Wednesday, March 14, 2012

THE WOMAN IN BLACK -ஹாலிவுட் திகில் சினிமா விமர்சனம்


http://www.covershut.com/covers/The-Woman-In-Black-2012-Front-Cover-64080.jpg
திகில் படம், பேய்ப்படம்னா பேன்னு கத்தறது, ரத்தம் குடம் குடமா கொட்டறதை காட்றது,கோரைப்பல்லோட பேய் உருவங்களை காட்டறதுன்னு நிறைய பேர் தப்பான டெஃபனிஷன் வெச்சிருக்காங்க.. அதை எல்லாம் தவிடு பொடி ஆக்கி ரொம்ப டீசண்ட்டா ,கண்ணியமா ( 2ம் 1 தான்) ஒரு திகில் படம் கொடுத்திருக்காரு டைரக்டர்.. அவருக்கு முதல்ல வாழ்த்துகள்.. 

இந்தப்படம் ஃபாரீன்ல மெகா ஹிட்டாம்.. நம்ம ஊர்ல எந்திரன் ஏற்படுத்திய பரபரப்பை இது அங்கே ஏற்படுத்தி இருக்கு

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல 3 சின்னப்பொண்ணுங்க அமைதியா வந்து முகத்துல எந்த வித உணர்ச்சியையும் காட்டாம பல அடுக்கு மாடி ஜன்னல் வழியா எட்டி குதிச்சு தற்கொலை செஞ்சுக்குதுங்க..

http://www.filmcritic.com/assets_c/2012/02/womaninblack-cropped-proto-filmcritic_reviews___entry_default-thumb-560xauto-42444.jpg

அந்த கிராமத்துல ஏதோ சாபம்.. குழந்தைங்கள் வரிசையா சாகறாங்க..ஹீரோ ஒரு வக்கீல்.. அந்த குழந்தை இறந்த எஸ்டேட் செட்டில்மெண்ட் சம்பந்தமா ஹீரோ அங்கே போறார் . ஹீரோவுக்கு, ஒரு குழந்தை..சம்சாரம் ஆல்ரெடி டெட்.. ஒரு கார்டியன் லேடி( அதாவது நம்ம ஊர் பாஷைல சொல்லனும்னா வேலைக்காரி கம் பணியாள்) அவங்களை ஊர்ல விட்டுட்டு 2 நாள்ல வந்துடறேன்னு சொல்லிட்டு லண்டன்ல இருக்கற அந்த அமானுஷ்ய கிராமத்துக்கு ஹீரோ போறார்..அவருக்கு அங்கே பல திடுக்கிடும் அனுபவங்கள் கிடைக்குது. பல விசாரணைக்குப்பிறகு குழந்தையை இழந்த ஒரு பெண்ணின் சாபம்  அல்லது பழி வாங்கல் தான் இதெல்லாம் அப்டிங்கறதை கண்டு பிடிக்கறாரு.. அந்த பெண் பேய் தான் விமன் இன் பிளாக்  ( அந்த ஃபிகரு பிளாக் கலர்லயும் இல்லை , சொந்தமா ஒரு பிளாக் ஸ்பாட்டும் வெச்சிருக்கலை, யாரையும் பிளாக் பண்ணிடுவேன்னு மிரட்டலை,ஆனாலும் சும்மா ஒரு எஃபக்ட் தர அப்படி டைட்டில்)

2 நாள் முடியுது.. இருந்தாலும் ஹீரோ கிளம்பலை.. பொதுவா இந்த சம்சாரங்க வேலை என்னான்னா புருஷன் எங்கே இருக்கானோ அங்கே போய் அவன் உயிரை எடுக்கறதுதான்.. அவனை நிம்மதியா தனியா இருக்க விட மாட்டாங்க.. ஆக்சுவலா அவங்க வந்த பிறகு தான் அவன் நிம்மதியே போகும்..இந்த சம்பிரதாயம் ஆல் ஓவர் வோர்ல்ட்லயும் இருக்கு.. சம்சாரம் மாதிரியே அந்த கார்டியன்  ஹீரோவை தேடிட்டு குழந்தையை கூட்டிக்கிட்டு அந்த கிராமத்துக்கு வந்ததும் ஹீரோ பதட்டம் ஆகிடறான்.. ஏன்னா அங்கே இருக்கற பேயோட வேலையே குழந்தைகளை தற்கொலை செய்ய வைக்கறதுதான்

 ஏன்னா ஹீரோவோட குழந்தையோட உயிருக்கு எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதே?அவசர அவசரமா அவன் இடத்தை காலி பண்றான்.. ரயில்வே ஸ்டேஷன்ல என்ன நடக்குதுங்கறதை திக் திக் திகிலோட பார்க்கலாம்.. 

ஹாரிபாட்டர் படத்துல சின்னப்பையனா வந்து  பலரது உள்ளங்களை கொள்ளை அடிச்சு, ஃபாரீன் ஃபிகரு ரெண்டை அட்டர் டைம்ல  கரெக்ட் பண்ணின டேனியல் ராட் கிளிஃப் தான் ஹீரோ. அதுல பால் மணம் மாறாத பாலகனா வர்றவர் இதுல அமலா பால்க்கே அண்ணன் மாதிரி கொஞ்சம் ஓல்டு கெட்டப்ல ( 25 வயசு) வர்றார்.. நல்ல நடிப்பு.. அவரை இன்னும் யூத்தாவே காட்டி இருக்கலாம்.. இந்தக்காலத்துல 18 வயசுலயே பிஞ்சுலயே பழுத்துடுதுங்களே.. 

 டைரக்டர் ஹீரோவை அப்படி ஏஜ்டு பையனா காட்ட முக்கிய ரீசன் ஹீரோ 8 வயசுப்பையனின் அப்பான்னு காட்ட வேண்டிய சூழல் தான்.. ஓக்கே

http://horrornews.net/wp-content/uploads/2011/12/the-woman-in-black-movie-2012-3.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  கிராமம் வரும் ஹீரோ அந்த ஹோட்டல்ல தங்கிட்டு நைட்ல கதவு சாவித்துவாரம் வழியா பார்க்க அதே மாதிரி பேயும் பார்ப்பது செம திகில்

2. ஹீரோவுக்கு அந்த கேஸ் பற்றிய துப்பு கிடைப்பது குழந்தையை இழந்த அம்மாவின் லெட்டர் மூலமா.. அந்த லெட்டர்ஸை அப்படியே ஆடியன்ஸ் கிட்டே பகிர்ந்ததன் மூலம் டெரர் டெம்ப்போ ஏத்துனது.. 

சாம்ப்பிள் -a  என்னை மெண்ட்டல்-னு சொல்லி என்னை என் மகள் கிட்டே இருந்து பிரிச்சு வெச்சே.. 

b என்னதான் நீ பிளான் பண்னாலும் என்னை என் மக கிட்டே இருந்து பிரிக்க முடியாது

c. என் மகளை நீ புதைக்கக்கூட இல்லை.. உனக்கு நரகம் தான் கிடைக்கும்.. 

3. பின்னணி இசையில் அடக்கி வாசித்தது.. பெரும்பாலான படத்தை சைலண்ட் மோடில் கொண்டு சென்று தேவையான இடத்தில் மட்டும் அதிரடி இசையை உபயோகித்த லாவகம்..


4. த சிக்ஸ்த் சென்ஸ் படத்தை நினைவு படுத்தினாலும் உறைய வைக்கும் க்ளைமாக்ஸ் காட்சி ட்விஸ்ட்

5.  வீட்டில் உள்ள குருவிகுஞ்சை  ஹீரோ எடுத்து அதன் கூட்டில் விடும்போது மடார் என்று  காகம் வந்து ஹீரோ முகத்தில் மோதிச்செல்லும் சீன்   சவுண்ட் எஃபக்ட், ரீ ரெக்கார்டிங்க், எடிட்டிங்க் கட் எல்லாம் செம

6.  ஹீரோ படுத்திருக்கும் கட்டில் மெத்தையில் கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் பரவி அப்படியே குழந்தையாக எழும்  பேய் செம திக் திக் சீன்

7. ஃபயர் ஆக்சிடெண்ட்டில்  சிக்கி நெருப்புக்கிடையில் மாட்டிக்கொண்ட குழந்தை டக் என்று பெட்ரோல் கேனை உடைத்து தனக்கு தானே தீ வைத்துக்கொள்ளும் உறைய வைக்கும் காட்சி

8. குழந்தை நலன் விரும்பி பேயை வர வைக்க ஹீரோ ரூமில் உள்ள எல்லா பொம்மைகளையும்  சாவி கொடுத்து இயக்கி வர வைக்கும் தந்திரம்.. அந்த சீனில் மெல்ல மெல டெம்ப்போ ஏற்றிய விதம் மார்வலஸ்

http://paracinema.net/wp-content/uploads/2012/02/The-Woman-in-Black-front.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் ( அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு இங்கிலீஷ் தெரியாது, ஐ ஜாலி, என்ன வேணாலும் கேட்கலாம்)


1. ஹீரோ எங்கே வேலை செய்யறார் என்பதே அவர் கார்டியன்க்கு தெரியாது, ஹீரோ போகும்போது எந்த ஊர்க்கு போறேன்னு சொல்லாம போறாரு, பின் எப்படி சரியாக அவர் அங்கே வந்தார்?

2. கிராமத்தில் அமானுஷ்ய சக்தி இருக்குன்னு  ஹீரோவுக்கு தெரிஞ்சுடுது.. தான் வீட்டை விட்டு கிளம்பறப்ப  2 நாள்ல வந்துடறதா சொல்லி இருக்கார், அவர் ஏன் கார்டியன்க்கு ஃபோன் பண்ணி என்னை தேட வேண்டாம், வேலை முடிய இன்னும் நாள் இருக்குன்னு சொல்லலை?

3. குழந்தை பாசத்தால் தவிக்கும் பேய் எதுக்காக குழந்தைகளை குறி வெச்சு கொல்லனும்? தன் கணவன் போல அயோக்கிய ஆண்களை கொன்னா  அதுல லாஜிக் இருக்கு.. தான் எப்படி மழலையை இழந்து கஷ்டப்படறோமோ அதே போல் ஊர் மக்கள் அனைவரும் கஷ்டப்படட்டும் என்பது மோசமான லாஜிக்கா இருக்கே?

 படத்தில் மனதைக்கவர்ந்த ஒரே வசனம் 


சமூக சேவை செய்ய இங்கே யாரும் வர்லை.. சம்பாதிக்க வந்திருக்கோம்.. அதை முதல்ல ஞாபகம் வெச்சுக்கிட்டு அப்புறம் வேலை செய்..

http://mimg.sulekha.com/english/the-woman-in-black/stills/the-woman-in-black-movie-013.jpg
வழக்கமான திகில் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்காமல் போகலாம், ஆனால் ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கு ,வித்தியாசமான திகில் பட விரும்பிகளுக்கு  மிகவும் பிடித்தமான படமாக இருக்கும்.. ஆண்கள், பெண்கள் அனைவரும் பார்க்கலாம்..

 குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் சீன்கள் நிறைய இருப்பதால் மனோ ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இந்தப்படம் பார்ப்பதை தவிர்க்கவும்

ஈரோடு அண்ணா தியேட்டரில் படம் பார்த்தேன்0 comments: