Monday, March 12, 2012

பத்திரமா பார்த்துக்குங்க - சினிமா விமர்சனம்

சில பல வருடங்களுக்கு முன்னால தல நடிச்ச காதல் மன்னன் படம் நினைவு இருக்கா? ஊர்ல 1008 பொண்ணுங்க வயசுக்கு வந்து ரெடியா இருந்தாலும் நம்மா ஆளுங்க ஆல்ரெடி நிச்சயம் ஆன பொண்ணையே குறி வெச்சு லவ் பண்ணுவாங்களே. அதே கதைதான்.. கொஞ்சம் ஆல்டர் பண்ணி இட்லியை உப்புமா ஆக்கி சமைச்சிருக்காங்க..


ரொம்ப நாளைக்குப்பிறகு கோடம்பாக்கத்துக்கு லட்சணமா, சுஹாசினி மணிரத்னம் விருப்பட்ட மாதிரி கலரா  ஹேண்ட்சம்மா ஒரு புதுமுக ஹீரோ வந்திருக்காரு.. இதை ஏன் ஸ்பெசிபிக்கா சொல்றேன்னா இந்த 10 வருஷமா புதுமுக ஹீரோன்னா தலை சீவாம, தாடியோட பார்த்து பார்த்து அலுத்துடுச்சு.. இவர் ஆள் டீசண்ட்டா இருக்கார்.. ஆனா அண்ணன் சிரிக்கும்போதுதான் ஸ்டாலின் மாதிரி உதடு ஒரு சைடுல லேசா இழுக்குது... மற்றபடி ஓக்கே.. ஆள் செம சுறு சுறுப்பு.. நல்ல எதிர்காலம் இருக்கு.. அண்ணன் பேரு சரண் குமார்

ஹீரோயின் கூட ஆள் லட்சணமா, கொழுக் மொழுக் கன்னத்தோட ஜைஜாண்டிக்காதான் இருக்காரு.. ( இந்த ஜைஜாண்டிக் என்பது அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்படாத  ஒரு ஆண் பால் வார்த்தை ஹி ஹி பாப்பா கிட்டே கொஞ்சம் பெண்மை , நளினம் மிஸ்சிங்க் )ஜிகிடி பேரு ஸ்மிதா ஸ்ரீ

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/07/Pathirama-Pathukkunga-3.jpg

சரி கதைக்கு வருவோம்.. வழக்கம் போல ஹீரோ ஹீரோயினை முத தாட்டி ( தாட்டின்னா தடவைனு அர்த்தம் ஹி ஹி )பார்க்கறப்ப மயங்காத குறையா வாயை பிளக்கறாரு.. பின்னாலயே நாய் மாதிரி சுத்தறாரு.. காணாததைக்கண்ட மாதிரி ஹீரோ ஹீரோயினையே அடிக்கடி உத்து பார்க்கறப்ப ஹீரோயினுக்கு புரியாமயா இருக்கும்?தன்னை கரெக்ட் பண்ணத்தான் அலையறான்னு? ஆனா பாப்பா அப்பாவி போல.. 

எனக்கு ஆல்ரெடி ஃபிக்ஸ் ஆகிடுச்சுன்னு இண்டர்வெல்க்கு 15 நிமிஷம் முன்னால பாப்பா சொல்லுது.. உடனே ஹீரோ நிச்சயிக்கப்பட்ட மாப்ளையை நம்ம இளைய தலைவலி விஜய் நடிச்ச ஷாஜகான்,யூத் படங்கள்ல வர்ற மாதிரி நம்ப வெச்சு கழுத்தை அறுத்து ஹீரோயின் கிட்டெ கெட்ட பேர் ஏற்படுத்தறார்.. 

இதுல என்ன செம காமெடின்னா அந்த பேக்கு மாப்ளை முன்னே பின்னே பழக்கம் இல்லாத ஹீரோ சொல்ற மாதிரி எல்லாம் கேட்டு ஹீரோயின் கிட்டே கெட்ட பேர் வாங்கிக்கறார்.. 

கடைசில அந்த மாப்ளையே ஹீரோ - ஹீரோயினை சேர்த்து வெச்சுடறார்.. இதுதான் கதை... 

 ஆனா பாருங்க டைரக்டர்க்கு திடீர்னு ஒரு டவுட்.. படம் யூத்ங்க மட்டும் பார்த்தா போதுமா? தாய்க்குலங்களை கவர வேணாமா? அதுக்காக அண்ணன் தேவி பாலா எழுதுன மாலைமதி நாவல் ஒண்ணை நைஸா சுட்டு அந்த கதையை ஹீரோவோட அம்மா அப்பா, ஹீரோயினோட அம்மா அப்பா இடைல புகுத்தி 2 பேரும் முறை பொண்ணு -முறை பையன் தான் அப்டின்னு ஒரு கிளைக்கதையை நைஸா சொருகறாரு..

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/07/10.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

1.  டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல ஹீரோ தனக்கு வராத ஒரு ஃபோனை வந்த மாதிரி காட்டி அதுல சொல்லாத ஒரு ஃபோன் நெம்பரை ஹீரோயின் கையை பிடிச்சு உள்ளங்கைல எழுதி டச் பண்றாரே அந்த ஐடியா நல்லாருக்கு.. ( நோட் பண்றா நோட் பண்றா)

2. ஒரு பாடல் காட்சில ஹீரோயின் குளத்துல ஏகப்பட்ட ரோஜாப்பூக்கள்க்கு இடையில் குளிக்கறாரே அந்த சீன் செம ( யாரும் டென்ஷன் ஆகாதீங்க.. அந்த சீன்ல ஹீரோயின் தலை மட்டும் தான் தெரியுது ஹி ஹி - இங்கே படத்துல தலையை தாண்டி தெரியுதேன்னு கேட்காதீங்க, அந்த சீன் படத்துல நஹி ) )

3. ஹீரோ ஹீரோயினை டார்ச்சர் பண்ண செல் ஃபோன், லேண்ட் லைன் ஃபோன் என மாறி மாறி  கலாய்ப்பதும், அதற்கு அவர் கொடுக்கும் விளக்கங்களும் நைஸ்

4. ஹீரோயினுக்கு வெள்ளை நிறம் பிடிக்காதுன்னு தெரிஞ்சதும் ஹீரோ ஹீரோயினுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்ளைக்கு எல்லாமே வெள்ளை நிறம் வர்ற மாதிரி ரெடி பண்ணி அனுப்புவது செம,.,. குறிப்பா மாப்ளையோட செல் ஃபோன் ரிங்க் டோன் கூட “ வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே.. “அந்த சீன்ல ஹீரோயின் கடுப்பாவதும், ஹீரோ துள்ளிக்குதிப்பதும், மாப்ளை பல்பு வாங்குவதும் ஆஹா..!!

5. ஹீரோ மற்றும் ஹீரோயின் செலக்‌ஷன்.. நீட்.. அவங்க பர்ஃபார்மென்ஸ் ஆல்சோ குட்.. 

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/07/Pathirama-Pathukkunga-20.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.ஹீரோவுக்கு மாமாவா வர்ற இன்ஸ்பெக்டர் எதுக்காக வில்லன் இடத்துக்கு போய் அங்கே 2 ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடறார்? கண்ணியத்தையே குறைச்சுடுச்சே?

2. எந்த கேனையனாவது  தனக்கு நிச்சயம் ஆன பெண்ணை என்னமோ பஸ்ல முன் சீட்ல உக்காந்து இருக்கற புது ஃபிகர் காலை உரசுற மாதிரி ஹோட்டல்ல உரசி கெட்ட பேர் வாங்குவானா?

3. ஹீரோயின் எதுக்காக கேன்சல் ஆன கல்யாண மாப்ளை ஆஃபீஸ்க்கு சம்பந்தமே இல்லாம வர்றார்? அந்த சீன் டிராமா மாதிரி இருக்கு.. 

4. லவ்வர்ஸ்னா முதல்ல கோயில், பார்க், பீச், சினிமா தியேட்டர் இப்படித்தான் போவாங்க.. ஆனா ஹீரோயின் திடு திப்னு லவ்க்கு ஓக்கே சொன்ன அடுத்த செகண்டே ஹீரோவோட வீட்டுக்குப்போகலாம்குதே அது எபப்டி;? ( ரொம்ப பிராக்டிகல் பொண்ணு போல)

5.ஹீரோவும், ஹீரோயினும் டான்ஸ் ஆடறப்ப அவங்க பின்னால கலர் குண்டு போடற பழக்கம் எல்லாம் ரஜினி நடிச்ச ராஜா சின்ன ரோஜா- சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா - காலத்துலயே முடிஞ்சுடுச்சு,.. எதுக்கு பழசை எல்லாம் மறுபடி கிளரிங்க்?

6. படத்துல நம்ப முடியாத முக்கியமான விஷயம் ஹீரோவோட ஃபிரண்டோட தங்கச்சிக்கு ஹீரோவோட இன்னொரு ஃபிரண்ட் கில்மா மெசேஜ் அனுப்புறதும் அந்தப்பழி ஹீரோ மேல வர்றதும்.. அதுல அந்த தங்கச்சி அத்தனை கில்மா மெசேஜையும் எரேஸ் பண்ணாமயா வெச்சிருப்பா? அப்படி அசால்ட்டா வெச்சவ செல்ஃபோனை மறந்துட்டு போவாளா?

7. ஹீரோவோட மாமா இன்ஸ்பெக்டர் பேங்க் அக்கவுண்ட்ல வில்லன் அவருக்கே தெரியாம பல தவணைகள்ல பல தடவை பணம் கட்டறான்.. அது எப்படி இன்ஸ்பெக்டருக்கு தெரியாம இருக்கும்? அந்த பேங்க்லதான் எஸ் எம் எஸ் வசதி அலர்ட் பண்றாங்களே. முதல் தடவை பணம் கட்டுனதும் SMS வந்திருக்குமே.. அதுவும் இல்லாம ஒரு இன்ஸ்பெக்டர் தன் பேங்க் பேலன்ஸை பல மாதங்கள் செக் பண்ணாம இருப்பாரா?

8. ஹீரோவுக்கு பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லையாம் அய்யோ ஹய்யோ.. இந்தக்காலத்துல ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதே பல சந்தர்ப்பங்கள் பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ண சான்ஸ் இருக்கே?

9. அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு ஏமாத்தி ஆபரேஷனுக்காக ஹீரோவோட  மாமா பேங்க் அக்கவுண்ட்ல பணம் கட்டறதா சீன் வருது.. ஓக்கே , ஆனா 13 டைம் அவ்ளவ் பெரிய  தொகை செலுத்தப்படு,ம்போது டவுட் வராதா?

10. ஹீரோயின் அவ்ளவ் லூசா? நிச்சயிக்கப்பட்ட மாப்ளையை டகார்னு கழ்ட்டிவிடுது.. ஹீரோவை ஏத்துக்குது.. டகார்னு ஹீரோவை வெறுக்குது.. ஒய் திஸ் கொலை வெறி?.


http://2.bp.blogspot.com/-C3Lul0Gk4jA/TzUVaBKqBLI/AAAAAAAAkoo/DZTvrNtpGeU/s1600/pathirama-pathukkunga-movie-stills-26.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  தினம் காசு கேட்கறாரு... அடிக்கறார்.. காசு குடுத்தாலும் குடிச்சுட்டு வந்து மறுபடி அடிக்கறார்


தண்ணி அடிக்கறதுக்கு முன்னே அவ அடிப்பா, அதுக்குப்பிறகு நான் அடிப்பேன்


2. போலீஸ்காரனா உத்தியோகம் பார்த்தாலும் சரி, மளிகைக்க்டைல பொட்டலம் கட்டறவனா இருந்தாலும் சரி மதியம் டி வி சீரியல் பார்க்கற டைம் வீட்டுக்கு வந்தா பொண்ணுங்க மரியாதையே தர்றதில்லை..

