Monday, July 18, 2011

நித்தியானந்தாவுக்கு சாரு நிவேதிதாவின் மனைவி எழுதிய அந்தரங்க கடிதம்...சாரு அதிர்ச்சி...

சாருவின் மனைவி எழுதியதாக நித்யானந்தா கொடுத்த கடிதம், அப்படிக்கு அப்படியே இங்கே... 

“Beloved Swamy,

நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் சுவாமி. எனக்கென்று இருக்கும் ஒரே ஆதாரம் இப்பொழுது நீங்கள்தான் சுவாமி. NSP இரண்டாம் நாளிலிருந்து இன்றுவரை காய்ச்சல் எனக்கு விட்டபாடில்லை சுவாமி. என்னைவிட என் வாழ்க்கையைப் பற்றி நன்கு அறிந்தவர் நீங்கள்தான் சுவாமி. இறைவனின் அருளால் எல்லா சூழ்நிலைகளிலும் மிகவும் ஆனந்தமாக மட்டும்தான் இருக்கிறேன் சுவாமி. அதனால்தான் தங்களை திரும்பவும் காணக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.

நான் தங்களை முதலில் கண்டது முதல் இன்றுவரை மிகப்பெரிய அவதார புருஷனாகவோ அல்லது தவ ஞானியாகவோ என்னால் உணர முடியவில்லை. பல ஜென்மங்களாக பழகிய மிகவும் நெருக்கமான என் ஜீவனின் ஜீவனாக மட்டும்தான் உங்களை என்னால் உனர முடிகிறது. இதுநாள்வரை எவரிடமும் இல்லாத, என் மகனிடம்கூட இல்லாத நெருக்கம், என் ஜீவனின் அடி ஆழத்திலிருந்து தங்களிடம் மட்டும்தான் எனக்கு ஏற்பட்டுள்ளது. 
உங்களைக் கண்டால் மட்டும்தான் நான் இவ்வளவு உருகிவிடுகிறேன். அதனால்தான் “there is something wrong” என்று தாங்கள் அன்று கூறினீர்கள். ஆனால், அன்றே முடிவு செய்துவிட்டேன் சுவாமி. இனி தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று உறுதிமொழியே எடுத்துக்கொண்டேன்.

என்னைப் பற்றி தங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். நான் சாருவை இரண்டாவதாக மணம் முடித்தவள். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சாரு எனக்கு இந்த வாழ்க்கையை எனக்கு கொடுத்தார். அதனால்தான், இன்றுவரை அமைதியாக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சாருவை மணந்த உடன் என் துன்பங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்று நினைத்தேன். ஆனால், பலவித கோணங்களில் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று பிறகுதான் தெரிந்தது. உங்களை சந்திக்கும்வரை சுவாமி, கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக வீடு விட்டால் office என்று நான் வெளி உலகமே தெரியாத ஒரு அடிமைபோல் வாழ்ந்துகொண்டிருந்தேன்.

சாரு என்னை மறுமணம் புரிந்துகொண்ட இரண்டாவது மாதம், என் உயிர்த்தோழியை சாருவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன். என் வீட்டில், என் கண் முன்னால் அவர்கள் இருவரும் நடந்துகொண்ட விதம்... அந்தக் காட்சிகளை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை சுவாமி. நான் பட்ட துன்பங்கள், அவமானங்கள்... சுவாமி உங்களுக்கு தெரியாதது எதுவும் கிடையாது. ஆனால், நான் எல்லாவற்றையும் ஒரு குழந்தையைப்போல் பொறுத்துக்கொண்டேன் சுவாமி.

தினமும் குடி, கும்மாளம். வீட்டிற்கு வந்தவுடன் எல்லாவற்றையும் போட்டு உடைப்பது, கண்ட வார்த்தைகளால் என்னைத் திட்டுவது, உதைப்பது, ஒரு நரகத்திலிருந்து தப்பித்து இன்னொரு நரகத்தில் விழுந்துவிட்டது, சுவாமி அப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு புதுப்பெண், கல்லூரி மாணவி மாறி விடுவாள். அதனால், கல்யாணமான இரண்டாவது மாதத்தில் இருந்து முடிவு செய்தேன் சுவாமி. இனி சாருவிற்கு தாயாக வாழ்ந்துவிடுவது என்று. இன்றுவரை அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

நான் இதைப்பற்றி சாருவிடம் பலமுறை பேசிப் பார்த்தேன். “நீ ஏன் ஒரு எழுத்தாளனை கல்யாணம் செய்துகொண்டாய்? இப்படி அடிமையாகத்தான் நீ வாழ்ந்தாகவேண்டும். உண்மையான அன்பு மனதளவில் இருந்தால் போதும். உன்னைத் தவிர வேறு யாரையும் நான் விரும்பவில்லை. என்னை விட்டுச் சென்றுவிடாதே” என்று காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்பான். உண்மையான அன்பு என்பது உடல், மனம், ஜீவன் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து ஒரே ஒரு ஜீவன்மேல் வைக்கப்படும் காதல் அது என்று நான் சொன்னாலும் அதை அவன் ஒப்புக்கொள்ள மாட்டான்.




அவன் என்னுடன் பேசிய வார்த்தைகளைவிட, அவன் காதலிகளிடம் அவன் கொஞ்சிய நேரங்களே அதிகம். நான் எப்பொழுதாவது பேசுவதற்கு அருகில் சென்றால், எனக்கு எழுத நிறைய இருக்கிறது என்பான். ஆனால், அடுத்த நிமிடமே காதலியிடம் பேச ஆரம்பித்தால், இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருப்பான். திடீரென்று இரண்டு அல்லது மூன்றுநாட்கள்கூட காணாமல் போய்விடுவான். ஒவ்வொரு முறையும் அவனுக்கு புதுக் காதலிகள் அமையும்போது எனக்குக் கிடைக்கும் அர்ச்சனைகள், மிகப் பிரமாதமாக இருக்கும்.

நாளாக, நாளாக அவனது ஆட்டம் தாங்க முடியவில்லை. ஒரு கல்லூரி மாணவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான். என் மகன் கார்த்திக் இருந்ததால், என்னிடம் உண்மையைக் கூறும்படி ஆகிவிட்டது.

இதற்கு நடுவில் அவன் வேறு ஒரு பெண்ணை, கந்தர்வ விவாகம் புரிந்துகொண்டான். அவன் செய்துகொண்ட திருமணம் முழுவதும் என் கனவில் அப்படியே ஒரு சினிமாபோல் தோன்றியது. அந்தப் பெண்ணின் பெயர், அந்தப் பெண்ணுடன் இருந்தவரின் பெயர், சாரு மற்றும் அவர்கள் அணிந்திருந்த உடை, கலர், எங்கு திருமணம் நடந்தது எல்லா விபரங்களையும் என் கனவுக் குறிப்பில் எழுதி வைத்திருந்தேன். ஏதோ ஒரு நாள் அதைப் பார்த்த சாரு, மிரண்டுபோய், நான் சொல்லும் எல்லா விஷயங்களுமே உண்மை என்பதை அப்பொழுதுதான் புரிந்துகொண்டான்.

அது மட்டும் அல்லாது என்னுடைய மைத்துனருடைய மகள் கல்லூரி மாணவி (சாருவின் தம்பி மகள்) எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தாள். சாருவுடன் எல்லா இடங்களுக்கும் சென்று வருவாள். சாருவிற்கு உள்ள புகழையும், பெயரையும் கண்டு மயங்கி சாருவை காதலிக்க ஆரம்பித்துவிட்டாள். இந்த மாற்றம் நிகழ ஆரம்பித்த உடனேயே, சாரு எனக்குக் கட்டிய தாலி, தரையில் அவிழ்ந்து கிடந்ததை இறைவன் எனக்குக் காண்பித்தார். அதற்கான காரணம் என்னவென்று நான் ஷீரடி சாயிராமனிடம் கேட்டபொழுது, என் மைத்துனரின் மகளைக் காண்பித்து இவள்தான் காரணம் என்றார்.

உடனே, கடவுளே என் புத்தி இவ்வளவு கீழ்த்தரமாக வேலை செய்கிறதே என்று எண்ணிக்கொண்டு அந்தப் பெண்ணிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்க ஆரம்பித்தேன். ஆனால், இரண்டே நாட்களில் நான் கண்ட அந்தக் காட்சி... அதுவும் என் வீட்டில்.... உடைந்து போனேன், மருகினேன், துடித்தேன். அன்று எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். ஆனால், இன்றுவரை இறைவன்தான் என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

நான் அன்று என் தாலியைக் கழற்றி இறைவன் பாதத்தில் வைத்தேன். நான் யாருக்கும் மனைவி கிடையாது, தாய் கிடையாது. இறைவனுக்குத்தான் என் ஊன், உயிர் எல்லாம் சொந்தமென்று அர்ப்பணம் செய்தேன். அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.



காமம் என்று வந்தால், தாய் மகள், அப்பா மகள் உறவுகூட அத்துப்போய்விடும் என்று நான் அறிந்த அன்று வியந்துபோனேன் சுவாமி. என் மகன் கார்த்திக், இதைப் பற்றி கேட்டபொழுது, உன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு  வெளியே சென்றுவிடு என்றான் இதே சாரு.

அப்பொழுது நீ எங்கிருந்தாய் நித்யா? என்னைக் கூட்டிக்கொண்டு அப்பொழுது சென்றிருக்கலாமே. எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி விழுந்து அவனுடன் வாழ ஆரம்பித்தேன். இன்றுவரை அவன் என் மகன் கார்த்திக்கை பேசாத வசைச் சொற்கள் எதுவுமே இல்லை.

நான் உங்களைப் பார்க்கும்வரை அவனைவிட்டு நான் எங்கும் செல்லமாட்டேன் என்று(சாரு) அவன் நினைத்திருந்தான். ஏனென்றால், கடந்த 12 ஆண்டுகளாக ஒரு அடிமைபோல் வாழ்ந்தேன் நான். சாருவைவிட்டு உங்களிடம் வந்து சேர்ந்துவிடுவேன் என்று பயப்படுகிறான். “என் கவுரவம் என்ன ஆவது? சமுதாயத்தில் எனக்கென்று உள்ள பெயர் நீ spritual life மேற்கொண்டுவிட்டால், கெட்டுப்போகும். நீ ஏன் ஒரு எழுத்தாளனை மணம் செய்துகொண்டாய்? 
அதனால், இந்த ஜென்மம் முழுவதும் என்னுடன்தான் வாழவேண்டும். நான்தான் உன் சுவாமியை உனக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். என்னைவிட்டு எங்காவது செல்ல நினைத்தால், நான் தற்கொலை செய்துகொள்வேன். நான் தனியாக வாழ ஆரம்பித்தால், பத்திரிகைத் துறை என்னைக் கேள்வி கேட்டே துளைத்துவிடும். நான் இப்பொழுது எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். அதனால், நீ என்னுடன்தான் இருக்கவேண்டும். உன்னால், உன் சுவாமிக்குத்தான் கெட்ட பெயர். நீ spritual activity செய்ய எங்கும் செல்லக்கூடாது” என்று பல வழியாக என்னை பிளாக்மெயில் செய்கிறான் சுவாமி.

இதற்கு நடுவில்தான் சுவாமி, எனக்கு பல உண்மைகள் உரைக்கப்பட்டன. நான், எல்லாவற்றையும் அறிந்து எவரிடமும் உண்மைகளைக் கூற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் உடல், மனம், ஜீவன் எல்லாவற்றையுமே இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு வெறும் ஜடமாக இந்த வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் சுவாமி. என்னை அன்று கடிந்துகொண்ட உடன், நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம். அதனால்தான், சுவாமி இவ்வளவு கோபமாக சொல்கிறார். நான் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பு, மிகவும் தூய்மையானது சுவாமி. எல்லோருக்கும் அவதார புருஷனாக, கடவுளாக தெரியும் தாங்கள், எனக்கு பல ஜென்மங்களாக பழகி மிக நெருங்கிய தோழனாக, என் தாயாக, என் மகனாக, என் ஜீவனாக இருக்கிறீர்கள் சுவாமி.



சில உணர்வுகளை நான் இங்கு எழுதவில்லை சுவாமி. நான் ஒரு சிறு குழந்தையைவிட மிகவும் கள்ளம் கபடம் இல்லாதவள் சுவாமி. இந்த உலகில் யார் என்னை எப்படி நடத்தினாலும் பரவாயில்லை சுவாமி. ஆனால், உங்களது முகம் அன்று மாறியதைக் கண்டு இன்றுவரை நீங்கள் என்னைப் பார்க்க வேண்டாம், பேச வேண்டாம் என்று சொல்வதற்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. என் வாழ்நாள் இறுதிவரை, தங்களை நினைத்து என் ஜீவன் உருக, உங்களை எண்ணி நான் மேற்கொள்ளப் போகும் என் தவக் கோலத்தை அந்த இறைவனே நினைத்தாலும் தடுக்க முடியாது. ஆனாலும், நான் அந்த இறைவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன்.

தங்கள் திருமேனியை வாழ்நாளில் தரிசித்து, தங்களுடன் பேசி, தங்கள் ஆசிகளை நான் பெற எனக்கு உதவிய இறைவனுக்கு நன்றி. நான் உங்கள் மேல் செலுத்தும் பக்தி, எதற்கு ஈடாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

நீங்கள் உங்களைக் காதலித்தது உண்டா? அந்த இறைவனைக் காதலித்தது உண்டா? நீங்கள் எப்பொழுதும் கூறும் மீரா, ராதை, ரமணர் இவர்களின் காதலைக் கண்டவள் இல்லை நான். ஆனால், இந்த எல்லாக் காதலையும்விட நான் உங்கள்மேல் கொண்டுள்ள பக்தி மிகவும் உயர்ந்தது. இதை தங்களிடம் வெளிப்படுத்த என்னைத் தூண்டியதே தாங்கள்தான்.

உங்களின் பக்தையாக நான் இருக்கிறேன் என்றாலே, நான் உங்கள் மேல் கொண்டுள்ள பரிபூரண அன்பு எவ்வளவு தூய்மையானது, ஆழமானது என்பதை தாங்கள் அறிந்திருக்கக்கூடும். நான் கரைந்து உருகி காணாமல்போய் பல ஜென்மங்கள் ஆகிவிட்டது இறைவனே. உங்களுக்காகவே பல பல ஜென்மங்களாய் பிறப்பெடுத்துக்கொண்டிருக்கும் இந்த பக்தையை ஏற்றுக்கொள்ள ஏன் இவ்வளவு தாமதம்?

நீங்கள் பலப்பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ, எல்லாம் வல்ல இறைவனை பிரார்தித்துக் கொள்கிறேன். சிறு குழந்தையாக இருந்தால்கூட அவர் ஏதாவது நினைக்கக்கூடும், அவர்கள் கடிந்துகொள்ளக்கூடும் என்று நினைப்பவள் நான். ஆனால், தங்களிடன் எனக்கு ஒரு சிறு தயக்கம்கூட ஏற்படவில்லை.

என்னிலிருந்து வேறுபட்டவர் தாங்கள் என்றுகூட என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கையை தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். இனி, தாங்கள் என்ன செய்ய சொல்கிறீர்களோ, அதைச் செய்கிறேன்.

உங்களை நான் பார்க்காமல் இருந்திருந்தால், என்ன செய்திருப்பேன் என்று நான் நினைப்பதுண்டு. உடனே, உங்களுக்குக்காகவே பல ஜென்மங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் என்னால், எப்படி உங்களைக் காணாமல் இருக்க முடியும் என்று என் ஆன்மா பதில் சொல்லும். இதைச் சொன்னால் யாராவது நம்புவார்களா? இறைவா! தங்களின் சேவையை செய்வதற்காகவே காத்துக்கொண்டிருக்கும் என்னை ஏற்றுக்கொள்ள ஏன் இந்தத் தாமதம்? என் தவறுகளை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளக் கூடாதா?

with lots of divine love
ma.anadavalli.

*ஆனந்த வல்லி என்பது ஆனந்தத்தை போதிக்கும் சுவாமிஜி அவர்கள், சாருவின் மனைவி அவந்திகாவுக்கு வைத்த பெயர்.

நன்றி - கீற்று

எனது கேள்விகள்

1. நித்யானந்தா உண்மையில் நல்லவராக இருந்தால் தன்னை நம்பி கடிதம் கொடுத்த பெண்ணின் அந்தரங்கத்தை இப்படி வெளியிடலாமா?

2. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய சாரு இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறார்?

3. தனது கணவர் மீது குறை சொல்லும் சாருவின் மனைவி ஏன் குழந்தையுடன் வெளியேறவில்லை?

4.பர்சனல் கடிதத்தை பப்ளிக்காக வெளியிட்ட நித்யானந்தா செய்தது முதல் தப்பு,அதை ரீ பப்ளிஷ் செய்த இணைய தளம் அட்ரா சக்க செய்ததும் தப்பு.. ஹி ஹி  .. ஆல் என்னை மன்னிச்சு

44 comments:

Giri Ramasubramanian said...

so, remove this post :)

Unknown said...

அவந்திகாவின் மேல், பரிதாபமே ஏற்படுகிறது! அவர் நம்பிய இரண்டு ஆண்களும், அவமானம் செய்து விட்டனர்!

வைகை said...

இது ஒரு மோசமான முன்னுதாரணம் சிபி! சாரு மனைவி மீது தப்பா? இல்லை சாரு மீது தப்பா இது நமக்கு தேவை இல்லாதது,அது அவர்கள் பர்சனல்... ஏதோ ஒரு ஆதரவுக்காக் எழுதியதை வெளியிட்டது யாராக இருந்தாலும் கேவலமான பிறப்பு.. உங்கள் பார்வைக்கு இது வந்தாலும் இதை நீங்க எங்களிடம் பகிர வேண்டிய அவசியம் இல்லை!

செங்கோவி said...

சாரு - நித்யா என்ற இரு அயோக்கியர்களிடையே நடக்கும் சண்டையில் அந்தக் குடும்பப் பெண்ணை இழுப்பது மாபெரும் தவறு.

settaikkaran said...

தல, கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கிற சாமியார், ஜோசியர், மந்திரவாதி போன்ற புரோக்கர்கள் கமிஷனுக்காக வேலை பண்ணுறவங்க! அவங்க ரெண்டு பக்கமும் கட்டிங் வாங்குவாங்கன்னுறது படிச்சவங்களுக்குக் கூட புரியலே!

நித்தி-ரஞ்சிதா பத்திரிகையாளர் பேட்டியைப் பார்த்தபோது வந்ததை விட அதிக கோபம் இந்த இடுகையைப் பார்த்தபோது வந்தது. பக்தர் / பக்தைகளின் ரகசியத்தை, மிரட்டுவதற்காக அம்பலப்படுத்துகிற நித்தியானந்தா எவ்வளவு கீழ்த்தரமான ஆசாமின்னு புரியுது.

சாருவோ, அவரது மனைவியோ அல்லது ரஞ்சிதாவோ கூட சாதாரண மனிதர்கள்! நித்தியானந்தா தன்னை ஒரு குரு என்று சொல்லிக் கொண்டு அலைகிறவர். அவரது இந்தச் செயல் காறி உமிழத்தக்கது!

ராஜி said...

பெண்ணென்பவள் வெறும் போகப் பொருளாக மட்டுமே மெத்த படித்த சாரு நிவேதிதாவுக்கும், கடவுளின் மறு அவதாரமெடுத்த நித்தியானந்தாவிற்கு தெரிந்திருப்பார்கள் போல. கடவுளுக்கு இணையாக நித்தியானந்தாவை மதித்து தன் மனக்கஷ்டத்தை பகிர்ந்துக் கொண்ட பெண்ணிற்கு துரோகமே பரிசாகக் கிடைத்திருக்கிறது. இனி, பெண்கள் கோவிலில், கடவுளிடம்கூட, மனக்கஷ்டத்தை பகிரமுடியாதுப் போல.அதை கேட்டு பூசாரியும் Misbehave பண்ணுவாங்க போல.

Unknown said...

இது சேற்றில் உருண்ட பன்றி மேலும் மேலும் அதை பற்றி பேசி எதுக்கு பப்ளிசிட்டி!!??

மோனமாய் இருந்தால் இது போன்ற புல்லுருவிகள் தானே மறைந்து விடுவர் தானே??

முத்தரசு said...

இரண்டாம் வருட துவக்கம் இப்படி ஒரு பதிவா?

அவன் ஒரு கழிசடை இவன் ஒரு புறம்போக்கு - இவனுங்களிகிடையில் பாவம் அந்த பெண்

முத்தரசு said...

@ராஜி

சரோஜாதேவி புத்தகம் எழுதுபவன் எல்லாம் மெத்த படிச்சவனா?

முத்தரசு said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

சரியாக சொன்னிர்கள்

'பரிவை' சே.குமார் said...

பரம அயோக்கியன் நித்யானந்தாவை இந்தப் பெண்கள் இன்னும் நம்புவதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.

பாவம் தன் கஷ்டத்தை எழுதியவரின் லெட்டரை வெளியிட்டு சுய விமர்சனம் தேடிக் கொண்ட நித்யானந்தா மனிதன் தானா?

சென்னை பித்தன் said...

