Thursday, December 15, 2011

நாளைய இயக்குநர் -காமெடி , காதல் கதைகள் - விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbhj_dm6l6nCmX-G2LI9vKce7p0xM1hYD4f8hXJTd3D9AExTWDnczWLCVGYWKRxIQ1-4WFuo8sBy1c8vNsJknkhhyphenhyphencq97I7NiPs2JKctvGaXGWaEvwy4pKovVKIc9WeG9pHwZxAMoMEjm4/s320/keerthy+jewellery+model.jpg

கலைஞர் டி வி ல வாரா வாரம் ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு  வர்ற நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு நான் ஒரே ஒரு கரெக்‌ஷன் மட்டும் சொல்லிக்கறேன்.. ஜட்ஜா வர்ற கே பாக்கியராஜ், சுந்தர் சி 2 பேரும் கோட் சூட்லதான் ரெகுலரா வர்றாங்க, அது போர்.. இயல்பா பேண்ட் சர்ட்ல வரலாமே?அப்புறம் கீர்த்தி எப்பவும் நைட்டி அல்லது பெட்டிகோட் மாதிரி ஒரு டிரஸ் போட்டுட்டுதான் வர்றாங்க.. அது ஏன்? சேலை, சுடினு டீசண்ட்டா வரலாமே? இன்னைக்கு கீர்த்தி ஏதோ சி டி மாதிரி ஒரு டாலர் செயின் போட்டு வந்தாங்க, அய்யோ ஹய்யோ

கீர்த்தி - உங்களை பொருத்தவரை ஆக்‌ஷன் , காதல் , காமெடி எந்த மாதிரி படம் எடுக்கறது டஃப்?

கே பாக்யராஜ் - என்னை பொறுத்தவரை எல்லாத்துக்குமே மூளையை கசக்க வேண்டி இருக்கு. இன்று போய் நாளை வா மாதிரி காமெடி சப்ஜெக்ட்டுக்கும் சரி, ஒரு கைதியின் டைரி மாதிரி ஆக்‌ஷன் படங்களுக்கும் சரி சீன் ரெடி பண்ண ரொம்பவே மெனக்கெடறோம்..

1. இயக்குநர் பெயர் - பிரசாந்த் - குறும்படத்தின் பெயர் - வடுகப்பட்டி ராம்சாமி

ஒரு காலேஜ் ஹாஸ்டல் ரூம். அதுல 3 ஃபிரண்ட்ஸ் தங்கி இருக்காங்க.. அவங்க ரூம்க்கு புதுசா ஒரு ஃபிரண்ட் வர்றான்.. அவன் தான் வடுகப்பட்டி ராம்சாமி.. அண்ணன் செம ராசியான ஆளு.. அவர் முகத்துல விழிச்சுட்டு போனதால்  ஒருத்தன் சேற்றில் விழுந்துடறான்.. இன்னொருத்தன் தன் காதலியின் அண்ணனிடம் அடி வாங்கறான். 3 வது ஆளு தன் ஆள் கிட்டே லவ் பிரப்போஸ் பண்ணி அது ரிஜக்ட் ஆகுது.. 3 பேரும் சேர்ந்து அந்த ராம்சாமியை துரத்தி விட்டுடறாங்க.. 

நல்லா காமெடியாத்தான் இருக்கு.. ஆனா இது ஒரு சம்பவம் மாதிரிதான் இருக்கே ஒழிய  ஒரு கதையாவோ, குறும்படமாவோ பிரமோட் பண்ணாம இருக்கு.. ஃபினிஷிங்க் டச் இல்ல. முழு நிறைவு வர்ல. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

2.  இயக்குநர் பெயர் - ஷஃபி  - குறும்படத்தின் பெயர் -தூவானம்

ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி.. ஒரு அம்மா அப்பா.. 18 வயசு பையன்.. ஓப்பனிங்க்ல அம்மா தைரியமா சொல்லிடும்மா என்கிறான் பையன்.. ஏதோ அவனோட லவ் மேட்டரை அவனோட அப்பா கிட்டே சொல்ல சொல்றதா ஒரு பில்டப். அப்புறம் பார்த்தா அம்மாவோட ஃபிளாஸ்பேக் காதல் ...அவங்க லவ் பண்ற பையனை அடிச்சு மிரட்டி துரத்திடறாங்க. அவங்களால தைரியமா நின்னு காதலை கவுரவிக்க முடியலை.. காதலனுக்கு வேற பக்கமும், இவங்களூக்கு வேறொருவர் கூடவும் மேரேஜ் ஆகிடுது.. இப்போ தன் பையனின் க்ளாஸ்மேட்டின் அப்பா தான் தன் முன்னாள் காதலன்கரதை தெரிஞ்சுக்கிட்டு  அவனை சந்திக்க மன்னிப்பு கேட்க ஆசைப்படறா.. ஆனா முன்னாள் காதலன் இறந்துட்டதா தகவல் தெரிய வருது..

இந்த கதைல மேக்கிங்க் ஸ்டைல். வசனம், எல்லாத்தையும் விட பிரமாதமான விஷயம் என்னான்னா அம்மாவா நடிச்ச மேடம் , அவங்க ஃபிளாஸ்பேக்ல வர்ற பொண்ணோட முகச்சாயலுடன் 100% ஒஹ்த்டுப்போற மாதிரி ஆர்ட்டிஸ்ட்டை தேடி கண்டு பிடிச்சதுதான்.. ( ஒரு வேளை அம்மா, பொண்ணாகவும் இருக்கலாம்.. ) ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷனுக்காகவே இந்த பட டைரக்டரை பாராட்டலாம் வெல்டன்..

3. இயக்குநர் பெயர் - பால மனோகர்  - குறும்படத்தின் பெயர் -காலேஜ் திருட்டு


ஒரு காலேஜ் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண் மாடியிலிருந்து குதிச்சு
தற்கொலை பண்ணிக்குது. ஆனா,யாருக்கும் காரணம் தெரியலை. அது போலீசு கேசாகி எல்லா பசங்க கிட்டயும் விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஒருத்தர் வரார்.
எல்லா பசங்ககிட்டயும் விசாரிக்குறார். எல்லார்மே அந்த பொண்ணு ரொம்ப நல்லபொண்ணுன்னு சொல்லி குட் சர்டிஃபிகேட் குடுக்குறாங்க. மண்டைய பிச்சுக்குற போலீஸ்காரர், அந்த பொண்ணோட க்ளோஸ் ஃப்ரெண்டை கூட்டிக்கிட்டு போய் விசாரிக்குறார்.

அட, ஏம்பா எல்லாரும் ஆர்வமாகுறீங்க, அவர் அந்த மாதிரி போலீஸ்கார்ர் இல்லை. இவர் காக்க காக்க சூர்யா, வேட்டையாடு விளையாடு கமல், தங்க பதக்கம் சிவாஜி, மூன்றுமுகம் ரஜினி போல ரொம்ப நல்ல போலீஸ்காரர். பாப்பாவும் எல்லாரையும் போல நல்ல பொண்ணு, சொக்க தங்கம்னு சர்டிஃபிகேட் குடுக்குது. அவ ரூமுல தனக்கு ஒரு க்ளூ கிடைச்சிருக்குறதாகவும், அதன்படி பார்த்தால், நீதான் அவ சாவுக்கு காரணம்னு பிட்டை போடுறார்(இது அந்த பிட்டோ,  பரிட்சை பிட்டோ இல்லை).

உடனே பாப்பா அழுதுக்கிட்டே தான் காரணம் இல்லைன்னும் ----ன்ற பையந்தான் காரணம்னு கொசுவர்த்தி ஏத்துது. அட அதான்பா பிளாஸ்பேக் ஓட்டுது. ஃப்ரெண்டாகி கடலை வறுக்க ஆரம்பிச்சு இருக்கு. வறுத்த கடலை ரொம்ப தீய்ஞ்சு போய் அந்த பையனை மத்த பொண்ணுங்க கூட பேசாத, கடலை போடாதே, சைட்டிக்காதேன்னு சொல்லியிருக்கு. பெத்தவங்க சொல்லியே கேக்காத நாம ஃபிகர் சொல்லியா கேட்க போறோம். அதுல கோவமாகி அந்த பையன் பாப்பாக்கிட்ட என்னை ஏன் இப்படிலாம் இம்சை
பண்ணுறே. உன்கூட மட்டும்தான் ஃப்ரெண்டா இருக்கனும்னு ஏன் என்னை
நச்சரிக்குறே, நீ செத்தாதான் நான் நிம்மதியா இருப்பேன்னு சொல்லி கோவமா
போய்டுறான். அதனால மனம் வெறுத்து போய் அந்த பொண்ணு மாடியிலிருந்து தற்கொலை பண்ணிக்கிட்டான்னு அவ ஃப்ரெண்ட் சொல்ல கேஸ் ஃபைலை மூடிடுறாங்க.

 லாஜிக் மிஸ்ஸிங்க்.. இதுக்கெல்லாமா தற்கொலை செஞ்சுக்குவாங்க? ஆனா ஒரு இன்வெஸ்டிகேஷன் படத்தை டைரக்ட் பண்ற சாமார்த்தியம் அந்த இயக்குர்ட்ட இருக்கு.. நல்ல ப்ளாட் தான் அமையலை.. 


 4.  - குறும்படத்தின் பெயர் -அகலாது - இயக்குநர் பெயர்- சீனிவாசன்


ஓப்பனிங் சீனில் இன்னிக்கு நமக்கு கல்யாண நாள். கல்யாண நாளைக்கு இங்க வரனும்னு தோணுச்சுன்னு வயசான பெருசு ரெண்டுங்க பேசிக்கிட்டு இருக்காங்க. பேசிக்கிட்டு இருக்கும்போதே தங்கள் இளமைக்கால நாட்களுக்கு போகுது அவங்க நினைவு....,

சுதந்தர போராட்ட காலத்தில் அவங்களுக்கு டீனேஜ். அப்போ அந்த ஹீரோ காந்தியோடு சேர்ந்து ரொம்ப தீவிரமா போராடுறார். அவர் வீரத்தில் மயங்கி ஹீரோயின் காதலிக்குறாங்க.  ஆனால், ஹீரோவுக்கும் மனசுல காதல் இருந்தாலும், சுதந்திரத்திற்கு அப்புறம்தான் கல்யாணம்ன்னு சொல்லிடுறார்.

அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்குறதை ஹீரோயினோட அப்பா பார்த்துடுறார். வீட்டுக்கு வந்து  இனி நீ சுதந்தர போராட்டம் அது இதுன்னு சொல்லி வெளிய போக்க்கூடாது. உடனே மாப்பிள்ளை பார்த்து உனக்கு கல்யாணம்ன்னு சொல்லிடுறார்.

ஹீரோயின் ஹீரோக்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி, எனக்கு கல்யாணத்துல இஷ்டமில்லைன்னும், ஆனால், அதுக்காக, நீங்க, உங்க கொள்கையை விட்டு குடுக்க வேணாம், நான் கஸ்தூரிபாய் தலைமையில நடக்குற போராட்டத்துல கலந்துக்க நம்ம ஊரு பொண்ணுங்க போறாங்க. அவங்களோடு நான் போய்க்குறேன். அப்படி போகனும்னா எனக்கு பணம் வேணும். அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணி குடுங்கன்னு கேட்குறாங்க.


 ஹீரோவும் எங்கெங்கெல்லாமோ கேட்டு பார்க்குறார். ஆனால், பணம்தான் கிடைக்கலை. கடைசியா ஒருத்தர் சொல்றார், தன்கிட்டயும் பணமில்லை ஆனால், இந்த ஊர் பண்ணையார் பொண்ணு கல்யாணம் ஆகி கைக்குழந்தையோடு விதவையாயிருக்கு. அதை கட்டிக்கிட்டால், உனக்கு பணம் கிடைக்கும்னு வழிக்காட்டுறார். 

சரின்னு சொல்லி பணம் வாங்கி ஹீரோயின்கிட்ட குடுத்துட்டு, விதவை பொண்ணை கட்டிக்கிட்டு வண்டியில வரும்போது எதிர்க்க வண்டியில ஹீரோயினும் வேற ஒருத்தரை கல்யாணம் கட்டிக்கிட்டு வராங்க.
என்ன ஏதுன்னு விசாரிச்சால், போராட்டத்துக்கு கிளம்புகையில் அப்பாக்கிட்ட மாட்டிக்கிட்டதால்  கல்யாணம் கட்டிக்கிட வேண்டியதாகிடுச்சுன்னு சொல்லி பிளாஸ்பேக்கை முடிச்சு நிகழ்காலத்துக்கு வராங்க.


சரி அவர் காத்துக்கிட்டு இருப்பார்ன்னு பாட்டியும், அவளுக்கு மருந்து வாங்கனும்னு தாத்தாவும் எதிரெதிர் திசையில் பிரியுறதா காட்டுறாங்க.
கதையும் நல்ல கதை, டெக்னிக்கல் விஷயம்,  நடிகர்கள் தேர்வு, இசைன்னு பக்காவா இருந்ததால், இந்த படத்துக்கு பெஸ்ட் ஃபிலிம் அவார்டும், பெஸ்ட் டெக்னிஷியன்சுக்கான அவார்டும் கிடைச்சுது. 

டிஸ்கி - கீர்த்தி ஜ்வல்லரி விளம்பரத்துக்கு  எடுத்த மாடல் ஃபோட்டோவை கீர்த்திக்கு சம்பர்ப்பிக்கிறேன்

11 comments:

Thozhirkalam Channel said...

தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...

ராஜி said...

விமர்சனத்துக்கு நன்றி

Unknown said...

1. காமடி பண்ண முயற்சியோ!

2. இலையுதிர்காலமோ...

3. போலீஸ் போலீஸ்...

4. வாழ்கை வாழ்வதற்கே...

எப்படி நம்ம கமென்ட் ஹிஹி!

பொ.முருகன் said...

உங்கள் ப்ளாக்கை ஓபன் செய்தாலே என் கம்ப்யூட்டர் தினருகிறது. ஏன்? கொஞ்சம் கவனிங்க பாஸ்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே கீர்த்தி கிட்ட வழியாதிங்க....

ரிஷபன் said...

பார்க்கத்தவறிய காட்சி.. பதிவில் கண்டு ரசித்தேன்.

K.s.s.Rajh said...

விமர்சனம் அருமை இரண்டாவது படம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்

Admin said...

விமர்சனம் சிறப்பு..

rajamelaiyur said...

கலக்கல் விமர்சனம் ...

Menaga Sathia said...

சிறப்பான விமர்சனம்!!

ம.தி.சுதா said...

சீபி மூன்றாவது கதையில் லொஜிக் தவறியிருந்தாலும் ஒரு வித அழுத்தம் இருப்பது பிடித்திருக்கிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்