Thursday, March 08, 2012

ஐ நா சபைல குஷ்பூ பேசுனா இன்னா பேசுவாரு? ஹி ஹி ஹி

pic.twitter.com/pMnGPPdsa
அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.. இந்த நன்னாளில் அனைத்து மகளிரும் ஆண்களுக்கு சம உரிமை கொடுத்து , அவர்களை மதிக்க முயற்சிக்கவும் ஹி ஹி


 
1.என்னது? என் பொண்ணை 5 வருஷமா லவ் பண்றியா? தப்பு தண்டா ஏதும் நடக்கலையே? 

மாமா, தண்டான்னா என்ன? அது நடக்கலை

---------------------

2. என் சம்சாரம் டெயிலி லெக் பீஸ் சாப்பிடறா....


 ஓஹோ பீஸ்ஃபுல் லைஃப் ஒயிஃப்!!!

-------------------------

3. எங்க காதலுக்கு ஆயுசு கெட்டி! ஆரோக்யமான காதல்.

எப்படி?

 எப்படின்னா நான் டெயிலி 3 டம்ளர் ஹார்லிக்ஸ், அவ 8 டம்ளர் பூஸ்ட் குடிக்கறோம் ஹி ஹி

----------------------------------

4. ரியாஸ் - இனிமே நீங்க 2 தோசை தான் சாப்பிடனும்னு சொன்னேனே? ஃபாலோ பண்றீங்களா?  


எஸ் டாக்டர். ஆனா ஒரு தோசைக்கு 4 கரண்டி மாவு ஊத்திக்கறேன்

-----------------------------------

5. நடிகை - நான் டைரக்டர் ஆர்ட்டிஸ்ட்..ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு வந்ததும் என்னை டைரக்டர்கிட்டே ஒப்படைச்சுடுவேன்#


 அடடா! நிறைய பேர் வேடிக்கை பார்ப்பாங்களே?

---------------------

6. முகத்துக்கு நேராக ஒன்று, முதுகுக்கு பின்னால் ஒன்று என்று பேசி பழக்கம் இல்லாதவர்கள் ஆண்கள்

-------------------------------------

7. தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஆண் தேமே என்று இருப்பான்.. அக்கம்பக்கம் வீடுகள் சென்று புறணி பேசுவதில் வல்லமை படைத்தவள் பெண்


-----------------------------------

8. மாமியார்- மருமகள் சண்டை இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம், ஆனால் மாமனார்- மாப்பிள்ளை சண்டை ஊருக்கு ஒன்று இருந்தாலே அதிகம்

---------------------------------

9.தன் மனசுக்கு பிடிக்காதவங்க கிட்டே முகம் கொடுத்து பேசவே ஆண் யோசிப்பான், ஆனால் எல்லோரிடமும் சிரித்துப்பேசி கழுத்தை அறுப்பவள் பெண்

--------------------------------

10. கல்யாணம் பண்ணிப்பார்,வீட்டைக்கட்டிப்பார்-பழமொழி,கல்யாணம் பண்ணினால் BAR ,,வீட்டைக்கட்டினால் வீட்டுக்குள்ளேயே BAR -புதுமொழி


-----------------------11. ஆண்களால் தியாகம் செய்ய முடியுதோ இல்லையோ  துரோகம் செய்ய மாட்டார்கள்


--------------------------------------

12. உலகின் முதல் பெண்ணே சொல் பேச்சு கேட்காதவள் தான். ஆப்பிளை சாப்பிடாதேன்னு கடவுளே சொல்லியும் கேட்கலையே?

--------------------------------

13. டியர்.. பீச்ல எதுக்காக தேசிய கீதம் பாடறே? 


புரியலீங்களா? நம்ம காதலுக்கு இன்னைக்கு ஜன கன மன

----------------------------------

14. கு க சிம்பல் முக்கோணத்துக்கு அர்த்தம் என்ன? 

1 சந்தோஷமா இருந்துக்கோ 2.சாக்கிரதையா இருந்துக்கோ 3.சம்சாரம் கூட மட்டும் இரு


---------------------------------

15. கர்நாடக சட்டசபையில் மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படம் பார்த்தனர் #  க்ரூப் ஸ்டடி பண்றாங்க போல 


--------------------------------
16. காவ்யா,இவன் தான் உன் பாய் ஃபிரண்டா?

 ஆமாம் மேடம்,அவன் என் சோபா ஃபிரண்ட், இவன் என் கட்டில் ஃபிரண்ட்,


-----------------------------

17. நான் மறுபடியும் அதிமுகவில் சேரப் போகிறேன்-. எஸ்.வி.சேகர் # டைமிங்க் காமெடில மட்டும் இல்லை, டைமிங்க் பாலிடிக்ஸ்லயும் கலக்கறீங்களே!


---------------------------------

18. 2050 ஆம் ஆண்டு கு க வாசகம் - நாமே இருவர்.. நமக்கு எதற்கு இன்னும் ஒருவர்?


---------------------------------


19. ஐ. நா. சபையில் பேசுகிறார் நடிகை குஷ்பு #  இங்கே கூடி இருக்கும் ”கணவான்”களே! பிரபுக்களே!அல்லாருக்கும் வண்க்கம்


--------------------------


20. சார், எனக்கு தமிழ் தோடா தோடா தான் மாலும்.. நான் ட்வீட்டலாமா? போப்பா தம்பி.. முதல்ல தமிழ் ல எம் ஏ முடி, அதுக்கப்புறமா டைப் அடி


--------------------

pic.twitter.com/Aru8PW9k

பெண்கள் தின ஸ்பெசல் கூந்தல் அலங்காரம்.. ஒரிஜினல் கூந்தல் உள்ளவர்கள் வீட்டிலேயே முயற்சிக்கவும்.. வழக்கம் போல் பெரும்பான்மையினர் சவுரி என்பவர்கள் அழகு நிலையம் சென்று சவுரியை கொடுத்து சென்றால் 2 மணி நேரத்தில் ரெடி செய்து தருவார்கள் ஹி ஹி

11 comments:

கோவை நேரம் said...

வணக்கம்

கோவை நேரம் said...

இது அவங்க சொல்லி இருப்பாங்க...அப்படின்னு நினைக்கிறேன்

கோவை நேரம் said...

ரெண்டாவது ஜோக் ராஜபாட்டை தானே

கோவை நேரம் said...

ஓஹோ...கூந்தல் டிசைன் போட்டு மகளிர் தினத்த சிறப்பிக்கிரீங்களா

Unknown said...

12.நிசந்தாங்கோ!......

உணவு உலகம் said...

மகளிர் தினத்தில் சகோதரிகளை வம்புக்கு இழுத்துள்ள சிபிக்கு கண்டனங்கள்.

Unknown said...

14 வது டாப்பு...

எலேய் இன்னைக்கு வேணும்னே இப்படி பதிவு போட்டு இருக்கியா ராஸ்கல்...உனக்கு டைம் சரி இல்ல ஹெஹெ!

அய்யயோ திட்டிட்டனே...இதுக்கு இன்னும் 4 போஸ்ட் இன்னைக்கே போட்டு கொலயா கொல்லுவானே!

Unknown said...

ஒரு நாளைக்கு 4 அல்லது 5 போஸ்ட் போட்டாலும் தம்பி நீ இப்பதான் டாட் காம் வாங்கி இருக்க...கொஞ்சம் டைம் ஆகும்...இன்னும் நீ வளரனும் ஹெஹெ!

உணவு உலகம் said...

அந்த ரெண்டாவது படத்துல யாரை வம்புக்கு இழுத்துருக்கீங்க?

உணவு உலகம் said...

// விக்கியுலகம் said...
ஒரு நாளைக்கு 4 அல்லது 5 போஸ்ட் போட்டாலும் தம்பி நீ இப்பதான் டாட் காம் வாங்கி இருக்க...கொஞ்சம் டைம் ஆகும்...இன்னும் நீ வளரனும் ஹெஹெ!//
விரைவில் முதலிடம் வர வாழ்த்துக்கள்.

ADAM said...

SUPER