இதை பதிவில் வெளியிட்டதன் மூலம் நித்யாவின் கீழ்த்த்ரமான செயலைப் பலர் அரியச் செய்திருந்தாலும்,இது தவறென்றே எண்ணுகிறேன்.பாவம் அவந்திகா!

Unknown said...

இது நல்லா இல்ல!
சாருவின் மனைவி சாரு, நித்தி ரெண்டுபேரையும் நம்பி ஏமாந்திருக்கிறார்! சாரு, நித்தி மேல் காண்டு இருப்பவர்களெல்லாம் சாருவின் மனைவியை அவமானப்படுத்துவது நல்லா இல்லை!

Unknown said...

பெண்ணை போதையாக நினைக்கும் இரு கருமங்களுக்கு இடையே ஒரு பெண்ணின் மனம் வதை படுகிறது!

நிரூபன் said...

ஜென்மங்களாக பழகிய மிகவும் நெருக்கமான என் ஜீவனின் ஜீவனாக மட்டும்தான் உங்களை என்னால் உனர முடிகிறது.//

ஆகா...அதான் சாரு ரூட் மாறிப் பழகினாரா.

ஹையோ, ஹையோ.

நிரூபன் said...

ஒரு பெண் இரு ஆடவர்களால் ஏமாற்றப்பட்டு விட்டாள்.

என்ன சொல்ல....பரிதாபகர நிலமை.

நிரூபன் said...

பர்சனல் கடிதத்தை பப்ளிக்காக வெளியிட்ட நித்யானந்தா செய்தது முதல் தப்பு,அதை ரீ பப்ளிஷ் செய்த இணைய தளம் அட்ரா சக்க செய்ததும் தப்பு.. ஹி ஹி .. ஆல் என்னை மன்னிச்சு//

அவ்....இது தான் மன்னிக்க முடியாத குற்றம், மனோ அண்ணாச்சி, எடுங்க அந்த அருவாளை.

சசிகுமார் said...

தவறு யார்பக்கம் இருந்தாலும் ஒருவருக்கு ரகசியமாக கொடுக்கும் ஒரு விஷயத்தை அனைவரிடமும் அம்பலபடுதுவது ஒரு மானங்கெட்ட செயல். இதை யாரும் செய்ய மாட்டார்கள். ஊருக்கெல்லாம் உபதேசம் செய்ய இந்த பொறம்போக்குக்கு என்ன யோக்கியதை இருக்கு. மக்களாக திருந்தாதவரை இது போன்ற $%^%%& பேச்சை கேட்டு கொண்டு தான் இருக்க வேண்டும்.

சன் டிவியை குறை கூற இவனுகென்ன அருகதை இருக்கு அவர்கள் செய்ததை தான் இவனும் செய்திருக்கிறான்.

rajamelaiyur said...

அண்ணே .. என்ன போட்டோ லாம் நல்ல போட்டோவா இருக்கு .. திருந்திடிங்களா

Senthil said...

pls remove the post coz avantika is innocent

thanks

senthil. doha

rajamelaiyur said...

இன்று என் வலையில்

என்ன கன்றாவி இது ?

Mohamed Faaique said...

///pls remove the post coz avantika is innocent///

சாரு, நித்யா இவனுங்க பின்னால ஆயிரம் innocentங்க இருக்கானுங்க... இந்தப் பதிவை பார்த்து அவனுங்களுக்கு புத்தி வரட்டுமே!!!

Anonymous said...

இந்த புராடு நித்தியை நம்பி எழுதினார் பாருங்கோ, அந்த பெண்ணின் அப்பாவி தனத்தை எண்ணி கவலை கொள்வதை தவிர வேறு என்றும் புரியவில்லை.

மாசிலா said...

I aprove this post which shows us how scoundrels are these two egoists. In fact, via these kinds of informations we can defend the feminins fundamental rights and their strugle for a peacefull life. We are not at all interfering in their personnel life problems. Every person who care about building a strong societiy have rights to know all about this and discuss them in common forum. Thanx. ( Sorry for my poor english. I am just frech.)

Jey said...

படித்த பெண்கள்கூட இப்படி நித்தி போன்ற அயோக்கியர்களை நம்புவது அதிர்ச்சி அளிக்கிறது.

தன்னை நம்பி ஒரு பெண் எழுதிய கடிதத்தை இப்படி வெளியிட்டது ஈனச் செயல்.


அந்த அம்மா இந்த காவாலிப் பயலுககிட்ட ஏமாதிருக்காங்கன்னு தோனுது. பாவம் இந்த பதிவு மேலும் புண்படுத்த வாய்ப்புள்ளது.


இந்த போஸ்டை உடனே எடுத்திருப்பா சிபி.

Unknown said...

ச்சே. தமிழ் எழுதுலகத்துக்கே இவன் ஒரு சாபக்கேடு

கடம்பவன குயில் said...

வேலைக்குப் போய் சுயமாய் தன் காலில் நிற்கிற பெண்கள் கூட அயோக்கியர்கள் தங்கள் கணவனானாலும் எதிர்த்து வெளியேறாமல் இன்னும் அடிமைவாழ்வு வாழ்வது ஏன் என்று நானும் பலதடவை யோசித்ததுண்டு. ஆனால் வெளியில் இவனுகளைவிட பெரிய பெரிய அயோக்கியனுகளெல்லாம் இருக்காங்க. தனியா இருக்கிற பெண்களுக்கு தூயமனதோடு சுயநலமில்லாமல் எதையும் எதிர்பாராமல் ஆறுதல் சொல்ல எந்த ஆண்களுமே இல்லையென்றுதான் தோன்றுகிறது. நம்பி எழுதிய கடிதத்தை வெளியிட்டதன் முலம் சீப்பான பப்ளிசிட்டி தேடுற பத்திரிகை மாதிரி நம்பிக்கைதுரோகி நித்யா.

கடம்பவன குயில் said...

நம்மைப் படைத்த கடவுளைவிட நமக்கு ஆறுதல் தருபவர் வேறு யார் இருக்கிறார்கள். வாழ்க்கை என்றால் நல்லதும் கெட்டதும் கலந்தது தானே. எல்லோருக்கும் துன்பங்கள் உண்டு. எதிர்தது மனதைரியத்தோடு போராடாமல் சாமியாரைத் தேடி ஓடுவது ஏன்னே புரியல. அவர்களை அவர்களே நம்பாததுதான் பிரச்சினை.

foreignkaran said...

@Kadambavana Kuil...
Idhu dhaan sandhula sindhu paaduradhunnu solradhu...Oru Pennukku aarudhal venumunna yen adutha aan kitta poganum...innoru ponnu kita pogalame...

கிராமத்தான் said...

மனச்சோர்வு அடையும் போது சாமியார்களிடம் செல்வது அவர்களுக்கு வாய்பாக அமைந்து விடுகிறது...சுய நலத்துக்காக எந்த அயோக்கியதனத்தை யும் செய்ய சிலர் தயங்குவதில்லை..

காதர் அலி said...

அவந்திகா நீங்க என்ன பாவம் செய்தின்களோ?இந்த இரண்டு பரதேசிகளிடம் மாட்டி உங்கள் வாழ்கையை தொலைத்துக்கொண்டிருரிகிரிர்கள்.உங்களுக்கு தீர்வு உங்களிடம்தான் இருக்கு.வேறு யாரிடம் இல்லை.இந்த உலகில் எந்த ஆண்களையும் நம்பி நீங்க இருக்க வேண்டாம்.உங்களுக்கு தீர்வு யாரும் தர முடியாது.நீங்கள் தனித்து சிந்தித்தால் மட்டுதான் முடியும்.

நிகழ்காலத்தில்... said...

அவந்திகா என்ற அந்த சகோதரிக்கு மனம் அமைதியடைய பிரார்திப்போம்.

ஸ்ரீகாந்த் said...

இன்று வெளியிட்ட ஒரு கடிததுக்கே இவ்வளவு பேர்கள் அந்த சகோதரி அவன்திகாவிற்கு ஆதரவு தருபவர்கள் ...அன்று மற்றுமொரு சகோதரி ரஞ்சிதாவின் படம்,வீடியோ வை பயன்படுத்தி எப்படியெல்லாம் சந்தி சிரிக்க வைத்தார்கள் ...(சன் டிவி , நக்கீரன் ,மற்றும் பலர் ) அப்படி பாதித்த சகோதரி ரஞ்சிதாவிற்கு ஏனோ ஆதரவு தர வில்லை.....ஒரே விசித்திரமாக இருக்கிறது

Thabo Sivagurunathan said...

இந்த இரண்டு போக்கிரிகளும் அடங்க மாட்டார்கள் போலிருக்கே !பாவம் அவந்திகா !

உங்களிடம் எல்லோரிடமும் என்னை அறிமுகப்படுத்திகொள்கிறேன்!
http://oruulaham.blogspot.com/

R.Gopi said...

தல....

இந்த போஸ்டிங்க மொதல்ல தூக்குங்க...

உங்களுக்கு எழுத விஷயமா இல்ல.. அடுத்தவங்களோட விஷயத்துல கூட நாம ஓரளவுக்கு தான் தலையிட முடியும்...

பிரேமி said...

அந்தரங்கமான கடிதத்தை நித்யா வெளியிட்டது பாவமான செயல் என்றால் அதை நீங்கள் பதிவுசெய்தது அதைவிட பாவமான செயல் ... இப்போது இதைப் படித்து நாங்களும் பாவியாகிவிட்டோம்...

-தோழன் மபா, தமிழன் வீதி said...

சாமியார் (?) நித்தியானந்தா, சாருப்பிரபா, அவரது மனைவி அவந்திகா; இவர்கள் வழக்கமான மனிதர்கள் இல்லை. மனோவியாதி கொண்டவர்கள்.

Aravindan said...

It is a personal thing and should not be let open to public. I am not favoring any one, but as a human i am asking you to remove this post.

virutcham said...

சொந்தக் காலில் நிற்க முடிந்த பெண் ஒருவர் தன மகனுடன் இம்மாதிரி சூழ்நிலையில் சகித்துக் கொண்டு வாழ்வதாக சொல்லுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. தன பிரச்சனைக்கு வடிகாலாக சாமியார்களிடம் செல்வது அடுத்த தவறு. அந்தரங்கங்களை கடிதம் மூலம் தெரிவிப்பது அதை அந்த சாமியார் இப்படி வெளியிடுவது, இதை எல்லாம் எப்படி புரிந்து கொள்வது?

U I and Sex said...

௧) நாகரீகத்தை 'நித்தி, சாரு' கிட்ட எதிர்பார்த்தல்?!!!

௨) நித்தி கிட்ட போனா மோட்சம் கிடைக்கும்னு ஏமாந்து மோசம போன ஒரு பொண்ணு. (அதிகம் கற்பழிக்கப்பட்டது அந்த தொலைக்காட்சியால் தான்...)

௩)இன்னொரு பெண்ணின் கடிதம் அவ்வளவு ஒன்றும் தவறானதாக இல்லை, எதோ ஒரு ('நல்ல!') வடிகால் தேடி இப்படி மாட்டிக்கொண்டதாகவே இருக்கிறது.

Unknown said...

very are very much interested in hearing or seeing others affairs,scenes.there is no difference between educated lady or uneducated,basically they are easily believe and tell their worries etc.,without thinking the future happenings.you show somebody I will get good/bad stories about them including you.AS GIRI RIGHTLY SAID PL.REMOVE THE POST.

Anonymous said...

unakalukku intha tagaval eppadi kidaikkirathu !!!!

saaru mathiri porampokku devdiy psankala mannikamal, keel irukkum anurupai aruthu viduvathu nallathu

Unknown said...

வழக்கம் போலவே நாம் தவறு செய்கிறோம்.இந்தக் கடிதத்தை நித்யானந்ததான் தந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?முதலில் ஆவணத்துடன் இந்தக் கடிதத்தை உறுதிப்படுத்துங்கள்.வாய் கிழிய மேடையில் பேசும் சாருவின் நிறங்கள் மெல்ல மெல்ல நிறமிழக்கின்றன. அதுமட்டுமின்றி ,இதில் நித்யானந்தா தவறு இழைத்திருப்பதாக எனக்கு தெரியவில்லை.அன்கித்தாவின் உண்மையான ஞானத்தை நோக்கிய பக்தியே இதில் தெரிகிறது.இன்றளவும் கூட நித்தியானந்தாவின் வழக்குகளை நிரூபிக்க அரசும் காவல் துறையும் தவறியிருக்கிறது அல்லது நிரூபிக்க முடியவில்லை.எனவே சும்மா நித்தியானந்தவை குறை கூறுவதை விட்டு விட்டு.அடுத்தவர் அந்தரங்கத்தை கண்ணில் எண்ணெய் விட்டு பார்பதை விட்டு விடுவது நல்லது....

ilayamanmadhan said...

இப்படி ஒரு பதிவு வந்ததால் தானே இப்படிப்பட்ட மகானுபாவர்களப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது..???