Thursday, April 13, 2017

டிராபிக் போலீஸ்க்கு சுக்கிர திசை.

வைகோ வெளியே வந்தபின்,mdmk புதிய பாதையில் பயணிக்கும்.-மல்லை சத்யா # அடிக்கடி பாதையை மாத்திட்டே இருந்தா அடைய வேண்டிய இலக்கை எப்படி அடைவீங்க?


============2 ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் ஜென்மங்கள் திருந்தாது- கங்கை அமரன் # உங்க ஜென்மத்துக்கும் மறக்க முடியாதபடி இந்த தேர்தல் இருக்கும்===========3 ஸ்டாலினுக்கு 4பேர் ஒன்றாக இருந்தால் பிடிக்காது- தினகரன் # அதனாலதான் கோஷ்டி கோஷ்டியா பிரிஞ்சு இருக்கும் காங் கூட கூட்டணி வெச்சுக்கிட்டார் போல===========4 என் வீட்டில் எதுவும் இல்லை!: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி # எல்லா டாக்குமெண்ட்சையும் ரெய்டுல எடுத்துட்டுப்போய்ட்டாங்களா? அடப்பாவமே===========5 ADMKவில் நிலவுகிற அசாதாரண சூழ்நிலை, DMK,வுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது- முரளிதர் ராவ் # BJPக்கு இதனால என்ன சாதகம் ? பாதகம்?===========6 மீனவர்களுடன் தினகரன் சந்திப்பு தலைக்கு ரூ.5,000 # கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுன்னா எண்ணிகொடுப்பாங்க, யார் வீட்டுக்காசோ?அள்ளி இரை அழகேசா============

7 ராமர் கோவிலுக்காக உயிரையும் தருவேன் : உமாபாரதி # இந்த டயலாக்கை எல்லாம் உயிரே படத்துலயே நாங்க பார்த்தாச்சு, வேற வெற


==============8 இனி படம் ரிலீஸாகி 3நாள் கழித்துதான் விமர்சனம் போட வேண்டும்-விஷால் புது 'உத்தரவு' # தியேட்டர்.வாசல்ல நின்னு படம் அவுட்னு சொன்னா?=================

9 காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம் # நான் கூட சொந்தமா யோசிச்ட்டாரோனு நினைச்சேன்.ராயல்டி தந்தாரா?


================

10 ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து தொகுதி மக்களுக்கும் மகிழ்ச்சி


================

11 பங்களாதேஷ் க்கு மோடி அரசு நிதியுதவி # குடிசை தேசம் இந்தியாவுக்கு எப்போ உதவி செய்வாரோ?


=================

12 மக்களை விலைக்கு
வாங்க முடியாது-OPS # உங்களால வாங்க முடியலைன்னா ஒதுங்கிக்குங்க.தினகரன் ,கலைஞர் எல்லாம் லைன்ல வெய்ட்டிங்


===================

13 இடைத்தேர்தலுக்கும் வருமான வரி சோதனைக்கும் சம்பந்தமில்லை - தினகரன் # விட்டா விக்னேஷ் சிவனுக்கும் நயன் தாரா வுக்கும் எந்த பந்தமும் இல்லைம்பாரோ


==================

14 ஒரு திரைப்படம் வெளியாகி 3 நாள்களுக்கு, எந்த ஊடகமும் விமர்சனங்கள் வெளியிடக்கூடாது - விஷால் ஜனங்க பார்த்து நஷ்டப்படட்டும்கறாரா?


==================

15c இனி சரக்கடித்துவிட்டு வண்டி ஓட்டினால் ரூ 10 ஆயிரம் அபராதம்! # டிராபிக் போலீஸ்க்கு சுக்கிர திசை.


===================

16 RKநகரில் பட்டுவாடா செய்யப்பட்டது கறுப்பு பணமா? வெள்ளை பணமா? -ப.சிதம்பரம்# பிங்க் கலர் பணம்.எல்லாம் 2000RS நோட்டு


==================

17 தேர்தல் ரத்து வரவேற்கத்தக்கது: தீபா வீக்னெஸ் வெளில வராது.எஸ்கேப்


================

18 தேர்தல் ரத்தாகும் என தமிழிசைக்கு எப்படி முன்பே தெரியும்?- முத்தரசன் # பின்னால் நடப்பதை முன் கூட்டியே கணிக்கும் பெண் புத்தி பின் புத்தி

=================

19 RK.நகரில்் டெபாசிட் தொகை
15நாட்களுக்குள் பெறலாம்-தேர்தல் ஆணையம் # மறுபடி தேர்தல் அறிவிப்பு வந்தா மறுபடி லைன்ல நின்னு கட்டனும்


=================

20 கட்சியில் குடும்ப அரசியல் செய்தால் என்னதான் தப்பு? பிரேமலதா# அதானே?கலைஞர்,ஜெ,ராமதாஸ் ,னு எத்தனை முன்னோடிகள்?

======================

0 comments: