Wednesday, March 07, 2012

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் திரிபாதி பேட்டிhttp://www.hindu.com/2006/04/11/images/2006041105010301.jpg 

இந்தியாவிலேயே முதன்முதலில் சர்வதேச காவல் சமூக விருதும் சிறந்த காவல் நிர்வாகத்துக்கான தங்கப் பதக்கமும் பெற்ற அதிகாரி என்ற பெருமை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதிக்கு உண்டு. இளம் வயதிலேயே குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் இவர். நேர்மையானவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் கூறப்பட்டாலும் மனித உரிமைகளுக்குத் துளியும் மதிப்பு அளிக்காதவர் என்ற குற்றச்சாட்டும் உண்டு


 சி.பி - கொள்ளையர்களும், கொலையாளிகளும் மனுஷங்களே கிடையாது.. அவனுங்களை அவனுங்க பாஷைலயே போட்டுத்தள்ளனும்.. அதை விட்டுட்டு வாரா ராசா திருந்துடு.. என் செல்லம் இல்ல?ன்னு கொஞ்சிட்டு இருக்க முடியாது.. பெரும்பாலான குற்றங்கள் போலீஸ் பயம் காரணமாத்தான் நடக்காம இருக்கு..

 தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்தஎன்கவுன்டர் களில் இவருடைய பங்கு கணிசமானது. சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் ஐந்து பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் நிலையில், திரிபாதி  பேட்டியில் இருந்து...  


''வேளச்சேரி என்கவுன்டருக்கு என்ன தேவை இருந்தது?''''எல்லா என்கவுன்டர்களுக்கும் என்ன தேவையோ அதே தேவைதான்!''


சி.பி - ஓப்பனிங்க்ல ஃபர்ஸ்ட் பாலே சிக்சர்.. நிருபர் பாவம் ஹா ஹா 

 
''உங்கள் முதல் என்கவுன்டர் எது? இதுவரை எத்தனை என்கவுன்டர்கள் உங்கள் தலைமையில் நடந்திருக்கின்றன?''

சி.பி - அஃபீசியலா? எத்தனை? அன் அஃபீசியலா? எத்தனை?னு கூட கேட்பாங்க போல. எல்லா மேட்டரையும் ஓப்பனா சொல்லிட்டு இருக்க முடியுமா?


''ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். யாரைக் கொல்வதும் எங்கள் நோக்கம் இல்லை. அதற்கு எங்களுக்கு அதிகாரமும் இல்லை. நீங்கள் கேட்பதைப் பார்த்தால், இதையே நான் வேலையாக வைத்துக்கொண்டு அலைவதுபோல் அல்லவா இருக்கிறது? ஆபத்தான சூழலில், தவிர்க்கவே முடியாத சூழலில்தான் துப்பாக்கியை எடுக்கிறோம். ப்ளீஸ்... நம்புங்கள்!''

சி.பி - என்கவுண்ட்டர் டிபார்ட்மெண்ட்னு தனியா ஒண்ணு ஆரம்பிக்கலாம், தப்பே இல்லை 

http://www.hindu.com/2009/08/05/images/2009080560190401.jpg
''என்கவுன்டர்களுக்குச் செல்லும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?'

சி.பி - இன்னைக்கு எத்தனை ஆடு சிக்கப்போகுதோ.. இந்த பிரஸ்காரங்களுக்கு என்ன பதில் சொல்லி சமாளிக்கனுமோன்னு தான் வேறென்ன?

 


(சிரிக்கிறார்... பின் ஆழமான பார்வையோடு...) ''போகும்போது என்கவுன்டருக்காகச் செல் கிறோம் என்றே தெரியாதே?''


சி.பி - ஆனா எனக்கென்ன தோணுதுன்னா எல்லாம் ஆல்ரெடி பிலான் பண்ணி மேலிடத்துக்கு தகவல் சொல்லி அப்ரூவல் வாங்கித்தான் பண்றாங்க போல.. 

 
''சரி, என்கவுன்டர் முடிந்து வரும்போது..?''


''ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கும். ஏனென்றால், செத்தவர்களுக்கும் - அவர்கள் எவ்வளவு பெரிய கொடியவர்களாக இருந்தாலும் - ஒரு குடும்பம், உறவினர்கள் எல்லோரும் இருப்பார்கள் இல்லையா?''

 சி.பி -திருடனோ,கொள்ளைக்காரனோ சம்பாதிக்கற பணத்தை வீட்டுக்கு தரும்போது அதை அனுபவிக்க எந்த அலவு அந்த குடும்பத்துக்கு உரிமை இருக்கோ அதே அளவு அவன் சுடப்பட்ட பிறகு அதுக்கான பின் விளைவுகளுக்கும் தயாரா இருக்கனும்..

''உங்களுக்குக் குடும்பம் இருக்கிறதா?''


''ம்... ஆனால், இந்தப் பேட்டி என் வேலை சார்ந்தது மட்டும்தான் இல்லையா? நான் இங்கு குடும்பத்தைப் பற்றிப் பேச விரும்பவில்லை!''

சி.பி - அதுவும் சரிதான்.. போலீஸ்காரங்க ஃபேமிலி மேட்டர் வெளீயே தெரிஞ்சா சினிமால வர்ற மாதிரி லாக் பண்ணி கார்னர் பண்ணுவாங்க 
''உங்களுக்குப் பாவ - புண்ணியங்களில் நம்பிக்கை உண்டா?''

சி.பி - கொள்ளைக்காரங்க, கொலைகாரங்க பண்றதெல்லாம் பாவம்.. அந்த மாதிரி சமூக விரோதிகளை போட்டுத்தள்ளறது புண்ணியம்..

 
''நான் ஒரு போலீஸ். வேலை என்று வந்துவிட்டால் சாதி, மதம், கடவுள்... இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் எனக்குக் கிடையாது!''

 http://liveindia.tv/wp-content/uploads/2011/06/images/17VBG_POLICE_660338f.jpg

''சரி, வேலைக்கு அப்பாற்பட்டு... ஒரு தனிப்பட்ட மனிதனாக?''


''அப்படிப் பார்த்தாலும், என் கையில் எதுவும் இல்லை. (மேலே கையைக் காட்டி) அவனுக்கு முன் நாமெல்லாம் யார்? அவன்தான் எல்லா வற்றையும் செய்கிறான் என்று நினைத்துக்கொள்வேன்!''


சி.பி - இவர் ஏ ஆர் ரஹ்மான், அல்லது ரஜினியின் ரசிகரா இருப்பார் போல.. ஆண்டவரை கை காட்டறாரு.. நாட்டை ஆள்பவரை பற்றி ஒண்ணூம் சொல்லலை. 

 
''போலி என்கவுன்டர்களை நடத்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''


சி.பி - 10 என்கவுண்ட்டர் நடந்தா அதுல ஒண்ணுஅப்படி ஆகிடுதுன்னு சொல்றாங்க..  அவங்கவங்க தனிப்பட்ட விரோதிகளை தீர்த்துக்கட்ட இதை பயன் படுத்திக்கறதா பேசிக்கறாங்க..   
''யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அவ்வளவுதான். ஒரு என்கவுன்டர் நடந்தால் யாரையும் யாரும் சும்மா விட்டுவிடுவது இல்லையே? மனித உரிமை ஆணையம், விசாரணை எல்லாம் இருக்கிறது. தவறு செய்துஇருந்தால் தண்டனை கொடுங்கள். அவ்வளவு தான். நாம் பேட்டியை முடித்துக்கொள்ளலாம்!''

5 comments:

Yoga.S. said...

பத்திரமா இருந்துக்குங்க "ராசா"ன்னு சொல்லுறாரோ????எப்புடியோ,உங்களுக்கும் ஒரு மீன் சிக்கிடிச்சு!!!!

உணவு உலகம் said...

சாரி, நோ கமெண்ட்ஸ்.

சசிகுமார் said...

ஆபிசரே நோ கமெண்ட்ஸ் சொல்லிட்டார் நான் என்ன சொல்றது....

R. Jagannathan said...

'போகும்போது என்கௌன்டருக்குப் போகிறோம் என்றே தெரியாதே!’ - என்ன ஷார்ப் திங்க்கிங்! ஹாட்ஸ் ஆஃப்! - ஜெ.

SELECTED ME said...

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் - கமெண்ட் போட்டுட்டேன் - ஆவல் தீர்ந்துடுச்சா??