Saturday, March 17, 2012

ஈழத்தமிழனின் ஈடுகட்ட முடியாத இழப்புக்கு நீதி கேட்டு வெடித்திருக்கும் ட்விட்டர் புரட்சி

 ஈழமக்களுக்கு இழைக்கப்பட கொடுமைகள் உலகம் முழுக்க கவனத்தை ஈர்க்க வேண்டும், அனைவருக்கும் அந்த கொடுமைகள் பற்றி அறியச்செய்ய வேண்டும் என்ற உந்துதலில் ட்விட்டரில் புரட்சி கோஷங்கள் எழுப்பப்படது.. என் அளவில் நான் எழுதியவை..

http://www.eelamview.com/wp-content/uploads/2011/09/prabhakaran-mgr.jpg


1.ஆங்கிலேயன் இந்தியாவை கொள்ளை அடித்தான், ஒரே ஒரு இத்தாலிப்பெண் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே பலி ஆக்கினாள்"


----------------------------

2. தமிழனை காட்டி கொடுக்கத்தயங்காதவன் கருணா,தமிழன் வெட்டி எரியப்பட்டபோதும் வேடிக்கை பார்த்தவர் கலைஞர் "


------------------------------

 3. திமுக கொடியின் நிறத்துக்கான விளக்கம்- ஈழத்தமிழனின் ரத்தமும்,அவன் எதிர்காலமுமா?-சிவப்பு,கறுப்பு


------------------------------

4. தமிழக அரசியல் தலைவர்கள் அனைவர் சொத்துக்களையும் பறிமுதல் செய்து, எல்லாரையும் ஒரு வருடம் இலங்கையில் தங்கவைத்தால் என்ன?"


----------------------------------------

5. சாப்பாட்டில் கை வைக்கும்போது இலங்கையில் ஓடிய ரத்த ஆறுதான் நினைவு வருகிறது, கை கழுவினால் அவர்கள் கண்ணீர் நினைவு 

-------------------------------

 6. தமிழ் நாட்டை பீடித்த ரோகி, தமிழ் இனத்தை ஆண்ட துரோகி, அவர் கலைஞரா? கொலைஞரா.?


-------------------------------------

7. தமிழ் இனத்தலைவர் என்றழைக்கப்பட்டவர் தமிழ் இனத்தை அழிக்கத்துணை போன தலைவர் என்று வரலாறு அழைக்கட்டும் 

--------------------------

 8. இந்தியா நான்கு எழுத்து,தமிழன் நான்கு எழுத்து,இலங்கை நான்கு எழுத்து,கலைஞர் நான்கு எழுத்து துரோகம் நான்கு எழுத்து


-----------------------------------

9. உயிரைக்கொடுத்து இன மானம் காக்க பலர்.. மானத்தைக்கெடுத்து,அடுத்துக்கெடுத்து பதவியைத்தக்கவைக்க சிலர் 

------------------------------------

 10. இந்தியப்பெருங்கடல் நீர் மட்டம் உயர்ந்தால் அது ஈழத்தமிழர்களின் நிலை கண்ட நம் கண்ணீராய் இருக்கும்


-----------------------------------

http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg

11. அரசியல் லாபத்துக்காக ஒரு இனத்தையே பலியிடத்துணிந்த இரு குடும்பங்களும் மன உறுத்தல்களுடனே எஞ்சிவாழ்நாளை கழிக்கட்டும் 


-----------------------------------------

12. கடவுள் அரக்கனை கொன்ற நிகழ்வு சூரசம்ஹாரம், ஒரு அரக்கன் பல வீரர்களை சூழ்ச்சி செய்து தின்ற நிகழ்வு வீர சம்ஹாரம் 

------------------------------

13. இலங்கையில் ராகுலையும், கூடங்குளத்தில் பிரியங்காவையும் நிரந்தரக்குடி வைத்து விட வேண்டும் 


-----------------------------------

14. அகதிகளின் கதி அதோ கதி, அனைத்தும் அரசியல் சதி, தமிழனின் நெற்றியில் பலவந்தமாக எழுதப்பட்ட விதி 

------------------------------

15. கையில் இருப்பதை எல்லாம் கொடுத்தான் கர்ணன், கைக்கு அகப்பட்டவர்களை எல்லாம் கொன்றான் கர்ண கொடூரன் ராஜபக்சே 

--------------------------------

16. தமிழ்நாட்டைவிட்டு கலைஞர் , இந்தியாவை விட்டு சோனியா காந்தி 2 குடும்பமும் தள்ளி வைக்கப்பட்டால் நாடு சுபிட்சம் பெறும் 


---------------------------------

17. ஒரு ஊர் வாழ ஒரு குடும்பத்தை இழக்கலாம், ஆனால் ஒரு குடும்பம் வாழ ஒரு இனத்தையே அழிக்க வழி செய்தார் கலைஞர் 

----------------------------

18. இத்தாலி தன் ஒரு தாலி இழந்ததற்கு ஒரு லட்சம் தாலிகளை பலி கொடுத்தது, பழி தீர்த்தது# 

-------------------------------

19. ஒரு இந்தியன் இத்தாலிக்கு வாழ்வு கொடுத்தான், பல தமிழர்களின் வாழ்வு கெடுத்தான்


----------------------------------

20. காந்தியின் பெயரை தன் பெயருடன் கொண்டிருந்தும் அவர் குணங்கள் எதுவுமே வரப்பெறவில்லை எனில் எதற்கு அந்த பதவி? 


--------------------------------------

http://farm4.static.flickr.com/3564/3577976220_6551920c3f_o.jpg

21. இரண்டு தனி நபர்கள் நினைத்திருந்தால் ஒரு இனமே அழிக்கப்படாமல் இருந்திருக்கும் 


-----------------------------------

22. நம்மிடம் கொடுப்பதற்கு, காப்பதற்கு மனம் இல்லை, அவர்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை 

---------------------------------

23. எட்டு மணி நேர மின்வெட்டையே தாங்கிக்கொள்ள முடியாதவன் தமிழகத்தமிழன், 24 மணிநேரமும் மனித வெட்டை சந்திப்பவன் ஈழத்தமிழன்#KILLINGFIELDS

-------------------------------------------

24 இல்பொருள் உவமை அணிக்கு மிகக்கொடூரமான உதா”ரணம்” கருணையே இல்லாத துரோகி கருணா#Killingfields


----------------------------------

25. ஈழத்தமிழனின் வீட்டில் அரிசி உலை கொதிப்பதில்லை,எந்த சிங்களனும் அவர்களை மதிப்பதில்லை#KillingFields


---------------------------------

26. அமைதிக்கான நோபல் பரிசை தருவதற்கு முன் அட்டூழியத்துக்கான அகோர தண்டனை ராஜபக்சேவுக்கு அளிக்கப்பட வேண்டும்#KillingFields


------------------------

27. இறந்தான் இறந்தான் ஈழத்தமிழன் இறந்தான், மறந்தான் மறந்தான் தமிழகத்தலைவன் தாய் நாட்டை நேசிக்க, காப்பாற்ற  மறந்தான்#KillingFields


----------------------------------

28. ஈழத்தில் பிறந்து ஈழத்தில் அழிந்த பிரம்மபுத்திரர்கள்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாய் பிரம்மபுத்ரா நதியே வற்றிவிட்டதாம்#KillingFields

----------------------------------

29. வெண்ணைகள் எல்லாம் அன்னைகள் ஆகின்றனர்,தலை எடுக்க விடாமல் துரத்தப்பட வேண்டியவர்கள்  தலைவராக இருக்கிறார்கள்#KillingFields

--------------------------------

30. உயிருடன் ஈழத்தமிழனை எரித்த ராஜபக்சேவுக்கு விருந்து வை, கண்டனம் தெரிவிக்க உருவ பொம்மை எரித்தால் சிறையில் வை #KillingFields

----------------------------------

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/BloG%20fotos/4.jpg

31. ஈழத்தமிழனுக்காக போராடிய புலிகளை அரசியல் லாபத்துக்காக வஞ்சித்தன தமிழக நரிகள் #killingfields

------------------------------

32. கடல் கடந்து ஈழத்தில் தமிழன் மண்டையைப்போட்டுக்கொண்டிருக்கிறான்.இங்கே நாம் கடலை போட்டுக்கிட்டு இருக்கோம் :(


---------------------------------------

 33. ஓ! தமிழர்களே! நீங்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன், எனக்கு என் குடும்பம் தான் பெருசு

----------------------------------

34. ஈழத்தில் சாதம் வடிக்க வழி இல்லாமல் தமிழன், இங்கே சச்சின் சதம் அடித்தால் என்ன? அடிக்கா விட்டால் என்ன?  

---------------------------

35. எந்த குடுகுடுப்பைக்காரராலும் நம் நாட்டுக்கு நல்ல காலம் எப்போ பிறக்கும்னு சொல்லவே முடியலை :(  

------------------------------

36. தமிழக அரசியல் தலைவர்களில் முதல்வராக இருந்தவர்களில் எம் ஜி ஆர் மட்டுமே ஈழத்தமிழனுக்கு ஏதாவது செய்ய நினைத்தவர் ””

------------------------- 

 நண்பர் சிவா அனுப்பிய மெயிலில் இருந்து-

( #killingfields ).. @இந்தியா சும்மா சொல்லக் கூடாது..ஆனாலும் நீங்க ரொம்ம்ம்ப அறிவாளிங்கடா... நாளைக்கே உலகப்போர் என்று வந்தாலும் கூட இலங்கைகாரன் சீனாப்பக்கம்தான் நிற்பான்னு நல்லாத்தெரிஞ்சிருந்தும்.. ஆயுத உதவி,ரேடார் உள்ளிட்ட தொழில் நுட்ப உதவி, ஆயிரக்கணக்கான கோடிகள் பண உதவின்னு எத்தனையோ உதவிகள் செஞ்சதும் இல்லாம..இப்ப 7.21 கோடி பேர் கெஞ்சலையும் ஹேருக்குச் சமானமா நெனச்சு தூக்கிக் கெடாசிட்டு.. "இலங்கைக்கு எதிரா எந்த ஒரு நிலைப்பாட்டையும் எப்போதும் இந்தியா எடுக்காது!"னு சொன்னீங்க பாத்தீங்களா.. அங்க நிரூப்பிச்சுட்டீங்கடா உண்மையிலேயே உங்க நிலைப்பாடு என்னன்னு.!


 போகட்டும்... இன்னுமும் உங்க மேல துளியூண்டு நம்பிக்கை வச்சிருக்கோம்..இந்த கொடூரத்தை நிகழ்த்தி முடிச்சு 3 வருசமாச்சு..! நீங்க செய்த பச்சைத்துரோகத்துக்கு பரிகாரமா தயவுசெய்து இந்த ஒரு காரியமாச்சும் செய்ங்க..ஜெனீவால நடைபெறப்போகும் வாக்கெடுப்புல இலங்கைக்கு எதிரா வாக்களியுங்க..

'இல்லை..அப்டி செஞ்சா என் முகமூடி கிழிஞ்சிடும்'னு இப்பவும் துரோகத்த செஞ்சீங்கன்னா..இனி இந்தியாவும் தமிழ்நாடும் உணர்வுரீதியா மட்டுமில்ல..அனைத்துரீதியுலும் வேற வேற ஆகிடும்.. இதற்கு மேல நாங்க இந்தியன்னு சொல்லிக்கறது நாங்க குடிச்ச தமிழ்ப்பாலுக்கு கேவலம்.


 @தமிழன் ..இனியாச்சும் நிஜமாவே இனப்பற்று, மொழிப்பற்றோட இருந்துக்கோங்க...இல்லாட்டி இவனுங்க தமிழ்நாட்டையும் அழிச்சு..அடியோட பொதச்சு.. சோனியா குடும்பமும், ராஜபக்ஷே குடுபமும் தமிழ்நாட்டில தன் சந்ததிகள உருவாக்கி குதூகலமா வாழ்வாய்ங்க!! :-(((( டிஸ்கி -1   ட்விட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள்  ”” இந்த டேக்கில் வரும் அனைவர் ட்வீட்ஸையும் ஆர் டி செய்யவும்.. அது உலக அரங்கில் கவனம் ஈர்க்கும்.. RT பட்டனை க்ளிக் செய்ய வேண்டாம், தனி ட்வீட்டாய் ஆர் டி செய்யவும்

டிஸ்கி 2 - சமூக வலைத்தளங்களால் என்ன சாதித்து விட முடியும்? என்ற அலட்சியமோ, அங்கலாய்ப்போ வேண்டாம்.. ஒபாமாவின் ஆட்சிக்கு ட்விட்டர் மற்றும் சமூக வலைதள புரட்சியே முக்கிய காரணம்.. ஒரு சிறு தீ பற்றிக்கொண்டால் புரட்சித்தீ வெடித்தே தீரும்..


http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg

6 comments:

PRAKASH said...

சாப்பாட்டில்
கை வைக்கும்போது இலங்கையில்
ஓடிய ரத்த ஆறுதான்
நினைவு வருகிறது, கை கழுவினால்
அவர்கள் கண்ணீர் நினைவு
#killingfields ! ரொம்ப சரியா சொன்னிங்க..

ராஜி said...

ஈழமக்களுக்கு இழைக்கப்பட கொடுமைகள் உலகம் முழுக்க கவனத்தை ஈர்க்க வேண்டும், அனைவருக்கும் அந்த கொடுமைகள் பற்றி அறியச்செய்ய வேண்டும் என்ற உந்துதலில் ட்விட்டரில் புரட்சி கோஷங்கள் எழுப்பப்படது.
>>>
எப்படியோ, யாராலோ பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நல்லது நடந்தால் சரி

Yoga.S. said...

நன்றி சி.பி சார்!அனைவரையும் சென்றடையும்!நான் ருவிட்டரில் இணைந்திருக்கவில்லை,மன்னிக்கவும்.

விச்சு said...

நம்மளால முடிஞ்சத நிச்சயம் செய்வோம். இனத்துரோகியாக இருக்க வேண்டாம்.

கந்தப்பு said...

உங்களின் ஈழத்தமிழர்கள் மீதான பற்றுக்கு மிக்க நன்றி

சார்வாகன் said...

இதய்த்தில் இருந்த வந்த ட்வீட்டுகள் சகோ!,

தமிழர்களுக்கு ஏதேனும் செய்ய நினக்கும் அனைவருமே ட்வீட்டுவோம்!

நன்றி