Friday, November 11, 2011

தம்பி வெட்டோத்தி சுந்தரம் - சினிமா விமர்சனம்

http://tamilpaa.files.wordpress.com/2011/08/bc94f_thambi-vettothi-sundaram-9.jpg?w=330&h=458 

கேரளா பார்டர்ல நடந்த உண்மைக்கதைன்னதும் நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன்.. சாதாரண ரேஷன் அரிசி  & கள்ளச்சாராயம் கடத்தல் காரனின் காதல் கதைதான்...கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த  ஒரு ரவுடியின் உண்மைச் சம்பவம்தான் தம்பி வெட்டோத்தி சுந்தரம்

பி ஏ பி எட் படிச்சுட்டு டீச்சர் வேலை செய்ய ஆசைப்பட்டு அதுக்கு ஹீரோ கரண் ட்ரை பண்றாரு.. ஆனா கிடைக்கலை.. உடனே போலீஸ் வேலைக்கு ட்ரை பண்றாரு. அதுவும் கிடைக்கலை.. பணம் கொடுத்தாத்தான் கவர்மெண்ட் வேலைன்னு சொன்னாங்காட்டியும் ஹீரோ என்ன பண்றாரு.. ரேஷன் அரிசி கடத்தற சரவணன் கூட கூட்டு சேர்ந்து  கள்ள சாராயம் கடத்தறார்.. ( எல்லா அன் எம்ப்ளாயிமெண்ட் கேண்டிடேட்ஸூம் நோட் பண்ணிக்குங்கப்பா).

அவரு அஞ்சலி கூட லவ்ஸ்.. அஞ்சலி வில்லனோட மக.. அட இவ்வளவுதான் கதையா?ன்னு யாரும் சர்வசாதாரணமா நினைச்சுடாதீங்க, அஞ்சலியோட ஃபி:ளாஸ்பேக்ல அவங்கம்மாவைக்கொன்ன கதை, , அவங்கம்மாவைக்கொன்னவனோட வாரிசு அஞ்சலி ஃபேமிலியை துரத்தற எக்ஸ்ட்ரா கதை எல்லாம் இருக்கு.. திரைக்கதை எழுதவே 2 குயர் நோட் செலவு ஆகி இருக்கும்னு நினைக்கறேன்..

 கரண்- க்கு சந்தேகமே இல்லாம இது ஒரு முக்கியமான படம்தான்.. கோபம், காதல், கிண்டல், வீரம், பழி வாங்கும் உணர்ச்சி-ன்னு  கலந்து கட்டி அடிக்கற ரோல்.. மனுஷன் புகுந்து விளையாடி இருக்கார்..

அஞ்சலி சும்மா வந்துட்டுப்போனாலே தமிழன் கை தட்டுவான்.. நல்லா நடிச்சா? கேக்கவே வேணாம்.. சாதாரண கேரக்டரைக்கூட ஸ்பெஷல் நடிப்பால பிரகாசிக்க வைக்கிற டேலண்ட் பாப்பாட்டா இருக்கு ( சரி சரி, அடுத்த பேராவுக்கு வாப்பா)

சரவணன் பருத்தி வீரனுக்கு அப்புறம் கிடைச்ச செம கல கல கேரக்டர்.. ஆங்காங்கே குணச்சித்திரம்.. 

அது போக படத்துல நடிச்ச 168 கேரக்டர் பற்றியும் சொல்லிட்டு இருந்தா இடம் போதாது.... அதுவும் இல்லாம அந்த 168ல 146 பேர் கொல்லப்படறாங்க .. தடுக்கி விழுந்தா கொலை தான். 

ஹீரோயினுக்கு ஃபிரண்டா வர்ற  அழகு ஃபிகர்கள் அப்டினு ஒரு கட்டுரை யாராவது எழுதுனா இந்தப்படத்துல வர்ற தோழியை முதல்ல மென்சன் பண்ணிடுங்க.. பார்ட்டி செம கலர் & நல்ல முக வெட்டு 

கஞ்சா கறுப்புக்கு கத்தறதுதான் காமெடி இன்னும் ஒரு நினைப்பு இருக்கு பாவம்.. 

 http://www.hotmalayalamactress.in/wp-content/uploads/2010/10/Hot-Anjali.jpg

படத்தில் ரசிக்க வைக்கும் வசனங்கள் ( பா. ராகவன் )

1.  வாங்க வாங்க.. பந்தயம் ஜெயிச்சா 200 வெச்சா 400

400க்கு எவ்ளவ் சைபர்?

திங்கிங்க்.. 

பிறந்ததுல இருந்தே இவன் தோத்து நான் பார்த்ததே இல்ல.. 

2.  உனக்கு கரண்ட்னு எவண்டா பேர் வெச்சது?

ஊர்ல தான் கரண்ட் இல்ல,, பேருலாயாவது கரண்ட் இருக்கட்டுமே..

3. வெ ஆ மூர்த்தி - அட.. அடுத்தவன் சாமான்னா அலேக்கா தூக்கிட்டு வந்துடுவீங்களே?

4. அடி வாங்கிட்டு உன்னால எப்படி சிரிக்க முடியுது?

அது என் கேரக்டர் சார்.. 

5. சார். சார்.. உடனே திரும்பி பாருங்க சார்.. 

ம்க்கும்.. நீங்க ஜஸ்ட் மிஸ்,.. அவன் அப்பவே எஸ்..
6. கண்டக்டர் - முன்னுக்கு போ..  முன்னுக்கு போ.

க, கருப்பு - நாங்க எல்லாம் அப்பா அம்மா சொல்லியே கேட்கல.. நீ சொல்லியா கேட்கப்போறேன்.. 
அதானே , கேட்டிருந்தா உருப்பட்டு இருப்பியே ( ஜோக் - பை டாக்டர் சி ராஜேந்திரன்  இன் பாக்யா 2009  ஆகஸ்ட் 9)


7.  அடேய்.. என்னடா அவ மேல பார்வை?  கிழக்கே போகும் ரயில்?

கள்ளக்காதல்?

ம்

நொள்ளக்காதல்.. அடேய்.. நாடு பூரா இதாண்டா நாறிட்டு இருக்கு.. 

8.  ஒரு பொண்ணு ஒரு ஆம்பளை கிட்டே நட்பா இருக்க முடியதா?

9.  யார் இந்த 3 வது மனுஷன்?

போலீஸ்!


லத்தியை காணோம்?நாங்க லத்தி இருந்தாதான் போலீஸ்னு நம்புவோம்.. 

10.  என் செண்டிமெண்ட் காசு ஒரு ரூபாயை பிடுங்கிட்டு வேற ஏதோ 5 ரூபா காசு தர்றாடா.. 

அட விடு .. எப்படி பார்த்தாலும் உனக்கு 4 ரூபா மிச்சம் தானே?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifHJFkdNwOoRE-bnwyXn3hPHpE0aArJEJRcFVlV0bgxsnqH8VWpqep8TEJKiNyoMq7kfyEdyQ3Q-D-V4nDGdP2ibfOgtS0qtEYbmsXtUTlf7X4RRcNrDEqOvCf6nqNU-zMtWpdertxiWg/s1600/Tamil-Actress-Anjali-latest-stills-photos-06.jpg

11. ஏங்க.. எனக்கு?

சாரி. கண்ணாடி போட்டவனுக்கெல்லாம் கஞ்சி வராது..

12. யோவ்.. கல்லாங்காட்டுல சும்மாதானே இருக்கே? லவ் பண்ணா குறைஞ்சா போயிடுவே?

------

10 ரூபா கண்ணாடியை கழட்டிட்டு பாருடா எருமை  ( என்னைத்தான் சொல்றாங்களா?)


13.  பொண்ணு தானா வருது.. ஏண்டா அதை புரிஞ்சுக்க மாட்டேங்கறே.. 

அடேய்.. இந்த மாதிரி  எடக்கு மடக்கா சொல்லித்தந்ததாலதான் தமிழ்நாட்ல பாதிப்பேரு கிறுக்கு பிடிச்சு அலைஞ்சிட்டு இருக்கான்..

14. உன் ஆள் என்ன பண்றான்.. ? பார்க்க கேனம் போல் இருக்கான்...

அடியேய்.. அவர் துபாய் கிணத்துல வேலைடி.. மாசம் ரூ 50000 சம்பளமாம்.. 

பார்த்துடி, ஒட்டகம் மேச்சுட்டு இருக்கப்போறான்.. 

