Thursday, March 08, 2012

சங்கர் ஊர் ராஜபாளையம் - வள் வள் வழா வழா - சினிமா விமர்சனம்

http://123tamilforum.com/imgcache2/2012/02/ShankarOorRajapalayamMovieOnline-1.jpg 

நான் எல்லாம் டீன் ஏஜ் ல இருந்தப்ப  யார் வீட்டுக்காவது போனா “இங்கே எல்லாம் என்ன வேலை? பொண்ணுங்க இருக்கற இடம்னு விரட்டி விட்டுடுவாங்க.. இந்தப்படத்துல செம காமெடியான நம்பவே முடியாத சீன் இருக்கு.. உஷ் அப்பா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.. படத்தோட கதை கண்றாவி எல்லாம் அப்புறம்.. முதல்ல அந்த சீனை சொல்றேன் ..

ஹீரோ எலட்ரிகல் கடை மாதிரி ஏதோ வெச்சிருக்கார்.. ஹீரோவோட ஃபிரண்ட் எலக்ட்ரீசியன்.. ஹீரோயினோட அம்மா அவங்க வீட்ல ஃபேன் ஓடலைன்னு சொல்லி வர சொல்றாங்க.. ஹீரோவும் , ஹீரோவோட ஃபிரண்டும் வீட்டுக்கு போறப்ப ஹால்ல அந்தம்மா இருக்காங்க.. மாடில போய் ஒரு ஸ்டூல் எடுத்துட்டு வாங்க.. ஃபேனை ரெடி பண்ண அப்டின்னு அந்தம்மா சொல்லுது... 

ஹீரோ போறாரு.. அங்கே ஹீரோயின் டிரஸ் பண்ணிட்டு இருக்கு.. யாரும் டென்ஷன் ஆகாதீங்க.. பாவாடை   ஜாக்கெட் எல்லாம் போட்டுத்தான் இருக்கு. சரியா சேலை கட்டறப்ப  ஹீரோ தெரியாத்தனமா அங்கே எண்ட்டர் ஆகிடறார். நல்லா பாருங்க ( ஹீரோயினை அல்ல .. சிச்சுவேஷனை)

 இந்த மாதிரி டைம்ல ஒரு பொண்ணு என்ன பண்ணனும்? முன்னெ பின்னே அட்லீஸ்ட் சைடுல கூட பார்க்காத ஒரு ஆம்பளை டிரஸ் மாத்துறப்ப வந்துட்டானேன்னு பதறனும்.. அதை விட்டுட்டு பாப்பா வெட்கமா  ஹீரோவை பார்த்து சிரிக்குது.. ஹய்யோ அய்யோ 

ஹீரோயினை விடுங்க.. ஒரு வயசுப்பெண்ணை மாடில டிரஸ் மாத்த வெச்சுட்டு எந்த அம்மாவாவது அப்படி ஆள் அனுப்புவாளா? அவ்வ் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3Y0ridCcbQTwmzeSCkeQ1vfZ6R-htw768d9XuMtTtY-_CdqRftDXeb-Bxfrcq1XByppWhGJV2wOhK1D6q4RNV4DgmYht_y_DZuPwDNQLvycj3QbjAsEGGbCpgnjFwQxjDYc1PYMHHZb8/s320/shankar_oor_rajapalayam_01.jpg
 ஓக்கே கதைக்கு வருவோம்.. முன்ஜென்மத்தின் பிரதிபலிப்புதான் இந்த ஜென்மத்தில் நடக்கிறது என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதன் அடிப்படையில் அமைந்ததுதான் இக்கதை. 700 ஆண்டுகளுக்கு முன் பிறக்கும் தாவர வகையை சேர்ந்த ஒரு உயிர், பெண் ஒருத்தி மீது காதல் கொள்கிறது. அடுத்த ஜென்மத்தில் அந்த உயிர் மனிதனாக பிறந்து அதே பெண்ணை சந்தித்து காதல் கொள்கிறது..

ஹீரோ ஹீரோயின் 2 பேரும் லவ் பண்றாங்க.. ஹீரோயின் அண்ணன் ஒரு தாதா ( அட போங்கப்பா ) அண்ணன் கண்டிப்பானேன்னு பயந்து சொல்லாம அலைபாயுதே ஸ்டைல்ல கல்யாணம் பண்ணிக்கறாங்க .. ஹீரோயின் வீட்ல யாரும் இல்லாதப்ப ஹீரோவுக்கு ஃபோன் போட்டு வரச்சொல்றா.. எதுக்கு? தாயக்கரம் விளையாடவா கூப்பிடுவா? எல்லாம் கில்மாக்குதான்.. மேட்டர் முடிச்சுட்டு ஹீரோ கிளம்பறப்ப வில்லன் கரெக்டா வந்துடறான் .. 

 அப்புறம் என்ன? ஒரே சேசிங்க் தான்.. க்ளைமாக்ஸ்  அவங்க 2 பேரும் சேர்ந்தாங்களா? இல்லையா?ன்னு வெண் திரையில் தில் உள்ளவங்க பாருங்க.. முழுக்கதையையும் சொன்னவன் ஏன் அந்த க்ளைமாக்ஸ்  மட்டும் சொல்லலைன்னு கேட்கறவங்களுக்கு மட்டும் ரகசியமா ஒரு வார்த்தை.. நான் தூங்கிட்டேன் ஹி ஹி 

ஹீரோ கந்தேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். என் உயிர்த்தோழன் பாபு சாயல்ல தாடியோட இருக்கார்..பஞ்ச் டயலாக் எல்லாம் பேசாம அமைதியா வந்து டைரக்டர் சொன்ன படி கேட்டு பொடுவாட்ட ( அடக்கமா) நடிச்சிருக்கார்.. ஓக்கே பாஸ் மார்க்.. 

 அவருக்கு ஜோடியாக ஹாசிகா நடிக்கிறார்.இந்த பட நாயகி ஹாசிகா ஆந்திர வரவு.தென்னிந்திய அழகி பட்டம் "பெற்றவர் ".இவர் அறிமுகமான் படம் 'மலர் மேல் நிலை பள்ளி '.இந்த படம் இன்னும் வெளிவரவில்லை.(அநேகமா ஆக வாய்ப்பு கம்மி)

 நடிப்பு ஓக்கே .. மிதமான மேக்கப், அளவான புன்னகை. இவருக்கு ஆடை வடிவமைப்பு மற்றி பர்சனலா ஒண்ணு சொல்லிக்கறேன்.. எப்பவும் ஒரே மாதிரி ஆடைகளை யூஸ் பண்ணனும். சில காட்சிகள்ல நமீதா மாதிரி கும்முன்னு இருக்கீங்க.. பல காட்சிகள்ல கவுசல்யா மாதிரி, கவுதமி மாதிரி சப்புன்னு இருக்கீங்க.. புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கவும் .. 

படத்துல குறிப்பிட்டு சொல்ல வேற யாரும் இல்லை.. இயக்குநர் பாராட்ற அளவு பெருசா எதுவும் செய்யல.. ஒரு கனவா உயிர் வரையா பாட்டு மட்டும் கேட்கற மாதிரி இருக்கு.. 


http://www.indiancinemagallery.com/Gallery2/d/767203-1/Shankar+Oor+Rajapalayam+stills+_4_.jpg

 இயக்குநர் செய்த லாஜிக் மிஸ்டேக்ஸ் 

1.  ஹீரோயின் ஹீரோ கிட்டே ரோட்ல ஒதுக்குப்புறமா நின்னு பேசிட்டு இருக்கா.. அப்போ ஹீரோயினோட கிளாஸ் மேட் வர்றா.. உடனே  ஹீரோயின் பதறி “அய்யய்யோ அவ வந்தா காலேஜ் பூரா பரப்பிடுவா” அப்டிங்கறா.. இந்தக்கதை நடக்கறது 2012.. தானே? 1980ல தான் அப்படி பயந்தாங்க.. இப்போ எல்லாம் பாய் ஃபிரண்ட்ஸ் வெச்சிருக்கறது கவுரவமா நினைக்கறாங்க.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எதிர் பாலிடம் பேசுவது சர்வ சாதாரணம்

2.  ஹீரோயின் காலேஜ் கிளாஸ் பிளாக் போர்டுல வருகை - 30 பேர்னு எழுதி இருக்கு .. ஆனா க்ளாஸ் ரூம்ல இந்தப்பக்கம் 3 வரிசை 4 சேர் =12 பேர்.. அந்த பக்கம் 3 வரிசை 4 சேர் =12 பேர்.. ஆக மொத்தம் 24 பேர் தான் இருக்காங்க.. 

3.  ஹீரோயின் வீட்ல யாரும் இல்லை,ஹீரோவை ராமாயணம் படிச்சுக்காட்ட ஹீரோயின் வரச்சொல்றா (ஆனா அவன் வந்து காமாயணம் தான் பண்றான்) வர்றவன் நேரா வாசல் வழியா வந்தா வேலை முடிஞ்சுது.. எதுக்கு கஷ்டப்பட்டு சுவர் ஏறிக்குதிச்சு திருட்டுத்தனமா வரனும்? 

4. ஊரை விட்டு ஓடிப்போற ஹீரோயின் ஒரு சின்ன பேக் வெச்சிருக்கா , அதுக்குள்ள அதிக பட்சம் 2 செட் டிரஸ் தான் போட முடியும்,.,. ஆனா ஹீரோயின் அம்மா பீரோவை திறந்து பார்த்து அய்யய்யோ பீரோ காலி, கப்போர்டு காலி எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டான்னு சொல்றா.. அது எப்படி?

5. ஹீரோயின் அண்ணன் தன் தங்கை ஒருத்தன் கூட ஓடிட்டான்னு தெரிஞ்சதும் தங்கச்சியை கொலை பண்ணிடறான்.. அவ்ளவ் கோபம் இருக்கறவன் ஏன் தங்கச்சி காதலனை கொலை பண்ணலை? ஜஸ்ட் அடி மட்டும்? அவன் வந்து மறுபடி வில்லனை பழி வாங்குவான்னு தெரியாதா?

http://www.lateststills.com/wp-content/uploads/2011/06/shankar-oor-rajapalayam-movie-stills-_40_-300x300.jpg


யாம் பார்த்த மொக்கைகளில் இந்த மொக்கை போல் கடிதானது எங்கும் காணோம் அவ்வ்வ்வ்

 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - எல்லா செண்ட்டர்லயும் 5 நாள் ஓடும் ஹி ஹி 

http://1.bp.blogspot.com/-Imz7dw1ScEU/TeWe2UmclUI/AAAAAAAACPw/yx0JHYWsRIU/s1600/24x12+2+%252B0.jpg

9 comments:

குரங்குபெடல் said...

இந்த படம் இன்னும் வெளிவரவில்லை.(அநேகமா ஆக வாய்ப்பு கம்மி)


இதெல்லாம் தவிர்க்கலாம் தம்பி . .

Anonymous said...

இன்று கூகிள்சிறியில் "இன்றைய நாட்டு நடப்பு- காமெடி கலக்கல் கலாட்டா 3/8/2012"http://www.googlesri.com/2012/03/382012.html

Senthil said...

Thank u verymuch!!!!!!!!1

escape !!!!

senthil,doha

சென்னை பித்தன் said...

சில படங்கள் வெளியாகியிருக்கு என்று உங்கள் பதிவைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறேன்.தொடர்க உங்கள் பணி!

Anonymous said...

தேர்ந்த ரசனை உங்களுடையது...

'பரிவை' சே.குமார் said...

athu sari... kappathittinga.

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!////சி.பி கமென்ட்:எல்லா செண்டர்களிலையும் ஐந்து நாள் ஓடும்.////ஐந்து நாள்ல ஓடாதா????

R. Jagannathan said...

வருகை 30 / வந்தது 24 ! ஐயோ இப்படி கண்ணுல விளக்கெண்ண போட்டுப் பாத்தா எவன் படம் எடுக்கிறது! ஆமாம் கில்மா மேட்டர் பண்ணவனே ஓடுறான், நீங்க ஏன் தூங்கினீங்க? நீங்கள் பெரும் தொழிலதிபரா - இந்தமாதிரி படத்துக்கும் காசு செலவு செஞ்ஜு பாக்கறீங்க! - ஜெ.

Raj said...

குறிப்பு: அண்ணன் படத்தில் கான்பித்தமாதிரி பிட்டு சுத்தமா இல்லை அதாவது படத்தில் உள்ள மாதிரி எந்த சீனும் இல்லை.
மிஸ்டர் சிபி தயவு செய்து விளம்பரங்களை கட்டுபடுத்தவும் உங்க வெப் பேஜ் ரொம்ப ஸ்லோவாக ஓபன் ஆகிறது. வாசகர்கள் குறைய காரனமைடும் ஜாக்கிரதை