Friday, March 30, 2012

3 - திருப்பதி,திருத்தணி,பழநி - சினிமா விமர்சனம்

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/09/3-movie-dhanush-shruti-first-look-poster.jpg 

ஹீரோயின் ஸ்ருதி 17 வயசு ஜிகிடி.. ஸ்கூல்ல படிக்குது.. ஹீரோ தனுஷ் என்ன பண்ணனும்? கரெக்ட் .. அதே தான்.. பிளஸ் டூ படிக்கற பாமா.. நீ இஷ்டம்னா நான் உனக்கு மாமா.. பொண்டாட்டி பார்த்துட்டு இருந்தாலும் பரவாயில்லை.. உதட்டுல தர்றேன் ஏகப்பட உம்மா.. அப்டினு ஹீரோயினை போட்டு பிழிஞ்சு எடுக்கறாரு.. தியேட்டர்ல ஜொள்ளாறா ஓடுது.. 

 சிவ கார்த்திகேயன் மெரீனால விட்ட இடத்தை இதுல பிடிச்சுட்டாரு.. செம காமெடி.. பஞ்ச் அங்கங்கே குடுத்து அப்ளாஸ்  வாங்கறது அவர் தான்.. நாம எல்லாம் வருஷக்கணக்கா பின்னால சுத்துனாலும் கண்டுக்காதுங்க ஃபிகர்ங்க.. ஆனா இந்த சினிமால மட்டும் ஹீரோ ஹீரோயினைப்பார்த்த முதல் சீன் அல்லது 2 வது சீனே மடிஞ்சிடுதுங்க.. நற நற.. 

2 பேரும் லவ் பண்ணி முடிச்சதும் மேரேஜ் பண்ண வேண்டிய சிச்சுவேஷன்.. அதுக்குள்ள மேரேஜா? பாப்பா இன்னும் மேஜர் ஆகலையே? மைனர் தானே?ன்னு யாராவது லாஜிக் மிஸ்டெக் பார்க்கக்கூடாது.. ஏன்னா 5 வருஷம் லவ் பண்ணியே காலத்தை ஓட்டிடறாங்க.. 

 இரு தரப்பு பெற்றோர்களும் லைட்டா பேருக்கு எதிர்ப்பு தெரிவிச்சு ஓக்கே சொல்லிடறாங்க.. 2 பேருக்கும் மேரேஜ் முடியுது... இண்டர்வல்... 

இது வரை படம் செம கலாட்டாவா, ஜாலியா போனாங்காட்டி நம்மாளூங்க எல்லாம் செகண்ட் ஆஃப்ல பின்னி பெடல் எடுக்கப்போறாங்கன்னு கர்ச்சீப்/ டர்ர்கி டவல் கையில வெச்சுக்கிட்டே வேடிக்கை பார்க்க ரெடி ஆகறாங்க.. அந்தோ!!!!!! பரிதாபம்.. 

 திடீர்னு டைரக்டர் ஐஸ்வர்யா தனுஷ்க்கு செகண்ட் ஆஃப் எப்படி கொண்டு போறதுன்னு தெரியலை... கொழுந்தனார் செல்வராகவன் கிட்டே  ஐடியா கேட்கறார்.. அண்ணனைப்பற்றி சொல்லவே வேணாம்.. ரெடி ஸ்டாக் காதல் கொண்டேன்./. மயக்கம் என்ன? டி வி டி எப்பவும் கார்லயே வெச்சிருப்பார் போல.. இதை வெச்சு மேனேஜ் பண்ணீக்கம்மான்னு கொடுத்துட்டார் போல.. http://topbollywoodactress.com/wp-content/uploads/2011/12/dhanush_shruti_hassan_3_movie-Stills11.jpg

 செகண்ட் ஆஃப்ல இன்னா ட்விஸ்ட்னா தனுஷ் ஒரு சைக்கோ பேஷண்ட்..  பை போலார் டிஸ் ஆர்டர் ( BI POLAR DISORDER) அப்டின்னு ஒரு வியாதி.. இந்த வியாதி யாருக்கெல்லாம் வரும்னா செல்வராகவன், தனுஷ், ஆர் பார்த்திபன் வகையறாக்களூக்கு மட்டும் அடிக்கடி வரும்.. எத்தனை படம்  டப்பா ஆனாலும் சரி.. அந்த சைக்கோ கேரக்டரை மட்டும் விடவே மாட்டாங்க .

 தனுஷ் டென்ஷனா இருக்கறப்ப கூட இருக்கற நாயை கொல்றார்.. அந்த நாய் ஸ்ருதி ஆசையா வளர்த்த நாய்..  ஒரு நைட் கிளப்.. டிஸ்கொத்தே பார்ட்டிக்கு போறப்ப ஒரு ரவுடி நம்ம ஜிகிடி ஸ்ருதி கிட்டே வம்பு இழுத்திங்க்..  13 பேரை ஒத்தை ஆளா நின்னு போட்டுத்தள்ளிடறாரு... 

நாமெல்லாம் ஆஃபீஸ்ல ஒரு ஜிகிடி கிட்டே 2 நிமிஷம் கடலை போட்டாலே வீட்டுக்கு வந்ததும் நம்ம முகரக்கட்டையை பார்த்தே சம்சாரம் என்னமோ நடந்திருக்குன்னு கண்டு பிடிச்சிடும்.. ஆனா பாருங்க ஸ்ருதி ஒரு அப்பாவி.. தன் புருஷன் சைக்கோ ங்கறது தெரியவே இல்லை.. 

 ஆஸ்பிடல், ட்ரீட்மெண்ட் அப்டினு படத்துல செகண்ட் ஆஃப் ஃபுல்லா தனுஷ் அலையறாரு .... க்ளைமாக்ஸ்ல எதிர்பாராத ஒரு திருப்பம்... இது வரை ஆடியன்ஸை கொலையா கொன்னெடுத்த டைரக்டர் ஹீரோவை தற்கொலை செய்ய வெச்சிடறார்.. அவ்வளவுதான் சுபம்.. ஆடியன்ஸ் எஸ்கேப்.. http://tamilwire.com/images/2012/01/dhanush-sruthi-620x811.jpg


 ஹீரோ தனுஷ்க்கு அல்வா சாப்பிடற மாதிரி கேரக்டர்.. அவர் முக அமைப்பு அவர்க்கு பெரிய பிளஸ்.. மீசையை ஃபுல்லா ஷேவிங்க் பண்ணிட்டா அவர் பிளஸ் டூ ஸ்டூடண்ட்.. லைட்டா மீசை தாடி வெச்சா காலேஜ் ஸ்டூடண்ட்.. கொஞ்சம் அடர்த்தியா மீசை தாடி வெச்சா ஃபேமிலி மேன் கம் சைக்கோ.. ஆஹா செம ஐடியா மிஸ்டர் சூர்யா .. நீங்க வேஸ்ட்.. எவ்வளவு சிரமப்பட்டு வானரம் அடச்சே  வாரனம் 1000 ல கெட்டப் சேஞ்ச் செஞ்சீங்க.. தனுஷ் பார்த்து கத்துக்குங்க .. 

ஹீரோயின் ஸ்ருதி  + 2 படிக்கற பாமாவா வர்றப்ப ஆஹா.. செம .. முதல் முதல் காதலனுடன் ரைடு போகையில் உள்ளாடை அணியாத வெள்ளாடாய் சாலையின் மழையில் குண்டுங்குழியில் சைக்கிளை விட்டு குலுங்கி செல்கையில்  “ துள்ளுவதோ இளமை.. அள்ளுவதே புதுமை.. அத்தனையும் தனுஷ் திறமைன்னு பாட வைக்குது.. அவரது குரல் அவருக்கு மைனஸ் தான்.. ( உன்னை யார் குரலை பார்க்க சொன்னது?)

ஐஸ்வர்யா தனுஷ் நிஜமா டைரக்டரா வேலை பார்த்தாரா? இல்லை லைட் பாயா விளக்கை பிடிச்சு வேலை பார்த்தாரா தெரியலை.. நாமெல்லாம் சம்சாரம் கூட கல்யாண விஷேஷத்துக்கு போறப்ப நம்ம பார்வை கொஞ்சம் பிசகினாலும் அங்கே என்ன பார்வை?ன்னு டமார்னு குரல் வரும்.. கதி கலங்கி போயிடுவோம்.. ஆனா ஒரு டைரக்டரா இருந்தாலும் உள்ளூர மனைவிங்கற ஸ்தானம் இருக்கும் தானே.. எப்படித்தான் இவ்வள வு நெருக்கமா ஸ்ருதி கூட தனுஷை நடிக்க விட்டாரோ.. ஹூம் ( பொறாமை பொறாமை )

 ஸ்ருதி அழுகை காட்சிகளீல் மிகச்சிறப்பாக நடிச்சாலும் திரைக்கதையுடன் ஒன்ற முடியாததால் ஆடியன்ஸ் ஓ  என கத்தறாங்க.. 

மிகப்பிரமாதமாக எதிர் பார்க்கப்பட்ட ஒய் திஸ் கொலை வெறி பாட்டு படமாக்கப்பட்ட விதம் படு சுமார்.. ஏழையின் சிரிப்பில் படத்தில் பிரபு தேவா ஊத்திக்கினு கடிச்சுக்கலாம் பாடுவாரே அந்த டான்ஸ் ஸ்டெப்..  வேஸ்ட்..  


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9QYuUrfrt2T46uCkD9pe_0hug-CvP4jTnePfpkQWwJIJpG32JDRA72TSzI458Y8y9nhJfeNEslpreTkQRpWBt8HbFvP_do3DM_AaIs9ki11aB5bs7atOIDraSc54AmkUIhetouuOgHe4a/s1600/Dhanush%252C+Shruthi+Hassan%2527s+3+Movie+Latest+Photo+2.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  சிவ கார்த்திகேயன் தனுஷை விட பர்சனாலிட்டி என்பதால் தன் கணவனை விட அவர் டம்மியாகத்தெரிய ஐஸ்வர்யா எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலே.. ஆனா மேக்கப், கெட்டப்ல அவர் எண்ணம் ஈடேறினாலும் வசனம், நடிப்பில் அவர் பின்னிட்டார்.. வெல்டன் சிவா.. 

2. இந்தக்காலத்துப்பசங்க  எப்படி ஃபிகருங்களுக்கு ரூட் விடுவாங்க.. என்ன பண்ணுவாங்க என்பதை அப்டேட் பண்ணி இடைவேளை வரை இளமை துள்ள படம் ஆக்கி இருப்பது.. 

3. ஹீரோயின் வீட்டில் யாரும் இல்லை.. ஹீரோவை வீட்டு மொட்டை மாடிக்கு வரச்சொல்லி ரொமான்ஸ் பண்ணும் இடம் செம கிளு கிளு./.. அந்த சீனில் ஹீரோயின் போட்டிருக்கும் ரோஸ் கலர் ட்ரான்ஸ்பரண்ட் நைட்டி செம கிக் .. ( நைட்டில என்ன கிக் என கேட்பவர்கள் லாலி பாப் சாப்பிடவும் ஹி ஹி )

4. கண்ணழகா.. காதழகா, லைஃப்ல ஒயிஃப் வந்துட்டா, நீ பார்த்த விழிகள், போ அன்பே போ, ஒய் திஸ் கொலை வெறி என எல்லா பாடல்களும் ஓக்கே. இசை அமைப்பாளர்க்கு நல்ல எதிர் காலம் உண்டு.. 

5. இடைவேளைக்குப்பின் கதையின் டோன் சடார் என மாறுவதில் ஒளீப்பதிவு பின்னணீ இசையின் திகில் எல்லாம் ஓக்கே .. சைக்கோவாக தனுஷ் மிரட்டும் நடிப்பு.. அதுவும் ஸ்ருதி “ ஃபிரண்ட் எங்கே இருக்கனுமோ அங்கே இருக்கனும்” என சொல்லும்போது ஏய் என மிரட்டுகிறாரே.. கிளாசிக் நடிப்பு.. 

6. பிரபு, பானுப்ரியா, ரோகினி என குணச்சித்திர நடிப்புக்கு தேர்ந்த நடிக நடிகைகள் செலக்சன்.. அதே போல் இடைவேளைக்குப்பின் தனுஷின் நண்பராக வருபவ்ரின் நடிப்பு.. டாப்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxhWH3n2WlVB4WMCLimtmSay7qkXxHXO2hNXBMPblSkSDxOJZ7mgE7vqdHXzE9os7PhHrKnX_UsO-UAgPj9TKzr-G4H-CdWR2G_zeQ6HeI1KFUuLtXOmpXUrpMN3_MOpiXno9up8B-j_g/s1600/dhanush_shruti_hassan_3_movie_first_look_155.jpg


 இயக்குநர் பல்பு வாங்கும் இடங்கள்

1. ஹீரோ சைக்கோ ஆக என்ன காரணம்? காதல் கொண்டேன் மாதிரி ஒரு ஃபிளாஸ் பேக் சீன் வெச்சிருக்கலாம்.. திடு திப்னு சைக்கோன்னா நம்பற மாதிரி இல்லையே?

2. ஹீரோ சைக்கோ என்பது ஹீரோவின் அம்மா, அப்பாவுக்குக்கூட தெரியாது.. நண்பனுக்கு மட்டும் தான் தெரியும் என்பது நம்பற மாதிரியே இல்லை..

3. இடை வேளை வரை நடந்தது எல்லாம் ஹீரோவின் கற்பனை.. ஹீரோ - ஹீரோயின் மேரேஜ் நடக்கவே இல்லை.. ஹீரோயின் பேரண்ட்ஸ் கூட ஃபாரீன் போயாச்சு.. இனிமே தான் 2 பேரும் சேரனும்.. அதுக்கு என்ன முயற்சி எடுக்கறார் என்பது மாதிரி காட்டி இருந்தால் கூட படம் தப்பி இருக்கும்.. 

4. செகன்ட் ஆஃப்ல ஹீரோவின் ஃபிரண்ட் கிட்டே ஹீரோயின் என்ன நடந்தது? என  கேட்கையில் அவர் ஒரு ஃபிளாஸ் பேக் சொல்றார்.. ஆனா அந்த ஃபிளாஸ் பேக்ல ஏகப்பட்ட காட்சிகள் ஸ்ருதி- தனுஷ் தனியா பேசிக்கற சீன்ஸ் எல்லாம் வருதே எப்படி?

5. தனுஷ் தன் அப்பாவிடம் தன் சொத்தை எல்லாம் மனைவி பேர்ல எழுதி வைங்க என கேட்கும்போது கூட தந்தை பிரபுக்கு எந்த டவுட்டும் வர்லையே, எப்படி? அட்லீஸ்ட் ஹீரோவின் ஃபிரண்ட்ஸ்க்கு ஃபோன் போட்டாவது கேட்டிருக்கலாமே?

6. தான் ஒரு சைக்கோ என்ற மேட்டர் மனைவிக்கு தெரிய வேண்டாம்னு ஹீரோ நினைக்கறது ஓக்கே.. அதுக்காக தற்கொலை லெவல்க்கு ஏன் இறங்கனும்  ?அதுக்குப்பேசாம மனைவி கிட்டே சொல்லி ட்ரீட்மெண்ட்டே எடுக்கலாமே?

7. க்ளைமாக்ஸ் சீன்ல ஹீரோயின் ஸ்ருதி எதுக்கு சுடிதார்ல ஒரு கையை பிடிச்சுக்கிட்டே அழறார்? லோ கட் தெரியக்கூடாதுன்னா? அதுதான் படம் பூரா காட்டியாச்சே.. ஹி ஹி 
http://www.tamilkey.com/wp-content/uploads/2012/01/Aishwarya-DhanushShruthi-Hassan.jpg


 மனதில் நின்ற வசனங்கள்


1.  எந்த ஸ்கூல் படிக்கறே?

 தாங்க்யூ

 அடிங்க்

2.  ஏய்.. மேக்கிங்க் ரொமான்ஸ் @ 1st சைட்டா?

ஆமா ஹி ஹி 

 ஆனா பார்ட்டி கிட்டே “ பெருசா” 1ம் இல்லையேடா.. 

3. அந்த 2 ஃபிகர்ல உயரமா இருக்கறது  சரி இல்லை.. குள்ளமா இருக்கறது ஓக்கே

4.  அய்யய்யே.. என்னடா? உன் ஆளு டியூஷன் எல்லாம் போறா? மக்கு ஃபிகரா?

5. நான் எல்லாம் ஸ்கூல்க்கு வர்றதே பெரிய விஷயம்.. என்னைப்போய் டியூஷனுக்கு வர வெச்சுட்டியே டா..

 டேய்.. படிக்கறாடா.. 

6. எங்கப்பாவுக்கு டை எதுக்குன்னே தெரியாது.. கழுத்துல கட்டாட்டி என்ன? கைல அல்லது பாக்கெட்ல எடுத்துட்டு போங்கறாரு..

7. நூடுல்ஸ் மாதிரி ஏண்டா நெளியறே.. பழைய 5 பைசா மாதிரி ஒரு மூஞ்சி.. 

8.  அட.. இன்னைக்கு எல்லாரும் நேரத்துலயே வந்துட்டீங்களே.. 

 சார்.. நீங்க லேட்.. 

9.  காஸ் லாஸ் சொல்லு.. 

 என்னது காஸ் லாசா? ( LAWS)

 இல்லை உன்னோட மதர்ஸ் லாவா?

10.  டேய்.. நீ பேசாதே.. நீ 3 மாசமா ஃபீசே கட்டலை.. http://www.cinemamasti.com/wp-content/uploads/Shruthi-Hassan-3.jpg

11.  இனிமே நான் போற பக்கம் எல்லாம் ஃபாலோ பண்றது.. என் பின்னாலயே சுத்தறது ( 2ம் 1 தான் ) இதெல்லாம் இருக்கக்கூடாது.. ஓக்கேவா?

 ம்.. நீ சொன்ன படி பண்றேன்.. உன் ஃபோன் நெம்பர் குடு ஹி ஹி 

12.  ஓக்கே என் ஃபோன் நெம்பர் 483201321 ( இந்த நெம்பருக்கு அடிச்சா ஸ்ருதி எடுப்பாங்கன்னு யாரும் ட்ரை பண்ணாதீங்க ஹி ஹி ஆல்ரெடி மீ ட்ரை ..  நோ யூஸ் அவ்வ்வ் )

 ஓக்கே

 ஆமா... நோட் பண்னலை?

இந்த மாதிரி விஷயம் எல்லாம் தானாவே மனசுல பதிஞ்சுடும் ஹி ஹி 

13.  இதென்ன புது டெக்னிக்? வீட்டுக்கு முன்னால நின்னு லவ் ஆர் நாட் லவ் நு டார்ச்சர் பண்றது ?  ( எல்லாம் ஐஸ்வர்யா ராயை சல்மான்கான் செஞ்ச டார்ச்சர் தான்)


அதெல்லாம் முடியாது.. இப்பவே டெல்.. சாயங்காலம் வரை நான் ஏன் வெட்டியா உனக்காக வெயிட் பண்னனும்?

14. ஹீரோயின் - நான் இதுக்கு முன்னால யார் கூடவும் இப்படி பழகுனதில்லை ( அப்போ சித்தார்த்?)

ஹீரோ - நாங்க மட்டும் டெயிலி இதே வேலையா இருந்தோமா? 

15. ஏய்.. டாடி?

 விடு.. அதான் அவர் கிட்டே பளார்னு அறை வாங்கியாச்சில்லை?

16. அவ்ளவ் தானா? ஒரு ஐ லவ் யூ கிடையாதா?

 எனக்கு தோணும்போது சொல்றேன் 

17. டேய்.. சொன்னா நம்ப மாட்டே.. என் கன்னத்துல ஒரு கிஸ் குடுத்துட்டு ஓடிப்போய்ட்டாடா.. 

 அப்டியா? யார் கூட?

18.  டேய்.. அவளை பார்க்காம ஒரு மாதிரியா இருக்குடா.. 

 ஏன்? வயிறு சரி இல்லையா?

19.  என்னடா? உன் ஆன்சர் பேப்பர்ல கொஸ்டின் பேப்பர்ல என்ன இருக்கோ அதை அப்படியே எழுதி வெச்சிருக்கே?

 என் மேலே தப்பில்லை சார்.. எல்லாம் இவன் செஞ்ச தப்பு அவனை பார்த்து தான் எழுதுனேன்.. 


20. டேய்.. இங்கே வா.. இந்தா மேத்ஸ்ல நீ 7 மார்க் தான்

 அடேங்கப்பா .. 7 மார்க்? நான் எதிர்பார்க்கவே இல்லை சார். https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM8rpbTuS5iI7qV3XN4g3a3yfmH9NdAMRpdFwJh7AkQbyuP7M7p0A6lOq8SdCVB9AWEWjaiRu6sFNM2G82cw3wRJSw8ekK9CUaAqZW4VNlN0tGRiTN14DM7U-YX8q8hyltgmPK-qJhIFaI/s1600/Shruthi+Hassan+Hot+Photo+Shoot+Stills_05.jpg

21. நீ எதுக்கு திருப்பதி போனே?

 ம் லட்டு வாங்க.. உன் கண்ணை பார்க்காம என்னால இருக்கவே முடியல

22.  என்னை அம்மா அடிச்சுட்டாங்க.. அதான் ஓடி வந்துட்டேன்.. இப்பவே வா மேரேஜ் பண்ணிக்கலாம்.. 

 அம்மா அடிச்சதுக்கெல்லாம் மேரேஜ் பண்னனும்னா நானெல்லாம் டெயிலி மேரேஜ் பண்ணனும்

23.  டேய் என்னடா.. 

 அப்பா உங்க கிட்டே ஒரு மேட்டர் பேசனும் லைஃப் மேட்டர்.. 

 சரி சரி வா.. நம்மகிட்டே 4 கம்பெனி இருக்கு

 அப்பா மொக்கை போடாதீங்க


எங்கே தான் கத்துக்கிட்டானோ எப்போ பாரு மொக்கை போடறது/.. ஆட்டையை போடறதுன்னே நமக்கு புரியாத பாஷைல பேசிட்டு

 அப்பா நான் மேரேஜ் பற்றி பேச வந்தேன்

 ஸ்ட்ரெயிட்டா மேரேஜா? லவ் எல்லாம் பண்ணலையா? 

 அதெல்லாம் 5 வருஷம் பண்ணி முடிச்சாச்சு

அடப்பாவி

24.  எனக்கு உன் லவ் இஷ்டம் இல்லை.. 

அப்போ நீ சம்பாதிச்சதை நீயே வெச்சுக்கிட்டு தாத்தா சம்பாதிச்சதை எனக்கு இப்பவே குடு

25. என்னடி? ஃபர்ஸ்ட் நைட் இது? சேலை எங்கே? நகை எங்கே?

 ம்க்கும்.. நீ மட்டும் வேட்டி கட்டி இருக்கியா?

சரி பாலையாவது குடு.. நீயே குடிச்சுட்டா?

26./ என்னடி? அறையறே?

 போகப்போக நான் யார்னு தெரியும்?

 ம் நல்ல ஃபர்ஸ்ட் நைட்

27.  யாரும் உன்னை கஷ்டப்படுத்த விட மாட்டேன்... 

 ம் எனக்குத்தெரியும்

28.  சார்.. சுண்டல்.. வேணுமா?

 ம்க்கும்.. அவ சூப் குடுத்தா. நீ சுண்டல் குடு.. 

 விடு சார்.. இந்த பொண்ணுங்களே இப்படித்தான் சூப் குடுப்பாங்க.. எனக்குக்கூட ஒரு பொண்ணு சூப் குடுத்துச்சு சார்

 அடப்பாவி.. 10 வயசு பையன் பேச்சப்பாரு

29.  நான் சைக்கோங்கற மேட்டர் என் மனைவிக்கு தெரிஞ்சுட்டா அப்புரம் அவ கண்ல லவ் இருக்காது.. பயம் தான் இருக்கும். அதை என்னால தாங்கிக்க முடியாது

30.. அப்பா, ஒரே பாட்டுல பணக்காரன் ஆக இது என்ன சினிமாவா? லைஃப் ப்பா
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe7O3Rz6BaubcaTFQw3rm38UoDuJSHZr1vJ24sQZg_aeNMqhSw2zXnXfJJbu3t5aMCw2a0KF1DlJ6UKm3OQo8xhrnf0wdupuht76X-YRzpyqtRdQVpL0xtz1zhJxwqBjM77D8rLjMzKwn-/s1600/Shruthi+Hassan+Hot+Photo+Shoot+Stills_03.jpg


ஏ செண்ட்டர்களீல் 25 நாட்கள் ஓடும்.. பி சி செண்ட்டர்களீல் ஒரு வாரம் தான் தாங்கும்

 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

. எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

 சி.பி கமெண்ட் - இடைவேளை வரை பார்த்துட்டு திரும்பிப்பார்க்காம ஓடியாந்துடுங்க ஹி ஹி 

 ஈரோடு ஆனூர்ல படம் பார்த்தேன்

 டிஸ்கி - இந்தப்பட விமர்சன டைட்டிலுக்கான விளக்கம்.. இந்தப்படத்தை பெருசா நம்பி இருந்த ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ், ஸ்ருதி 3 பேரும் திருப்பதி,திருத்தணி,பழநி இந்த 3 திருத்தலங்களில் போய் மொட்டை அடிச்சுக்கலாம் ஹி ஹி
http://www.chitramala.in/photogallery/d/576215-1/shruthi-hassan-hot-stills+_1__001.jpg

19 comments:

rathinamuthu said...

ஸ்ருதி அழும் போதெல்லாம் மேல் சட்டையை கையில் பிடிச்சிக்கிட்டே அழறாங்களே, கேட்க மாட்டீங்களா?

sutha said...

நல்ல வேளை - நாங்க தப்பிச்சோம் ...

Senthil said...

Escape!!!!!!!!!!11

Thanks
Senthil,Doha

குரங்குபெடல் said...

"இடை வேளை வரை நடந்தது எல்லாம் ஹீரோவின் கற்பனை.. ஹீரோ - ஹீரோயின் மேரேஜ் நடக்கவே இல்லை.. ஹீரோயின் பேரண்ட்ஸ் கூட ஃபாரீன் போயாச்சு.. இனிமே தான் 2 பேரும் சேரனும்.. அதுக்கு என்ன முயற்சி எடுக்கறார் என்பது மாதிரி காட்டி இருந்தால் கூட படம் தப்பி இருக்கும்.. "


செம ஐடியா தம்பி . . . . கலக்கிட்ட . . .தம்பி

Unknown said...

சைக்கோ!சைக்கோங்கற வார்த்தை அதிகமா வருது படம் பார்த்தா ஆயிருவோம் போல......

யாழிபாபா said...

athu yelaiyin sirippil illai
ninaivrukkum varai

-‍‍‍தாஸ் அருள்சாமி said...

ஓவரா சீன் போட்டு ஒன்னுமில்லாம போச்சா மூணு... !!!!!!

கோவை நேரம் said...

3 அவுட்டா...

கோவை நேரம் said...

3 அவுட்டா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

இதுவரை 4 விமர்சனம் படிச்சிட்டேன்..

அனைத்திலும் இந்த படத்தில் மயக்கம் என்ன, காதல் கொண்டேன், படங்களின் சாயல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்...

அடுத்த படத்தின் சாயல் படத்தில் தெரிந்துவிட்டால் தொடர்ந்து தனக்கென தனிஇடத்தை பிடிப்பது அறிதாகி விடும்...

நல்லதொரு விமர்சனம் சிபி பாணியில்...

rajamelaiyur said...

டிஸ்கி சூப்பர்

rajamelaiyur said...

படம் பார்த்த நாம எங்கே போய் மொட்டை போடுவது ?

ஹாலிவுட்ரசிகன் said...

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? ஓகே ... நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்.

ராஜி said...

படத்தைவிட உங்க விமர்சனம் சூப்பர்

Unknown said...

ரொம்ப நாளைக்கப்புரம் விமர்சனத்தில் விளையாடி இருக்கீங்க சிபி நல்லா இருக்கு!

Unknown said...

நீங்க படத்த போட்டே கலக்குறீங்க

விமர்சணம் அருமை


ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

K.Arivukkarasu said...

( அடங்கோ ) அடடா.. மன்னவா.. அடே தலைவா... சூப்பர் விமர்சனம் பாஸ்..

Anonymous said...

//ஏ செண்ட்டர்களீல் 25 நாட்கள் ஓடும்.. பி சி செண்ட்டர்களீல் ஒரு வாரம் தான் தாங்கும்///////

Fact-u.Fact-u.Fact-u.Fact-u.Fact-u.
இந்த படம் ஊத்திகிட்டதால நம்ம ரூட் கிளியர் ஆச்சு..

Vadakkupatti Raamsami said...

பாஷ செமையா சிரிச்சேன்!அதுக்கு நன்றி!
அப்பால இந்த சைக்கோ வியாதி செல்வா தனுசு பார்த்திபனுக்கு மட்டும் அடிக்கடி வரும்-ஹீ ஹீ!செம அப்சர்வேஷன்(சி பி ஐ இல் ஆள் எடுக்குறாங்க!அப்ளை பண்ணுங்க)
*
அப்பால தனுசை விட சிவா மொக்கையா தெரிய முயற்சி எடுத்தார்னு சொல்லுறது ரொம்ப ஓவர்!ஒரு தெருவில் செல்லும் பிச்சைக்காரன் கூட ஸ்மார்ட் தான் தனுசை ஒப்பிடும்போது!
*
அப்புறம் எனது விமர்சனத்தை காண கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும்!
http://picturepush.com/public/7918308