15. .. ம் ம் ... இதை பிச்சுக்கலாமா? 

அய்யோ வேணாம்.. எல்லாரும் பார்க்கறாங்க..
அடச்சே.. உன்னைப்போய் லவ் பண்ணேன் பாரு.. 

16. போலீஸ் - வண்டில என்ன லோடு?

ம்.. வாழைப்பழ தாரு சார்.. 

எதுக்கு தார்ப்பாய் போட்டு மூடி இருக்கு? 

வெய்யில்ல என்னை மாதிரி கருத்துடக்கூடாதுன்னுதான்.. 

17. இந்த நாட்ல படிச்சவனுக்கு வேலை கிடைக்கலைன்னா பாழாப்போறது அவன் இல்லை.. இந்த சமூகமும் நாடும் தான்..  ( செம கிளாப்ஸ்)

18. உடம்பு கெட்டா மனசு கெட்டுடும்.. மனசு கெட்டா உடம்பு கெட்டுடும், 2ம் கெட விடலாமா?

19.  இப்போ மணி மிட் நைட் 12.. இப்போ போய் பணம் கேட்டா அவர் கொடுப்பாரா?

இந்த நேரத்துலதான் மனுஷன் சந்தோஷமா இருக்கற நேரம்..  ட்விங்க்கிள்   ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்.. அண்ணன் ஒரு மேட்டர் ஸ்டார்..  ( செம கைதட்டல்)

20.  இத்தனை நகை வெச்சுக்கிட்டு அதை ஏன் கழட்டித்தராம இருக்கானேன்னு சந்தேகப்படாதே.. ஆல் கவரிங்க்.. எல்லாம் கவர் பண்ணத்தான் ஹி ஹி 


http://i.indiglamour.com/photogallery/tamil/freshface/2011/jan29/Anjali/normal/Anjali_30506rs.jpg

21.  டேய்.. எட்டாங்கிளாஸ்ல உனக்கு சொல்லித்தரலையா? ஸ்பிரிட் ஐஸ் ஆகனும்னா அது மைனஸ் 120 டிகிரில இருக்கனும் ( சத்தியமா எங்க சயின்ஸ் டீச்சர் செந்தாமரைச்செல்வி சொல்லித்தரவே இல்லை யுவர் ஆனர்...)

22. சுக்கிர திசை நடக்கறதா சொன்னாங்க/. சூறாவளி வந்திருக்கு?

23.  டேய்.. 12 சி பஸ் இங்கே நிக்குமா?

இங்கே நிக்காது.. கொஞ்சம் தள்ளி நிற்கும்.. 

24.  லவ் பண்ணுனா  மேரேஜ் மட்டும் பண்ணீ வைங்கடா.. எதுக்குடா மதம் மாத்தறீங்க? ( ராகவன் சாருக்கு நயன் தாரா மேல என்ன கோபமோ? ) தியேட்டரில் செம கிளாப்ஸ்

25.  இவரு அடிப்பாரு.. நாம பார்த்துட்டு இருக்கனுமா?

வயசான ஆளுங்களை நான் அடிக்கறதில்லை.. 

26. உடனே ரூமைப்போடறோம்.. ஒரு கட்டிங்கை அடிக்கறோம்.. யோசிக்கறோம் ( 3 முறை வரும் இந்த டயலாக் செம வரவேற்பு)

http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-actress/anjali/anjali-_17__002.jpg


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. இத்தனை நட்சத்திரப்பட்டாளத்தை வைத்துக்கொண்டு, குழப்பம் இல்லாமல் திரைக்கதை அமைத்த விதம்.. 

2. கொலை காரி  பாட்டு செம மெலோடி.. அந்த பாட்டின் பிக்சரைசேஷன் செம.. தென்னந்தோப்பு சூழந்த கடற்கரை பிரதேசம்.. ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை.. 

3.  கரண்க்கு கண் பார்வை போகும் இடம் , அந்த சீன் படமாக்கப்பட்ட விதம்..க்ளைமாக்ஸில் வாய்ப்பிருந்தும் ஹீரோயிசம் வெளிப்படுத்தாமல் இயல்பான ஆக்‌ஷன் காட்சிகள்... 

4. அஞ்சலியின் தந்தையாக வரும் வில்லனின் அமைதியான நடிப்பு, சரவணன் சர்ச்சில் வந்து தகராறு செய்யும் இடம், போலீஸ் இன்ஸ்பெக்டரின்  நடிப்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgihz_JnNYOjehSc4xvL5Thm16aUdXHSv4qPKgUrOFGXsiSXWbdNSwdup1_QS8cDYAakMg2aXhvfVtMQ3qxM8IK9y8NsaNQegGFKa42cEtfBnmvLLrByW3NhMtXlsrAtZqg71m_bz01vtk/s1600/Anjali+%2540+SRM+University+Stills_01.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள், ஆலோசனைகள் , சந்தேகங்கள்

1.  படத்தோட ஓப்பனிங்க் சீன்ல பாம்பிளாஸ்ட்ல செத்துப்போன , கருகிப்போன  அந்தப்பெண்ணோட தங்க செயின் மட்டும் கொஞ்சம் கூட கருகாம இருக்கே? எப்டி? தெறிச்சு விழுந்திருக்குமோ?

2.  ஹீரோ பஸ்ல வர்றப்ப ஒரு ரூபா காசை ஹீரோயின் ஜாக்கெட்ல கை தவறிப்போடறது இன்னும் எத்தனை படத்துல பார்க்கறது? அது என்ன உண்டியலா?

3. போலீஸ் செலக்‌ஷன் காட்சிகள் எல்லாம் குள்ள நரிக்கூட்டம் படத்தில் வந்தாச்சே சார்... சீன் மாத்தி இருக்கலாம்.. அப்புறம் படத்துக்கே ஆணி வேரான அந்த கலாட்டா சீன் சிம்ப்பிளா முடிச்சுட்டீங்களே?

4.  கவர்மெண்ட்  வேலை கிடைக்கலைன்னா தற்கொலை பண்ணிக்கற அளவு  மெச்சூரிட்டி இல்லாமயா இப்போதைய இலைஞர்கள் இருக்காங்க..? ( ஒரு வேளை  கதை நடந்த கால கட்டம் பல வருஷங்களூக்கு முன்போ?)

5.  கரண் ஒரு குத்தாட்டப்பாட்டுல எம் ஜி ஆர் ஸ்டைல்ல நடிக்கரார், ஓக்கே.. ஆனா அது ஒரு குத்தாட்டப்பாட்டு , அரை குறை  டிரஸ்ல  வர்ற அந்த எக்ஸ்ட்ரா நடிகை வர்றப்பத்தான் அவர் அந்த ஸ்டைல் பண்ணி எம் ஜி ஆர் பேரை கெடுக்கனுமா?

6.  திரைக்கதைல இன்னும் ட்ரிம் பண்ணலாம்.. ஏகப்பட காட்சிகள், சம்பவங்கள்.. சாதாரண ரசிகனால எல்லாத்தையும் ஞாபகம் வெச்சுக்க முடியுமா?


ஏ செண்டர்ல 3 வாரம் ஓடும்.. பி , சி செண்டர்ல 10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

http://www.venkia.com/pdata/7738.jpg

சி,பி கமெண்ட் -  படத்தில் வன்முறைக்காட்சிகளும், தன்னம்பிகையை குலைக்கும் காட்சிகளும் அதிகம் என்பதால் கர்ப்பிணி பெண்கள், பள்ளிமாணவ மாணவிகள் தவிர்த்து மற்றவர்கள் பொழுது போகாம இருந்தா போலாம்.. 

ஈரோடு தேவி அபிராமி தியேட்டர்ல படம் பார்த்தேன்


டிஸ்கி -1

IMMORTAL - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நான் சிவனாகிறேன் - சைக்கோ த்ரில்லர் - சினிமா விமர்சனம்

21 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஹய்யா !! me the first

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அஞ்சலி costumes நச்னு இருக்கே !

கும்மாச்சி said...

விமர்சனம் சூப்பர், இன்னும் நாலு படம் பாக்கியிருக்கு.

குரங்குபெடல் said...

"ஸ்பெஷல் நடிப்பால பிரகாசிக்க வைக்கிற டேலண்ட் பாப்பாட்டா இருக்கு ( சரி சரி, அடுத்த பேராவுக்கு வாப்பா) "


well rhyming . . .

கேரளாக்காரன் said...

There is a Malayalam movie named "runway" with similar story line. Its second part now in production name "vaalayaar paramasivam"

வவ்வால் said...

சிபி,

என்னாது வெட்டுக்கத்தி சுந்தரம்னு படமா ? ரொம்ப வெட்டுவாங்களோ? ஹி..ஹி..மலையாலப்படம் பார்த்து கதைய சுட்டுவிட்டு உண்மைக்கதனு கதை விடுறாங்களோ? திலிபன்,மலையாள முரளி நடித்த படத்திலயும் கதை இப்படித்தான் இருக்கும், அதுலயும் ஐஸ் பாரில் வைத்து சாராயம் கடத்துவாங்க.(வர்ணம் ஸ்டோரி லைன் கூட இப்படித்தான் இருக்கு போல)

IlayaDhasan said...

ஓவர் பில்ட் அப் கொடுத்தாயீங்க, அம்புட்டு தானா கத?

என்னை ஏதோ செய்கிறாள் - இறுதி பாகம் - கிரைம் தொடர்

Unknown said...

விமர்சனம் நல்லா இருக்குங்க...நீங்களே போய் அந்த டைர டக்கர் கிட்ட கேட்ருங்க...ஏன்யா இம்புட்டு அழகா படம் எடுத்துட்டு விமர்சனம் எழுதுற எனக்கு ப்ரீயா ச்சே free டிக்கெட் ஏன் கொடுக்கலன்னு ஹிஹி!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

சினிமா கில்மான்னு சுகம் அனுபவிச்சுட்டு இருக்கியா அண்ணே நல்லாயிரு, விமர்சனம் அருமையா இருக்கு...!!!

சென்னை பித்தன் said...

த.ம.3
வழக்கம் போல் FDFS ஆ!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே விமர்சனத்தில் அஞ்சலி பத்தி நிறைய சொல்லி இருக்கீங்க. அதோட படமும் தூக்கல். ஹே ஹே தேங்க்ஸ்.


நம்ம தளத்தில்:
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11

Unknown said...

படம் நல்லாயிருக்கு


அட அஞ்சலி படம் நல்லாயிருக்குன்னு சொன்னேன்....

K.s.s.Rajh said...

கதை யாருக்கு அண்ணே வேனும் அஞ்சலி இருக்காங்களா ரைட்டு படத்தை பார்ப்போம் எவ்வளவோ மொக்கை படம் பார்த்திட்டம் இதை பார்க்க மாட்டமா?

ADMIN said...

சும்மா சொல்லக்கூடாது.. சிபியோட சினிமா விமர்சனம்னாவே சிறப்பாதான் இருக்கும்...!!

நான் கூட உங்க ஊரு தியேட்டர் அபிராமியில கமலோட(கேரக்டர்:ஔவை சண்முகி) படம் பார்த்ததா நினைவு எனக்கு..!

உலக சினிமா ரசிகன் said...

இந்தப்படத்தை பார்க்க எண்ணினேன்.
காப்பாற்றிய சிபிக்கு டபுள் நன்றி.
டபுள் நன்றி எதுக்குன்னா...அழகழகா அஞ்சலி படம் போட்டதுக்கு.

குண்டாய் இருக்கும் பெண்ணின் அக உளைச்சல்களை மிக அற்ப்புதமாக படமாக்கி உள்ளார் ஒரு பெண் இயக்குனர்.
ஆண் இயக்குனர்கள் தொட முடியாத உயரத்தில் காட்சிகள் அமைந்துள்ள
FAT GIRL என்ற படத்திற்க்கு பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து கருத்துரைக்கவும்.

KANA VARO said...

எங்கேயும் எப்போதும் பார்த்தில இருந்து அஞ்சலியை ரொம்பவே பிடிச்சுப் போச்சு சி.பி

சசிகுமார் said...

தேங்க்ஸ் மாப்ஸ்

சசிகுமார் said...

கரண் ஸ்டில் ஒண்ணு கூட கூகுள கிளைக்கலையா மாப்ஸ் ...

katrukolpavan(VIJAY) said...

anjalia patri innum nenga varnika vendum.(en feelingsa purincikava matrengala)

பாண்டியன் said...

super photos...........!