Thursday, March 29, 2012

ஒவ்வொரு காதலனும் காதலியிடம் சொல்லும் ஒரே பொய் என்ன?


1ரேணு - ஆஃபீஸ் போய்ட்டு வர்றேன் டாடி.. 

ஜாக்கிரதையாப்போய்ட்டு வாம்மா,எவன் கண்லயாவது பட்டு அவன் லைஃபை கெடுத்துடாதே?

--------------------------------

2.  கை கோர்த்து நடக்க விரும்புகிறது காதல், கை கொடுத்து தூக்கி விடுகிறது நட்பு

---------------------------------

3. வாழ்க்கை என்பது ஒரு அரிய பயணம், அது மேப்புடன் வருவதில்லை, நாம் தான் நம் சொந்த வழிகளின் மூலம் இலக்கை அடைய வேண்டும்

------------------------------

4 தனித்து போட்டியிட தே.மு.தி.க., முடிவு : # தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன். 

---------------------------

5.சி.டி., ஆதாரத்தை வெளியிடுவேன்: நடிகை சோனா # அட போம்மா!இப்படியே தான் 4 நாளா சொல்றீங்க!

----------------------6.புனிதமான கேரக்டர் கிடைத்தால் நயன் தாரா நடிப்பார் - பிரபுதேவா # அப்போ இத்தனை நாளா  கேவலமான கேரக்டர்லயா நடிச்சார் ? 

--------------

7. இன்றைய செய்தி - வீடியோ ஆதாரத்தை கமிஷனரிடம் கொடுத்தார் சோனா. நாளைய செய்தி - கமிஷனர் வீடியோ கேசட்டை பார்த்த போது கைதானார்

----------------------------------

8. ஆ ராசா - ஹெலிகாப்டரில் நான் ஸ்விட்சர்லாந்து சென்ற போது என் மணி பர்ஸ் ஸ்லிப் ஆகி கீழே விழுந்தது, அதுவே ஸ்விஸ் பேங்க் என அழைக்கப்படுகிறது

------------------------------9. நடிகை சோனா மீது கமிஷனர் குற்றச்சாட்டு, எதிர்பார்த்த அளவு கேசட்டில் ஏதும் இல்லை # அண்ணே , என்ன எதிர்பார்த்தீங்க?

------------------------------

10. காஜலை தேடி வரும் கில்மா படங்கள்...! வாய்ப்புகள் # போஸ்டர்ல காஜல் நடிக்கும் அஜால் குஜால் படம்னு விளம்பரம் பண்ணலாம்.!


---------------------------11.என் கையால்அடிவாங்குபவன் மகாராஜாஆவான் - கேப்டன் , என்கையைபிடிச்சு இழுத்தவன் ஒரே நாளில் ஃபேமஸ் ஆவான் - சோனா # அரிய வாய்ப்பு  நழுவ விடாதீர்

-------------------------------------

12.லஞ்சம் என்பது அன்பளிப்பின் மறுஊ மொழி என்பவர்கள் அன்பை கேவலப்படுத்துகிறார்கள்

-----------------------------------

13. மற்றவர் எதிர்காலத்தை கணிப்பதாக கூறப்படும் கிளி ஜோசியனும் சரி ,  கிளியும் சரி பிரகாசமான எதிர்காலம் கொண்டா இருக்காங்க?

-------------

14. நீ கூந்தலில் சூடும் ரோஜா உன்னை விட அழகில் குறைந்தது என்பதால்தான் உன் முகத்துக்குப்பின் ஒளிந்துகொள்கிறதோ?

-------------------------------

15. நீயே என் முதலும், கடைசியுமான காதலி என்பதே ஒவ்வொரு காதலனின் முதல் பொய்யாக இருக்கிறது

--------------------------------------

16.காலில் ஈரம் படாமல் கடற்கரையில் நடை பயின்றவர்கள் உண்டு, ஆனால் கண்களில் ஈரம் தொடாமல் வாழ்க்கையை கடந்தவர் இருக்க முடியாது

--------------------------------

17.யார் தவறு செய்தார்கள் என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் , என்ன தவறு என்பதை முதலில் பார் # ஆஃபீஸ் மீட்டிங்கில் டேமேஜர்

-------------------------------

18 வாழ்க்கை என்பது ஓவியம் அல்ல,மாற்றி மாற்றி வரைய, அது சிற்பம் போல, செதுக்கினால் செதுக்கியதுதான் -கு அழகிரிசாமியின் சிறுகதையிலிருந்து

--------------------------------

19 காதல் என்பது ஸ்டேப்ளர் பின் செட் போல, அட்டாச் பண்றது ஈஸி, அதை பிரிக்கறது கஷ்டம்

--------------------------------

20. ஐ லவ் யூ என சொல்ல 3 செகண்ட்ஸ் போதும், அதை விளக்க 3 மணிநேரம் ஆகும், அதை நிரூபிக்க வாழ்நாள் முழுதும் தேவைப்படுது

-------------------------------
பனங்கிழங்கு ...அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே

21. உன் கண்கள் கண்ணீர்ப்பூக்களை உதிர்க்கும்போது முதலில் ஓடி வருபவர் நீ நேசிப்பவரா? உன்னை நேசிப்பவரா?

--------------------------------

22. டியர்,நான் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவன்னா நம்ப மாட்டேங்கறியே.. ஏன்? 

டெயிலி பீச்ல மட்டும் 32 ரூபா செலவு பண்றியே?

---------------------------------
23 ஒருவரை நேசிக்க 1000 காரணங்கள் இருந்தாலும் அவர் ஒரு சின்னத்தவறு செய்தாலும் அவரை வெறுக்க நினைக்கிறது மனித மனம்

-----------------------------

24. எழுத்துக்களாய் நான் சிதறிக்கிடந்தேன்.. நீ என்னைப்பார்த்தாய்! நான் கவிதை ஆகி விட்டேன்

----------------------------------

25. கொதிக்கும் வெய்யில் மணலில் கால்கள் நடக்கையில் ஒதுங்க நிழல் தேடும், அப்படித்தேடப்பட்ட நிழல்தான் உன் அன்பு!

-------------------------------

26 சிரிப்பு என்னும் சாவி தொலைந்து விட்டால் சந்தோஷம் என்னும் வீடு பூட்டியே கிடக்கும்

---------------------------

27.தன்னை நேசிப்பவர் ,தான் நேசிப்பவர் மகிழ்ச்சிக்கு தான் காரணம் இல்லாவிட்டாலும் அவர்கள் மகிழ்ச்சிக்காக ஏங்கி இருந்தால் அதுவே உண்மையான அன்பு

--------------------------

28 மறைந்த சூரியன் மீண்டும் உதய சூரியனாக வரும் - குஷ்பூ ட்விட்டரில் # மேடம், இது தத்துவமா? அபாய அறிவிப்பா?

-----------------------

5 comments:

Unknown said...

நீ எம்பூட்டு அழகா இருக்க....இப்படியிம் பொய் சொல்லலாம்....

Unknown said...

கரண்ட கண்டா இந்தாள காணம்..இந்தால கண்டா கரண்ட காணோம்...!

ஆர்வா said...

சோனா மேட்டர்ல ரொம்ப தீவிரமா இருக்கீங்க போல...

ராஜி said...

வாழ்க்கை என்பது ஒரு அரிய பயணம், அது மேப்புடன் வருவதில்லை, நாம் தான் நம் சொந்த வழிகளின் மூலம் இலக்கை அடைய வேண்டும்
>>>
வித்தியாசமான கோணத்தில் வாழ்க்கை தத்துவம். நல்லா இருக்கு.

Avargal Unmaigal said...

என்ன சார் ஜோக்கு எழுதும் நீங்கள் இன்று ரொம்ப தத்துவமா உதிர்த்து இருக்கிறீர்கள். வீட்டில் சண்டையா அல்லது மனோசார் வந்து "டீ" வாங்கி கொடுத்துவிட்டு சென்றாரா அல்லது உங்களுக்கு வயதாகிவிட்டதா?

எது எப்படியோ தத்துவங்கள் அருமை