Saturday, April 22, 2017

தளபதி தலைவராக மாறிக்கொண்டிருக்கிறார்!!??

 சார், தளபதி தலைவராக மாறிக்கொண்டிருக்கிறார்னு சிலர் சொல்றாங்களே?

வன்முறை தான் ஒரு தலைவருக்கான தகுதி எனில் அப்படிப்பட்ட தலைமையே தேவை இல்லை

===================

தலைவரே! பாக்கெட்டை மட்டும் கரெக்டா தனியா அப்டி கிழிக்க முடியுமா?ஆல்ரெடி பிளான் பண்ணி லூஸ் ஸ்டிச் ல தெச்ச சட்டைதான் அது, சாணக்கியத்தனம்

=============

3 தலைவரே! சர்ட் பாக்கெட்டை அவங்க கிழிச்சாங்களா? நீங்களே கிழிச்சுக்கிட்டீங்களா?நமக்கு நாமே திட்டம் தான்.


===========

4 ஷூ கால்களால் அவங்களை நீங்க உதைச்சீங்களா?ஆமாங்க. வெறும் காலால உதைச்சா எங்களுக்கு தான் வலிக்கும்


==============================

5 காய்கறி வெட்டும் போது கை வெட்டிக்கிட்டேன்அடடா.ஒரு லேடீஸ் பிங்கரை வெட்டும்போது லேடீஸ் பிங்கர்சை வெட்டிக்கொண்டதே அடடே!

===============

6 தலைவரே!சட்டசபை கூட்டம் நடக்கும் முன் கட்சி மீட்டிங் நடந்ததே.என்ன பேசுனீங்க?
என்னுதைத்தவிர யார் சட்டையும் கிழிஞ்சிருக்கக்கூடாது னு=
====================

7 தலைவரே! முதல் கையெழுத்து எந்த திட்டத்துக்கு போடுவீங்க?யோவ்.நக்கலா?எந்த திட்டமா இருந்தாலும் கைநாட்டுதான்


==============

8 நீங்க ஜெயில்ல எந்த வேலையும் செய்யத்தேவை இல்லை.அட்லீஸ்ட் எதுனா சதி வேலை யாவது செய்யறேனே?


=============

9 எங்க ஏரியால எந்தெந்த பிகர்ங்க எல்லாம் அதிகாலை வாக்கிங் போறாங்கன்னு ஒரு கணக்கெடுப்பு எடுத்தாச்ஓ.ரகசிய"WALK"கெடுப்பு?


====================================

10 கவர்னர் சார்.என் சட்டை கிழிஞ்சிடுச்சு.ஆட்சியை கலைக்கனும்இந்தாங்க 15 ரூபா.தெச்சிக்குங்க.இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?


===========

11டெய்லரே.2 வெள்ளை சர்ட் தைக்கனும்.ஸ்டிச்சிங் சார்ஜ் எவ்ளோ?நார்மலா தைக்க 150ரூ ,கை வெச்சதும் கிழியனும்னா 175 ரூ

=====================

12 சார்.இலக்கியம் படைச்சவங்க ,படிச்சவங்க நல்லவங்களாத்தானே இருப்பாங்க?ஹிட்லர் கூட கவிதை எழுதி இருக்காரு.அவரு நல்லவரா?


=================

13 சார்.ரிசார்ட் பில் 60 லட்சம் வந்திருக்கே?அவ்ளோ சாப்ட்டாங்களா?மாநிலத்தையே 5வருசம் சாப்பிடறவங்க 10 நாள் பில் அவ்ளோ வராதா?====================

14 ஜெ கொலை வழக்கை 4 வருசம் கழிச்சுத்தான் விசாரிக்கனும்ஏன்?
இப்பவே தீர்ப்பு வந்தா ஏக கால தண்டனை வசதில பார்ட்டி தப்பிச்சிடும்


==================

15 கமல் மேல் மரியாதை கூடுதுனு ஒரு ரஜினி ரசிகையே ஸ்டேட்டஸ் போட்டிருக்கு.அப்டியா?அவங்க அன்பே சிவம் படத்தை டிவி ல பாத்தாங்களா?தியேட்டர்லயா?


==============

16 தலைவரே! கால வரையற்ற உண்ணா விரதம் இருக்கத்தயாரா?கழக நெறிகளின் படி அதிகபட்சம் 4 மணி நேரம்தான் விரதம் இருப்போம்


==================

17 ஜட்ஜ் =10 கோடி அபராதம் கட்டலைன்னா மேலும் 13 மாசம் ஜெயில்


கைதி= யுவர் ஆனர்.அப்போ 40 கோடி + 10 கோடி =50 கோடி கட்டிட்டா ரிலீஸ்?

=================

18 விஜய் ஆண்ட்டனி சார்.எமன் படத்தை ஏன் பிப் 24 ரிலீஸ் பண்றீங்க?


மோடி மட்டும் அன்னைக்கு தமிழகம் வரும்போது "எமன்" வரக்கூடாதா?


===============

19 வாட்ஸப்ல வரும் நீள் கவிதை என்னுதிலல


எப்டி சார் சொல்றீங்க. ? ஆதாரம்?
படிச்சா ஈசியா புரியுதே?இதுல இருந்தே தெரில?


=================

20 சார்.அடிக்கடி உங்க ட்விட்டர் ஹேண்டில் நேம் மாத்தறீங்களே?ஏன்?


அதுவா ?ஆளை மாத்தும்போது பேரை மாத்திக்குவேன்.கோகுலத்து கண்ணா பார்முலா


===================

0 comments: