Thursday, March 29, 2012

போடா போடி ??- தனுஷ், 9 தாரா ?!! - வேட்டை மன்னன் சிம்பு பேட்டி காமெடி கும்மி


http://www.innisaitamil.com/images/cd_images/1323747983_vettai%20mannan.jpg


அமெரிக்கக் குளுமை இன்னமும் படிந்திருக்கிறது சிம்பு முகத்தில்!  'வேட்டை மன்னன்படத்துக்காக பின்னி மில்லில் பின்னி எடுத்துக்கொண்டு இருந்தவரிடம் காதல், லவ் ஆன்தம், தனுஷ், கொலவெறி, ஸ்ருதி, ஸ்டார் கிரிக்கெட், கல்யாணம்... இன்னும் நிறையப் பேசியதில் இருந்து...  


சி.பி -பின்னி மில்லுல பின்னிட்டு இருந்தாரா? எதை? ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியோட ஜடையையா?


1.  '' 'லவ் ஆன்தம்ஆல்பம் ரெடியா?''

சி.பி - லவ் பண்றவங்க எல்லாருமே தாடி வெச்சுட்டு தம் அடிக்கனும்கறதை சிம்பாலிக்கா சொல்றதுதான் லவ் ஆன்”தம்”ம்மா?''அது ரெண்டு மாச உழைப்பு. 'ஒரு பாட்டோட நிறுத்த வேணாம். முழு ஆல்பமாவே பண்ணிரலாம்னு முடிவு பண்ணி இறங்கிட்டேன். புரொமோஷனுக்காக வெளியான ரெண்டு நிமிஷப் பாட்டுக்கே பாராட்டு அள்ளுச்சு. முழு ஆல்பத்தைச் சிலருக்கு மட்டும் போட்டுக் காமிச்சேன். 'செம சூப்பர்னு மனம் திறந்து பாராட்டினாங்க. இன்னும் ரெண்டு மாசத்துல ரிலீஸ். ரொம்பப் படபடப்பா, ஆர்வமா இருக்கு. எல்லாம் சரியா அமைஞ்சா, இந்த ஆல்பம் எனக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கித் தரும்!''


சி.பி - என்னது? சிம்பு அண்ணனுக்கு நல்ல பேரா? குறளரசன் திகைப்பு.. டி ஆர் நகைப்பு.. ஹி ஹி 


http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/10/Hansika_gangster_Vettai-Mannan.jpg
2. ''நீங்க இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க. ஆனா, 'சிம்பு ஷூட்டிங் வராம அமெரிக்கா போய் உட்காந்துட்டாரு. தயாரிப்பாளர்கள் கொதிச்சுப்போய் இருக்காங்கனுல இங்கே செய்தி பரவிக்கிடக்கு?''  

''நான் எது பண்ணாலும் தப்பாப் பேசுறவங்க கௌப்பிவிடுறதுதான் இதுவும். 'வேட்டை மன்னன்தயாரிப்பாளர்கிட்ட 'லவ் ஆல்பம்வேலைகளுக்காக அமெரிக்கா போறேன்னு முன்னாடியே சொல்லிட்டுத்தான் கால்ஷீட் தேதி கொடுத்தேன்

சி.பி - அதானே, அமெரிக்கா எப்போதான் சுத்தி பார்க்கறது?


'போடா போடிபடத்தின் வெளிநாட்டு லொகேஷன் களின் படப்பிடிப்புக்கு உடனே அனுமதி கிடைக்கலை. சரி... சென்னைக்குக் கிளம்பு வோம்னு பார்த்தா, இங்கே ஸ்டிரைக். 'கிடைச்ச நேரத்தை ஆல்பம் வேலைகளுக் குப் பயன்படுத்திக்கலாம்னு இறங்கிட் டேன். எனக்குச் சம்பளம் கொடுக்கும் எந்தத் தயாரிப்பாளரும் என்னைப் பத்தி எந்தப் புகாரும் பண்ணலை. மத்தவங்களைப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்? இன்னும் எவ்வளவுதான் பேசுறாங்கனு பார்க்கலாம்!''

சி.பி - நல்ல வேளை.. நீங்க கெட்டவர்ங்கறதுக்காகத்தான் உங்க பட டைட்டிலே கெட்டவன்னு வெச்சாங்களா?ன்னு யாரும் கேட்கலை..


http://static.sify.com/cms/image//lf0tKCchiaa.jpg


3. ''என்னதான் சமாதானம் சொன்னாலும் 'போடா போடிஆரம்பிச்சு ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சே... இது அதீத தாமதம்தானே?''  '' 'போடா போடிரொம்ப ஸ்டைலான படம். சென்னையில் எடுக்கும் படங்களுக்கு அழகு சேர்க்க வெளிநாட்டில் டூயட் வைப்போம். ஆனா, இந்தப் படம் முழுக்கவே வெளிநாட்டில் நடக்கும் கதை. 'ஹம் ஆஃப் கே ஹைன் கௌன்மாதிரி கலர்ஃபுல்லான படம்.

சி.பி -சுத்தம்.. அப்போ அந்தப்படத்தோட அப்பட்டமான தழுவலாத்தான் இருக்கும்.. கேட்டா ஜ்ஸ்ட் இன்ஸ்பிரேஷன்...பாங்க


 அப்போ எவ்வளவு வேலை இழுக்கும்? படப்பிடிப்புக்கு அனுமதி வாங்குறதே பெரிய வேலையா இருக்கு. வெய்ட் பண்ணுங்க... 'விண்ணைத் தாண்டி வருவாயாபடத்தில் என்னைப் பிடிச்ச மாதிரி, இந்தப் படத்திலும் எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்!''

சி.பி - விண்ணைத்தாண்டி வருவாயா? ஹிந்தி வர்ஷன்ல ஊத்திக்கிச்சாம்.. இதான் நல்ல சான்ஸ்.. விடாதீங்க.. ஹிந்தி ரீமேக்ல நான் நடிச்சிருந்தா சூப்பர் ஹிட் ஆகி இருக்கும்னு அறிக்கை விடுங்க.. இப்போ அது தான் ஃபேஷன்..  

http://2.bp.blogspot.com/_T1vzYiWcy7U/SMs-ocq_LAI/AAAAAAAAXjA/MdpYpjWIq0o/s1600/Podaa-Podi-Movie-stills-simbu%2B(9).jpg


4. ''முன்னாடி ஸ்டார் கிரிக்கெட்னா முதல் ஆளா நிப்பீங்க... இந்த சீஸன்ல ஆளைப் பார்க்க முடியலையே?''  


''இப்போ ஜெயிச்ச செட்ல பலரை டீமுக்குள் கொண்டுவந்ததே நான்தான். டீம் வொர்க்தான் கிரிக்கெட்டின் அழகு. ஆனா, அதைப் புரிஞ்சுக்காம சிலர் என்னை டாமினேட் பண்ணப் பார்த்தாங்க. எனக்கு எதிரா சில வேலைகள் பார்த்தாங்க. முக்கியமான முடிவுகள்ல வேணும்னே என்னைப் புறக்கணிச்சாங்க. அதான் நான் ஒதுங்கிட்டேன். ஆனா, அடுத்த முறை நிச்சயம் டீம்ல இருப்பேன். கிரிக்கெட்டையும் என் னையும் பிரிக்க முடியா துங்க!''


சி.பி - கிரிக்கெட் என்ன நயன் தாராவா?


5. ''இவ்வளவு நாள் லவ் பண்ணாம இருக்கிறது கஷ்டமா இருக்குமே?''


சி.பி - வாரத்துக்கு வாரம் வித்தியாசம் அதுதான் சிம்பு ஹி ஹி ஆ:ளை அடிக்கடி மாத்து... நம்பி வர்ற ஃபிகரை ஏமாத்து.. இதுதான் அண்ணன் பாலிசி

''இல்லைங்க... அமெரிக்காவுல என் கஸின் வீட்ல ஒரு குட்டிப் பையன் இருக்கான். அவனுக்குச் சாதம் ஊட்டுறதுல ஆரம்பிச்சு நாப்கின் மாத்துறது வரை நானே எல்லாம் பார்த்துக்கிட்டேன். அவன்கூடவே விளையாடிட்டு இருந்தப்ப, நானே என்னை ஒரு சின்னப் பையன் மாதிரி ஃபீல் பண்ணேன். அப்போதான் சட்டுனு அப்பா ஆகணும்... மகனைப் பார்த்துக்கணும்னு ஆசை வந்துச்சு.


உண்மையைச் சொன்னா, கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு நம்பிக்கையும் இல்லை; ஆசையும் இல்லை. கல்யாண வாழ்க்கை மேல சின்ன பயம்கூட இருக்கு. ஆனா, 'அப்பா ஆசைக்காகத்தான் கல்யா ணம் பண்ணிக்கலாம்னு தோணுது. அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். காதல் கல்யாணம்தான் ஆசை. அது ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். ஆனா, ஒரு வருஷத்துக்குள் காதல் வருமான்னு தெரியலை. பார்க்கலாம்!''

http://www.kollytalk.com/wp-content/uploads/2012/03/Varalaxmi-Sarathkumar-Celebrates-Womans-Day-3.jpg
போடா போடி படத்தில் வரலட்சுமி சரத்குமார் ( சரத்குமாரின் மகள்)
6. ''வீட்லயும் பொண்ணு பார்ப்பாங்களே... உங்க கண்டிஷன்கள் என்ன?''


சி.பி - என்ன புது கண்டிஷன்? எல்லாரும் சொல்றதுதான்.. பொண்ணு குடும்பப்பாங்கா இருக்கனும்.. அவங்க வீடே பேங்க்கா இருக்கனும்.. வீட்டுக்கு புருஷன் மிட் நைட்ல லேட்டா வந்தாலும் கண்டுக்கக்கூடாது.. 


''பொண்ணு அழகா இருக்கணும். நல்ல சிவப்பா இருக்கணும். ஏன்னா, எனக்கு அழகான குழந்தை வேணும். நான் சரியாப் படிக்காதவன். அதனால, பொண்ணு நல்லாப் படிச்சிருக்கணும். சினிமாபத்தி கொஞ்சம் தெரிஞ்சிருக்கணும். என்னைப் பார்த்து பயப்படக் கூடாது. தைரியமா, தன்னம்பிக்கையோட இருக்கணும். சுருக்கமா சொன்னா, ஒய்ஃப் வந்தா... என் லைஃபே மாறணும். அப்படி ஒரு தேவதையா இருக் கணும்!''
Andrea is not Simbus heroine

7. தனுஷ் மேல் கொலவெறியா?


''தனுஷோட 'கொலவெறிக்குப் போட்டியாதான் 'லவ் ஆன்தம்ஆல்பம் பண்றீங்களா?''

''ஒரு பாட்டு சந்துபொந்தெல்லாம் ஹிட் ஆகுற துக்கு, 'நாக்க முக்க’, ' போடுனு ஏற்கெனவேநிறைய உதாரணங்கள் இருக்கு. 'லூஸுப் பெண்ணேனு காதல் தோல்வி ஃபீலிங் பாட்டு டிரெண்டை ஆரம்பிச்சு வெச்சதே நான்தான். இப்போ நேரம் கிடைச்சதால், 'லவ் ஆன்தம்பண்றேன். இதை தனுஷ§க்குப் போட்டினு சொன்னா, அது தப்பு. அப்படி எல்லாம் சீப்பா நடந்துக்கிற ஆள் நான் இல்லை. சொல்லப்போனா, என் ஆல்பம் பேரைப் பார்த்து காப்பி அடிக்கிறவங்க தான் இங்கே இருக்காங்க!''


சி.பி - அண்ணன் எடுத்த படம் எல்லாம் காப்பி.. இதுல அண்ணனையும் காப்பியா? அவ்வ்வ்  .. லூசுப்பெண்ணே.. பாட்டு செம ஹிட் தான் .. ஆனா பிக்சரைசேஷன் மகா மட்டம்.8. இப்போ தனுஷ்தான் மன்மதனா?
''வழக்கமா ஹீரோயினுடன் காதல்னு உங்க பேர்தான் அதிகமா கிசுகிசுக்கப்படும். இப்போ அந்த இடத்துல தனுஷ் இருக்காரோ?''  


''அவர் லவ் மேட்டர் பத்தி நான் எதுவும் சொல்ல முடியாது.சி.பி - என்னாது? அவரோட லவ்வர் ஒரு மேட்டரா? என்னா பேச்சு இது ? ராஸ்கல்? ஏதோ சித்தார்த்தை 2 வருஷம் லவ் பண்ணாங்க.. அப்புறம் தனுஷை 1 வருஷம்.. இப்போ மறுபடி சமாதானம் ஆகி சித்தார்த்தை லவ்விங்.. 3 படம் ஹிட் ஆனா மறுபடி தனுஷ்க்கு ஒரு சான்ஸ் தர்றாராம் ஹி ஹி மற்றபடி அம்மணி நெம்ப நெம்ப நல்ல டைப்ப்ங்கோவ்

 
 என்னைப் பத்தி எதுவும் தப்பா நியூஸ் வர்றதில்லைங்கிற வரை எனக்குச் சந்தோஷம். முன்னாடி விகடன்லயே என்னைத்தான் போட்டு பரேடு எடுப்பீங்க. இப்போ 'வலைபாயுதேகமென்ட்டில் மட்டும்தான் நாம அடிபடுறோம். 'என்னடா பையன் எந்தத் தப்பும் பண்ணாம சும்மா இருக்கானேனு வீட்ல பயந்துட்டாங்கபோல. பரபரனு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நானும் சரினு சொல்லிட்டேன். எவ்வளவு நாள்தான் தனியாவே சுத்திட்டு இருக்கறது?''


சி.பி - விகடன் தாத்தா சைக்கிள் கேப்ல வலை பாயுதே பகுதியை விளம்பரம் பண்ணி எடுத்து அள்ளி விடறாங்க..அப்படி எல்லாம் அவர் சொல்லி இருக்கவே மாட்டார்.. இதுதான் இடைச்செருகல் ஹி ஹி 


http://www.tamilkey.com/wp-content/uploads/2011/07/nayanthara-simbu-0424-550.jpg


9. ''அப்போ உங்களைத்தான் எல்லாரும் திட்டிட்டு இருந்தாங்க. இப்போ நயன்தாரா பிரபுதேவாகிட்ட இருந்தும் விலகிட்டாங்களே?''''யார் பண்ண தப்புக்கோ... நாம திட்டு வாங்குறது நம்ம ராசிங்க. நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு!''

சி.பி - மைன்ட் வாய்ஸ்ல எங்கே இருந்தாலும், யார் கூட இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்னு சொல்ற மாதிரி கேட்குது ஹி ஹி10. ''நயன்தாராகூட சேர்ந்து நடிப்பீங்களா?''


''நானா தேடிப் போக மாட்டேன். கதைக்குத் தேவை இருந்தால், இயக்குநர் 'அவங்கதான் வேணும்னு சொன்னா, நான் நடிக்கச் சம்மதிப்பேன். நடிப்பது என் தொழில். அதில் பெர்சனல் விஷயங்களைக் கொண்டுவரக் கூடாது!''


சி.பி - ஆர்யா பற்றி எதுவுமே கேட்கலையே? என்ன நிருபர் நீங்க? குமுதம் பாருங்க.. இந்த வாரம்.. ஆர்யா பற்றி அண்ணன் கிட்டே கேட்டு பொளந்து கட்டி இருக்காங்க..  ( 9 தாரா யா யா யா யா யாயா-னு 6 டை, ஆர்யா ( 6 யா) பச்சை குத்தி இருக்காராம் ஹி ஹி 6 யா + 9 தாரா = 69 ஜென்மக்காதல்கள் ஹி ஹி 

http://www.extramirchi.com/gallery/albums/south/actors/Simbu_nayanthara/Simbu_nayanthara__Hogenakkal_fast2.jpg


அண்ணே.. பேப்பர் தலைகீழா இருக்கு ஹி ஹி

7 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

மதிய வணக்கம்

தமிழ்சேட்டுபையன் said...

[அங்கே பேப்பர் தலைகீழா இருக்கு! இங்க பேப்பர்ல உள்ளது அப்படியே இருக்கு]

Unknown said...

அண்ணே படம் சூப்பர்.அவரு ஏன் பேப்பர தழைகீழா வச்சி படிக்காரு

ராஜி said...

பாவம்ங்க சிம்பு அவரையாச்சும் விட்டு வைங்க சிபி சார்

ஹாலிவுட்ரசிகன் said...

செமயா கலாய்ச்சிருக்கீங்க. சிம்பு வேற கோணத்தில் நியுஸை டீல் பண்றாரு போல.

Unknown said...

சிம்புவுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க கடவ!! ( கொஞ்சம் வம்பு கொறையுமில்ல..)

Unknown said...

69 ஜென்மம்??