Sunday, April 16, 2017

சுசித்ரா /ட்விட்டருக்கும் ஒரு நோட்டீஸ் பார்சல்

1  RKநகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் நான் தான் வேட்பாளர் -டிடிவி தினகரன் #,அந்நியச்செலாவணி வழக்கில் உள்ளே போனாலுமா?

================

2 பாலியல் வீடியோக்களை முடக்கக்கோரி வழக்கு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் # சுசித்ரா /ட்விட்டருக்கும் ஒரு நோட்டீஸ் பார்சல்


================


3 ஐடி ரெய்டுக்கு உள்ளான அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி பறிப்பு இல்லை.. டிடிவி தினகரன் # பதவியை பறிச்சா அவரு இவரை காட்டிக்கொடுத்துடுவாரில்ல?

===============

4 உலகசுற்றுலா பட்டியலில் இந்தியா40-வது இடம் # இந்த உலகத்துலயே அரசு சம்பளத்துல உலகத்தையே சுத்துவதில் நம்மாளு தான் முதல் இடம்.மோடி

=================


5 பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது விசாரணை - தமிழக அரசு# மப்புல தெரியாம அடிச்ட்டேன்னு சொல்லி தப்பிச்சிடப்போறார்


==============

6 தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்பது தேவை இல்லாதது - பிரேமலதா
# அரசியல் பண்ண தானைத்தலைவருக்கு தேவைப்படுதில்ல ?வரலாறு தெரியாம பேசாதீங்க

================

7 வருமானவரி சோதனை ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடந்தால் அரசு கவிழ வாய்ப்பு-தமிழிசை # அண்ணன் எப்போ எந்திரிப்பான்?திண்ணை எப்போ காலி ஆகும்?மொமெண்ட்


=================

8 விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை.. உச்சநீதிமன்றம் கண்டனம் # சும்மா ரெய்டு நடந்துட்டே இருந்தா?அதை கவனிக்கவா?இதையா?


===================

9 அக்காள் கணவர் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் சிக்கிய பெண், தனது கணவரையும் கொன்றது அம்பலம் # கள்ளக்காதலன் தான் 3,வது டார்கெட் போல


================

10 தாமரையின் ஆட்சியை தமிழகம் காண தமிழ் புத்தாண்டு வாழ்த்து - பொன். ராதா # வாழ்த்து சொல்றாரா?சாபம்.விடறாரா?

================

11 தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் பொதுத்தேர்தல் -பிரேமலதா! # ஆமா.2021 மே மாசம்.வரும்.அதுவும் விரைவில் கேட்டகிரி தானே?

=================

12 கைரேகை மூலம் பணம் செலுத்தும் 'பீம்-ஆதார்' வசதி - இன்று அறிமுகம் செய்கிறார் மோடி
#16 வயசுக்கு கீழே இருந்தா சோட்டா பீம் ஆதார்?


==================

13 மெரினா பீச்சுக்கு விசிட் அடித்த ஸ்டாலின்
# சிஎம் ஆகனும்னா ஜெ சமாதி க்கு ஒரு.விசிட் அடிக்கனும்னு பேமிலி ஜோசியர் சொன்னாரோ?

==================
14 தமிழகத்தில் பாரதிய ஜனதா கண்டிப்பாக காலூன்றும் என சவால் விடுகிறேன்: தமிழிசை # அன்பா கால் ஊன்றக்கூடாதா?ஏன் கண்டிப்பா ?

==================


15 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், எந்தக் காலத்திலும் நம்பிக்கைக்கு உரியவையாக இருந்ததில்லை.-அன்புமணி:  # லோக்சபா தேர்தல்ல நாம ஜெயிச்சப்பக்கூட அதே மின்னணு இயந்திரம்தானே?


=========================


16  விவசாயிகளின் இந்த நிலைக்கு, தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்த, அ.தி.மு.க., -- தி.மு.க., கட்சிகளே காரணம். # ரெண்டுமே கேப்மாரி மொள்ளமாரி கட்சினு சொல்ல வர்றீங்களா?


========================

17 அ.தி.மு.க., - தி.மு.க.,வினர், தங்களது மது ஆலைகளை மூடட்டும். அதன்பின், மதுவிலக்கு பற்றி பேசட்டும்-தமிழிசை # ஊர் வாய மூடலாம்,அணு உலையை மூடலாம், இவங்க சாராயா ஆலையை மட்டும் மூடுவே முடியாது

=====================

18 ஊழல் ராஜ்ஜியம் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. அதன் ஹீரோ OPS -ஸ்டாலின்:# அவரு   இப்போ வந்த ஹீரோ. ஊழலில் எவர் க்ரீன் ஹீரோ யாரு?


=================================

19 
கள்  போதை பொருள் எனவும் நிரூபித்தால், ஒரு கோடி ரூபாய் தருவதாக நல்லசாமி கூறினார்.-இன்னும் தரலை -குமரிஅனந்தன் # நதி நீர் இணைப்புக்கு ரஜினி கூட தான் 1 கோடி தர்றேன்னாரு


====================

20 

 ஒகேனக்கல் பகுதியில்  காவிரி நீரை கர்நாடகம், கிணறுகள் அமைத்து திருடுவது தெரிய வந்திருக்கிறது-  ராமதாஸ் #  உங்களுக்கு த்தெரியுது, இந்த அரசாங்கத்துக்கு  தெரியலையே, ரெய்டுக்கே டைம்  சரியா இருக்கு

===================

0 comments: