Monday, March 26, 2012

இருட்டுக்குமரியும், திருட்டுக்குமரனும் கடலை போட்டால்...??

இலியானா...
1. பால்காரர் கூட சின்ன தகராறு..

அதுக்காக தலைவரை பாலியல் பலாத்கார வழக்குல சிக்க வைக்கறது ஓவர்


------------------------------------

2. தன்னோட எதிரிகள் கொலை செய்யப்படறதை தன் கண்ணாலயே பார்த்து தரிசிக்கனும்னு  தலைவர் ஆசைப்படறார்.. 

ஓஹோ, தீர்த்த தரிசின்னு சொல்லு.. 

---------------------------------------

3. டியர், நீங்க பயங்கர கஞ்சனாமே?பேசறதுக்கு கூட கணக்கு பார்ப்பீங்களாமே? நிஜமா? 

  “ம்”

-------------------------------------------

4. தலைவரே, ஸ்கூல்ல உங்க பையன் உங்க மானத்தை வாங்கிட்டான்.. 

அடடா, ஆனா நான் அதை யாருக்கும் விக்கவே இல்லையே?

---------------------------------------

5.  அவர் அதிமுக ஆள்னு எப்படி சொல்றே?

 முட்டைல இருக்கற மஞ்சள் கரு சாப்பிட மாட்டாராம், வெள்ளை கரு மட்டும் தான் சாப்பிடுவாராம்,

-----------------------------------------

6. டியர், உன் வாய்ஸ் செம க்யூட்.. 

நிஜமாவா? 

ஆமா, ஆனா மியூட் பண்ணி கேட்கறப்ப மட்டும்

------------------------------------------------

7. டாக்டர், பாம்பு என்னை கடிச்சுடுச்சு.. 

பொய் சொல்லாதீங்க.. பாம்பு கொத்தும்.. அது எப்படி கடிக்கும்?

---------------------------------------

8.  பீச்சுக்கு போலாம்னு கூப்பிட்டதுக்கு உன் ஆள் கோவிச்சுக்கிட்டாளாமே?

ஆமா.. லாட்ஜ்க்கு போலாம், அங்கே தான் பிரைவேஸி கிடைக்கும்கறா.. 


------------------------------------------

9.  டாக்டர்.. கழுத்து சுளுக்கிக்கிச்சு

முதல்ல என்னை நேரா பாருங்க.. எதுக்கு திரும்பி திரும்பி நர்ஸையே பார்க்கறீங்க?

 ----------------------------------------

10. ஐஸ்வர்யா தனுஷ் படத்தில் அபிஷேக் பச்சன்! புதிய தகவல்!! # அபிஷேக் அண்ணே, சம்சாரம் பத்திரம்.. ஐஸ் அக்கா புருஷன் ஜாக்கிரதை

-------------------------------------

11. சிம்பு படத்தில் ஷகீரா #  அய்யய்யோ, ஏம்மா ஷகீலா அடச்சே ஷகீரா, எல்லாத்தையும் இன்சூர் பண்ணியாச்சா?

-------------------------------------------

12. கொலவெறி ஹிட்! காசியில் தனுஷ் சிறப்பு பூஜை!! # காசிக்கு போனாலும் கர்மம் விடாது போல , அது சரி காசிக்கு ரோசி வந்தாங்களா?

-----------------------------------

13. தினமலர் , தினமணி, விகடன் இதழ்களை படிக்கவேண்டாம்- கலைஞர் #  ஆமா, நாங்க படிக்காம கை நாட்டாவே இருந்துடறோம், நீங்க நாட்டையே வித்துட்டு போக?

-------------------------------------

14. சார், நீங்க வடிகட்டிய முட்டாளாமே, உண்மையா?

ஆமா, என்னோட எல்லா அறிவையும் வீட்லயே ஃபில்டர் பண்ணி வெச்சுட்டு வந்துடுவேன்

----------------------------------

15. சார், உங்க தனி மனித ஒழுக்கம் எப்படி இருக்கு?

ஹி ஹி தனியா இருக்கறப்ப ஒழுக்கமாத்தான் சார் இருப்பேன்

-------------------------------

16.கட்டைல போற வரைக்கும் எந்த கட்டையையும் தொடாமல் இருப்பவனே கட்டை பிரம்மச்சாரி? ஹி ஹி


--------------------------------------


17. அன்புள்ள போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு, பஸ் கண்டக்டர், ரயில் டி டி ஆர் இந்தப்பணிகளுக்கு பெண்களையும் பயன் படுத்தவும்,நல்லா பொழுது போக


--------------------------------------------

18. இருட்டுக்குமரி - ஏய்,மிஸ்டர்!என்னை ஏன் கலாய்க்கறே?மைன்ட் யுவர் பிசினஸ் !

திருட்டுக்குமரன் - பொண்ணுங்களை கலாய்ப்பதுதான் என் பிஸ்னெஸே!


-------------------------------------------

19. டியர், விலைவாசி ஏறிவிட்டதால் என்னால் ரோஜாப்பூ வாங்க முடியவில்லை, எனவே அடுக்கு செம்பருத்தியும், கனகாம்பரமும்.. ஹி ஹி அட்ஜஸ் ப்ளீஸ்


------------------------------------

20. ஏதாவது ஒரு வி ஐ பி யுடன் ஃபோட்டோ எடுத்து வைத்துக்கொள்வது ஒவ்வொரு தமிழனின் அத்தியாவசியமான பழக்கமாக இருக்கிறது


---------------------------------------

9 comments:

K.Arivukkarasu said...

இருட்டு குமரி..........திருட்டுக் குமரன் ட்வீட் போட்டு செகண்ட்ஸ்தான் ஆகுது! அதுக்குள்ள வலையேத்தியாச்சா ? ....என்னா ஸ்பீடு !!!

chinnapiyan said...

அப்பப்ப நாமளும் சிரிக்கனும்ல. படிக்கவைத்து சிரிக்கவைத்ததர்க்கு நன்றி. தொடரட்டும் நிம் பணி

காங்கேயம் P.நந்தகுமார் said...

நகைச்சுவை சூப்பர்.

Unknown said...

அண்ணே நல்லா இருக்குங்க உங்க சிந்தனை(கல்!)கள்

Anonymous said...

ஓப்பனிங்கே சும்மா ரகளையா இருக்கே...

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே நானும் விழுந்து விழுந்து சிரிச்சுட்டேன் அண்ணே கி கி கி கி.....

MANO நாஞ்சில் மனோ said...

அந்த கஞ்சத்தனம் குசும்பு ஏற்கனவே எங்கேயோ எப்போதோ படிச்சது ஹி ஹி....

kanandan said...

sirippu + sindhani = supeb

K.ANANDAN
B.PALLIPATTI

Unknown said...

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்...

தொட‌ர‌ட்டும் உங்க‌ள் சிரிப்புக‌ள்