Tuesday, March 13, 2012

சேவற்கொடி - விரோதச்செடி - சினிமா விமர்சனம்

 http://tamil.cinesnacks.net/photos/posters/Sevarkodi-Posters/sevarkodi-posters-005.jpg

அக்னி நட்சத்திரம் படத்துல வர்ற பிரபு, கார்த்திக் மாதிரி 2 பேரு எப்போ பாரு அடிச்சுக்கறாங்க..கிரி படத்துல பேக்கரி - தங்கச்சி  டீலிங்க் விட்டாரே வடிவேல் அந்த மாதிரி தான் வசதியா வாழனும்கறதுக்காக ஒரே ஒரு ஜீப்க்கு ஆசைப்பட்டு வில்லனோட தங்கச்சியை வில்லன் கை மாத்தி விடலாம்னு பார்க்கறப்போ அந்த தங்கமான தங்கச்சி தன் காதலனை இழுத்துக்கிட்டு நாடோடிகள் படத்துல வர்ற ஜோடிகள் மாதிரி ஊரை விட்டு எஸ்.. அவங்க ஓடிப்போனதுக்கு காரணமே ஹீரோதான்னு தப்பா நினைச்சுக்கிட்டு வில்லன் ஹீரோவை தூக்க நினைக்கறான்.

அந்த மாதிரி ஒரு முயற்சில ஹீரோ தன் அம்மா கூட பைக் போறப்ப   ஆக்சிடெண்ட் பண்ணிடரு. அதுல ஹீரோ எஸ்.. அம்மா ஆள் அவுட்.. செம காண்ட் ஆகற ஹீரோ வில்லனோட  பயங்கரமா ஒரு ஃபைட் போட நடு ரோட்ல இதுதாண்டா போலீஸ்  படத்துல அண்டர் டிராயரோட வில்லனை ராஜசேகர் அடிச்சு கிளப்பற மாதிரி கிளப்பறார்.. அதுல அவமானப்பட்ட வில்லன் கூலிப்படை ஆளுங்களை நியமிச்சு ஹீரோவை போட்டுத்தள்ள முயற்சி பண்றார்.என்ன நடக்குதுங்கறதுதான் மிச்சக்கதை..

சும்மா சொல்லக்கூடாது.. பெரும்பாலான புது முகங்களையும் சாதாரண கதையையும் வெச்சுக்கிட்டு டைரக்டர் செம விறுவிறுப்பான திரைக்கதை தான் அமைச்சிருக்கார்.. ஆனாலும் ஏகப்பட்ட லாஜிக் சொதப்பல்கள்..

பிரபல நீச்சல் வீரர் அருண் பாலாஜி தான் ஹீரோ .. கேமரா கூச்சமோ , பயமோ இல்லாம பல காட்சிகளில் யதார்த்தமா நடிக்கறார்.. ஒரு சீன்ல பைக்ல லாவகமா சறுக்கி கீழே விழும்போது அப்ளாஸ் அள்ளுகிறார்.. மற்ரபடி இவரது எதிர்காலத்தை அடுத்து வரும் படங்கள் தான் தீர்மானிக்கும்..


http://keralapals.com/wp-content/uploads/2012/02/Sevarkodi-tamil-movie-stills-bhama-17.jpg

வில்லனாக வரும் பவன் தான் ரியல் ஹீரோ.. ஹீரோவை விட இவருக்குதான் அதிக வாய்ப்பு.. மனிதர் செம காட்டு காட்டி இருக்கார்.. டிரைவராக வரும்போது புழுங்குவதும், ஓனர் ஆனதும் அசால்ட் காடுவதும் , கூலிப்படை தலைவனிடம் பம்மும்போதும், ஹீரோவோட மோதும்போதும் என   அள்ளுகிறார்.. க்ளைமாக்ஸில் மட்டும் ஹீரோவிடம் கெஞ்சுகிறார்..

பவனுக்கு எடுபிடியாய் க்ளீனராக நடித்திருக்கும் சேகர் நடிப்பு பிரமாதம்.. க்ளீனராக வந்தாலும் கடைசி வரை அவர் வில்லனிடம் காட்டும் விசுவாசம் கன கச்சிதம்.. வில்லனை பற்றி போலீஸ் விசாரிக்கும்போது வாய் பேசாத கிளீனரை போலீஸ் “ என்ன விசுவாசமா? என நக்கல் அடிக்கும்போது , ஏன் சார்? எங்களுக்கு விசுவாசம் இருக்கக்கூடாதா? என்று கேட்கும்போது தியேட்டரில் கை தட்டல்ஸ்..

