Wednesday, April 05, 2017

பொது மக்களுக்கு அடுத்த மாசம் சுக்கிரன் திசை

உலகில் 30 கோடிபேர் மன அழுத்த நோயால் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு # ஆஃபீஸ்ல மேனேஜர் , வீட்டில் சம்சாரம் திட்டினால் கவலைப்படக்கூடாது

================

2 சாலை விபத்துகள் - நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் - பொன்.ராதா # ஓஹோ, அதைக்குறைக்கத்தான் மைல்கல்களில் ஹிந்தி எழுத்துக்களா?

==============

3 என்னதான் குட்டி கரணம் போட்டாலும் எதிர் அணி டெப்பாசிட் இழப்பது உறுதி” - ஸ்டாலின் # ஆளுங்கட்சிக்கு எதிர் அணி ன்னா நாமதாம் தலைவா

===============

4 200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டம்! # அயய்யோ.அப்போ பழைய 100ரூ 50ரூ செல்லாதுன்னு சொல்லிடுவாங்களோ?

=============

5 கூட்டுறவு வங்கிகளில்விவசாயிகள் பெற்ற கடனைதள்ளுபடி செய்ய சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவு# சபாஷ்.இதன் மூலம் 4லட்சம் பேர் பயன் அடைவர்

===========

6 வரும் 15ந்தேதிக்கு பின்னர் OPS தனது பழைய தொழிலை பார்க்க சென்றுவிடுவார்"-டிடிவி தினகரன் அதிரடி # அவரோட பழைய பொறுப்பு முதல்வர் பதவிதான்

==============

7 மே 14-ந் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் - உயர்நீதி மன்றம்.
#,ரைட்டு.பொது மக்களுக்கு அடுத்த மாசம் சுக்கிரன் திசை

===============

8 நான் வகிக்கும் துணைசபாநாயகர் பதவி எளிதான ஒன்றல்ல,CM பதவிக்கு இணையான ஒன்று-தம்பிதுரை # இதே போதும்கறாரா?சிஎம் பதவி வேணும்"கறாரா?"

===============

9 அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது # "ஹைய்யா" கண்ணு வாழ்த்துகள்

=============

10 சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு சென்ற புலி இந்தி மொழி புரியாமல் தவிப்பு# "புலி"க்கு சென்ற இடம் எல்லாம் தவிப்பு+…தவிர்ப்பு

================

11 இந்தி எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் எங்களை வம்புக்கு இழுக்காதீர்-டி ஆர் பாலு# மீறீ இழுத்தா?
அதான் இழுக்காதீங்கனு சொல்லிட்டனே?

==============
12
12 என் கைதுக்காக தொண்டர்கள் யாரும் மறியல் செய்யக்கூடாது-வைகோ# தலைவரே!வீட்ல பொரியல் செய்யலாமா ?அதுவும் கூடாதா ?

=================

13 விகாந்தை பகைத்து யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை -பிரேமலதா#,ஏற்கனவே ஜெ மரணத்தில் மர்மம்கறாங்க.நீங்க வேற வாயைக்குடுத்து மாட்டிக்காதீக

============

14 பதவி ஆசையில் யாராவது ஜெ. பெயரைக் கூறிக் கொண்டு வந்தால், ஓட ஓட விரட்டியடியுங்கள் : தீபா #,சரி.ஓடுங்க.விரட்றோம்

===============

15 நாட்டை சுத்தம் செய்யும் வரை வீட்டிற்கு போகமாட்டேன் என தாயிடம் சத்தியம் செய்துள்ளேன் -விஷால் ஆத்மில சேரப்போறார் போல

================

16 வால்மீகி பற்றி சர்ச்சை பேச்சு.. இந்தி நடிகை ராக்கி சாவந்த் அதிரடி கைது! இருந்த ராக்கி மார்க்கெட் இனி குப்பு னு ஏறும்

===============

17 சாயக்கழிவால் அபாயம்; புற்றுநோய் தலைநகராக மாறிவரும் ஈரோடு! திருப்பூர்,பள்ளிபாளையம் ,குமாரபாளையம் மக்களும் ஜாக்கிரதை

===================

18 கடைந்தெடுத்த அரசியல் பித்தலாட்டக்காரர் ஓபிஎஸ் ... கி.வீரமணி
#3 தடவை தன் அதிர்ஷ்டத்தை நம்மிடம் காண்"பித்த லாட்டரி"க்காரர்

==============

19 பொதுமக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையால் மதுசூதனன் வெற்றி பெறுவார்-OPS # அப்போ மதுசூதனன் மேல யாருக்கும் நம்பிக்கை இல்லைன்றீங்களா?

=================

20 ஜெ மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யக்கோரிய கீதா ஆஜராக ஆணை: ஆணை.அவர் உயிருக்கு பாதுகாப்பு யார்தருவார்?


==================


0 comments: