Sunday, April 16, 2017

அண்ணா என அழைத்து நோகடிக்கும் பிகர்களே!

1  முலாம்பழம்

கிர்னி பழம்
இரண்டும் ஒன்று தானா?
ஆமா.தர்பூசணி ,கோஷாப்பழம் 2,ம் எப்டி ஒண்ணோ அப்டி


==============

2 நீயும் நானும் ஒரே

தலையணையில்
படுத்ததற்காக என்
கனவை நீ காண முடியுமா?
அது முடியாது.ஆனா தலையணை உறை.2துவைக்கற.வேலை மிச்சம்


===============

3 சேற்றில் தான் செந்தாமரை முளைக்கும்னும் சொல்லலாம்.


தாமரை மலரும் இடம் ஆபத்தான சகதிகள் நிறைந்த இடம்னும் சொல்லலாம்

============

4 இடைத்தேர்தலில் அதிமுக.வின் எந்த அணி வெற்றி பெறும் ?என்ற எதிர்பார்ப்பே பலரிடம் இருப்பதே திமுக வுக்கு பின்னடைவு

===========

5 பலரும் எதிர்பார்க்கும் ரொமாண்டிக் த்ரில்லர் காற்றுவெளியிடை மீடியம் ஹிட் ஆகும்.எதிர்பார்ப்பில்லாமல் வரும் 8,தோட்டாக்கள் ஹிட் ஆகும்

=============

6 எட்டுக்கால்கள் இருந்தபோதும் சிலந்தி ஒருபோதும் தன் வலையில் சிக்குவதே இல்லை!தன் வலையில் தானே சிக்குவது மனிதன் மட்டும்தான்.நெட் பேக்

=============

7


நடிகர் விக்ரம் ஒரு தீர்க்கதரிசி , விஜய பா ஸ்கர் சரத் வீட்டில் ரெய்ட் வ,ரப்போவது தெரிந்துதான் புதுப்பட டைட்டிலாக “ ஸ்கெட்ச்” சை அறிவித்தார்


===================

8 என் டிஎல் லைப்போய் பாரு னு டிஎம்ல சொல்லிட்டா அந்தப்பொண்ணு பாத்துட்டுப்போவுது.எதுக்கு மெனக்கெட்டு நெட்தமிழன் ஒவ்வொரு ட்வீட்டா மென்சன்?


===============9 THA"RUN" VIJAY===========10 கேட்கறவன் கேனயனா இருந்தா த்ரிஷ்யம் ஆஷா சரத் தான் சரத்குமாரோட ச ம க கொள்கைப்பரப்பு செயலாளர் ம்பானாம்=============11 14/4/17 ரிலீஸ் எதிர்பார்ப்பு தர வரிசை

1 ப.பாண்டி
2 கடம்பன்
3,சிவலிங்கா

==================

12 14/4/17 அன்று ப.பாண்டி மூலம் இயக்குநர் தனுஷ் வெற்றி பெற்று திரை உலகில் பல புதுப்புது நாயகிகளை உருவாக்க வாழ்த்துகள்

=================

13 முன்னாள் காதலன்(௧ள்)

நமக்கு அப்பப்ப எதுனா உதவி செய்யனும் எனும்
ஆதங்கம் பெரும்பாலான பெண்களுக்கு உண்டு .


================

14 அந்தக்காலத்துல பொண்ணுங்க ஆம்பளைங்க முகத்தில் கரியைப்பூசினாங்க.இப்போ பிளாக் பண்றாங்க.அவ்ளோ தாம் வித்தியாசம்

==================

15 எனக்குத்தெரிஞ்சு கவர்மெண்ட் ஆபீசர்ஸ்ல திமிரு பிடிச்சவங்க ,நம்மை யார் என்ன செய்ய முடியும்னு எகத்தாளமா இருப்பவர்

1,போலீஸ்
2 பேங்க் ஆபீசர்ஸ்

=====================

16 சித்திரை 1 க்கு இதான் சாக்குன்னு ட்விட்டர்ல இருக்கும் 27 ,FB ல இருக்கும் 15 சித்ராக்களுக்கும் ஒரு வாழ்த்தை சொல்லி வைப்போம்


===================

17 போலீஸ் ஆபீசர் பாண்டியராஜனின் அரக்கத்தனமான செயலுக்கு கண்டனம் தெரிவித்த முதல் தமிழக அரசியல் தலைவர் தமிழிசை தான் @ சன் நியூஸ்

=============

18 என்னை மாதிரி சின்னப்பசங்களை அண்ணா என அழைத்து நோகடிக்கும் பிகர்களே!

1 அண்ணா திமுக
2,அண்ணா சாலை
ஏற்பட்ட நிலைமையை நினைக்க
3 அண்ணா ஹசாரே


================

19 மீன ராசி அன்பர்களே! சந்திராஷ்டம்.ஆபீஸ் ல கூட இருப்பவனே போட்டுக்கொடுப்பான்.எந்த நாயையும் நம்பாதீர்.கோபத்தை தவிர்ப்பீர்.


====================

20 பெரும்பாலான பொண்ணுங்க முருக பக்தைகளா, கண்ணனை விரும்பும் கோபியரா இருக்காங்க, ஆனா நாம மட்டும் ராமனா இருக்கனும்னு எதிர்பார்க்கறாங்க. எந்த ஊர் நியாயம் இது?


=====================


0 comments: