Wednesday, April 26, 2017

குருவே! புனிதா கூட சண்டை போட்டா அது புனிதப்போரா?புனிதா போரா?

மன்னா!வெண்கொற்றகுடையின் கீழ் ஆட்சி நடக்கிறதா?


எல்லாம் வண்ண மயம்.கலர் கொற்ற குடையின் கீழ் ஆட்சி


=============

2 மிஸ், ஆகாயத்தையே ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கீங்களே? விவசாயம் தழைக்க மழை வருமா?ன்னா?

இல்ல, ஹெலிகாப்டர்ல மாப்ளை வருவாரா?ன்னு


==================


சிலர் கருத்து சொன்னாலே அன்ஃபாலோ பண்ணிடலாம்னு தோணுது 😦

மிஸ்! நீங்க சொன்ன இந்த கருத்துக்கு எத்தனை பேர் அன் ஃபாலோடு?

================


4 நின்று கொண்டே கேட்பவரை விட, நடந்து கொண்டே கேட்பவருக்கு எளிதில் லிப்ட் கிடைச்சிடும்
ஓஹோ.அப்போ ஜாகிங் போனா இன்னும் அதிகவாய்ப்பா?

=================

5 ஆண்களுடைய taste

பச்சை கலர், ரோஸ் கலர்ல தான்
Dress Choose பண்ணுவாங்க போல
என்ன பண்ண?பொண்ணுங்க பிங்க்கி பிங்கி பாங்கியா இருக்காங்களே?மிஸ்!===============

6 சார்.ஒரு டைரக்டரா உங்க திறமையை முதன் முதல்ல பார்த்து வியந்தது யாரு?


வேற யாரு?ஹீரோயின் ,தோழி கேரக்டர் இப்டி


===============

7 தலைவரே! வைகாசி பொறந்தாச்சு பட ஹீரோயின் வீட்டுக்கு வண்டியை விடு ன்னீங்ளே எதுக்கு?


காவேரி பிர்ச்னையை தீர்க்கனும்னாங்க.நேரில் போய்விசாரிப்போம்


=================

8 அதிமுக பேரை பயன்படுத்தக்கூடாது


சரி.சசிகலா திமுக ஓகேவா?
யோவ் ."சதி"முக னு அர்த்தம் வந்துடுமே?


================


9 ரொம்பநேரமா ஒரு அழகான பையன் நம்ம இருக்க பக்கம் தொடர்ந்து பார்த்தா என்ன அர்த்தம்?

மிஸ்! அவன் செயின் ஜெயபாலா இருக்கும், நகை பத்திரம்

==================


10 நம்ம பதிவை வேற ஒருவர் போடும் போது
நிறைய லைக் வாங்குதே என்ன காரணமா இருக்கும்?

மிஸ்! நம்ம ஊர்ல தேவா ரசிகர்கள் அதிகம், ஐம்பெருங்”காப்பி”யங்கள்க்கு தான் மவுசு

=================

11 தலைவரே! நம்ம எதிரி கட்சி மூணா பிரிஞ்சிடுச்சு.நாம ஜெயிச்சிடுவோமா?


ஜெயிச்சா ஜனநாயகம் வென்றது.தோத்தா பணநாயகம் வென்றதுனு சொல்வோம்

=============

12 ஜெ கொலை வழக்கில் சசி மாட்டினா கவுண்டமணி ரசிகரா இருக்கும் ஜட்ஜ் என்ன சொல்வார்?


அடங்கொண்ணியா!
நீ தான் அம்மாவைக்கொன்னியா?

=================

13 கட்டம் சரியா இருக்கிறவன் தான் கூட்டத்தை ஆள்வான்!னு சொல்றாங்களே?நிஜமா?


சதித்திட்டம் சரியா தீட்டுபவனும் ஆள்வான்


=================

14 தலைவரே! தொப்பி யோட ஓட்டு கேட்கப்போனா கோமாளி னு மீம்ஸ் போடுவாங்களே ?


நாம கோமாளியா இருந்தாலும் ஜனங்க ஏமாளி யா இருக்காங்களே? அது போதாதா?


===============

15 சார்.கேன்சர் பேஷண்ட்ஸ் ரிலாக்ஸ் செய்துகொள்ளும் பகுதி னு இருக்கே,எதுக்கு ?


நம்ம தியேட்டர்ல தம் அடிக்க தனி இட வசதி உண்டு


================

16 மேடம்.வேட்பு மனுவில் உங்க புருசன் பேரை குறிப்பிடலையே ஏன்?


நாங்க ஆச்சாரமான பேமிலி.புருசன் பேரை சொல்லமாட்டோம்


==============

16 டியர்.சீரியசா பேசிட்டிருக்கேன்.இடையில் காமெடி பண்ணா தொலைச்சிடுவேன்


மேரேஜ் ஆனதுல இருந்து டெய்லி எதையாவது தொலைச்சுட்டேதானே இருக்கே?

==================

17 சீரியசா பேசிட்டிருக்கும்போது இடையில் காமெடி பண்ணா எனக்குப்பிடிக்காது


ஓஹோ.அப்போ இடையில் கிச்சு கிச்சு பண்ணா பிடிக்குமா?


================

18 திராவிடத்தை விட ஆரியம்தான் சிறந்தது

 எப்டி சொல்றீங்க தலைவரே?

 ஆர்ய பவன் எல்லா ஊர்லயும் இருக்கு, திராவிட பவன் அந்த அளவு இருக்கா?


===================

19 நாடு பூரா கையேந்திபவன் களுக்கு தடை வரப்போகுதா?ஏன்?எதுக்கு?எப்டி?

நடப்பது பாஜக ஆட்சி."கை"யேந்தி பவன் காங்கிரசைக்குறிக்குதுஇல்ல?


==================

20 குருவே! புனிதா கூட சண்டை போட்டா அது புனிதப்போரா?புனிதா போரா?

2 பேரும் இஷ்டப்பட்டு சண்டை போட்டா அது புனிதப் போர்


====================

0 comments: