Monday, March 26, 2012

AGENT VINOD -ஜேம்ஸ்பாண்ட் பாணி ஆக்‌ஷன் - பாலிவுட் பட விமர்சனம்

http://warangalcity.co.in/wp-content/uploads/2012/03/exclusive-hot-HQ-poster-of-kareena-kapoor-from-agent-vinod.jpg
கமல் நடிச்ச விக்ரம் பட KNOT தான்.. வில்லன்கள் ஒரு நாட்டையே அழிக்க வல்ல வெடிகுண்டு ரெடி பண்றாங்க.. அதை ஹீரோ க்ளைமாக்ஸ்ல செயல் இழக்க வைக்கறாரு.. ருஷ்யா,சோமாலியா,மொரேக்கோ,லண்டன், டெல்லி அப்டினு உலகம் பூரா சுற்றி வர்றாரு ஹீரோ.. ஹீரோயின் கரீனா கபூர் பாகிஸ்தான் உளவாளி.. இந்த மேட்டர் போதாதா? இயக்குநர் நீட்டி முழக்கி திரைக்கதை அமைக்க? சக்சஸ் ஃபார்முலா தான்..

படத்தை பற்றி டீட்டெயிலா பார்க்கறதுக்கு முன்னால முக்கியமான விஷயங்கள் சொல்லிடறேன்.. க்ளைமாக்ஸ்ல  3 செமீ அளவுள்ள நீச்சல் டிரஸ் போட்டுட்டு  ஒரு ஜிகிடி.. கரீனா கபூர் , மல்லிகா 2 பேரின் செம கிளாமர் படத்துல இருக்கு.. கில்மா ரசிகர்கள் டோண்ட் மிஸ் இட்...


சைஃப் அலிகான் தான் ஹீரோ.. ஆள் செம ஸ்மார்ட்..  ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாம பல இடங்கள்ல ரிஸ்க் எடுத்திருக்கார்.. வசனம் பேசும்போது உதடு மட்டும் அசையற மாதிரி , முகம் இறுக்கமா வெச்சுக்கறாரு.. எல்லாம் ஓக்கே ஆனா ஜேம்ஸ் பாண்ட்டின் முக்கிய அடையாளமான  அழகிகளுடன் ரொமான்ஸ் மட்டும் அவர் பண்ணவே இல்லை. இத்தனைக்கும் படத்துல 4 ஜிகிடிங்க இருக்கு.. ஹூம்..  ( ஒரு வேளை ஹீரோவோட சம்சாரம் தான் புரொடியூசரோ.. )

http://4.bp.blogspot.com/-4Ca7Tr6bvBg/T1JM9pS5mMI/AAAAAAAAQ3I/g3tAkQYe2cw/s1600/Pyaar%2BKi%2BPungi%2BSong%2BPromo.jpg

 கரீனா கபூர் தான் ஹீரோயின்.. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோவை கட்டிப்போட்டு விசாரணை பண்ணும்போது தெனாவெட்டு, அதே உல்டா ஆகி அவரை கட்டிப்போட்டு ஹீரோ விசாரணை பண்ணும்போது காட்டும் பம்மல், அழுகை எல்லாம் கலக்கல் ரகம்..  மிக கம்பீரமாக கையாளப்பட்ட இவரது கதா பாத்திரம் க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முன்பு ஏஞ்சோடி மஞ்சக்குருவி ( விக்ரம்) பாட்டு மாதிரியான ஒரு போட்டிப்பாட்டில்  ( தில் மேரா முஃப்த் கா )கவர்ச்சி போட்டி பாட்டு டான்ஸில் சடார் என இறங்கி விடுவது அவர் மதிப்பும் லோ கட் ஜாக்கெட்டும்.. 

படத்தின் முதல் பிளஸ் லொக்கேஷன் செலக்‌ஷன், ஒளிப்பதிவு தான்.. கண்களூக்கு குளிர்ச்சியான ஜொல் சீன்கள் படம் முழுக்க .. ஐ மீன் இயற்கை காட்சிகள்.. விறு விறுப்பாக திரைக்கதை அமைத்த இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.. 


http://www.moviescut.com/wp-content/gallery/agent-vinod/item-song-in-agent-vinod.jpg

  மனதில் நின்ற வசனங்கள்


1.  இந்த ஃபோட்டோல இருக்கற லேடியை இப்போ இங்கே பார்த்தேன்.. 

 அது எங்கம்மா... 

 ஓ! சோ வாட்?

 சி ஈஸ் டெட்.. 

 ம் அது வந்து .. ஒரு வேளை நான் பார்த்தது அவங்க ஆவியாய்க்கூட இருக்கலாமே?


2.  ஏய். நீ அவங்கம்மாவை பார்த்ததா ரீல் விட்டீங்களாமே? 

உங்களுக்கு ஆவில நம்பிக்கை இல்லைங்கறதுக்காக நான் பார்த்தது பொய் ஆகிடுமா?


3.  நீ அவளைப்பார்த்து மயங்கிட்டே-னு நினைக்கறேன்.. அவ பாட்டுக்கு ரீலா விட்டுட்டு இருக்கா.. நீயும் அதை நம்பிட்டு இருக்கியே..?
http://www.hindustantimes.com/Images/Popup/2012/3/saif-agent-vinod-gun.jpg


4.  ரொம்ப தாங்க்ஸ்.. நீ என் உயிரை காப்பாத்திட்டே.. 

 உன் உயிரை காப்பாத்தனும்னு இல்லை. எந்த உயிரும் வீணாப்போறது எனக்குப்பிடிக்காது.. 


5. உனக்கு என்ன தான் வேணும்?

 என் வாழ்க்கை எனக்கு வேணும்... இழந்து விட்ட கணவன், தனி வீடு, செல்ல குழந்தை எல்லாம் எனக்கே எனக்குன்னு வேணும்.. உன்னால தர முடியுமா?


6.  இப்போ நீ எங்கே போக நினைக்கறே.. ? சொல்லி . ஐ டிராப் யூ.. 

 எங்காவது....


7. இப்போ நீ சாகப்போறே.. சாகறதுக்கு முன்னே உனக்கு என்ன வேணும்னு கேள்.. 

 உங்க கிட்டே இருந்து தப்பிச்சுப்போக ஒரு  ஹெலி காப்டர்.. 
http://www.indicine.com/img/2012/02/56-500x381.jpg
 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்,ரசிக்க வைத்த காட்சிகள்


1.  ஹீரோ தன் தலைக்கு மேலே இருக்கும் பரணில்  அசால்ட்டாக , லாவகமாக ஜம்ப் செய்து மேலே போகும் இடம் .. வாவ். 

2. பர பரப்பான சேசிங்க் சீனில் துரத்தப்படும் ஹீரோ ஒரு ஹோட்டல் ரூமில் கண்கள் கட்டப்பட்டு கண்ணாமூச்சி விளையாடும் ஒரு தம்பதி அல்லது கள்ளகாதல் தம்பதியின் ஜிகிடியுடன் ஒரு அவசர டான்ஸ் ஆடி விட்டு செல்வதும். பின் உண்மை கண்ட அந்த ஜிகிடி திகைப்பதும்.. 


3. ஹோட்டல் களேபர சேசிங்க் சீனில் தமிழ்ப்பாட்டான தளபதி பட “ அடி ராக்கம்மா கையைத்தட்டு” ஒலிப்பதும் அதற்கு ஈடான பர பரப்பு சேசிங்கும்.. 


4.  ஒரு மெலோடி லவ் சாங்கை ஓட விட்டு.. அந்த பாடல் முடிவதற்குள் ஒரு ஆக்‌ஷன் களேபரத்தை 3 நிமிடங்களில் சுறு சுறுப்பாக முடிப்பது.. 

5.  கரீனா, மல்லிகா மற்றும் 2 ஆக மொத்தம் ( மொத்தம்னா டோட்டலா.. குண்டா அல்ல) 4 ஜிகிடிங்களை மேக்சிமம் கிளாமரா காட்டுனது)


http://www.radioreloaded.com/adv/j3.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  அண்ட் அவரிடம் சில கேள்விகள்


1. ஓப்பனிங்க் சீன்ல பின்னால் கை கட்டப்பட்ட கைதியின் முன்னால் ஒரு அரை டம்ளர் தண்ணீர் வைக்கப்படுகிறது.. அவர் அதை குடிக்க படாத பாடு படுகிறார்.. பல்லால் டம்ளரை கடித்து அப்படியே தலையை தூக்கினால் கொஞ்சம் தண்ணீராவது வாயில் வந்துடுமே. ?


2. ஹீரோ வில்லன் கூட பேசிட்டு இருக்கும்போது வில்லன் தன் செல் ஃபோனை டேபிள்ல வெச்சுட்டு வாசல் வரை போறாரு.. அவர் திரும்பி வர்றதுக்குள்ள ஹீரோ தன் ஃபோன் சிம்ம்மை கழட்டி வில்லன் ஃபோன்ல பொருத்தி எல்லா டீட்டெயிலும் ஸ்கேன் பண்ணிடறாரு.. 8 செகண்ட்ல இத்தனையும் நடக்குது.. அது எப்படி சாத்தியம்? ஃபோனை கழட்டி சிம் மாத்தினதுக்கே  10 செகண்ட் ஆகும்.. ஸ்கேனிங்க்க்கு அட்லீஸ்ட் 3 நிமிஷமாவது ஆகுமே?


3.  காலைல ஜாக்கிங்க் போறப்ப யாராவது ஆஃபீஸ் ஐ டி கார்டு,சீக்ரெட்ஸ் சி டி எல்லாம் கூட எடுத்துட்டுப்போவாங்களா? ஒரு சீன்ல ஒரு உளவாளியை ஜாக்கிங்க் போறப்ப மறிச்சு, அடிச்சு எல்லாத்தையும் களவாடிக்கற மாதிரி சீன் வருது.. 


4.  தீவிரவாத இயக்கத்தின் அடையாளமாய் ஒரு உருவச்சின்னத்தை வில்லனோட ஆளு பச்சை குத்தி இருக்கான்.. அப்படி யாராவது டெரரிஸ்ட் எல்லாரும் பார்க்கற மாதிரி பப்லீக்கா குத்துவானா? அவனுக்கு மனசுல நயன் தாரா, த்ரிஷான்னு நினைப்பா? அப்படியே மணீக்கட்டுப்பகுதில குத்தி இருந்தாலும் ஃபுல் ஹேண்ட் சர்ட் போடாம ஆஃப் ஹேண்ட் சர்ட் போட்டு பெப்பெரெப்பேன்னு காட்டி மாட்டிக்குவானா?http://jaipur.co/wp-content/uploads/2012/02/malika.jpg


5. ஹீரோவை சுடனும்னு ஆல்ரெடி பிளான் பண்ணி வர்ற வில்லனுங்க அதுக்கு ரெடியா வராம ஹீரோ  காருக்கு பக்கத்துல சைங்க்னு காரை நிறுத்தி விண்டோ கிளாஸ் ஜன்னலை ஓப்பன் பண்ணிட்டு இருக்கான்.. ஆல்ரெடி அதை ஓப்பன் பண்ணிட்டு வந்தா வேலை முடிஞ்சுது?

6. ஆக்‌ஷன் படமான இதுல பல காட்சிகளில் எம் ஜி ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்  படத்துல வர்ற தீம் மியூசிக் சுட்டிங்க். ஏன் புது இசை இல்லையா?


7. ஒரு சீன்ல ஆட்டோவுல வர்ற வில்லனின் அடியாள் எதுக்கு டிராஃபிக் கான்ஸ்டபிளை சுடறார்? அப்படி சுட்டா ஆல் டிராஃபிக் உஷார் படுத்தப்பட்டு சேஸ் பண்ணப்படுவோம்னு தெரியாதா? அதுக்குப்பதிலா அந்த பேசஞ்சர்ஸ் 2 லேடீஸையும் மிரட்டி இரக்கி விட்டுட்டு போய் இருக்கலாமே?


8. ஒரு சீன்ல வில்லன் ஹீரோயினை மர்டர் பண்ண முயற்சிப்பது போல் ஒரு சீன்.. ஹீரோயின் ஹால்ல சோபால உக்காந்திருக்கா... வில்லன் சத்தம் இல்லாம அவ பின்னால போய் ஈசியா கழுத்தை நெரிச்சிருக்கலாம். அதை விட்டுட்டு லூஸ் மாதிரி சமையல் அறைல வேணும்னே எதையோ கொட்டி ஹீரோயினை அங்கே வர வெச்சு கொலை பண்ண ட்ரை பண்றாரு.. சமையல் அறைல கத்தி உட்பட அரிவாள் மனை எத்தனைஆயுதம் இருக்கு. அதி எடுத்து ஹீரோயின் தாக்குவார்னு தெரியாதா/ ( இன்னொரு டவுட் நான் டைரக்டரா  இருந்தா அந்த சீன்ல க்ளோரோஃபார்ம் குடுத்து ஹீரோயினை ரேப் அண்ட் மர்டர் பண்ணிட்ட மாதிரி எடுத்திருப்பேன்.. 

9. க்ளைமாக்ஸ்ல பாம் வெடிக்க 7 நிமிஷம் தான் இருக்கு. அந்த 7 நிமிசத்துல ஹெலி காப்டரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பத்தான் நேரம் சரியா இருக்கும்
.. ஆனா ஹீரோ 20 நிமிஷம் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் அந்த 7 நிமிஷத்துல செஞ்சுடறாரு... 
http://hindifilmnews.com/wp-content/uploads/2012/02/Mallika-Haydon-hot-sexy-bikini-pictures-agent-vinod-item-song-sister-of-lisa-haydon-01.jpg

 ஆக்‌ஷன் பிரியர்கள் அனைவரும் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கற மாதிரி கண்ணியமாத்தான் படம் இருக்கு.. பாலிவுட்ல இது ஹிட் அடிக்கும். ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_horizontal/article-images/saif_1.jpg.crop_display.jpg

7 comments:

ராஜி said...

இந்தி படமுமா? ம் ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும்

காங்கேயம் P.நந்தகுமார் said...

அடுத்த போஸ்ட் நிச்சயம் பட்ஜெட் பற்றிதான் இருக்கும்!

ஹாலிவுட்ரசிகன் said...

இந்திப் படம் தமிழ்ல டப்பாகி ரிலீஸ் ஆகிட்டுதா? வசனம் வசனமா கலக்குறீங்க?

rajamelaiyur said...

நல்ல விமர்சனம்

rajamelaiyur said...

இன்று

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?

ஸ்ரீராம். said...

படத்தின் பெயர் பழைய முத்து காமிக்ஸ் புத்தகத் தலைப்பை ஞாபகப் படுத்துகிறது.

ஆர்வா said...

ட்ரெய்லர்லையே ரசிக்க வெச்சிருந்தாங்க.. இன்னும் பாக்கல.. எனக்கு ஹிந்தில பாக்கணும்ன்னுதான் விருப்பம்..