Friday, February 28, 2014

தெகிடி - சினிமா விமர்சனம்

ஹீரோ  எம் ஏ கிரிமினாலஜி படிச்சவர். அவருக்கு பரத், நரேன் வேலை செஞ்ச மாதிரி ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி ல வேலை கிடைக்குது . அவரோட வேலை என்னான்னா அவருக்கு  ஒரு ஆள் ஃபோட்டோ, அட்ரஸ் குடுத்து அவரைப்பத்தின விபரங்களை  அவரை ஃபாலோ பண்ணி சப்மிட் பண்ணனும். 


இந்த மாதிரி சில பிராஜெக்ட்சை அவர் வெற்றிகரமா செஞ்சு முடிச்சுடறார். கம்ப்பெனியோட  முக்கியமான விதி  அந்த நபரோட நாம எண்ட்ஜ தொடர்பும் வெச்சுக்கக்கூடாது . 


 இப்போ  ஹீரோயின் ஃபோட்டோ  கொடுத்து விசாரிக்கச்சொல்றாங்க . ஹீரோ ஹீரோயின் மேல லவ் ஆகிடறார். அவர்  கிட்டே பழகறார். 



அப்போ ஒரு திருப்பம். இதுவரை அவர் உளவு பார்த்து தகவல் சொன்ன ஆட்கள் எல்லாம் வரிசையா கொலை செய்யப்படராங்க. இப்போ  ஹீரோயின் உயிருக்கு ஆபத்து . ஹீரோ  ஹீரோயினை எப்படி காப்பாத்தினாரு ? யார் அந்த கொலை களை செஞ்சாங்க ? எதுக்கு செஞ்சாங்க ? என்பதெல்லாம் சஸ்பென்ஸ் 


பீட்சா , சூது கவ்வும் , அட்டகத்தி  போன்ற வித்தியாசமான படங்களைக்கொடுத்து நல்ல பேர் வாங்குன  பட  நிறுவனம் தான் இந்தப்படத்தையும்  கொடுத்து  இருக்கு . 

 திரைக்கதை , இயக்கம், எடிட்டிங்க்  தான் படத்தின்  முதுகெலும்பு . அபாரமா ஸ்கிரிப்ட்டுக்காக உழைச்ச இயக்குநர்  ரமேஷ்க்கு வாழ்த்துகள் . இவர் நாளைய இயக்குநர் பாகம் 2 இல் முதல் பரிசு வாங்கியவர். தமிழ் சினிமாவின்  சஸ்பென்ஸ் த்ரில்லர் இயக்குநர்கள் வரிசையில் உயர்ந்த இடம் உண்டு 


ஹீரோ வில்லா பட  ஹீரோ அசோக். இவர் எப்போதும்  சோகமான தாடியுடன் ஏன் வர்றார்?னு தெரியல . க்ரைம் த்ரில்லர் படம்னா இப்படித்தான்  ஹீரோ இருக்கனும்னு யாராவது  டெஃபனிஷன்  கொடுத்து  வெச்சிருக்காங்களா? 


 சுபா கதையில் வரும் நரேன் போல் , பிகேபி கதையில் வரும் பரத்  போல் கல கலப்பான கேரக்டராக அமைத்திருந்தால் இன்னும் படம்  பி சி யில் ரீச் ஆகி இருக்கும் ,


இருந்தாலும் பல இட ங்களில்  இயல்பான, அமைதியான நடிப்பால் மனம் கவர்கிறார் 

\நாயகி ஜனனி அய்யர் , அவன் இவன் படத்தில்  லூஸ் போலீஸாக சாரி  போலீசாக வரும் லூஸ் இவர் தான்/ இதில்  மிக அழகான கேரக்டர் . நல்லா பண்ணி இருக்கார் . மிக கண்ணியமான ஆடை வடிவமைப்புகள்  சபாஷ் 



போலீஸ் ஆஃபீசராக வரும்  ஜெயப்ரகாஷ் கம்பீரமான நடிப்பு . பலே போட வைக்கும்  பர்ஃபார்மென்ஸ்




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  ஹீரோ - ஹீரோயின் சந்திப்புக்காட்சிகள் , நட்பு , காதல்  உருவாகும் இடம்  எல்லாம் செம நேர்த்தி . குறிப்பாக  நாயகி பேசும் காதல் , நம்பிக்கை சார்ந்த வசனங்கள் தியேட்டரில்  கிளாப்ஸ் அள்ளுது 


2  ஹீரோவின் நண்பனாக வரும் காளி அருமையான யதார்த்தமான் நடிப்பு . 


3 படத்தை மிகச்சுருக்கமாக  2 மணி நேரத்தில்  முடித்தது . சஸ்பென்ஸ் காட்சிகளை கடைசி வரை காப்பாற்றியது .

 



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1. ஹீரோ  நவ நாகரீக இளைஞன் . டிடெக்டிவ் ஏஜென்சி வெச்சிருக்கார். ஆனால் அவர் கிட்டே ஒரு செல்  ஃபோன்  கூட  இல்லை. இது நம்பும்படி இல்லை. அதுக்கான காரணம் சரியா சொல்லப்படலை 


2 சாதாரண   ஹோட்டல் சர்வர்  ஆக  இருக்கும்  ஆள் 30,000  ரூபாய் மதிப்புள்ல காஸ்ட்லி செல் ஃபோன் வைத்திருக்கார் 



3  மூன்று  வில்லன்களில்  ஒருவர்  தன் உண்மையான பேரை மாற்றி பொய்ப்பேரில்  ஹீரோவை ஏமாத்தறார் . ஓக்கே. ஆனால் அவரைப்பற்றி  பேப்பரில்  நியூஸ் வரும்போது அந்தப்பொய்ப்பேரில்  எப்படி  நியூஸ் வரும் ? 


4  காதலியிடம் ஆரம்பத்தில் எந்த உண்மையையும் சொல்லாமல்  இருப்பது  ஓக்கே, ஆனா அவளே என்னதான் நடக்குது ? என கேட்ட பின்னும்  ஹீரோ ஏன்  மென்னு  முழுங்கனும் . எல்லா உண்மையையும் சொல்லிடலாமே? 



5 ஹீரோ கைது ஆன விஷயம்  ஹீரோயினுக்கு எப்படி தெரியுது ? அவர் எப்படி ஜாமீன் எடுக்க போலீஸ் ஸ்டேஷன் வந்தார் ? ( நண்பன் ஃபோனில்  இருந்து தகவல் சொல்லி அவர் வந்தார் என சமாளிக்க முடியாது , ஹீரோயின் வந்ததையே  ஹீரோ ஆச்சரியமாகவும் , அதிர்ச்சியாகவும் பார்க்கறார் ) 


6  கொலை செய்யப்பட  இருக்கும் நபருக்கு   ஹீரோ  ஃபோன் பண்ணி “ ஒரு லைஃப் பிரச்சனை இருக்கு , அதைப்பத்திப்பேசனும் என இழுப்பது எரிச்சல் . சார் , உங்க உயிருக்கு ஆபத்துன்னா  வேலை  முடியுது . அதே  போல்   ஃபோனை அவர் கட் பண்ணியது  இவர் மேட்டரை எஸ் எம் எஸ்  கூட பண்ணி  இருக்கலாம். அதை ஏன் செய்யவில்லை ? 


7   க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில்  3 வில்லன்கள் இந்த வேலை யை எல்லாம்  ஏன் செய்யறாங்க ? என தெரிய வரும்போது  “ ஏன் இவ்வளவு ரிஸ்க் ? தலையை சுத்தி  மூக்கைத்தொடனும் ? அதுக்கு பேசாம  ஒரு பேங்க்கை  ஒரு டைம்  கொள்ளை அடிச்சா போதுமே எனத்தோணுது  




மனம் கவர்ந்த வசனங்கள்



1. டிடெக்டிவா ஒர்க் பண்றப்ப நாம எந்த க்ளையண்டுக்காக வேலை செய்யறோமோ அவருக்குக்கூட நம்ம டெடிகேசன் தெரியாது # தெகிடி



2 உன் மனசை உறுத்தும் எந்த வேலையையும் 2வது முறை செய்யாதே.செஞ்சா அதுவே உனக்குப்பழக்கிடும் # தெகிடி



3 எனக்கு மட்டும் ஏண்டா இப்படி ?



 வாழ்க்கை விரக்தியா இருக்கும்போது எல்லாரும் இதைத்தாண்டா சொல்றாங்க # தெகிடி 



தப்பை ஒத்துக்கறதுக்கும் ஒரு தைரியம் வேணும்.ஐ லைக் இட் # தெகிடி


பொண்ணுங்க கிட்டே பேசும்போது என்ன பேசறோம் என்பதை விட எப்படிப்பேசறோம் என்பது தான் முக்கியம்



லைப் ரொம்ப சின்னது.அதனால சின்னச்சின்ன விஷயத்தைக்கூட எஞ்சாய் பண்ணனும்



7  செஞ்ச தப்பைப்பத்தியே பேசிட்டு இருந்தா தீர்வு கிடைக்காது


8 நான் அவரோட பிரண்ட்.அவரைப்பார்க்கனும் 



பிரண்ட் செத்தது கூடத்தெரியல.நீ எப்டி பிரண்டா இருக்க முடியும் 



9 பொண்ணுங்க பொதுவா அவங்க மனசுக்குப்பிடிச்சவங்க எது சொன்னாலும் அப்படியே நம்பிடுவாங்க


10  இந்த மாதிரி மாட்டும்போது எதிராளியின் கண்ணை மட்டும் பாத்துடக்கூடாது.அப்டிப்பார்த்தா நம்ம உருவம் முழுசா அவங்க மனசுல பதிஞ்சிடும்



11  1000 தடவை யோசிப்பதை விட முக்கியம் ஒரு தடவை  செய்யனும் 



12 காதலி டூ காதலன் = ஒண்ணை முழுசா நம்பும்போது அது நம்ம கூடவே கடைசி வரை வரும், நான் என்னை நம்பறதை விட உன்னை அதிகமா நம்பறேன்


13 நமக்குத்தேவை இல்லைனு அலட்சியமா நாம நினைக்கும் சில சின்ன விஷயங்கள் கேசுக்கே முக்கியமான தடயம் ஆகிடும்



14  தைரியமா நாம செய்யறதெல்லாம் சரியா செய்யறதா அர்த்தம் கிடையாது


15  தேவைகள் தான் நம்ம வாழ்க்கையைத்தீர்மானிக்குது



16 தெரியாம நாம செஞ்சுடும் தப்புகளை விட அந்த தப்பை மறைக்க ச்செய்யும் தப்புக்களே அதிகம் 



17  நமக்கு நடக்கும் பல விஷயங்கள் நாம அதுவரை வெச்சிருந்த நம்பிக்கையையே மாத்திடும்



18  நீ சொன்னதெல்லாம் நடக்குமா?ன்னு  தெரியலை, ஆனா நான்  சொன்னது நடந்துடுச்சு 




 




 படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்


1. டைட்டிலிலேயே இயக்குநரின் டச்.# ஜனனி தான்.ஜனனி அய்யர் இல்லை.சபாஷ் # தெகிடி



காலேஜில் அப்செர்வேசன் கிளாசில் தன்னை குறை சொன்ன லெக்சரரின் வாதத்தை முறிக்கும் இடம் குட் # தெகிடி


நாயகி புல் ஹேன்ட் சர்ட் போட்டு கழுத்து பட்டன் வரை போட்டிருக்கு.ரொம்ப கண்ணியம் போல.நற நற # ஜனனி அய்யர்


4  லாங்க் ஷாட்க்கு ஒரு மாதிரி பிஜிஎம் ,க்ளோசப் ஷாட்களுக்கு வேறமாதிரி பிஜிஎம் என இயக்குநர் பின்றார் 



5 தெகிடி @ இடை வேளை.புதிய கதை நேர்த்தியான திரைக்கதை.எடிட்டிங் ,பிஜிஎம் அபாரம்



6  தெகிடி = சூதாட்டம் ,சாமார்த்தியமாய் விளையாடுபவன் ,தந்திரம்,சாதுர்யம், புரட்டு வேலை

 
ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 45 


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று

ரேட்டிங் = 3.25  / 5


சி பி கமெண்ட் - தெகிடி - அபாரமான திரைக்கதை, 2014ன் முக்கியமான சஸ்பென்ஸ் த்ரில்லர்,சிறப்பான இயக்கம், பெண்கள் , மாணவ மாணவிகள் , எல்லோரும் பார்க்கலாம். ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன் 

 
 
 
டிஸ்கி -

வல்லினம் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2014/02/blog-post_7592.html

  

2 comments:

குரங்குபெடல் said...

தம்பி ரெண்டு விமர்சனம் . .

உமது கடமை உணர்ச்சிக்கு பாராட்டுக்கள்

சரவணன் said...

ஹீரோ டிடெக்டிவ் ஏஜென்சி வைத்திருக்கவில்லை, அங்கு வேலைதான் செய்கிறார்.

நண்பன் நம்பி சர்வர் இல்லை, ஷெஃப். மேலும் தவணை முறை இருக்கும்போது கார் வைத்திருந்தாலும் ஆச்சரியமில்லை; செல்போன் பெரிய விஷயமா?