Monday, April 17, 2017

SBI - தமிழ் சமூக விரோத வங்கி

திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொது மக்கள்மீது தடியடி வருமானம்தானே முக்கியம்?மக்கள் நாசமாப்போனா என்ன?


===============2 மேகதாது அணையால் தமிழகத்துக்கு நன்மை தான் - கர்நாடக அமைச்சர்.....

# அதை நீங்க சொன்னாங்காட்டிதான் டவுட்டா கீது

================

3 படம் வந்த முதல் நாளிலேயே விமர்சனம் எழுதுவதை நிறுத்துங்கள் - விஷால்
# எழுதத்தானே கூடாது?வாட்சப்ல வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாமா?

==============

4 அனுமனை போன்று பா.ஜ.,எம்.பிக்கள் செயல்பட வேண்டும்:மோடி # ஆளாளுக்கு நிலத்தை கையகப்படுத்தி பெயர்த்து எடுத்துட்டுப்போய்டப்போறாக

=================

5 ATM-தமிழ் மொழியை நீக்கியது SBI.
அக்கவுன்ட் வேணும்.அவங்க டெபாசிட் செய்யும் பணம் வேணும்.ஆனாதமிழ் மட்டும் வேணாம்?

================

6 பெண்ணின் கண்ணியம் மிதிக்கப்படுவதை பொறுக்க முடியாது- ஸ்டாலின்
# திருச்சி சிவா,பெரிய கருப்பன் ,சின்ன கருப்பன்,மீடியம் கருப்பன் கேட்டுக்குங்க


==============

7 புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்புத்துறை அமைப்பு இருப்பதாக தெரியவில்லை: கிரண்பேடி .அரசியல்வாதிகள் லஞ்ச ஒழிப்புத்துறையையே ஒழிச்ட்டாங்களா?


=============

8 புதிய மதுக்கடைகளை திறப்பதை முதலமைச்சர் கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் # பழைய மது தான் .கடை மட்டும் புதுசுன்னு சமாளிப்பாங்களோ?

===============


9 ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறியதாக ஸ்ரீராம் நிதி நிறுவனத்துக்கு 20 லட்சம் அபராதம் # பன்றதெல்லாம் ராவணன் வேலை.பேரு மட்டும் ராம்

===============

10 மோடி மீது விவசாயிகள் நம்பிக்கை வைக்க வேண்டும்: பொன்.ராதா # அதுக்கு முதல்ல மோடி நடிகைகளை ,சாமியார்களை சந்திப்பை குறைக்கனும்


================
11 அனுமனை போன்று பா.ஜ.,எம்.பிக்கள் செயல்பட வேண்டும்:மோடி # கலவரம் பண்ணி ஊருக்கு தீ வெச்சுடப்போறாங்க.ஏற்கனவே பிராது இருக்கு

=================

12 ராடன் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை#'வா'ணி-"ரா" ணி னு சீரியல்டைட்டில்.அதான் வந்துட்டாங்க

================

13 கணவர் அழகாக இல்லை திருமணமான 8 நாளில் கிரைண்டர் கல்லால் அடித்து கொலை செய்த மனைவி# நல்ல வேளை.எங்க வீட்ல அம்மிக்கல் ,கி கல் இல்ல==================
14 டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடுவது தேவையற்றது-எச்.ராஜா# உலக அரங்கில் அரசின் புகழ் பரப்ப வேற வழி?


=================

15 அண்ணா சாலையில் மீண்டும் விரிசல்: வாகன ஓட்டிகள் அச்சம் # அண்ணா திமுக பிளவு படுவதும் ,அண்ணா சாலைல விரிசல் விழுவதும் சகஜம் தானே?

=================

16 தேர்தல்கணக்கு காட்டாமல் கள்ளக் காதலியுடன் கூத்தடித்த அமெரிக்க கவர்னருக்கு ஜெயில் காட்டிட்டு கணக்கு பண்ணி இருந்தா விட்டிருப்பாங்களா?

================

17 மாநிலங்களவையில் மோடி அரசை விளாசிய அமிதாப் பச்சன் மனைவி!
# ஐஸ்வர்யா ராய் வீட்டுக்கு ஒரு ஐடி ரெய்டு பார்சல்


==================

18 ரூ. 4.97 கோடி வரிஏய்ப்பு செய்ததாக சரத்குமார், ராதிகா ஒப்புதல் வருமான வரித்துறை தகவல் # நாட்டாமை.முன்னுதாரணமா இருக்க வேண்டிய நாமே..


=================

19 ‘36-24-36’ தான் பெண்ணின் அழகான உடல் வடிவமைப்பு சி.பி.எஸ்.இ. பாட புத்தகத்தால் சர்ச்சை.# இப்டி எல்லாமா சொல்லித்தருவாங்க.

===================

20 பெண்கள் மீது காவல்துறை அதிகாரி தாக்குதல் ; அவசர வழக்காக விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்! # 250 ரூ அபராதம் மட்டும் விதிச்ட்டு விட்ராதீங்க


=========================

0 comments: