Showing posts with label டாக்டர் விகடன். Show all posts
Showing posts with label டாக்டர் விகடன். Show all posts

Wednesday, November 28, 2012

உங்கள் உதட்டை பாதுகாக்க 10 வழிகள் ( கமல் ரசிகைகளுக்கு மட்டும் அல்ல )

பாதுகாக்க 10 வழிகள் உதடு


நன்றி - விகடன்

பிட்ஸ்


Monday, July 09, 2012

மதுரை ட்விட்டர் கம் டாக்டரின் ஹாஸ்பிடல் லொள்ஸ்

Ramesh Subburaj shared I Can't Believe It's photo.
1. டாக்டர், என் கணவர் சரியான உம்மணாம்மூஞ்சியா இருக்கார், அதுக்கு என்ன காரணம்னு செக் பண்ணுங்க..


யார் காரணம்னு கேளுங்க ,சொல்றேன்


------------------


2. டாக்டர், உங்க ஃபீஸ் ரூ 100 தானே, எதுக்கு ரூ 120 வாங்குனீங்க?


அரை மணி நேரம் வெயிட் பண்றப்போ ஹால்ல டி வி பார்த்தீங்களே அதுக்கு 20 ரூபா----------------------------

3. காலைல வெறும் வயிற்றுல 4 டம்ளர் தண்ணீர் குடிக்கனும்


டாக்டர், ஒரு டம்ளர் தண்ணீர் குடிச்சதும் அது எப்படி வெறும் வயிறு ஆகும்;?------------------------------


4. டாக்டர், நான் சுத்த சைவம்


 ஸோ வாட்?


 மீன் மாத்திரை சாப்பிட மாட்டேன்----------------------------


5. டாக்டர், 5ஆம் வார்டு பேஷண்ட் கிட்டே மட்டும் பாசமா பேசறீங்களே, ஏன்?


பாவம், கடைசி நாட்களை எண்ணிட்டு இருக்காரு---------------------
6. டாக்டர், க்ளினிக் வாசல்ல ஒரு பவுன் = ரூ 25,600 என எழுதி இருக்கீங்களே, ஏன்?


 தங்கப்பல் கட்ட வர்றவங்க கோல்டு மார்க்கெட் ரேட் தெரிஞ்சுக்காம இருக்கக்கூடாதே?


----------------------


7. அந்த பல் டாக்டர் ரொம்ப பொஸசிவ் டைப்னு எப்படி சொல்றே?


 எந்த பேஷண்ட்டும் நர்சுங்க கிட்டே பல்லைக்காட்டி பேசிட்டு இருந்தா அவருக்கு பிடிக்காது


------------------------------


8. கண் டாக்டரை விட பல் டாக்டருக்கு வருமானம் ஜாஸ்தி. 


 எப்படி சொல்றே? 


 கண் ஒரு மனுஷனுக்கு 2 தான் இருக்கு, ஆனா பல் - 32 இருக்கே?


---------------


9. பல் டாக்டர் பரமசிவம் காதல் மேட்டர்ல கேடி போல 

 எப்படி சொல்ரே?


பல்லவ மன்னன் - பல லவ் கண்ணன் அப்டினு  நேம்  போர்டு வெச்சிருக்காரே?


-------------------

10. டாக்டர், நர்ஸோட அழகைப்பார்த்து உலகையே மறந்துட்டேன்

ஃபீஸ் குடுக்க மறந்துடாதீங்க 


----------------


விழுப்புரத்தில் மையம் கொண்ட டெசோ (டெங்கு சோதனை அமைப்பு) என்னும் காற்றழுத்த தாழ்வு நிலை சில தினங்களில் சென்னையில் வலுவிழந்து கரையில் மண்ணைக் கவ்வலாம்.

- முரசொலி வானிலை ஆராய்ச்சி மையம்11. டாக்டர், நான் ஈ பட போஸ்டரை ஏன் க்ளினிக் உள்ளே வெச்சிருக்கீங்க?


 பேஷண்ட் கிட்டே ஈன்னு பல்லை காட்டச்சொல்ல தேவை இல்லை.. போஸ்டரை காட்னாலே புரிஞ்சுக்குவாங்க 


------------------------

12.கொக்கோ கோலா மதி -   டாக்டர், என் தலைல பேனும், ஈறும் இருக்கு


 ஏம்மா ,பல் டாக்டர்னா நான் பார்க்கற ஈறு வேற , இது வேற ----------------------


13. டாக்டர், எப்பவும் உங்க மனைவிக்கு கனகாம்பரப்பூ தான் வாங்கித்தருவீங்களா?ஏன்?


அதுதான் பல் ஈறு போல் கலரில் இருக்கும்


----------------------


14. அய்யய்யோ தமிழச்சி -டாக்டர், பச்சரிசி மாதிரி பல் வரிசை கொண்ட எனக்கு பல்லுல சொத்தையா?


 ஆமா, ரேஷன் பச்சரிசியா இருக்கும்
--------------------------


15. டாக்டர் - 6 மாசத்துக்கு ஒரு தடவை  டூத் பிரஸ் புதுசு யூஸ் பண்ணனும்

 நான் டெயிலி புதுசுதான் யூஸ் பண்றேன் ( எல்லாமே!)

 எப்படி?


 இலவசமா விட்டுட்டே இருக்கும் அங்கிள் - வேப்பங்குச்சில  தானே பல் துலக்கறேன்


-------------------------
நீ வாங்குற 5க்கும் 10 க்கும் உனக்கு ஃபேஸ் புக் தேவயா?'s photo.


Sunday, June 10, 2012

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க 10 வழிகள்

டெங்கு தடுக்க... தகர்க்க... தப்பிக்க 10 வழிகள்

மிழகத்தின் தென் மாவட்டங்கள் முழுவதும் இப்போது டெங்கு அனல். இப்போது கொங்கு மண்டத்திலும் அது கால் பதித்துவிட்டது. காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெங்கு காய்ச்சலின் பாய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?


 புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் நாகராஜனிடம் விரிவாகப் பேசினோம்.


''டெங்கு என்றால் என்ன? அது எப்படிப் பரவுகிறது?'' 


''டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. 'ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த டெங்கு தொற்று உள்ள பெண் கொசுவால் இது பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவும். மற்றபடி தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது இல்லை. அதாவது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இது நேரடியாகப் பரவுவது இல்லை.''


''நெல்லை மாவட்டத்தில் மட்டும் அதிக அளவில் டெங்கு பரவக் காரணம் என்ன?'' ''சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் பெய்த பரவலான கோடை மழைதான் டெங்கு காய்ச்சல் பரவக் காரணம். டெங்கு காய்ச்சல் வழக்கமாக மழைக் காலத்தில்தான் ஏற்படும். டெங்குவைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி’ கொசு முட்டை 300 நாட்கள் வரை அழியாமல் இருக்கும். திடீரென்று மழை பெய்யும்போது, டயர், தேங்காய் சிரட்டை போன்றவற்றில் நல்ல நீர் நிரம்பும். அப்போது இந்த முட்டைகள் அதில் செழித்து வளரும். இங்கு பெய்த கோடை மழை அதற்குச் சரியான வாய்ப்பாகிவிட்டது.''''டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?'' 


''காய்ச்சல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இதனுடன் சோர்வு, தீவிரமானத் தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு, எலும்பு உடைவது போன்று வலி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள்.''


''இந்த அறிகுறிகள் இல்லாமலும் ஒருவருக்கு டெங்கு இருக்குமா?'' 


''ஆம், கொசு கடித்து நோய்க் கிருமி மனித உடலுக்குள் சென்று, மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை பல்கிப் பெருகும். அதனால், இந்தக் காலகட்டத்துக்குப் பிறகும்கூட டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி வெளிப்படும் வாய்ப்பு உண்டு.''


''டெங்கு காய்ச்சலைக் கவனிக்காமல்விட்டால் என்ன ஆகும்?'' ''டெங்கு காய்ச்சலை ஏழு நாள் காய்ச்சல் என்று கூறுவார்கள். நோய் பாதிப்பு ஏற்பட்டு ஏழு நாட்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள ரத்தத் தட்டு அணுக்களை அழித்துவிடும். இந்தத் தட்டு அணுக்கள்தான் ரத்தம் உறைவதற்கு மிக முக்கியமான காரணம். ரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிர் இழப்புகூட நேரிடலாம்.''


''டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு ஊசி, மருந்து ஏதேனும் உள்ளதா?'' 


''தடுப்பு ஊசி, மருந்து எதுவும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே உயிர் இழப்பைத் தடுக்க முடியும்.''''டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படும்?'' ''டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால், இது குணமாக்கக்கூடிய காய்ச்சலே. ஒருவருக்கு ரத்தத்தில் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை தோராயமாக ஒன்றரை லட்சம் இருக்க வேண்டும். ஆனால், டெங்கு வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவருக்கு அது வெறும் ஆயிரமாகக்கூடக் குறைந்துவிடலாம். எனவே, தேவைப்பட்டால், ரத்தத் தட்டு எண்ணிக்கையைப் பொருத்து ரத்தம் செலுத்துதல் அல்லது ரத்தத் தட்டு அணுக்கள் செலுத்துதல் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். ஒரே விஷயம்... காலத்தைக் கடத்தாமல் சிகிச்சை அளித்துவிட வேண்டும்.''


''டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?'' ''உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும். டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய டெங்கு ஐ.ஜி.எம். எலிசா, பி.சி.ஆர். ஆகியப் பரிசோதனைகள் செய்யப்படும். பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே நன்றாக ஓய்வெடுக்கலாம். உடலில் நீர்ச் சத்து குறையும் என்பதால், அதிக அளவில் நீர்ச் சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நிலைமை மோசமாகத் தொடங்கினால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சைப் பெற வேண்டும்.''''டெங்கு காய்ச்சல் எவ்வளவு நாட்கள் வரை நீடிக்கும்?'' 


''ஏழு நாட்களில் சரியாகிவிடும். உடல் வலி, சோர்வு போன்ற இதன் பாதிப்புகளில் இருந்து இரண்டு வாரங்களில் வெளிவரலாம்.''


''டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?'' 


''டெங்குவைத் தவிர்க்கக் கொசு ஒழிப்பு ஒன்றே வழி. டெங்குவைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி’ கொசு நன்னீரில் முட்டை இடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு சுகாதாரமாகச் சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டும்.


வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, ஸ்பிரே போன்றவையும் பயன் கொடுக்கும்.


  வீட்டுச் சுவர்கள் மீது 'டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் 'டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிப்பது பலன் கொடுக்கும். ஜன நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில், 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் 'கிரிசாலை’ப் புகையை செலுத்துவதும் கொசுக்களை விரட்ட உதவும்.


இவை எல்லாவற்றுடன், சுற்றுப்புறச் சுத்தம் முக்கியம்!''டெங்கு காய்ச்சல் தடுக்க...
வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால் சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றுவதற்குக் காத்திருக்காமல், நீங்களே தண்ணீரை அகற்றுங்கள்.


கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம். கொசு எதிர்ப்புக் களிம்பைப் பூசிக்கொள்ளுங்கள்.


குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடியுங்கள்.


காய்ச்சல் வந்தால் உடனே செய்ய வேண்டியது... 


டெங்கு அறிகுறி தெரிந்தால், சிறிதும் தாமதம் இன்றி உடனடியாக மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.


டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தைக் குறைத்துவிடும். உடலின் நீர் இழப்பைத் தடுக்க இளநீர், கஞ்சி, உப்பு-சர்க்கரைக் கரைசல் போன்ற நீராகாரமாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


எப்படிப் பரவாது... 


ஒருவரை ஒருவர் தொடுவதால் டெங்கு பரவாது. தும்மல், இருமல் மூலமும் இது பரவாது.

 நன்றி - டாக்டர் விகடன்


Sunday, July 31, 2011

டென்ஷன் பார்ட்டிங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா...நர்ஸ் நளினா சொல்றதை கேளுங்கப்பா

http://thavorngrandplaza.com/phuket-travel/wp-content/uploads/2010/05/tb_Clinics_450x300.jpg

உளைச்சலைப் போக்க உணவே மருந்து!

 ஆரோக்கியப் பக்கம்!
ன வலிமையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதே நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில்தான் இருக்கிறது. உடலையும், மனதையும் உற்சாகமாக இயங்க வைக்க, ஆரோக்கியமான சரிவிகித உணவை  கடைப்பிடித்தாலே போதும், மனஅழுத்தத்தை முற்றிலும் குறைக்கலாம்.  நாம் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் குறித்து மதுரை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உணவியல் நிபுணர் வி.சுகன்யா இங்கே விரிவாக சொல்கிறார்.


'எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்ற தூண்டுதல் தேவைதான். ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாகும்போதுதான் மன அழுத்தம் என்கிற 'ஸ்ட்ரெஸ்’ நம்மை இறுக்கிப் பிடிக்கத் தொடங்குகிறது. உதாரணத்திற்கு... இன்றைக்கு நாம் 10 வேலைகளை முடித்திருக்கிறோம் என்றால், நாளைக்கு அதை 12 அல்லது 13 என்பதுபோல் அதிகரித்துக் கொள்ளலாம்.  அதுவே, ஒரே நாளில் 20 வேலைகள் என இலக்கு நிர்ணயிப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.


நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் போன்ற பல்வேறு அடிப்படை சத்துக்களைக் கொண்டதுதான் ஆரோக்கியமான உணவு.  இவை சாப்பிடும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


தொடர்ச்சியான வேலையால்,  பெரும்பாலானோர், காலை உணவை தியாகம் செய்துவிடுவதுண்டு. இது தவறு! இரவு உணவுக்கும் காலை உணவுக்கும்,  உள்ள இடைவெளி அதிகம். காலை உணவை தவிர்க்கும்போது உடலில் போதிய சக்தி இல்லாமல் போய்விடும். இதனால், சிறிய மன அழுத்தம் ஏற்பட்டாலும், அது அதிகமாகி விடும்.  தலைவலி, தலைசுற்றல், கவனக் குறைவு போன்ற கூடுதல் பிரச்னைகள் தலைதூக்கும்.'' என்றவர், மன அழுத்தம் குறைவதற்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினார்.

http://www.odt.co.nz/files/story/2009/11/youth_health_clinic_nurse_kate_balfour_takes_the_b_1449208845.JPG

'மன அழுத்தத்தைக் குறைப்பதில், நார்ச்சத்து நிறைந்த தானியங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவை 'செரடோனின்’ என்கிற ஹார்மோனை சுரக்க வைக்கிறது. இது மூளையை அமைதியாக வைத்திருக்க உதவும். ஆரஞ்சுப் பழத்தில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால், அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். பசலைக் கீரை மன உளைச்சலை குறைக்கச் செய்யும். மேலும், மீன் உணவில் அதிகமாக இருக்கும் ஒமேகா-3 என்கிற கொழுப்புச் சத்தும் மனஅழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

காபியை தவிர்ப்பதாலும், டென்ஷன், ஸ்ட்ரெஸிலிருந்து பெருமளவு விடுபடலாம். மன அழுத்தம் இருப்பவர்கள், காபிக்குப் பதிலாக பால் சேர்க்காத பிளாக் டீ ஒரு நாளைக்கு இருமுறை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். தினசரி உணவில் கேரட், வெள்ளரி போன்ற பச்சைக் காய்கறிகள், பழ வகைகளை சேர்த்து சாலட்டாக சாப்பிடவேண்டும். எண்ணெய், நெய், டால்டா, தேங்காயின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். 

மன அழுத்தம் இருப்பவர்கள், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை வாரத்துக்கு மூன்று முறை 15 கிராம் உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால், ரத்தத்தில் சர்க்கரை,  கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், இவற்றை குறைவாக எடுத்துக் கொள்ளவேண்டும். பெரும்பாலும் எண்ணெய் வகைகள் மற்றும் இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

உடலில் தண்ணீர் அளவு குறைந்தாலும், போதிய தூக்கமின்மையாலும் மன அழுத்தம் ஏற்படக்கூடும். தினசரி குறைந்தது இரண்டரை லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். டென்ஷன் இருக்கும்போது தண்ணீர் குடித்தால் நல்லபலன் கிடைக்கும். ஏழு மணிநேர தூக்கம் மிக அவசியம். தவிர்க்கமுடியாமல், இரவு விழிக்க வேண்டி இருந்தால், மறுநாள் சீக்கிரமாகத் தூங்கிவிடுவது நல்லது.
மன அழுத்தத்துக்கு செலவே இல்லாத மருத்துவம் நடைப்பயிற்சிதான். தினசரி குறைந்தது அரை மணி நேரம் மிதமான வேகத்தில் தொடர்ந்து நடப்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது.

http://www.spraguephoto.com/stock-photos/9935-Nursing-students-in-class,-Nursing-school-at-Muttuchira,-Kerala,-India.%7C9186.jpg
சிகரெட், மதுப் பழக்கம்,  மன அழுத்தத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரித்து விடும்,  ஜாக்கிரதை! தொடர் மன அழுத்தம் இருந்தால் நீரிழிவு, இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் இருக்கிறது.’ என்றார் சுகன்யா அக்கறையுடன்


நன்றி - டாக்டர் விகடன்


டிஸ்கி - ஈரோட்டில் புத்தகத்திருவிழா நடக்கிறது.. ட்விட்டர் நாயகர்கள் கம் ஈரோடு, கோவை,திருப்பூர் ட்விட்டர்ஸ் கம் பதிவர்கள் சிலர் ஈரோடு வர்றாங்க.. ஜஸ்ட் எ ஃபார்மல் மீட் .. வர்றவங்க எல்லாம் வாங்க.. இதுவரை வர்றதா சொன்னவங்க

1. அவினாசி ராஜன் லீக்ஸ் ( ஆல் இன் ஆல் அழகு ராஜாக்கடை )

2. திருப்பூர்  கே பி கிருஷ்ணகுமார் ( பரிசல்காரன் )

3. கோபி செல்வா ( கோமாளி செல்வா)

4. ஷர்புதீன் ( ரசிகன்)

5. கே தீபக் குமார்

Sunday, May 29, 2011

டியர்.. ஆயில் (OIL) உள்ளவரை உன்னை மறக்க மாட்டேன்.....

http://www.chennaivision.com/userfiles/monica.jpg

''ஆயுளைப் பாதிக்கலாமா ஆயில்?''

'என்னை இந்த அளவுக்கு குண்டாக்கியது எண்ணெய்தான்!’ - பருமனான நண்பர் ஒருவர் சமீபத்தில் சிலேடையாகச் சொன்னது இது.

நவீன நாகரிக உலகில் பல பிரச்னைகளுக்கு நாம் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான சமையல் எண்ணெய்தான் காரணம் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி. எண்ணெய், வயிற்றை மட்டும் அல்ல, வருமானத்தையும் பதம் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது.
பர்ஸை பாதிக்காத அளவுக்கு சிக்கனமாகவும், வயிற்றைப் பாதிக்காத அளவுக்கு பக்குவமாகவும் ஆயிலைப் பயன்படுத்தும் விதம் பற்றி இங்கே விளக்குகிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி.

''சமையலில் எண்ணெய் சேர்ப்பது சுவைக்காக மட்டுமே என நம்மில் பலரும் நினைக்கிறோம். அது தப்பு. பொதுவாக ஒரு மனிதன் உடல் நலனுடன் இருக்க வேண்டும் என்றால் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவை. இந்த ஐந்தும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம்.

இதில் கொழுப்பு சத்துதான் ஆயில். தோலின் பளபளப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு, ஒரு மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரியில், சுமார் 25-35 சதவிகிதம் ஆயில் மூலம் கிடைத்தால் போதும். இதுவே சர்க்கரை நோயாளிகள் என்றால் 25-30 சதவிகிதமும், இதய நோயாளிகள் என்றால் 25 சதவிகிதமும் இருந்தால் போதும்.
சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்களிடையே உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. குடும்பப் பெண்கள் சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை பெரும்பாலான பணிகளை உடலை வளைத்து நெளித்து செய்தார்கள். இன்றைக்கு எல்லாம் இயந்திரமயமாகி விட்டது. உடல் உழைப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை. உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலத்தில்கூட  மக்கள் எண்ணெய் பதார்த்தங்களை அளவோடுதான் சாப்பிட்டார்கள்.

அந்த காலத்தில் விருந்து என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ இருக்கும். ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது அரிதாக இருக்கும். இப்போதோ மாதத்துக்கு குறைந்தது 5-6 விழாக்களில் பங்கேற்று வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். அத்தனையும் ஆயில் பதார்த்தமாகவே இருக்கிறது.
நம்மவர்களின் தினசரி உணவுப் பட்டியலில் அதிக ஆயில் இருக்கும் பதார்த்தங்களான பஜ்ஜி, போண்டா, ஃபிரைட் ரைஸ், சில்லி சிக்கன், பர்க்கர் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நிச்சயம் இடம் பிடித்துவிடுகிறது. பலரும் காலை 11 மணி வாக்கில் அல்லது மாலை 4 மணி வாக்கில் டீ, காபி உடன் பஜ்ஜி அல்லது போண்டாவை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றை கெடுத்துக் கொள்வதோடு உடலில் தீமை செய்யும் கொலஸ்ட்ராலையும் ஏற்றிக் கொள்கிறார்கள். 
அந்த காலத்தில் உடலுக்கு தீமை செய்யாத நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நம்மவர்கள் அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஏதாவது விருந்து விஷேசம் என்றால் மட்டுமே நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டார்கள். இன்றைக்கு விலைவாசி உச்சத்தில் இருப்பதால் வீட்டு பட்ஜெட்டை குறைக்க பாமாயில் போன்ற உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம்.

ஒரு பக்கம் எண்ணெய் செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று செயல்பட்டு, மறுபுறம் அதற்கும் சேர்த்து மருத்துவத்துக்கு செலவழித்து வருகிறோம். இந்த விஷயத்தில் நம் மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வு வர வேண்டும்!'' என்றவர் சற்று நிறுத்தி, அதிக ஆயில் எப்படி பிரச்னையாக மாறுகிறது என்பதையும் விளக்கினார்.நாம் சாப்பிடும் ஆயில் அளவு தேவைக்கு அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் என்கிற கெட்ட கொழுப்பாக மாறி ரத்தத்தில் சேர்கிறது.

இது, ரத்தக் குழாயில் உறையும் அபாயம் இருக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் தடைபடும். அப்படி நடக்கும்போதுதான் மாரடைப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.
 http://www.koodal.com/cinema/gallery/events/2011/423/vambu-and-bhadra-movie-press-meet-stills_1_165234123.jpg
தற்போது கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் மாதத்துக்கு மூன்று லிட்டர் ஆயிலை பயன்படுத்துகிறார்கள். இதை பாதிக்குப் பாதியாக ஒன்றரை லிட்டராக குறைப்பது உடல் நலனுக்கும் அவர்கள் பட்ஜெட்டுக்கும் நல்லது. பொதுவாக வயது வந்த பெரியவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீட்டில் 400-500 மில்லியும். 14 வயதான சிறுவர்களுக்கு சுமார் 300 மில்லி சமையல் எண்ணெய்யும் செலவழித்தால் போதும். மேலும் உடல் பருமன் உள்ளவர்கள், முகப் பரு உள்ளவர்கள் ஆயிலைக் குறைப்பது அவசியம்.

சாலையோர கடைகளில் விற்கப்படும் வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை ஆரோக்கியம் குறைந்த கசடு எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால், அவற்றை தினசரி மற்றும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

குறைவான விலையில் கிடைக்கிறதே என்று, இவற்றை உண்பதால்தான் பெரிய அளவில் மருத்துவ செலவுக்கு ஆளாக வேண்டிய இக்கட்டு உருவாகிறது!'' -அக்கறையோடு சொல்கிறார் டாக்டர்  கிருஷ்ணமூர்த்தி.

நன்றி - டாக்டர் விகடன்

Saturday, May 07, 2011

சகல கலா டாக்டர் டாக்டர்.. அகில உலக அழகி நர்ஸூ நர்ஸூ

''முதுகு வலிக்கு டாட்டா!''

நம்பிக்கை கொடுக்கும் டாக்டர் டிப்ஸ்..


முதுகு வலி... பைக் ஓட்டுபவர்களைப் பயமுறுத்தும் பூதம். இரண்டு-மூன்று ஆண்டுகள் தொடர்ந்துஅதிக நேரம், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கு, இந்தப் பிரச்னை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கார், பஸ் ஓட்டும் டிரைவர்களும் முதுகு வலிக்குத் தப்புவது இல்லை!

நம்முடைய முதுகு, வாகனத்தில் உட்காரும் வசதிக்காக உருவானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதனால், தொடர்ந்து பைக் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. 'முதுகு வலியில் இருந்து விடுபட வழியே இல்லையா?’ என்று கேட்பவர்களுக்கு, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் கே.ஸ்ரீதர், ஆறுதலாக சில ஐடியாக்கள் வழங்குகிறார்.

''தொடர்ந்து பைக், கார் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி பிரச்னைகள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதற்குக் காரணம், பைக் மற்றும் கார்கள் அல்ல. நம் ஊர்சாலைகள்தான்! குண்டும் குழியுமான மோசமான சாலைகளில் பயணிக்கும்போது முதுகுத் தண்டில் வலி ஏற்படும். அதிக தூரம் பைக் ஒட்டுவதோடு, கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் என்றால், இந்தப் பிரச்னை இன்னும் அதிகரித்துவிடும். பொதுவாக, ஸ்கூட்டர்கள் ஓட்டுவது (குறைந்த தூரப் பயணங்களுக்கு) ஓரளவுக்கு முதுகு வலித் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும்.

அதேபோல், புல்லட் போன்ற எடை அதிகமான பைக்குகளை ஓட்டும்போது பைக் அதிர்வுகளும், குதிப்பதும் குறைவாக இருக்கும். இதனால், முதுகு வலி பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. முதுகு வலிப் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, எடை அதிகமான பைக்கைப் பயன்படுத்தலாம்.

அடி முதுகுக்கு என்று தனியாக விற்பனை செய்யப்படும் 'லம்பர் சப்போர்ட்’ பெல்ட்டை அணிந்து கொண்டும் பைக் ஓட்டலாம். முதுகு வலி வராமல் தடுப்பதற்கு 'பேக் எக்ஸர்ஸைஸ்’ நிறைய இருக்கின்றன. யோகாவும் செய்யலாம்!'' எனச் சொல்லும் டாக்டர் ஸ்ரீதர், மேற்கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையும் இங்கே பட்டியல் போடுகிறார்...


பர்ஸைக் கவனியுங்கள்!

பர்ஸில் தேவையில்லாத பல்வேறு விஷயங்களை வைத்துக்கொண்டு தடிமனான பர்ஸோடு பலரும் பயணிக்கிறார்கள். பின் பக்கம் பர்ஸ் கனமாக இருப்பதால், கார் ஓட்டும்போதோ அல்லது பைக் ஓட்டும்போதோ நம்மை அறியாமலேயே பர்ஸ் இருக்கும் பக்கத்துக்கு எதிர்ப் பக்கமாக சாய்ந்து உட்காருவோம். இது நாளடைவில் முதுகு வலியை ஏற்படுத்தும். அதனால், பர்ஸின் தடிமனைக் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.


பெல்ட்டின் இறுக்கத்தைத் தளர்த்துங்கள்!

மிகவும் இறுக்கமான பேன்ட், பெல்ட் அணிந்துகொண்டு பைக் ஓட்டுவதை நிறுத்துங்கள். பேன்டும், பெல்ட்டும் இறுக்கமாக இருக்கும்போது, நம்மால் சரியான பொசிஷனில் உட்கார்ந்து பைக் ஓட்ட முடியாது. இது, முதுகுவலிப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதனால், நீண்ட தூரப் பயணங்கள் செய்யும் போது, எப்போதுமே இறுக்கமான உடைகள் அணிந்துகொண்டு வாகனம் ஓட்டாதீர்கள். வாகனம் ஓட்டும்போது இடுப்பில் இறுக்கம் இல்லாமல் ரிலாக்ஸாக உட்கார்ந்து ஓட்டப் பழகுங்கள்.

அடி முதுகுக்கு சப்போர்ட் தேவை!

அடி முதுகு (லம்பர்) பகுதிக்கு எப்போதுமே சப்போர்ட் தேவை. லேட்டஸ்ட் கார்களில் 'லம்பர் சப்போர்ட்’ கொண்ட இருக்கைகளே வந்துவிட்டன. அதேபோல், அலுவலகத்தில் உட்காரும்போதும் முதுகுக்குத் தொல்லை தராத, வசதியான இருக்கையில் உட்கார வேண்டியது முக்கியம்.

அடி முதுகுக்கு சப்போர்ட்டாக சின்ன தலையணையைக் கூட பின்பக்கமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது பெரிய டவலை முக்கோண வடிவில் மடித்து பின் பக்கம் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.

பிரேக் வேண்டும்!

தொடர்ந்து பைக் அல்லது கார் ஓட்டுவதை நிறுத்துங்கள். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வாகனம் ஓட்டுவது என்பது வாகனத்துக்கும், ஓட்டுபவருக்கும் நல்லதல்ல!

2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்திவிட்டு கை, கால்களை நீட்டி மடக்கி ரிலாக்ஸ் செய்யுங்கள். அதேபோல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால், அடிக்கடி கால்களை நீட்டி மடக்குவது நல்லது.

சரியான பாதைகளைத் தேர்ந்தெடுங்கள்!

குண்டும் குழியுமான மோசமான சாலைகள் வழியாகத்தான் பயணிக்கப் போகிறோம் என்றால், முடிந்தவரை அந்த வழியைத் தவிர்த்துவிடுவது நல்லது. குண்டும் குழியுமான சாலைகள்தான் முதுகு வலித் தொல்லைகள் ஏற்பட முக்கியக் காரணம். கார் ஓட்டுபவர்களைப் பொறுத்தவரை டிரைவரின் சரியான உயரத்திற்கேற்ப ஸ்டீயரிங் பொசிஷனை மாற்றி வைத்துக்கொள்வது நல்லது!

உடற்பயிற்சி தேவை!
 
தினமும் அரைமணி நேரம் நடப்பது, முதுகுவலி உள்பட பல்வேறு வலிகள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும். ஸ்டீம் தெரபி, மசாஜ் ஆகியவை முதுகு வலிக்கு நிவாரணமாக அமையும்.  நீச்சல் பயிற்சி செய்வதும் நல்லது!

நன்றி - டாக்டர் விகடன்

Monday, April 25, 2011

”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா....

''வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா!''


வீட்டு பட்ஜெட்டில் மாதம்தோறும் மருத்துவச் செலவுக்கே பெரிய அளவில் நிதி ஒதுக்கவேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில், ''ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களையும் நமது உணவுக் கட்டுப்பாட்டாலேயே தீர்க்க முடியும்!'' என்கிறார் 'அனாடமிக் தெரபி’ என்கிற 'செவி வழி தொடு சிகிச்சை முறை’யை பரப்பிவரும் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.


''உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் முக்கியக் காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததுதான். ரத்தத்தைச் சுத்திகரித்தால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.

மனித உடலில் சுத்தமான ரத்தத்தை உருவாக்க உணவு, குடிநீர், மூச்சுக் காற்று, தூக்கம், உடல் உழைப்பு ஆகிய ஐந்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை. உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்குத்தான் வாய் இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.

 இது தவறு. சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கான வேலை வாயிலேயே ஆரம்பித்துவிடுகிறது. எக்காரணம் கொண்டும் பசித்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என ஆறு சுவைகள் இடம் பெறுவது அவசியம். அப்போதுதான் ரத்தத்தில் அனைத்து சத்துகளும் இருக்கும்.

 மேலும், பற்களால் நன்கு கடித்தும் மென்றும் கூழாக்கி, நாக்கால் சுவையை ருசித்த பின்னரே உணவை விழுங்கவேண்டும். அப்போதுதான் உமிழ் நீருடன் சேர்ந்து நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள சர்க்கரை நல்ல சர்க்கரையாக மாறும். மனிதன் வாயின் இரு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கிறன.

 இதில் புரோட்டீன், தாது உப்புக்கள் மற்றும் அமைலேஸ் என்கிற என்ஸைம் போன்றவை இருக்கின்றன. இந்த என்ஸைம் நாம் சாப்பிடும் உணவு வேகமாக ஜீரணமாக உதவுகிறது. வாயிலேயே உணவு நன்றாக மெல்லப்படுவதால், இரைப்பையில் ஜீரணத்துக்காக எடுத்துக்கொள்ளும் சிரமம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு மென்று சாப்பிடும்போது ஆரம்பத்தில் சில தினங்களுக்கு தாடை வலிக்கும். ஆனால், போகப்போக பழகிவிடும்.


அடுத்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்பும் கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பாட்டு வேளையில் மனித வயிற்றில் உணவு ஜீரணமாவதற்கான திரவம் சுரந்திருக்கும்.

 அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால், அந்த திரவத்தின் தீவிரம் குறைந்து உணவு சரியாக ஜீரணமாகாது. குளித்த பின் சுமார் 45 நிமிடம் கழித்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு  இரண்டரை மணி நேரத்துக்குள் குளிக்கக் கூடாது!'' - நம்மில் எத்தனை பேர் இதனை கடைபிடிக்கிறோம் என்பது தெரியவில்லை. பாஸ்கர் சொல்வதை மேற்கொண்டும் கேளுங்கள்..

.

''டிவி. பார்த்தபடி, புத்தகம் படித்தபடி, பேசியபடி சாப்பிடக் கூடாது. நாம் எதைச் செய்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் என்ஸைம் சுரக்கும். ஜீரணமாவதற்கான என்ஸைம் சுரக்காது. ஒருவர் எத்தனை இட்லி சாப்பிடலாம்? எத்தனை சப்பாத்தி சாப்பிடலாம் என்பதை வரையறுக்க முடியாது.

 இந்த உணவு பலகாரத்தின் அளவு ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறாக இருக்கும். ஒரு வீட்டில் செய்யப்படும் சப்பாத்தியின் அளவு இன்னொரு வீட்டில் செய்யப்படும் மூன்று சப்பாத்திகளுக்கு இணையாக இருக்கும். இதனால், சரியான சாப்பாடு அளவை குறிப்பிடுவது கடினம்.

 சரியான உணவு என்பது முதல் ஏப்பம் வந்தவுடன் நிறுத்திக் கொள்வதுதான். அளவுக்கு மீறினால் அமிர்தமே விஷம் என்கிறபோது, உணவு மட்டும் விதிவிலக்கா என்ன? 

காலை தொங்கப் போட்டபடி நாற்£லியில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது அல்ல. மேலும், சிலர் கண் மூடி திறக்கும் முன் சாப்பிட்டு முடித்திருப்பார்கள். சிலர், சாப்பிட முக்கால் மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள். இரண்டும் தவறு. குறைந்தபட்சம் 5 நிமிடம், அதிகபட்சம் 15 நிமிடம்தான் சாப்பிட வேண்டும்!'' என்றவர் கூடுதலாகக் கொடுத்த டிப்ஸ்... 

''தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறு நீர் கழித்தால் உடனே தண்ணீர் குடிக்கவேண்டும். தேநீர், காபியை தவிர்த்து எலுமிச்சை, இளநீர், பழ ரசங்களை குடிக்கவேண்டும். குறைந்தது ஆறு மணி நேர உறக்கம் அவசியம். தூங்கும் போது ஜன்னல்களைத் திறந்து வையுங்கள்.

 சாப்பாட்டில் இருக்கிற கார்ப்போஹைட்ரேட் என்கிற மாவு சத்துதான் சர்க்கரையாக மாறுகிறது. வெள்ளை சர்க்கரை என்கிற சீனியை பயன்படுத்துவதை நிறுத்தினாலே பாதி நோய் குணமாகிவிடும். அதை விஷம் என்றுதான் சொல்லவேண்டும். இனிப்பு தேவை என்கிறபோது தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 நான் சொல்வது ஒன்றும் புதிய விஷயங்கள் அல்ல. அன்றே நம் முன்னோர்கள், 'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.இனியாவது செலவு மற்றும் மருந்து இல்லாத, அனாடமிக் தெரபி முறைப்படி சாப்பிட்டு நலமோடு வாழ முயற்சி செய்யுங்கள்!''

நன்றி டாக்டர் விகடன்