ஒரு தடவையாவது பார்த்திருப்பார்.. சரியா இருக்கா?ரெக்கார்டு ஆகுதா?ன்னு செக் பண்ண? ( உண்மையான பதட்டமா இருந்தா கேமராவை பார்க்க டைம் இருக்காது, தோணாது.. )


ஆனால் வினோத்குமார் மரணத்திற்கு முன்பு ஏதோ விபரீதமாக நடந்துள்ளதாகவும், அதனால்தான் வினோத்குமார் மரணம் நேர்ந்துள்ளதாகவும், யார் தவறு செய்திருந்தாலும் கடும் தண்டனை நிச்சயம் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். மேலும் மரணத்திற்கு முன்பு, அல்போன்சாவின் துபாய் கணவரின் புகைப்படங்களை வினோத் குமார் கிழித்தெறிந்துள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.


சி.பி - ஒரு வேளை அல்போன்சா முதல் விக்கெட் கூட செகண்ட் இன்னிங்க்ஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கலாம், அது 2 வது விக்கெட்க்கு பிடிக்காம இருக்கலாம்.. வினோத்குமாருடன் அல்போன்சா ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்தபோது அதை அல்போன்சாவின் கணவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. வினோத்குமாருடன் பழக வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அதை அல்போன்சா கேட்கவில்லையாம். தொடர்ந்து பழகியுள்ளார்.
சி.பி - உலகின் முதல் பெண்ணே சொல் பேச்சு கேட்காதவள் தான். ஆப்பிளை சாப்பிடாதேன்னு கடவுளே சொல்லியும் கேட்கலையே?கணவன் சொன்னா மட்டும் கேட்கவா போறாங்க?

இந்த நட்பு நாளுக்கு நாள் தீவிரமடையவே வெறுத்துப் போன அல்போன்சாவின் கணவர் தனது மகள் ஆலியாவை விட்டு விட்டு துபாய் போய் விட்டாராம். அதன் பின்னர்தான் விருகம்பாக்கத்தில் வசதியான வீட்டை எடுத்து வினோத்குமாருடன் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார் அல்போன்சா.

அல்போன்சா, வினோத்குமாரின் இந்த வாழ்க்கைக்கு அல்போன்சாவின் தந்தை அந்தோணியும், தாயார் ஓமனாவும், தம்பி ராபர்ட்டும் ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் கல்யாணம் செய்து கொள்ளவும் ஆதரவு தெரிவித்தனராம். இதையடுத்தே விவாகரத்து செய்ய அல்போன்சா முடிவெடுத்துள்ளார்.

சி.பி - அல்போன்சாவின் பெற்றோர் உன்னை நினைத்து படத்துல வர்ற லைலா பெற்றோர் மாதிரி போல.. எவன் வசதியா இருக்கானோ அவன் கூட ஜாயிண்ட் ஃபேமிலி ஆகிடறது.. 

வினோத்குமாரை அல்போன்சாவும், அவரது தரப்பினரும் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று அல்போன்சாவின் காதலர் வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கப் போவதாகவும் அவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

நடிகை அல்போன்சாவின் காதலராக இருந்து வந்தவரான வினோத்குமார் நேற்று இரவு அவரது விருகம்பாக்கம் வீட்டில் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த வீட்டில்தான் அவர் அல்போன்சாவுடன் வசித்து வந்தார்.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இது ஒரு கொடூரக் கொலை என்று வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வினோத்குமாரை அடித்துக் கொன்றுள்ளனர். அவரது காது, முகத்திலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. மேலும் உடல் முழுவதும் ரத்தக்காயங்கள் காணப்பட்டன. அவரை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொன்று தூக்கில் போட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.

இதுதொடர்பாக அல்போன்சா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதியை நேரில் சந்தித்துப் புகார் கொடுக்கவுள்ளோம் என்றார்.

இந்தப் புகாரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சி.பி - அன்புள்ள அல்போன்சா.. வினோத்தை சண்டைல அடிச்சிருந்தா நீங்க என்ன பண்ணி இருக்கனும் கார்ல வினோத்தை போட்டுக்கிட்டு ஐ மீன் வினோத் டெட்பாடியை போட்டுகிட்டு ஏதாவது மலைப்பிரதேசத்துக்கு போய் அங்கே இருந்து உருட்டி விட்டு அப்புறம் மலையில் இருந்து கீழே தவறி விழுந்துட்டார்னு ரீல் விட்டிருக்கனும் ஜஸ்ட் மிஸ்டு


துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு நள்ளிரவுக்கு மேல் வந்த பிறகுதான் அல்போன்சாவுக்கும், அவரது காதலருக்கும் இடையே மோதல் மூண்டு அது தற்கொலையில் முடிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://2.bp.blogspot.com/_8FUlQzcyLdc/SPfzl8lxUYI/AAAAAAAAF_k/QBRP97Sxczc/s400/4_%252520AlfonsaRedCholiBelly.jpg
ஒரு காலத்தில் பிசியான குத்தாட்ட நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. ஏகப்பட்ட படங்களில் தனி பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். பின்னர் படிப்படியாக இவர் தனது ஆட்டத்தைக் குறைத்துக் கொண்டார்.

இவரும் கல்பாக்கத்தைச் சேர்ந்தவருமான வினோத்குமாரும் காதலித்து வந்தனர். வினோத்குமாரும் சினிமாவில் நடனம் ஆடி வந்தவர்தான். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். விருகம்பாக்கத்தில் வசித்து வந்தனர்.

அல்போன்சா அடிக்கடி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்குப் போவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படித்தான் தற்போதும் அவர் துபாய்க்கு கலை நிகழ்ச்சிக்காக போயிருந்தார். நள்ளிரவு வாக்கில்தான் அவர் நேற்று வீடு திரும்பினார். வீடு திரும்பியதுமே அவருக்கும், வினோத்குமாருக்கும் இடையே மோதல் மூண்டதாக தெரிகிறது.


அதன் பிறகுதான் வினோத்குமாரின் மரணம் நேர்ந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், வினோத்குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அல்போன்சாவிடம் விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதனால் அல்போன்சாவிடம் உடனடியாக விசாரணை நடத்த முடியாத நிலை போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

சி.பி -இது சும்மா ஸ்டண்ட்.. தன் மேல் டவுட் வரக்கூடாதுன்னு பண்ணுன டிராமா.. அல்லது பயந்திருப்பாங்க.. 


அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் அவர் தேறி வந்த பிறகுதான் விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை விசாரித்தால்தான் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும் என்கிறார்கள்.

7 comments:

மதுரை அழகு said...

நடிகையின் படங்களை எங்கிருந்துதான் எடுக்குறீங்களோ? கண்ணைக் கட்டுது...!

Unknown said...

நாட்ல எது எதுக்கெல்லாம் விமர்சனம் எழுதுறாங்கப்பா..அம்பி கலி முத்திடுத்து!

முத்தரசு said...

நாட்டு நடப்பை..ஒன்னு விடாம படிச்சி விமர்சனம் பண்ணி............

ம் கலக்குங்க சித்தப்பு

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி

Manimaran said...

அல்போன்சானு சொல்லிட்டு பாபிலோனா படத்த முதல்ல போட்டுயிருக்கிறீர்.ஹி ஹி..இருந்தாலும் படம் செம தூக்கல்.....

MARI The Great said...

அது சரி ...!

ADAM said...

EPPADI......?