Saturday, April 08, 2017

பா.ஜ.க-வும் திராவிடக் கட்சிதான் னு சொன்னதுக்கு இப்டி ஒரு அர்த்தமா?

 இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அதிக பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆகையால், விபத்துகள் ஏற்படுவது சகஜம்-விஜயபாஸ்கர் # அப்போ பஸ்ஸை குறைச்சுட்டா விபத்து குறையும்னு குறைச்சுடாதீங்க


==================

தி.மு.க.,வினரோ,OPS அணியைச் சேர்ந்தவர்களோ, தொப்பி அணிந்து பணம் கொடுத்துவிட்டு, எங்கள் மீது பழி சொல்லலாம்- தினகரன் #  நீங்க ஜெயிக்க அவங்க ஏன் பணம் தரனும்?

====================


லாலு மகன்களின் மணல் ஊழல் அம்பலம்? பீஹார் அரசியலில் திடீர் பரபரப்பு # மக்கள் வாழ்வில் மண்ணள்ளிப்போட அரசியல்வாதிகள் மணல் கொள்ளை அடிக்கறாங்க

==================

'பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள், அலிபாபா கதையில் வரும், 40 திருடர்களுக்கு சமம் - பொன் ராதா # இல்லியே , 3 திருடர்கள் தானே களத்துல இருக்காங்க பணம் கொடுக்க 1 தினகரன் 2 OPS 3 DMK


================'பணம் கொடுத்தவர்களை பிடித்துக் கொடுத்தால், போலீசாரே தப்பிக்க விடுகின்றனர்-ஸ்டாலின் # தப்ப விட்டாத்தானே அவங்களுக்கு பணம் கொடுப்பாங்க?============================


உள்ளாட்சி தேர்தலிலும் OPS அணியுடன் கூட்டணி தொடரும்: வாசன் # மத்தவங்க முதுகில் செய்யும் சவாரி எப்போதான் முற்றும்?


===============

கல்லூரி பேராசிரியர்கள் ஜீன்ஸ் போட கூடாது - உபி முதல்வர் ஆதித்யநாத் # பொறாமை? சிஎம் நாமளே காவி , அவங்க ளுக்கு எதுக்கு ஜீன்ஸ்?னு


====================

8 விவசாயக் கடன் ரத்து செய்வது நேர்மையான கடன் கொள்கைக்கு எதிரானது - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் # விஜய் மல்லய்யாக்களுக்கு தர்றதுதான் நம்ம கொள்கை போல

===============

9 'குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது-தமிழக அரசு பற்றி கமல்.# ஜெ உயிருடன் இருந்தப்ப இதை தில்லா சொல்லி இருந்தா ரஜினி ரசிகரும் "ஜே"போட்டிருப்பாக


===================


10 பா.ஜ.க-வும் திராவிடக் கட்சிதான்...!” பொன்.ராதா # திராவிடக்கட்சிகளுக்கு மாற்று பாஜக னு தமிழிசை.சொன்னாரே?


========================

11 புகையால் ஏற்படும் மரணங்கள்: முக்கிய நாடுகளில் இந்தியா

# தம் கட்டியாவது தம் அடிப்பதை நிறுத்துங்க.இல்லைன்னா லாஸ்ட்.தம்


==================

12 திராவிடகட்சிகள் அழிந்து வருகின்றன:பொன் ராதா #

பா.ஜ.க-வும் திராவிடக் கட்சிதான் னு சொன்னதுக்கு இப்டி ஒரு அர்த்தமா?


================

13 முகநூலில் கேலி செய்து பதிவு போட்டவர் காஞ்சிபுரத்தில் படுகொலை.. - செய்தி
/நெட்டு வினையாகும்

==================

14 திமுக வெற்றியை தடுக்க முடியாது -ஸ்டாலின் #,ஆமா.ஒரு கமா விட்டுட்டீங்க.திமுக ,வெற்றியை தடுக்க முடியாது.வேடிக்கை வேணா பார்க்கலாம்

=============

15 தினகரனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் சரத்குமார்.

# நாட்டாமை வருமானத்துக்குவழி பாத்துட்டாரு


============

16 ஜெ மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யக்கோரிய கீதா ஆஜராக ஆணை: ஆணை.அவர் உயிருக்கு பாதுகாப்பு யார்தருவார்?

===============

17 இந்தியை எதிர்த்தால் ்

தமிழ் எதிர்ப்பு போராட்டம் -H.ராஜா
#,டெல்லில நடத்தினா சிரிப்பாங்க.தமிழகத்தில் நடத்தினா உதைப்பாங்க


==============

18 ஜெ சவப்பெட்டி

போன்ற மாதிரியை வைத்துOPS அணி தேர்தல் பரப்புரை

கொலைநடந்தப்ப அதை முன்னிலைப்படுத்திஅதிமுக பிரச்சாரம் செஞ்ச மாதிரி

=============

19 வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முசிறி X MLAபிரின்ஸ் தங்கவேலுவுக்கு 2 ஆண்டு சிறை# கூடாரம் காலி ஆகிட்டே வருது

===============

20 தாமரையை வீடு வீடாக கொண்டு சேர்ப்போம்

-வானதி சீனிவாசன் # பெருமாள் கோவில்ல சேர்த்தாலாவது பூஜைக்கு ஆகும்.தாமரைப்பூ வீட்டுக்கு ஆகாதே?


================

0 comments: