Sunday, April 02, 2017

டாக்டருங்களுக்கு வாழ்வாதாரமே அசைவ உணவுதானா?எப்டி?

தேர்தல் முடிவுகளை ஜோசியர்கள் கணிக்கக்கூடாது -தேர்தல் ஆணையம் #,நல்ல வேளை.ஆசியர்கள் யாரும் கணிக்கக்கூடாதுனு முட்டுக்கட்டை போடலை


=============2 பசுவை கொன்றால் ஆயுள்சிறை: குஜராத்தில் சட்டம் # CM ராமராஜன் ரசிகரா?============3 ஏப்ரல் 11-ம் தேதி ரசிகர்களைச் சந்திக்கிறேன்.. ஆனால் அரசியல் பேச அல்ல! - ரஜினிகாந்த் # 2.0 பட ப்ரமோ ன்னு நேர்மையா ஒத்துக்கிட்டார்============4 RKநகர் தொகுதியில் வாக்காளர்களை மிரட்டினால் கடும் நடவடிக்கை.. துணை தேர்தல் ஆணையர் வார்னிங் மிரட்டாதீங்க ஏட்டய்யா================5 ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின்: கட்சியை காக்க, ஜெ.,வும், சசிகலாவும் சந்தித்த சோதனைகள், வேதனைகள், இன்னல்கள் போன்று, உலகில் வேறு எந்தத் தலைவரும் சந்தித்திருக்க மாட்டார்கள்.# கட்சியைக்காக்கவா? சேர்த்து வெச்ச முறைகேடான சொத்தைக்காக்கவா?================
தினகரன்: ஆர்.கே.நகர் தொகுதியில் நான் வெற்றி பெற்றதும், 57 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க, அடிக்கல் நாட்டப்படும். # அடிக்கல் மட்டும்? அப்போ வீடு?


==============

 7 மின் கம்பம் என்ற சின்னத்தை, இரட்டை மின் விளக்கு என, துஷ்பிரயோகமாக பிரசாரம் செய்கின்றனர்.-

 சண்முகம்: சரி , நீங்களும் இரட்டை தொப்பி-ன்னு பிர்ச்சாரம்  பண்ணிக்குங்க , காசா? பனமா? 

=====================

அனைத்து துறைகளிலும், மந்த நிலை நீடிக்கிறது. இதற்கு தீர்வாக, பொதுத்தேர்தலை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.-வாசன் # எல்லா தொகுதிகளிலும் வெவ்வேற கால கட்டத்தில் இடைத்தேர்தல் வந்தா தேவலை


=================


 மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, RK நகரில் பணப் பட்டுவாடா நடக்கிறது -தமிழிசை # அப்போ மோடியின் ஆட்சியில் ஏழைகள் அதிகரிச்ட்டாங்கனு ஒத்துக்கறீங்களா?-


==================

10 . இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழை மட்டம் தட்ட நினைத்தால், புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை, பா.ஜ., அரசு சந்திக்க வேண்டியிருக்கும்.-ஸ்டாலின் # உங்க கட்சி ஆளுங்க ஒட்டின ஹிந்தி போஸ்டரை அவங்க காட்டி  கேலி பண்ணுவாங்களே? பரவால்லியா?

=================

11 பா.ஜ.,வால், சோனியா போன்றவர்களின் தியாகத்தை புரிந்து கொள்ள முடியாது.-EVKS # சரி நீங்க தான் புரிய வைங்க, சோனியாவின் தியாக லிஸ்ட் சொல்லுங்க


===============

12  

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த டெய்லர் கைது #பணம் விநியோகிச்சா ஒரே நாள்ல எலிசபத் டெய்லர் ரேஞ்ச்க்கு சம்பாதிக்கலாம்னாங்களாம்====================

13 பைரவா படம் 14கோடி நஷ்டம் அந்தபணத்தை கொடுக்கவில்லையெனில் அடுத்தபடம் வேண்டாம்!! -விநியோகஸ்தர்கள் # நஷ்ட ஈடு கொடுத்தே விஜய் சொத்து காலி ஆகிடும் போல

================

14

 குற்றவுணர்விலிருந்து மக்களை விடுவிக்கிறேன்!- ஜக்கி வாசுதேவ் பேட்டி # ஆனா பல குற்றச்சாட்டுகளில் மாட்டிக்கறீங்களே?


====================

15 உலகத்துல இருக்குற 50% நோய்களுக்கு அசைவச் சாப்பாடுதான் காரணம்-

ஜக்கி வாசுதேவ் # அப்போ டாக்டருங்களுக்கு வாழ்வாதாரமே அசைவ உணவுதான்னு சொல்லுங்க===================

16 

பீஹாரில், கூட்டணி கட்சியை சேர்ந்த சக, பெண் உறுப்பினரிடம் தவறாக நடந்து கொண்ட, பா.ஜ., துணை தலைவர், லால் பாபு பிரசாத், 'சஸ்பெண்ட் # BJP =பயங்கர ஜொள்ளு பார்ட்டினு ப்ரூஃப்?


==================

17  வாகனத்தை விட்டு இறங்காமல் பிரச்சாரம் செய்த தீபா # அவரு அஜித் ரசிகையா? அவர்தான் திருப்பதில “நான் இறங்கி வர்றவன் இல்லைனு பஞ்ச் டயலாக் பேசுனாரு


======================

18 கட்சியை காக்க, ஜெ.,வும், சசிகலாவும் சந்தித்த சோதனைகள், அதிகம்- பெஞ்சமின்:# கட்சியைக்காக்கவா? சேர்த்து வெச்ச முறைகேடான சொத்தைக்காக்கவா?

==============
19 RK.நகர் தொகுதியில் நான் வெற்றி பெற்றதும், 57 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க, அடிக்கல் நாட்டப்படும்-தினகரன்:. # அடிக்கல் மட்டும்? அப்போ வீடு?

================

20 மின்கம்பம் சின்னத்தை,இரட்டை மின்விளக்கு என, பிரசாரம் -சண்முகம்: சரி , நீங்களும் இரட்டை தொப்பி-ன்னு பிர்ச்சாரம் பண்ணிக்குங்க , காசா? பனமா?

================

0 comments: