Thursday, April 06, 2017

காற்று வெளியிடை VS வாரணம் 1000

விஜய் டிவி புகழ் டீச்சருக்குFB ல FAN pageஓப்பன் பண்ணிட்டாங்க.போற போக்கைப்பார்த்தா தனுஷ் க்கு ஜோடியா நடிக்க வெச்சிடுவாங்கபோல


==========

2 பொண்ணுங்க கிட்டே நம்ம வயசை அவங்க வயசை விட  1 கமிச்சு சொன்னா தம்பிங்கறாங்க, 1 அதிகமா சொன்னா அண்ணன் கறாங்க, டெலிகேட் பொசிசன்


===============ஒரே நபர் இரு வேறு அல்லது அதற்கும் மேலும் எண்ணிக்கையில் ஆதார் அட்டை பெற முடியுமா?முடியாது சார்.ரேகை காட்டிக்கொடுத்துடும்


==============

4 தன் கோபத்தை வெளிப்படுத்துவதாக நினைத்து மற்றவர்கள் முன் தனக்கானவனை அவமானப்படுத்தும் பெண் தன் மதிப்பை துல்லியமாக இழப்பாள்

===============

5 மீன ராசி அன்பர்களே! இன்று அற்புதமான நாள், ராசியான நிறம் வெள்ளை.தொட்டது துலங்கும், தொடுவதற்கு முன் ஒயிட் ரோஸ் கூந்தலில் வைத்து விடவும்


===================
நெட் தமிழன் எதுனா சிறுகதையோ ட்வீட் லாங்கரோ எழுதினா முத வேலையா தன்னோட லேடி பாலோயர்சுக்கு தனித்தனியா மென்சன் ல லிங்க் தர்றான்.புத்திசாலி==================7 எப்படி தான் எந்நேரமும் அழுகாச்சி ட்வீட்டா போடுறாங்களோ. சிக் பீபுள்ஸ்


ஆறுதல் சொல்ல யாராவது வந்தா அப்டியே டிஎம் பக்கம் கூட்டிட்டுப்போகத்தான்


==================

8 அன்பிற்க்கு அடைமொழி அவள்

அழகுக்கு வடை மொழி அவ தங்கச்சி


=================


9 வளர் பிறை , தேய் பிறை, நாள் ,நட்சத்திரம் பார்க்காமல் நீ எந்த காரியத்தை  எப்போது  ஆரம்பித்தாலும் உன் வாழ்வு  எந்நாளும் ஒளி வீசும் பவுர்ணமி தான்=================10 நீங்கள்.எந்த வகை திருமணம் னு 4,ஆப்சன் கொடுத்து ஒரு பொண்ணு கேள்வி கேட்டா.அதுக்கு.400பேரு "உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா?"================11 நான் மொக்கை ஜோக்குக்கெல்லாம் ரிப்ளை பண்ண மாட்டேன்.ஸ்மைலி தான் போடுவேன்.ஓஹோ.அப்போ அதுவும் ஒரு ரிப்ளைதானே?

================
12 ஆணோ , பெண்ணோ எளிமை தான் மிகச்சிறந்த ஆபரணம்
ஆடம்பரத்துக்கு ஆயுசு குறைவு என்பதுதான் காரணம்=================


13 மது ப்ரியன்

மது நேசன் ன்னா புளகாங்கிதப்படறாங்க.
குடிகாரன்னா கோபம் வந்துடுது
குடிகாரனுங்களுக்கு

==============

13 போட்டியில் பங்கு பெறுவோர் பரிசுத்தொகையைக்கணக்கிட வேண்டாம்.போட்டியில் வெற்றி பெறுவதும் ஒரு போதையே.பங்கு கொள்வதும்.


================14 உடம்பை ,வருமானத்தை,எதிர்காலத்தை கெடுக்கும் சாராயத்தைக்குடிக்க குடிகாரர்கள் இப்போ Qவில் ரொம்ப நேரம் நிற்க வேண்டி இருப்பது ஒரு வகையில் நல்லது===============15 உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காத போது் கமலை நினைத்தும் ,நல்ல மாப்ளை அமையா விடில் ரஜினியை நினைத்தும் ஆறுதல் அடைக=============16 K.பாக்யராஜ் ஒரு தீர்க்கதரிசி.விவசாயிகள் பிரச்சனை,ஹிந்திதிணிப்பு பற்றி அன்றே கணித்தார்

ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதா தா

================

17சாதா தமிழன் - டேய், ஆத்துல அந்த இடம் தாண்டி போய்டாதே ,சுழல் இருக்கு

நெட் தமிழன்=டேய், ஓடியா, சொழலி ஆன் லைன்ல


====================


18  சம்பளத்துல இருந்து சேமிக்க , இன்செண்ட்டிவ்ல இருந்து சேமிக்க , சைடு பிஸ்னெஸ் மூலம் சேமிக்கன்னு 3 SB A/C வெச்சிருந்தாலும் 3லயும் மினிமம் பேலன்ஸ் தான் இருக்கு

=====================

19 அண்ணனுக்கு எட்டலை, தம்பிக்கு எட்டிடுச்சு -பழமொழி
அண்ணனுக்கு எட்டிடுச்சு, தம்பிக்கு எட்டலை -புதுமொழி  காற்று வெளியிட VS  வாரணம் 1000 ஹீரோ கெட்டப்


====================

20 மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
தொகுதிகளில் அவள் ஆர் கே நகர்

==============

0 comments: