Friday, March 09, 2012

பெண்களே !பெண்களே ! நீங்கள் எங்களை கடலிலே தூக்கிப்போட்டாலும்

1.எனக்கு வரப்போகும் கணவர் அழகா,உயரமா,தொழில் அதிபரா இருக்கனும் - நமீதா # அவரையாவது மாமான்னு கூப்பிடுங்க, மச்சான்னு கூப்பிட்டு கடுப்பு ஆகிடபோறார்

-----------------------------

2. டேமேஜரா இருந்தும்கூட உங்க பொண்ணு அடக்கமா குனிஞ்ச தலை நிமிராம நடக்குதே?

சவுமியின் டாடி - நல்லா பாருங்க, செல் ஃபோன்ல .ட்விட்டர்ல ட்வீட்டிங்க்

--------------------------

3. எந்த லேடி ஸ்டாஃபையும் தலை நிமிர்ந்தே பார்க்காத கண்ணியமானவன் அப்டினு எங்க ஆஃபீஸ்ல இன்னைக்கு எனக்கு ஒரு அவார்டு கொடுத்தாங்க#அடிச்சு விடு


--------------------------

 4. இந்தக்காலத்துல மக்கள் சோகத்தை, பிரிவை, வலியை மட்டும் பகிர்ந்துக்கறாங்க ,அவங்க சந்தோஷத்தை பற்றி மூச்!


----------------------------------

 5. பெண்களே !பெண்களே ! நீங்கள் எங்களை கடலிலே தூக்கிப்போட்டாலும் நாங்கள் உங்களுடன் கடலை போட்டுக்கொண்டுதான் இருப்போம் ஹி ஹி


-------------------------------

6. அழகு+அறிவு+புத்திசாலித்தனம் இதெல்லாமே தன் கிட்டே மட்டும் தான் இருக்குன்னு நினைச்சுக்கறது பெண்கள் படைப்பில் பிரம்மனின் தவறு


-----------------------------------

 7. இன்று பிரபல பெண்ட்வீட்டரிடம் பேசினேன்.டைம் லைனில் அவர் ஃபோன்நெம்பரை பகிர வேண்டாம் என்றார், எனவே அனைவருக்கும் DM இல் அனுப்பிட்டேன் ஹி ஹி


---------------------------

 8. குடும்ப நலன் கருதியும், குழந்தையின் எதிர்காலத்தை நினைவில் கொண்டும் பல தம்பதிகள் பல்லைக்கடித்துக்கொண்டு பிடிக்காத வாழ்வு வாழ்கிறார்கள்


----------------------------------

 9. இயற்கையின் விசித்திரம் என்னன்னா பல சமயங்களில் ஒரு மோசமான கணவனுக்கு நல்ல மனைவியும், நல்ல கணவனுக்கு மோசமான மனைவியும் அமைவதே! :((


--------------------------------

 10. அடிச்சுச் சொல்றேன் என் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் கூட தாவ மாட்டார்-விஜயகாந்த்! # ரொம்ப அடிக்காதீங்க, பை எலக்‌ஷன் வந்துடப்போகுது


----------------------------------

 11. சர்வதேச மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.இந்நன்னாளில் அனைத்து மகளிரும் ஆண்களுக்கு சம உரிமை கொடுத்து , அவர்களை மதிக்க முயற்சிக்கவும் ஹி ஹி  ( 8.3.2012)

-------------------------------------

12. பொண்ணுக்கு மூல நட்சத்திரம், மாமனார், மாமியார் இல்லாத ஜாதகம் இருந்தா சொல்லுங்க.


 1ம் பிரச்சனை இல்லை,மேரேஜை முடிங்க, மிச்சத்தை அவ முடிப்பா

----------------------------------

13. 6 நாட்களில் 520 கி.மீ.பிரசாரம்:விஜயகாந்த் திட்டம்# மாமோய், தொப்பை குறையும் ஓக்கே, மப்பை எப்போ எப்படி குறைப்பீங்க? - பிரேமலதா

-----------------------------

14. பிரதமரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: சோனியா..# இதுதான் சாக்கு, தி முக தலைவரை மாற்ற கட்சி ஒன்றும் சங்கரமடம் இல்லை - கலைஞர்

---------------------------

15. 60 வயதில் நான் இளைஞரணி செயலாளர்': ஸ்டாலின் புலம்பல் # 90 வயதிலும் நான் மானாட மயிலாட பார்க்கிறேன், புலம்பிட்டா இருக்கேன்?-கலைஞர்

-----------------------------------

16. சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை-சீமான்# அட்லீஸ்ட் விஜயலட்சுமிக்காவது ஆதரவு தாங்கண்ணே


---------------------------------------

17. பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும்: பிரதீபா பாட்டீல்..# வேணாம் மேடம் அதி “காரம்” அல்சருக்கு வழி வகுக்கும்,அதிக அதிகாரம் ஆணவத்துக்கு..
---------------------------------

18. ஃபீமேல்ஸ் எல்லாரும் அவங்க இஷ்டத்துக்கு இருப்பதே ஃபெமினிஸ்ட்


--------------------------------

19. நடிகைகளுக்கு தமிழன் ஏன் கோயில் கட்டறான்னா பெண்களை தெய்வமா வணங்க அவன் ட்ரையல் பார்க்கறான் # சமாளிஃபிகேஷன்

------------------------------

20. என்னை அடக்க நினைத்தால் அது நடக்காது:விஜயகாந்த் # அண்ணே!இந்த டயலாக் அம்மாவுக்கா? சம்சாரத்துக்கா?


--------------------------

10 comments:

கோவை நேரம் said...

மகளிர் தின ஜோக்ஸ் ஆ ...

மதுரை அழகு said...

தலைப்பே ஓவர் நையாண்டியே இருக்கே!

காங்கேயம் P.நந்தகுமார் said...

நாட்டு நடப்புகளை நையாண்டி தனமாக கூறுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே!

rajamelaiyur said...

t.m 2

rajamelaiyur said...

அருமையான .. ஜோக் அதிலும் 3 வது உண்மை தான் அப்படி நடக்க வாய்ப்பில்லை

rajamelaiyur said...

இன்றய பதிவில்

உங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்பொருள்கள்- இலவசமாக (FILE RECOVER SOFTWARES)

பவள சங்கரி said...

ha....haa.....

K.s.s.Rajh said...

//// நடிகைகளுக்கு தமிழன் ஏன் கோயில் கட்டறான்னா பெண்களை தெய்வமா வணங்க அவன் ட்ரையல் பார்க்கறான் # சமாளிஃபிகேஷன்////

ஹி.ஹி.ஹி.ஹி............

R. Jagannathan said...

1. நமீதாவுக்கு: பாத்துக்குங்க, கல்யாணத்துக்கு அப்புறம் அவுரு தொழில் ஆரம்பிச்சுடப்போறாரு!

3. அவார்டு வாங்கும்போதுதான் அவருக்கு ஆஃபீஸில் பெண் ஸ்டாஃபுங்க இருந்ததே தெரியுமாம்!

15. மானாட ... பார்க்கவே அவருக்கு மக்கள் ஓய்வு கொடுத்திருக்காங்களோ?

8. சீரியஸ், ரொம்ப சரி.

9. அதனாலதேன் டைவர்சு கேசுங்க சாஸ்தியாவுது.

- ஜெ.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வழக்கம் போல்