3. சரி சரி வாங்க சாப்பாடு போடறேன்..

விளம்பரம் போடற டைம்லயாவது புருஷன் நினைவு வருதே..


4. இவருக்கு இங்க்லீஷ்ல பிடிக்காத ஒரே வார்த்தை சிக்ஸ் பேக்


5. மோதிர விரல்ல தான் அன்பு, காதல், சந்தோஷம் எல்லாம் இருக்குற நரம்பு ஓடுது..  அதனால மோதிரத்தை அங்கே தான் போடனும் ( நல்ல வேளை,.. ஹி ஹி )

நீ இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை.. எங்காவது ரோட்ல கிளி ஜோசியம் பார்க்க வேண்டிய ஆள் ..


6. அவ வீட்டு வாசல்ல நாய் ஜாக்கிரதை போர்டு இருக்குடா..

 அவளுக்காக எத்தனை நாய் கடிச்சாலும் தாங்குவேன்..

நீ தாங்குவே.. அது உன் தலை விதி.. எங்களுக்கென்னடா?

7.  இவன் என் ஃபிரண்ட்.. டைரக்டர் ஆகனும்கற வெறியோட இருக்கான்..

பார்த்து கிட்டே வந்து கடிச்சு வெச்சுடப்போறான்?

8. ஏய் என்ன இது? எல்லாமே வெள்ளையா இருக்கு? உஜாலாவுக்கு மாறிட்டியா?


 படம் டி வில போட்டா முதல் 4 ரீல் மட்டும் பார்க்கலாம்.. அதுல ஹீரோ ஹீரோயின் அறிமுக காட்சிகள் வரும் , அப்புறம் நீங்க உங்க வேலையை பார்க்கலாம்  ஹி ஹி நான் கூட அப்படித்தான் செஞ்சேன்.. உலக வரலாற்றில் முதன் முதலாக தியேட்டர்லயே ஆஃபீஸ் வேலை பார்த்தேன் ஹி ஹி

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - கிரேட் எஸ்கேப் ஆகவும் ஹி ஹி
ஈரோடு ஸ்ரீகிருஷ்னாவில் படம் பார்த்தேன் ( கூட டோட்டலா 14 பேர்தான் இருந்தாங்க, பாவம் கரண்ட் சார்ஜுக்கே கட்டுபடி ஆகி இருக்காது)
7 comments:

Menaga Sathia said...

நாந்தான் முதல் போணியா??

Menaga Sathia said...

ம்ம்ம்ம் எதுவும் சொல்றதகில்லை...

ராஜி said...

ஸ்டில்ஸை பார்க்கும்போதே தெரியவேணாம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்ன்னு

Yoga.S. said...

பத்திரமா பார்த்துக்குங்க-சினிமா விமர்சனம்.////தலைப்புலேயே சொல்லிட்டீங்க!பாத்துட்டேன்!!!!

Anonymous said...

கடைசி வரி லொள்ளோ...லொள்ளு...

ஹாலிவுட்ரசிகன் said...

அட ... நானும் ஏதோ கார்னியர் விளம்பரம் பத்தி சொல்லியிருப்பீங்கண்ணு நினைச்சேன். ஹி ஹி

R. Jagannathan said...

ஈரோட்டில் எல்லா தியேட்டர்லயும் உங்களுக்கு டிக்கெட் ஃப்ரீயா?

என்ன, ஹீரோயினுக்கு வெள்ளை நிறம் பிடிக்காதா! அவங்க போட்டிருக்கிறதே வெள்ளைதானே! (இல்ல, இந்தப் பாட்டு ஹீரோவோட கனவுல வருதா!)

வெள்ளை கலர் பிடிக்காட்டி போகட்டும், அந்த ‘வெள்ளைப் புறா ஒன்று..’ பாட்டை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? எனக்கு இந்த ஹிரோயினையே பிடிக்கலை!!

-ஜெ.