Sunday, April 23, 2017

கமலோட தன்னிலை விளக்கத்தை கேட்டு ஜட்ஜ் ரிசைன் பண்ணப்போறாரு

1000 அவமானங்களை தாங்கிக்கொள்ளும் வலிமை மிக்கவர் தினகரன் - நாஞ்சில் சம்பத் # அப்போ ஒவ்வொரு அவமானமா பக்கத்துல நின்னு எண்ணிட்டு இருந்திருக்காரு

=================

2 தேர்தலைநிறுத்தப்போறோம்னு ஆல்ரெடி தமிழிசை டமாரம் கொட்டிஅறிவிச்ட்டாங்க, சொன்னபடிசெஞ்சுட்டாங்க - நாஞ்சில் சம்பத் # பாராட்றீங்களா? திட்றீங்களா?

================

3 ஜெயிலுக்குப்போகும் நிலை வந்தா தினகரன் சிரிச்சுக்கிட்டேபோவார் -நாஞ்சில் சம்பத் எப்படியும் “வாங்கிடலாம்*னு ஒரு நம்பிக்கை தான்

===================


4 VIP கைதிகளும் இனி களி சாப்பிட வேண்டும் உ.பி. CM யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு # அரசியல் கதகளி ஆடறாரே


===============

5 ஊழலை வெளிச்சம் போட்டு வெளிஉலகுக்கு காட்டப்போகிறோம்-ஸ்டாலின் # உடன்பிறப்பே! 2ஜி ஊழல்வாதி கனிமொழி உடன்பிறப்பா இருந்தாலும் இம்முடிவு சிறப்பே


==================


6 ஓபிஎஸிடம் நிற்க வேண்டியது வந்தால் தற்கொலை செய்துக் கொள்வேன் - நாஞ்சில் சம்பத்

# அப்போ அந்த இன்னோவா கார் யாருக்கு சொந்தம் ஆகும்?

=============

7 கோகுலம் நிதி நிறுவனத்தில் சோதனை நடந்ததின் பின்னணி: தமிழக அரசியல்வாதிகளின் ரூ.12,500 கோடி கறுப்பு பணம் முதலீடு # அப்டியே ஸ்ரீராம் சிட்ஸ்ல ஒரு ரெய்டு, ஏகப்பட்ட ராவணன்கள் சிக்குவாக


===================

8  விசுவாசத்துக்கு எடுத்துக்காட்டு,OPS. விசுவாசம் என்பதை, அவரைப் பார்த்துத் தான் நாங்கள் கற்றுக் கொண்டோம்.-உதயகுமார்: # பதவிக்காக கூழைக்கும்பிடு போட்டா அதுக்குபேரு விசுவாசமா?


==================

தினகரனை ஒதுக்க, சதி வேலை நடக்கிறது. அதற்காக, தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித் துறையை, பா.ஜ., பயன்படுத்துகிறது.-
நாஞ்சில் சம்பத்-# தினகரன் இவரை பயன்படுத்திக்கறார் போல

===================


10 தமிழக அரசு செயல்படவில்லை; அதை பா.ஜ., இயக்கி வருகிறது.-முத்தரசன் # செயல்படாத அரசுன்னு அதிமுக வுக்கு கெட்ட பேரு வந்திடக்கூடாதுன்னு பிஜேபிக்கு ஒரு நல்ல எண்ணம் தான்


=====================

11  அ.தி.மு.க., அரசியல் ஆலமரம் -வைகைச்செல்வன் # அதனால தான் ஏகப்பட்ட விழுதுகள் , கிளைகள் நாளுக்கு நாள் பெருகிட்டே இருக்கு, பனை மரமா இருந்தா தப்பிக்கும்==================


12 

இன்று புது கட்சியின் பெயரை அறிவிக்கிறார் தீபா கணவர் -செய்தி # எம் ஜி ஆர் அம்மா தீபா புருசன் முன்னேற்றக்கழகம்?


=================

13 அதிமுக.அரசியல் ஆலமரம் -வைகைச்செல்வன் # அதனாலதான் ஏகப்பட்ட “அடிவிழுது”கள்?

==============

14 எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க  விண்ணப்படிவம் விற்றதில் பல கோடி அளவிற்கு மோசடி தீபா மீது  பண மோசடி புகார் # அதையும் காசு கொடுத்து வாங்கி இருக்கானுங்களே?


============================

15 அதிமுகவுக்கு எதிராக பல்வேறு வேலைகளை ஸ்டாலின் செய்கிறார்:MLA ராஜன் செல்லப்பா # எதிர்க்கட்சின்னா அப்டித்தான்.எதிராத்தான் செயல்படுவாங்க==================16 தன் காரிலிருந்த சுழல் விளக்கை தானே கழட்டினார் முதல்வர் எடப்பாடி


-செய்தி
# நமக்கு நாமே திட்டம் ஆரம்பித்தது அவங்க.செயல்படுத்துவது இவங்க

==================

17 ஆளுநருடனான சந்திப்பில் அரசியல்் இல்லை நட்பு ரீதியிலான சந்திப்பு.
-தம்பிதுரை# ஆமா.அஞ்சாங்கிளாஸ் ல இருந்தே 2,பேரும் ரொம்ப நட்பா இருந்தாக


==================

18 OPS-ஐ நான் விமர்சித்ததால் அவர் பக்கம் போகமாட்டேன் -நாஞ்சில் சம்பத்
# 1 கோடி ரூபா குடுத்தாலும் 6PM க்கு மேல் வேலை செய்ய மாட்டேனா?30ரூ போதும்


==================

19 பேச்சு மாறாத ஒரே ஆள் தமிழ் நாட்லயே  நான் தான் - நாஞ்சில் சம்பத் # மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாறாதது்ன்னு சொல்லி இருக்காங்களே பெரியவங்க

==================

20  மகாபாரதத்தை அவமதித்ததாக கமலை வள்ளியூர் கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவு # கமலோட தன்னிலை விளக்கத்தை கேட்டு ஜட்ஜ் ரிசைன் பண்ணப்போறாரு


====================

0 comments: