Thursday, July 21, 2011

உன் மனதில் என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய் ?ஏன் என் கண்களை நனைக்கிறாய்?

Havasu_creek_waterfall_Wallpaper_o32dc.jpg

1.அதீதமான அன்பு,அளவுக்கதிகமான நேசம் இவை இரண்டும் ஆழ்ந்த வலியை பிரிவின் போது தரும்
---------------------

2. ஆணின் உதட்டிலிருந்து மென்மையான உணர்வுகள் கொட்டிக்கொண்டிருந்தால் ஒரு பெண் அவன் இதயக்கதவை தட்டிக்கொண்டிருக்கிறாள் என்று அர்த்தம் கொள்க

--------------------

3. நான் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான காரணங்கள் எவை என பார்த்தால் நீ என்னை நெகிழ்ச்சியுடன் பாராட்டிய தருணங்கள்

-----------------------


4. என் கண்கள் என்றும் ஈரப்பதத்துடன் இருக்கக்காரணம் ஈரம் இல்லாமல் அவள் பேசிய சொற்பிரயோகங்கள்தான்

---------------

5. எல்லோரும் பார்க்கையில் முள் கொண்டு தைப்பாள், தனிமையில் மன்னியுங்கள் என்னை என்று கதைப்பாள்#சேடிஸக்காதலி

---------------


6. உன் மனதில் என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய் ?என்றதும் நத்திங்க் என அசால்ட்டாய் சொல்லி என் கண்களை நனைக்கிறாய்

----------------------

7. உன்னிடம் இருந்து பிரிந்து வர மனம் இன்றி உன் கண்களுக்குள்ளேயே தளும்பி நின்று தகராறு செய்கிறது எனக்காக நீ சிந்த நினைத்த கண்ணீர்

------------------

8. யாரிடமோ,எதற்காகவோ எழுகின்றன உன் உதட்டிலிருந்து சிரிப்பொலிகள்,குதியாட்டம் போட்டு என் மனசு செய்யும் அலப்பறைகள்

-------------------

9. தீர்ப்பு மாணவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம்: கலைஞர்#தலைவரே!பார்த்துப்பேசுங்க. பிரசாதம் என்பது ஆன்மீகத்துக்கு சொந்தம்னு  சொல்லிடப்போறாங்க

------------------

10. சென்னை அருகே நிதிசார் நிறுவனம்: கனவு நனவாகுமா? #கருணாநிதியா? தயாநிதியா?கலாநிதியா?வெளக்கமா சொல்லுங்க வெவரத்தை

----------------



11. ராசாவை மீண்டும் குடைந்தது சிபிஐகோர்ட் வளாகத்தில் விசாரணை#ராசா படிக்கறப்ப லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்டோ? யார் என்ன கேட்டாலும் சைலண்ட்டா கீறாரே?

--------------

நமக்கு தேவை சமச்சீர் கல்வி என்றாலும் உடனடித் தேவையாக இருப்பது தற்போது திறந்துள்ள பள்ளிக் கூடங்களை பாடப் புத்தகங்கள் தந்து நடத்துவதுதான்.நாம் கேட்பது குதிரையானாலும், கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்துக்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல," - விஜயகாந்த்

12. நல்ல ஃபிகர் காதலியாக கிடைக்கும் வரை கிடைச்ச ஃபிகரை டெம்ப்ரவரியாக காதல் செய்யலாமா?கேப்டனுக்கு அவரது ரசிகர்கள் கேள்வி@இமேஜினேஷன்

----------------------

13. சைவம் மட்டுமே சாப்பிடும் ஆண்கள் நல்லவர்கள் என பெண்கள் நினைத்தால் அப்புறம் அசைவ ஆண்களுக்கு வாழ்க்கைத்துணையே கிடைக்காமல் போய் விடும்

----------------------

14. வருடா வருடம் புத்தகத்திருவிழா நடக்கும்போது தமிழ்நாட்டிலேயே விற்பனையில் முன்னிலை முதல் இடம் சென்னை,இரண்டாமிடம் ஈரோடு#படிப்பாளிகள்

----------------------

15. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிய வித்யாபாலன் மறுப்பு!#தப்பும்மா.. அதையும் அணியலைன்னா சென்சார்ல விடமாட்டாங்க

---------------------



16. அரவானுக்காக ஜாக்கெட்டைத் துறந்த தன்ஷிகா#முதல் மரியாதைலயே இதை ராதா செஞ்சுட்டாங்களே?உங்ககிட்டே இருந்து ரசிகர்கள் இன்னும் எக்ஸ்பெக்ட்டிங்க்

----------------

17. இதுவரை நீங்கள் பார்த்திராத  மோசமான கேரக்டர்  மங்காத்தாவில் -அஜித் #நித்யானந்தா ,சாருநிவேதிதாவை விட மோசமாவா? அய்யய்யோ!தல,தறுதல கேரக்டரா:?

-----------------------
18. நீலகிரி மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1041 பெண்கள் உள்ளனர் #ஈரோடு மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 928 பெண்களே உள்ளனர்,ப்ளீஸ் பேலன்ஸ் இட்..

-------------------
19. 9 புதிய கல்லூரிகள் துவக்கி வைத்தார் ஜெ #ஏம்மா.உங்க செண்டிமெண்ட் ராசிக்கு ஒரு அளவே இல்லையா?விட்டா தமிழ்நாட்டைக்கூட ஒன்பதா பிரிப்பீங்க போல

----------------


20.ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் தோற்கும்போது அவனது ஈகோ அடிபடுகிறது.ஒரு ஆண் இன்னொரு பெண்ணிடம் தோற்கும்போது அவனே அடிபடுகிறான்#ஜெண்ட்ஸாலஜி


----------------------




21.
கதையுடன் கூடிய கவர்ச்சி காட்ட எனக்கு தயக்கம் இல்லை -அங்காடித்தெரு அஞ்சலி #சதையுடன் கூடிய கவர்ச்சின்னு தமிழை சரியா யூஸ் பண்ணும்மா

-----------------------

22.  காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும், சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் செய்ய வேண்டும். -தங்கபாலு #பச்சோந்தி மாதிரின்னு பதவிசா சொல்றீங்க?

--------------------

23. தெலுங்கு தேசம் கட்சியை, யாராலும் அழிக்க முடியாது.-சந்திரபாபு நாயுடு#உங்களால கூடவா முடியாது? வாட் எ பிட்டி?

----------------------

24.  மத்தியில்  காங்கிரஸ் அரசு அமைகிறபோதெல்லாம் விலைவாசி உயரும்-நிதிஷ் குமார் #நாடு உயர்ந்த நிலையில்  இருந்துட்டுப்போகட்டுமே?

--------------------

25.   தமிழினத்தை அழிக்கததுணை போனகாங்கிரசுடன், ஜெ எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது -சீமான்#அதை விடுங்க.விஜயலட்சுமி கூட உறவு உண்டா?நோ வா?

-------------


25.தனக்கு மிக நம்பிக்கையான ஆணிடம் மட்டுமே பெண் தன் துக்கங்களைப்பகிர்ந்து கொள்வாள்

---------------------

26 பெண்களுக்கு இங்கே அனுமதி இல்லை.காரணம் இது அப்பாவி ஆண்கள் வந்து செல்லும் புனிதமான இடம் -டாஸ்மாக்

-----------------

27. 1990 - என்னது?உன்னை மறந்துடனுமா?எங்கே என் முகத்தைப்பார்த்து சொல்லு? 

2011 - எங்கே? என் ஃபேஸ்புக் பார்த்துட்டு சொல்லு#டோண்ட் ஷேர் ஃபோட்டோஸ்

------------------

28. இருவருக்கிடையே இறுக்கமான மவுனம் நிலவும்போது முதலில் மவுனம் கலைவது ஆண் தான்

-----------------

29 தன்னில் ஒரு மொட்டு மல்ர்வதை செடி எந்நாளும் குறித்து வைத்துக்கொள்வதில்லை.அது போல் தான் நானும் உன் மீது காதல் வந்த தருணத்தை குறித்து வைக்கலை

-----------------


30. அன்பு என்பது தானாக சுரப்பது. கெஞ்சியோ,வற்புறுத்தியோ பெற்றால் அது இரக்கம்

-----------------------

31 சந்தர்ப்பம்,சூழ்நிலை அமைந்தால்  நீங்களும் சராசரி மனிதர் தான் என்று சொல்லி அவள் ஒரு சராசரி ஆனாள்

-------------------

32. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நல்லவர்கள் தேர்வு: விஜயகாந்த் உத்தரவு#அப்போ சட்டசபைத்தேர்தலுக்கு மட்டும் தான் கெட்டவங்களா?

------------------

33. மில் அபகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு#அம்மா எல்லாத்தையும் பிடுங்கி வீரபாண்டி அண்ணனை ஓட்டாண்டி ஆக்கப்போறாங்க

-----------------

34 சன், "டிவி' மீதான புகார்களை விசாரிக்க தனிப் பிரிவு : கமிஷனர் திரிபாதி தகவல் #ம்ஹும் பத்தாதுங்க,சன் குழுமங்கள் மொத்தம் 14 இருக்கு

--------------



Daily fun pic collection

35 சினிமாக்காரர்களை கேவலமா பார்க்காதீங்க : நமீதா வேண்டுகோள்!! #மேடம்,டைரக்டர்கள்ட்ட சினிமாக்காரர்களை கேவலமா காட்டாதீங்கன்னு சொல்லுங்க

-------------------

36. திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?இனிமேலாவது ஆண்களை திரு என மரியாதையா கூப்பிடட்டும்னு தான்,மதிக்கட்டும்னு தான்


-------------------
37. ரவுத்திரம் படத்தில் ஸ்ரேயாவுடன் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட். ஜீவா சிலிர்ப்பு!#பிசிக்கலா ஒர்கவுட் ஆகி பயலாஜிக்கலா பிராப்ளம் வராமபார்த்துக்குங்க

----------------

38. டியர்,பகவத் கீதை படிச்சா என்னை லவ் பண்ணுங்க ,இல்லைன்னா கேன்சல் ஆல்.

அடிப்பாவி,எனக்கு சரோஜாதேவி,விருந்து மட்டும் தான் படிச்சு பழக்கம்

----------------------

39. ஒரு கிலோ பஞ்சில் இருந்து 3300 கிமீ நீளத்திற்கு நூல் தயாரிக்கலாம்#ஒரு ஃபிகர்ட்ட நூல் விட 100 கிலோ பஞ்சு தேவைப்படுது

---------------------



Photo Trick


40.. டியர்,நீங்க ஸ்மைல் பர்சனா இருக்கீங்க!அதான் உங்களை லவ் பண்றேன்

.சாரி. நீ ஸ்லோ பாய்சனா இருக்கே!அதான் யோசிக்கறேன்.இளிச்சவாயன் ஆக்கிடாதம்மா

--------------------

41 இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற  நிலை#ஆயிரத்தில் ஒருவரா இருந்தா ஓக்கே, அந்த 60 இல் ஒருவரா நாம இருந்திடக்கூடாது ஆண்டவா!

----------------


42. வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்ய 12 குழுக்கள்#ஆறுமுகம்கறதால அவருக்கு 12 கையா?12 விலங்கா போடப்போறாங்க?

-----------------------

43. DR, நான் 100 வயசு வரை வாழனும். 

அப்போ ஒரு மேரேஜ் பண்ணிக்கோ

.மேரேஜ் பண்ணிட்டா 100 வருஷம் வாழமுடியுமா? 

அத்தனை வருஷம் வாழனும்னு எண்ணம் வராது.

----------------------------------

20. மொழியை தாய்மொழின்னு ஏன் சொல்றோம்? தந்தைகள்தான் பேசறதே இல்லையே?கேட்கறதோட சரி....

---------------------------

44. தமிழகத்தில்
எழுத்தறிவில் கன்னியாகுமரி முதலிடம்...#இங்கேயும் லேடீஸ்தான் முதலிடமா?

------------------


35 comments:

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பரு...

Unknown said...

அட்டகாசம் பாஸ்! :-)
ஆமா...மூணுபதிவில போடுறத ஒரே பதிவா போட்டுட்டீங்க?

Unknown said...

ஸ்மைல் பெர்சன், ஸ்லோ பாய்சன் சூப்பர் பாஸ்! :-)

rajamelaiyur said...

15 th matter இதுதான் உண்மையான சி . பி

rajamelaiyur said...

கலக்கல்

செங்கோவி said...

மூணாவது படம் சூப்பர்..இவ்ளோ நீளமா எழுதுனா எப்படிண்ணே.. ‘கருன்’ மாதிரி படிச்சாத் தான் முடியும்.

RAMA RAVI (RAMVI) said...

அந்த உலக அதிசயம் “சாய்வு கோபுரம்” படம் மிக அருமை.

கூடல் பாலா said...

எத்தனையாவது லவ் ஃப்பெயிலுவர்?

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே காலையிலேயே பதிவா....???

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா எல்லாம் சூப்பரா இருக்குடா....!!!

Ram said...

நான் சத்தியமா படிக்கல.!!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் ஆ ராசா கடைசி பெஞ்சி கிடையாது முதல் பெஞ்சே'தான் மக்கா இல்லைனா இம்புட்டு கிளவ்வரா கொள்ளை அடிக்க முடியுமா...????

vetha (kovaikkavi) said...

படங்கள் மிக அருமை! ஏன் ரெம்பப் பெரிசு..நீட்டம்! செரிமானமாக வேண்டாமோ! (சீரணமாக வேண்டாமோ?) ...நிறைய சிந்திக்க வைக்கிறது.
Vetha.Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி ஹி ராதா இப்ப வந்து மேட்டரை கழட்டுனா நல்லாவா இருக்கும்டா மூதேவி ராஸ்கல்....???

MANO நாஞ்சில் மனோ said...

டேய் இம்புட்டு நீளமா போட்டு நாரடிக்காமல், சுருக்கமா போடுடா அப்பத்தான் படிக்க நல்லா இருக்கும் ஹி ஹி...

குரங்குபெடல் said...

நடிகைகள் படம் போடறதையே மறந்த
நல்லவன் வாழ்க ....

நன்றி

Napoo Sounthar said...

சூப்பர்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அறுசுவையும் கொண்டுள்ள பதிவு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அறுசுவையும் கொண்டுள்ள பதிவு...

vidivelli said...

asaththal...
vaalththukkal..

ஆகுலன் said...

எப்படி பாஸ் உங்களால் மட்டும் முடியுது?

ரசித்தேன்.....

மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

Unknown said...

அம்மாடி............

எம்மாம் பெருசு ஆனாலும் எல்லாம் தூள் (dhool ) .

காட்டான் said...

 புத்தகம் வங்கிறதில முதலிடம் ஈரோடாதான்யா இருக்கும் சென்னயில எல்லா மாவட்டத்துகாரனும் புத்தகம் வாங்குவாங்கையா அத விட வெளிநாடுகளுக்கும்  புத்தக கடைகளுக்கும் சென்னையிலதான்யா வாங்குவாங்க .. 

கட்டான் குழ போட்டான்...

சசிகுமார் said...

கொஞ்சம் பெருசா போச்சோ பட் ஆல் ஆர் சூப்பர்ப் ஹி ஹி

ஹேமா said...

குறிப்பிட்டுச் சொல்லமுடியாமல் எல்லாமே நல்லாயிருக்கு சிபி !

ஆமினா said...

அட அட அட
எல்லாமே சூப்பர்...
விஜயகாந்த் கருத்துக்கு இமேஜினேஷன் கூட சூப்பர் :)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

41 - கணக்கு மாஸ்டர் கணக்கு சரியா போடலியே! ஆயிரத்தில் ஒருவரா இருந்தா அந்த 60 ஒருவரா வந்திட வாய்ப்பு இருக்கே !

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு...

M.R said...

தலைப்பே ஒரு கவிதை

M.R said...

ஒவ்வொரு வரியும் அருமை ,

அதிலும் முதலிரண்டும் நச் ..

முதல் படம் மனதில்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
J.P Josephine Baba said...

சி.பி 6 ல் சொல்லப் படும் அந்த அறிவான பெண் யார்?

சரியில்ல....... said...

ஏன் இவ்ளோ லெந்தியாஆஆ........ ??

மாய உலகம் said...

பதிவின் படங்கள் பட்டைய கிளப்பதுங்கோ

மாய உலகம் said...

நான் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான காரணங்கள் எவை என பார்த்தால் நீ என்னை நெகிழ்ச்சியுடன் பாராட்டிய தருணங்கள்