ஹீரோயின் கேரளா ஃபிகர்.. பேரு  பாமா.. மொழு மொழு முகம்.. அங்கங்கே நடிக்கிறார்.. ஓக்கே தான்..


http://www.filmics.com/gallery/d/147108-1/Sevarkodi-Movie-Photo-Stills-22.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  படம் முழுக்க பேசும் தூத்துக்குடி ஸ்லாங்க் எனப்படும் வட்டார வழக்குப்பேச்சில் வசனங்கள் கலக்கல்ஸ் ரகம்..

2. வில்லனின் கேரக்டர் என்ன? என்பதை பட ஓப்பனிங்க் முதல் பல காட்சிகளில் அசால்ட்டாக சொல்லி வில்லன் மேல் கதையை கொண்டு செல்லும் உத்தி,,

3. ஹீரோ - வில்லன் இருவருக்குமான விரோதம் எதனால் வருது..? என்பதை தெளிவாக விளக்கி யார் மேல் தப்பு என்பதை யூகிக்க முடியாதபடி திரைக்கதையை இருவர் பக்கமும் மாற்றி மாற்றி கொண்டு செல்லும் திறன்

4. கூலிப்படை ஆட்கள் பற்றிய விஸ்தீரனமான நம்ப வைக்கும் காட்சிகள்

5. ஹீரோ வில்லன் மோதல் தான் கதையின் ஒன் லைன் என்பதால் தேவை  இல்லாமல் டூயட் சாங்க் அதிகம் வைக்காமல் படத்தை மையப்புள்ளியை நோக்கி நகர்த்தும் விதம்..

6. சூறாவளியாய் வந்து போகிறாய், கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு ,தீ குனிவதில்லை என 3 பாடல்கள் நல்லா வந்திருக்குhttp://4.bp.blogspot.com/-oxwNTt9nDvs/TjL7FIph40I/AAAAAAAAAUg/H4gxw-FogFs/s1600/actress-bhama-hot-navel.jpg
 இயக்குநர்  கவனிக்க மறந்த லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. படத்தின் முக்கியமான சீனான வில்லனை ஹீரோ அடித்து நிர்வானம் ஆக்கும் காட்சியில் வேடிக்கை பார்க்கும் ஜனங்கள் யாரும் துண்டு குடுத்து போர்த்தலை? அட்லீஸ்ட் கூடவே விசுவாசமா இருக்கும் கிளீனர் சடார் என தன் வேட்டியை கழட்டி மானத்தை மறைத்திருக்க வேண்டாமா?

2.  வில்லன் ஒரு சீன்ல ஹீரோவோட செல் ஃபோன் நெம்பருக்கு ஃபோன் போட்டு மிரட்றார்.. ஆனா அவர் நெம்பர் இவருக்கு த்நெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லையே..?எப்படி தெரிஞ்சது?

3. வில்லன் பலடைம் பலரை ஆக்சிடெண்ட்டில் அடி பட வைக்கிறார்.. படு காயப்படுத்துகிறார்.. ஆனால் ஒரு சீனில் கூட போலீஸ் அவரை எதுவும் செய்யவில்லையே? ஏன்>

4. வாய்ப்பிருந்தும் வில்லனை ஏன் போலீஸ் அரெஸ்ட் பண்னாமல் வேடிக்கை பார்க்கிறது? டீக்க்டையில் டேங்கர் லாரியை ஓட்டி மாபெரும் ஆக்சிடெண்ட் செஞ்சும் அவரை யாரும் எதுவும் கண்டுக்கலையே?

5. வில்லன் கித்தாய்ப்பாய் படம் முழுக்க வசனம் பேசி அந்த கேரக்டர் மேல் சத்யராஜ் தனமான ஒரு பில்டப் கொடுத்துட்டு க்ளைமாக்ஸில் வடிவேல் மாதிரி உயிர்ப்பிச்சை கேட்பது மாதிரி ஏன் காட்டனும்?

http://2.bp.blogspot.com/_Toi-rh0Nm00/S_6K6Nsd4bI/AAAAAAAAEqU/iBM_LHUB1Mk/s1600/bhama+hot+photos+12.jpg

 மனதில் நின்ற வசனங்கள்


1. எல்லாருக்கும் எல்லாரும் எல்லா நேரமும் நல்லவனா வாழ முடியாது,ஆனா நம்மளை சுத்தி இருக்கற 4 பேருக்காவது நாம நல்லவனா வாழனும்


2.  ஒருத்தன் இன்னும் சாகலை.. இப்போ என்ன பண்ண?

 ம் போய் சாகச்சொல்லு..

3.  கல்யாணத்துக்கு முன்னேயே இப்படித்தான்... அதுக்குப்பிறகு பொய்யே பேச மாட்டேன்..

ம்க்கும், அப்புறம் நான் உங்க கூட பேசவே மாட்டேன்..

4.  என்னடா.. விசுவாசமா?

, ஏன் சார்? எங்களுக்கு விசுவாசம் இருக்கக்கூடாதா?


5. அவன் கெட்டவன் தான் .. அது உங்களுக்கு.. போலீஸ்க்கு.. ஆனா அவர் எனக்கு சோறு போட்டவர்.. மொதலாளி

6. கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு பாடல் விழாமலே இருக்க முடியுமா? விழுந்து விட்டேன் காதல் வலையிலே பாட்டு மெட்டை நினைவு படுத்துகிறது
http://2.bp.blogspot.com/_GaVBOHRwetA/SetIelqCNJI/AAAAAAAAb8c/3z-iw9I5vGU/s1600/Ivar%2BVivahitharayal%2BMovie%2BPhotos%2B2%2B(11).jpg
யார் எல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்?

ஆண்கள் எல்லாரும் பொழுதுபோக்கா பார்க்கலாம் ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கு பிடிக்காது.. பி , சி செண்ட்டர் ரசிகர்கள்க்கு பிடிக்கும்.

 பெண்களுக்கு இந்தப்படம் பிடிக்காது.. விரோதம், கோபம், வன்முரை, பழி வாங்கும் உணர்வை தூண்டுதல் என மைனஸ்கள் இருப்பதால் பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் தவிர்ப்பது நல்லது

எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 சி.பி கமெண்ட் - பி ,சி  ஆண் ரசிகர்களுக்கு மட்டும்

ஈரோடு ஸ்டார் தியேட்டரில் படம் பார்த்தேன்


http://i625.photobucket.com/albums/tt332/Anish911/bhama.jpg

17 comments:

ராஜி said...

படிச்சுட்டு வரேன்

ராஜி said...

விரோதம், கோபம், வன்முரை, பழி வாங்கும் உணர்வை தூண்டுதல் என மைனஸ்கள் இருப்பதால் பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் தவிர்ப்பது நல்லது
>>>
சமூக அக்கறையாம்

Unknown said...

அண்ணனுக்கு ஜெ...யோவ் புண்ணியமா போகும் விட்ரு அந்த டைர டக்கரு பாவம்!

Unknown said...

இந்தப்பதிவை படிப்பவர்களை விட இந்த படங்களை பார்ப்பவர்களே இங்கு அதிகம் என அறுதியிட்டு சொல்லிக்கொள்கிறேன் ஹிஹி!

முத்தரசு said...

மாலை வணக்கம். சித்தப்பு

முத்தரசு said...

தலையில பூவும் கையில பால் டம்ளரோட நிக்கிற பொண்ணு ஆரு???

Unknown said...

@விக்கியுலகம்

மாம் நீங்க இத்தனை நாளா சிபி பதிவை படிக்கிறீங்கன்னு நாங்க நம்பிகிட்டு இருக்கம்ன்னு நினைச்சிட்டு இருக்கிங்களா...கிடையாது கிடையாது...

சென்னை பித்தன் said...

ஏ செண்டர்ல அவுட்டா!

rajamelaiyur said...

@விக்கியுலகம்

நான் படத்தை பார்க்க மாட்டேன் ( போட்டோவை மட்டும் ஹீ ஹீ )

rajamelaiyur said...

/ சென்னை பித்தன் said...
ஏ செண்டர்ல அவுட்டா!

March 13, 2012 8:03 PM
//
all center out

பால கணேஷ் said...

காலேஜ் மாணவிகள் பாக்க வேண்டாம். சரி, என்னை மாதிரி மாணவர்கள் பாக்கலாமா? வேண்டாமான்னு சொல்லவே இல்லியே...

அருள் said...

"அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார்: காமெடியா? லூசுத்தனமா? (பகுதி 2) சாதிக்கட்சி ஆபத்தானதா?

http://arulgreen.blogspot.com

'பரிவை' சே.குமார் said...

மொத்தத்தில் படம் தேறிருச்சுன்னு சொல்லிட்டிங்க...
நல்ல விமர்சனம்...

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

" அருள் said...
"அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார்: காமெடியா? லூசுத்தனமா? (பகுதி 2) சாதிக்கட்சி ஆபத்தானதா?

http://arulgreen.blogspot.com "

தலைவா பயங்கர(?) பாப்புலர் ஆயிட்டீங்க போல ...அப்டியே பிக்கப்பண்ணி ஏதாவது கழ(ல)கத்துல ஐக்கியமாயிடுங்க...

ஹேமா said...

அந்த சாரி நல்ல கலர்.பிடிச்சிருக்கு !

ஹாலிவுட்ரசிகன் said...

இன்ட்ரஸ்டிங்கான படமா இருக்குமோ? படங்களைப் பார்த்தா ஏதோ கேரளா பிட்டுப்பட ரேஞ்சுக்கு இல்ல இருக்கு?