Wednesday, March 21, 2012

கூடன்குளம் - ஜெ நடத்திய நாடக காட்சிகள் - ஜூ வி கட்டுரை - ஒரு பார்வை''உலகில் நடக்கும் வெவ்வேறு விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை என்பது தானே கேயாஸ் தியரி?'' 

சி.பி - ஆமா.. பஸ் கட்டணம் ஏற்ற லேட் ஆச்சுன்னாலும் சரி.. கூடன்குளம் திறக்க லேட் பண்ணாலும் சரி.. இடைத்தேர்தல் இருக்குன்னு அர்த்தம். 

''ஒரு வழியாக கூடங்குளம் அணு மின் திட்டத்துக்குப் பச்சைக் கொடி காட்டி இருக்கிறது தமிழக அரசு. 'கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்’ என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார் ஜெயலலிதா. இந்த விவகாரத்தில் பெரிய அரசியல் சதுரங்கமே ஆடப்பட்டிருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்த சமயத்தில் கூடங்குளம் போராட்டம் வெடிக்க ஆரம்பித்து இருந்தது. தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கத் தொடங்கிய நேரத்தில், 'கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து அறிக்கை வந்தது. உண்ணாவிரதத்தைக் கைவிடச் சொல்லிய அந்த அறிக்கையைக் கண்டு, போராட்டக் குழுவினர் கொதித்தார்கள். எதிர்ப்பு கடுமையாக இருந்தால், 'கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை அதனைத் திறக்கக் கூடாது’ என்று அடுத்த நாளே ஜெயலலிதா அறிவித்தார்.


சி.பி - பல்டி அடிக்கறது அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலை ஆச்சே.. என்ன.. ஜெ ரொம்ப ரேரா தான் பல்டி அடிப்பாங்க...
 

 'கூடங்குளம் பாதுகாப்பானதுதான்’ என்று ஜெயலலிதா முதலில் வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி சிலவற்றை குறிப்பிட்டு இருந்தார். கிட்டத்தட்ட இப்போது அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு வெளியிட்ட ஜெயலலிதாவின் அறிக்கையில், அதனை அப்படியே வழிமொழிந்திருந்தார். மிகமிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது அறிக்கையை அவரே ஜெராக்ஸ் எடுத்து ஒப்புக்கொண்டு இருக் கிறார்!''

''கூடங்குளத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா உறுதியாகத்தான் இருந்தார். தீவிரவாதத் தடுப்பு மையம், பட்ஜெட், பெட்ரோல் விலை உயர்வு, ஈழத் தமிழர்கள் விவகாரம், தமிழக அரசுக்கு போதிய நிதி அளிக்கவில்லை என்று மத்திய அரசோடு பல விஷயங் களில் முரண்பட்டார். இவை அனைத்துக்கும் வெளிப்படையாகவே அறிக்கையும்விட்டார். ஆனால்,  கூடங்குளம் விவகாரத்தில் மட்டும் வாய் திறக்காமல் இருந்தார். 'கூடங்குளம் திட்டம் செயல்படுத்தத் தகுதி ஆனதுதான். ஆனால், அந்தப் பகுதி மக்கள் எதிர்க்கும்போது, அவர்களது பேச்சுக்கு செவிமடுக்கத்தானே வேண்டும்’ என்பது ஆரம்பத்தில் அவரது நிலைப்பாடாக இருந்தது.


 சி.பி - அதெல்லாம் சும்மா.. ஆரம்பத்துலயே அவங்க முடிவு எடுத்திருப்பாங்க.. ஆனா தேர்தல், இடைத்தேர்தல்க்காக  வெயிட்டிங்க்..இப்போ எல்லாம் முடிஞ்சது.. அதான் சுய ரூபம் காட்டறாங்க

  'தூத்துக்குடி ஏரியாவில் பலம் பொருந்திய மணல் மனிதர் ஒருவர் கூடங்குளம் அணு உலை வந்தால், தனது தொழில் பாதிக்கும் என்று கருதி காய்களை நகர்த்தி வருகிறார்’ என்று பெயர் குறிப்பிடாமல் தனது கட்சிப் பொதுக்குழுவில் சொன்னார் விஜயகாந்த்.


சி.பி - இதென்ன புதுக்கரடி?  கேப்டன் மப்புல இருக்கறப்ப சொன்னதா? திராணியோட சொன்னதா?


 தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான 'முரசொலி’யிலும் இதுபற்றி வெளிப்படையாகவே பெட்டிச் செய்தி வெளியானது. 'அந்த மணல் மனிதர் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவைப் பார்த்துக்கொண்டவர். அதனால்தான், கூடங்குளத்தை வராமல் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார்’ என்று எல்லாம் செய்திகளை றெக்கை கட்டின.''


சி.பி - அடப்பாவிகளா?வில்லனா இருந்தாக்கூட மறைமுகமா மக்களுக்கு அந்தாள் நல்லதுதான்யா  பண்ணி இருக்கான்.. ஏதோ கொஞ்ச நாள் தள்ளீப்போட்டிருக்கார்..
''இந்த அரசியல் விமர்சனங்கள் பற்றி ஜெயலலிதா கவலைப்பட்டதைவிட மின் வெட்டுதான் அவருக்கு தீராத தலைவலி ஆனது. 'வேறு வழி இல்லை! கூடங்குளம் திறக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும்’ என்று முடிவுக்கு வந்தார் ஜெயலலிதா. அதிலும் அரசியல் வித்தைகளை நடத்தியதுதான் ஆச்சரியம். கூடங்குளத்தின் பாதுகாப்பு பற்றி ஆராய மாநில அரசின் சார்பில் போடப்பட்ட வல்லுனர் குழு அறிக்கை கடந்த மாதம் 28-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அதன் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டார் ஜெயலலிதா.காரணம், சங்கரன் கோவில் இடைத்தேர்தல். கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று, ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக அரசு நியமித்த குழுவின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டித்தான் கூடங்குளத்தைத் திறக்க வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். அப்படி முடிவு எடுத்திருந்தால், அந்தக் குழு அறிக்கை கொடுத்த மறுநாளே அறிவித்திருக்கலாம். ஆனால், சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாள் இந்த முடிவை அவர் எடுத்ததற்கு அரசியல் பின்னணிதான் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது!''


''சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும் கூடங்குளம் திறக்கப்பட்டுவிடும்என்ற நிலை அனைவரும் எதிர்பார்த்ததுதான்


''சங்கரன்கோயில் வாக்குப்பதிவு முடியும் தருவாயில், 'நாளை அமைச்சரவை கூடும்’ என்கிற அறிவிப்பு வந்தது. அப்போதே, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. 'சங்கரன்கோவில் தேர்தலுக்கு முன்னதாக கூடங்குளத்தைத் திறந்தால் போராட்டக்காரர்களால் ஏதாவது கொந்தளிப்பு ஆகி... சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்து... அது தேர்தல் வெற்றியைப் பாதிக்கலாம்’ என்று நினைத்தாராம் முதல்வர். அதற்குத்தான் தாமதம் காட்டி உள்ளார்!''

 சி.பி - யார் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு காரியம் நடந்தா சரி - ஜெ


 கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்கிற அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடுவதற்கு மூன்று மணி நேரம் முன்பு டெல்லியில் நடந்த சம்பங்கள்தான் தமிழகத்தில் இப்படி அதிர்வலைகளை உண்டாக்கியதாம். டெல்லியிலும் தமிழகத் திலும் நடந்த சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கின்றனவாம். இங்கே அமைச்சரவைக் கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது 'இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக் கும்’ என்று நாடாளுமன்றத்தில் சொல்லிக்கொண்டு இருந்தார் பிரதமர் மன்மோகன் சிங். பிரதமரின் இந்த அறிவிப்பும் அமைச்சரவை முடிவும் வெவ் வேறாக இருந்தாலும் அதற்குள் அரசியல் பின்னணி இருக்கிறது. அதுதான் கேயாஸ் தியரி.’

''15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்ட கூடங்குளத்தை எப்படியும் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு ரொம்ப உறுதியாகவே இருந்தது. ஆனால், மாநில அரசிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை. அதோடு வேறு விவகாரங்களில் மத்திய அரசோடு முரண்டு பிடித்துக்கொண்டு இருந்தார் ஜெயலலிதா. இந்தப் பின்னணியில்தான் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்கிற குரல்கள் தமிழகத்தில் இருந்து எழுந்தன.


 ஜெயலலிதா இது தொடர்பாக இரண்டு கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதினார். ஆனால், சரியான ரியாக்ஷன் இல்லை. அதற்குப் பதிலாக, 'எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான தீர்மானத்தையும் ஆதரிப்பது இல்லை என்பது இந்தியாவின் பொதுவான நிலைப்பாடு’ என்று தீர்மானத்துக்கு எதிராகவே கருத்து சொல்லிவந்தது மத்திய அரசு. 'கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறோம். அதற்குப் பதிலாக நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று மத்திய அரசுக்கு செக் வைத்தாராம் ஜெயலலிதா. 'என்ன வேண்டும்?’ என்று கேட்டது மத்திய அரசு. நிதிஉதவி, மின்சாரம் உட்பட மத்திய அரசிடம்  கோரிக்கைகளின் பட்டியல் ஒன்றைக் கொடுத்தாராம் ஜெயலலிதா. அதில் ஒன்றுதான் ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது. அதைத்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றும் டெல்லிப் பறவைகள் சொல்கின்றன.'''' 'இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா. அதன் மீது எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்கவில்லை. இப்போது ஐ.நா. தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்ததற்கு அவசரம் காட்டியது கூடங்குளத்துக்காகத்தான். மத்திய மாநில அரசுகள் கணக்குப் போட்டு காய்களை நகர்த்தியதன் விளைவு.... கூடங்குளம் பிரச்னையும் தீர்ந்தது. ஐ.நா. தீர்மான விவகாரமும் ஓய்ந்தது. பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது என்கிற கணக்கு சரியாகி இருக்கிறது. இந்த 'மூவ்’களை கடைசி நேரம் கண்டு கோதாவில் திடீரென்று கருணாநிதியும் குதித்தார்.''


''அவர் ஏதோ உண்ணாவிரதம் என்று அறிவிப்பு வெளியிட்டாரே?''

''திங்கள் கிழமை அன்று காலையில் கருணாநிதி யிடம் பிரதமர் பேசினார். 'அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்’ என்று அப்போது சொன்னாராம் பிரதமர். இதை அறிந்துகொண்டுதான், உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று கருணாநிதி அறிவித்தார். பிரதமர் அறிவிப்பு டெல்லியில் இருந்து வந்ததும் கருணாநிதி உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார். 'அதாவது கருணாநிதி மிரட்டியதால்தான் மன்மோகன் இந்த முடிவு எடுத்தார்’ என்பதைக் காட்ட நடந்துள்ளன இந்தச் சம்பவங்கள்!''

 சி.பி - நாடகம் போடறதுல கலைஞர் கில்லாடி ஆசே..
''கூடங்குளம் போராட்டக்காரர்களை ஜெயலலிதாவே நேரடியாக அழைத்துப் பேசினாரே!''
''இரண்டு தரப்பையும் அழைத்துப் பேசினோம் என்பதைப் பதியத்தானே வேண்டும்!
கேபினெட் நடந்துகொண்டு இருந்தபோதே கூடங்குளம் பகுதிக்கு போலீஸார் மலையளவு குவிக்கப்பட்டுவிட்டார்கள்.
சங்கரன்கோவில் தேர்தல் பணிகளுக்காக சென்ற போலீஸார் அங்கு திருப்பிவிடப்பட்டார்கள். மாநில அரசு நினைத் தால்தான் கூடங்குளத்தை திறக்க முடியும் என்பதில் மத்திய அரசும் தெளிவாக இருந்தது. எனவே ஜெயலலிதாவையே அவர்கள் முழுமையாக நம்பி இருந்தார்கள். அவர்களது எண்ணத்துக்கு 19-ம் தேதிதான் வந்தார் ஜெயலலிதா!


இதனால் கூடங்குளம் பகுதியில் வன்முறை ஏற் படக்கூடும் என்பதால் முதல் நாளிலேயே, தென்மண்டல ஐ.ஜி-யான ராஜேஸ்தாஸ் தலைமையில் 4,000 போலீஸார் குவிக்கப்பட்ட னர். சங்கரன்கோவில் தேர்தல் பணிக்காக வந்திருந்த எட்டு மாவட்ட எஸ்.பி-க்கள் கூடங்குளம் பகுதிக்குத் திருப்பிவிடப்பட்டனர். நிலைமையைக் கண்காணிக்க கூடுதல் டி.ஜி.பி-யான ஜார்ஜ் வந்து சேர்ந்தார். வன்முறையைக் கட்டுப்படுத்த வஜ்ரா வாகனங்கள், கலவரத் தடுப்புப் படை என கூடங்குளம் அணு உலை முன்பாக பெரும் படையே குவிக்கப்பட்டது.

அணு உலைக்கு எதிரில் வாடகைக் கட்டடத்தில் அமர்ந்து அணு உலையைக் கண்காணித்து வந்த போராட்டக் குழு உறுப்பினர்களான வக்கீல் சிவசுப்பிரமணியன், ராஜலிங்கம் உள்ளிட்ட ஒன்பது பேரை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். தமிழக அரசின் தீர்மானம் பற்றி அறிந்த இடிந்தகரை மக்கள், ஆலய மணியை அடித்துக் கூட்டத்தை திரட்டினர். அதற்குள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்ததால், இடிந்தகரை பகுதியில் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.''

''போலீஸை வைத்து இதற்குப் பதில் சொல்வார்களா?''
''போராட்டக்காரர்களை 18-ம் தேதி இரவு நெல்லைக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாவட்ட ஆட்சியர் அழைத்தார். 'என்ன விஷயம்?’ எனக் கேட்டதற்கு, 'ஏற்கெனவே நீங்கள் முதல்வருக்கு கொடுத்திருந்த மனு பற்றி பேச வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார்.

'கூடங்குளத்தில் போலீஸாரைக் குவிப்பதையும் எங்களைத் திட்டமிட்டு அழைப்பதையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும். இதனால், நாங்கள் அங்கு செல்ல மறுத்து விட்டோம். 19-ம் தேதி காலையில் மீண்டும் எங்களை அழைத்த அவர், 'ராதாபுரம் வரையாவது வாருங்கள். அங்கு வைத்துப் பேசிக்கொள்ளலாம்’ எனக் கூப்பிட்டார். இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக எங்கள் மக்கள் சந்தேகப்பட்டார்கள்.


அதனால் எங்களைப் போக அவர்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் போயிருந்தால் எங்களைக் கைது செய்திருப்பார்கள்’ என்று போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள். கூடங்குளத்தை அமைதியாகத் திறக்கவிடுவார்களா என்பது இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடும்''

சி.பி - இந்த தலைமுறை மக்கள் மின்சாரம் பெற வேண்டும் என்பதற்காக கூடங்குளம் அணு உலை திறப்பது நம் எதிர் கால சந்ததிக்கு நாம் செய்யும் துரோகம்.. மக்கள் பெருமளவில் இதை எதிர்க்கக்கூடாது என்பதற்க்காக செயற்கையான 8 மணி நேர மின் வெட்டை ஜெ உருவாக்கினார் என்று சில ர் சொல்றாங்க.. நாளை கூடங்குளத்தில் ஏதாவது விபத்து நடந்து மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? மேலும் அங்கே பணீ புரிந்த 147 பேருக்கு புற்று நோய் என்று இந்தியா டு டே கட்டுரை வெளியிட்டு இருக்கு.. அதுக்கெல்லாம் என்ன பண்ணப்போறாங்க?

இப்போ லேட்டஸ்ட் நியூஸ் அந்த ஏரியா மக்களுக்கு தண்ணீர் சப்ளை, , மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் நிறுத்தமாம்/... அட தேவுடா.. ஏழை எளிய மக்களை அடக்குமுறை கொண்டு ஆள ஆங்கிலேயர் என்ன? நம்மாளுங்க என்ன? எல்லாம் ஒரே கேட்டகிரிங்க தான்..

11 comments:

ராஜி said...

படிச்சுட்டு வரேன்

R. Jagannathan said...

Please give the link to India Today article about 147 people suffering from Cancer in Kudankulam or at least inform us the issue date. This is the first time I am hearing this news.

(For info. I am aware of many people suffering from Cancer, who have never visited a place in the 100 mile radius from Kudankulam. Visit Cancer treatment hospitals where thousands are treated and most of them nothing to do with radiation from Nuclear plant.)

-R. J.

MANO நாஞ்சில் மனோ said...

இந்தியாவில் சர்வாதிகாரம் தலைதூக்கி டங்கு டங்குன்னு ஆடுது அண்ணே, கேக்க ஒரு நாதியும் இல்லை இங்கே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

நானும் சரியாகத்தான் கணிச்சென் சங்கரன்கோவில் திருவிழா ஆரம்பிச்சதும் அம்மா சும்மாவே இருக்கிறாரே என்று இப்போ நல்லாவே புரியுது ம்ஹும்...!

Anonymous said...

கூடங்குளத்தில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை உடனே நிறுத்தவேண்டும்...

கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்...

Hitler's Germany...Sadam's Iraq...Now Singh's India...

Shame on you Jaya...

நேர்கோடு said...

மற்ற இடங்களில் அடிவாங்கியது போதாது என்று தமில்நாட்டிலேவா?

Are we still in a democratic setup?

நம்பள்கி said...

ஆமா! ஈரோட்டில் ஆட்டோவே கிடைக்காதா?

Yoga.S. said...

அர(ரி)சியல்!

Thennavan said...

மின்சாரத்திற்காக கூடங்குளம் அணு வுலை வேண்டும் என்போர் தயவு செய்து சிந்திப்பீர்

scenecreator said...

சிபி .நீர் ஒரு தொட நடுங்கி.ஜெயலலிதா என்றுடன் கோபம் வர வைக்காத கிண்டலுடன் எழுதுவதும்.கலைஞர் ,மத்திய அரசு என்றால் வாய்க்கு வந்ததையும் .கேப்டன் என்றாலே குடி ஒன்றையும் எழுதுவது உங்கள் வழக்கம். எங்கே இன்னும் கடுமையாக உங்களால் அணு மின்சாரம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா.?

Nasar said...

இப் பதிவின் மொத்த சாரமே இதில் அடங்கியிருக்கிறது
// சி.பி - இந்த தலைமுறை மக்கள் மின்சாரம் பெற வேண்டும் என்பதற்காக கூடங்குளம் அணு உலை திறப்பது நம் எதிர் கால சந்ததிக்கு நாம் செய்யும் துரோகம்.. //
சபாஷ் சி.பி.அருமையான பகிர்வு .....
கூடங்குளம் அணு உலை திறப்பதில் எனக்கும் உடன்பாடுயில்லை ......
--