Saturday, April 01, 2017

தமாசு வேற , டப்மாஸ் வேற

RKநகரில் குற்றங்கள் புரிய மாட்டோம்.

101 ரவுடிகளிடம் எழுதி வாங்கிய போலீஸ் -செய்தி
# அந்த தொகுதில.101,அரசியல்வாதிங்கதானா?


==============

2 தனிப்பட்ட முறையில் எப்போது வேண்டுமானலும் ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்லலாம்-திருமா

# பாஸ்போர்ட் ஆபீசரே சொல்லிட்டாரு.அப்புறம் என்ன?

============

3 RKநகர் தேர்தலில் தினகரனுக்கு கடைசி இடம்தான் கிடைக்கும்-ஸ்டாலின் # அப்டி மீறி ஜெயிச்சுடா இவர் பேரில் இருக்கும் இடத்தை ஏழைக்கு எழுதி வைப்பார்

============

4 மக்கள் சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளதாக சில அமைச்சர்கள் என்னிடம் தெரிவித்தனர் - OPS # அது கூட அடுத்தவங்க சொல்லித்தான் தெரிஞ்சிருக்கு


============

5 இந்தியாவிலேயே யாரும் வெளியிடாத தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம்: மாஃபா பாண்டியராஜன் கிழித்து.விடவும்னு எழுதி இருக்குமோ

===============

6 கலைஞர் மகன் என்பதால் எதையும் ஆதாரத்துடன் தான் சொல்வேன்-ஸ்டாலின்#ஆனாலும் பாக்கெட் கிழிந்து சேதாரத்துடன்தான் வீடு போறார்.ஏன்?

===============

7 பொதுவெளியில் திருமணமாகாத பெண்கள் ஆண்களுடன் பழகக்கூடாது -பாஜக!

#,அப்போ திருமணம் ஆன பெண்கள் பழகலாமா?

==============

8 முதல்வர் பழனிசாமி எங்கள் அணிக்கு வந்தால் வரவேற்போம்: OPS # அப்டியே கலைஞர்,ஸ்டாலின் ,சசிகலா எல்லாத்துக்கும் ஒரு வரவேற்பைப்போட்றலாமில்ல?

============

9

ஜி.எஸ்.டி.யால் புதிய இந்தியா உருவாகியுள்ளது.

-மோடி புகழாரம் # இந்தியா பழமைக்குப்பேர் போனது, எங்களுக்கு பழைய இந்தியாவே போதும்


===================


10 ஜெ., இருக்கும்போது, ஆட்சிக்கும், கட்சிக்கும் துரோகம் செய்தவர் OPS -தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன்:# அப்போ ஜெ இறந்தப்போ  ஏன் அவரை சிஎம் ஆக்குனாங்க?=======================


11   பணம் கொடுப்பதைத் தடுப்பது சிரமம் என, தேர்தல் கமிஷன் கருதுமேயானால், அது இருந்து என்ன பயன்?-திருநாவுக்கரசர் # திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுனு சொல்லிடுவாங்களோ?==================

12   வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நலனுக்காக, 'பசல் பீமா யோஜனா' ர் மோடி அறிமுகப்படுத்தி உள்ளார். # ஆல்ரெடி “பீமா” ஃபெய்லியர் ஆன படம் ஆச்சே? செண்ட்டிமெண்ட்டா இதுவும் புட்டுக்குமோ(டி?)


=========================
13   


விவசாயிகளின் கடன்களை, மாநில அரசு தான் தள்ளுபடி செய்ய வேண்டும்.-தமிழிசை # அப்போ மத்திய அரசு உதவாது, ஆனா  ஓட்டு மட்டும் வேணும்?


=====================


14  யார் யாரோ உட்கார்ந்த சி எம் சீட்ல நான் உட்காரனுமா?னு யோசிக்கறேன் - ஸ்டாலின் #

உங்களுக்கு அப்படி ஒரு தர்மசங்கடமே வரக்கூடாதுனு தான் ஜனங்க தோக்கடிச்சு இருக்காங்களே?

======================


15 மோடியின் நிஜமான நோக்கம், வங்கிகளின் நிதி ஆதாரத்தை அதிகரிப்பது தான் - பிருந்தா காரத் # அது உண்மையாவே இருந்தாலும் அது நாட்டின் நன்மைக்குதானே?


====================


16  ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றம்; புது வருடம், புது சட்டம், புது நாடு : பிரதமர் மோடி பெருமிதம் # ஜிஎஸ்டி க்கு காங்கிரஸ் ராயல்டி கேட்பாங்களோ?அவங்கதானே முதல்ல இது பத்தி சொன்னது?


==================

17 சசிகலா குடும்பத்தினர் . தமிழகத்தை விலைக்கு வாங்குவதற்காக   அரசியலில் இறங்கியுள்ளனர்-கங்கை அமரன்  #  அதான் 5 வருசத்துக்கு லீசுக்கு விட்டாச்சே?இனி என்ன பண்ண முடியும்?


=====================

18 
சூரிய நமஸ்காரத்திற்கும்

நமாசுக்கும் வித்தியாசம் இல்லை'-உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் # தமாசு வேற , டப்மாஸ் வேற -னு யாரும் இன்னும் கிளம்பலையா?
=================================


 என்னை எதிர்த்துப்போட்டி இடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் -ஜெ தீபா # ஆதித்யா சேனல்ல இவர் ப்ரோகிராம் போடலாம், செம எண்டர்டெய்ன்மெண்ட் ====================
ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனுக்கு ஆதரவாக, நடிகை எமி ஜாக்சன் பிரசாரம் # எமி ஜாக்”சன்”  தவறுதலா SUN  க்கு பிரச்சாரம் பண்ணிடப்போறார்

=====================
19 


====

0 comments: