Sunday, April 30, 2017

சசிகலா வுக்குப்பிடிக்காத சத்யராஜ் படம் எது ?

குருஜி!யோகா செஞ்சா என்ன என்ன பலாபலன்கள் கிடைக்கும்?


தெரில சிஷ்யா! யோகா கத்துக்கொடுத்தா நிலபுலன் களை,அரசியல்வாதிகளை வளைச்சுப்போடலாம்


=================
2 ஆளுங்கட்சியின் பினாமி ஆட்சி தொடரும்வரை போராட்டம் செய்வோம்


பிரமாதம் தலைவரே! நம்ம ஆட்சி அமைஞ்சா?
வழக்கம் போல் ஊழல் செய்வோம்


=================

3 மனசு வருத்தப் படும் போதெல்லாம் காபி குடிக்கணும்.டியர்


குடி.ஆனா நீயே கிச்சன் ல போய் போட்டு குடி.


==================

4 மிஸ்! உங்க தங்கச்சியோட அக்கா போன் நெ வேணும்


எதுக்கு?
கடலை போடத்தான்.என்னைப்பத்தி எதும் கேட்காதீங்க ன்னு பயோ ல போட்டிருக்கீங்களே?


=====================

5 குருவே!அரசாங்கத்துக்குச்சொந்தமான வனப்பகுதியை ஆக்ரமித்தது தப்பில்லையா?


சிஷ்யா! அத்தனைக்கும் ஆசைப்படு ன்னு அன்னைக்கே சொல்லிட்டனே?


============

6 தாலியே தேவை இல்ல நீ தான் என் பொஞ்சாதி


தாலி ஏன் தேவை இல்லை?
அதுக்கு 5 பவுன் ஆகும்.செலவு 1 1/4 லட்சம் ஆகும்


===========

7 ஏய் மிஸ்டர்.என் பேரு தேன்மொழி, ஏன் ஹனிலேங்க்வேஜ் னு கூப்பிடறீங்க?


மீத்தேன் னு சொன்னா பிரச்னை வரும்னு ஹைட்ரோ கார்பன் சொல்றமே?


===========

8 சார்.படிச்ச டிகிரியை பேருக்கு முன்னால போடனுமா?பேருக்குப்பின்னாலயா?


இந்தக்குழப்பம் வரக்கூடாதுனுதான் அரியர் வெச்சேன்


============

9 இன்ஸ்பெக்டர்.என்னை ஜாதி ரீதியா நெட் ல விமர்சிக்கறாங்க.


ஓ.எந்த கட்சி நீங்க?

முக்குலத்தோர் கட்சி
யோவ்


===============

10 MGR = தீபா புதுக்கட்சி பேர் எனக்குப்பிடிக்கல


ஜெ =ஏன்?
எம்ஜிஆர் -அம்மா பேரவை ன்னா ஒரு கிளுகிளுப்பே இல்லையே?எங்க அம்மா நினைவில்ல வருது?


===================

11 பாலா டைரக்ட் பண்ணி கடைசியா ஓடின படம் எது


எந்த டைரக்டர் டைரக்ட் பண்ணாலும் அது ஆரம்பத்தில் இருந்து தானே ஓடும்? எப்டி கடைசியா ஓடும்?


===================

12 தலைவரே! பிறந்தநாளில் சால்வைக்கு பதில் புத்தகம் வழங்கிடுங்கள்.!னு ஏன் சொல்றீங்க?

சால்வையை ஜவுளிகடைல பாதி ரேட்க்குதான் வாங்கறான், புக்னா எக்சிபிசன்ல ஃபுல் ரேட்க்கு வித்துடலாமில்ல?


==================

13 சார், தமிழகத்தை யாரால் காப்பாத்த முடியும்?தீபா?OPS?
கூடவே இருந்த ஜெ உயிரையே அவங்களால காப்பாத்த முடியல.இவங்களா நாட்டைக்காப்பாத்தப்போறாங்க?

======================
14  இந்தியால எதிர்க் கட்சி காரன் எப்பவும் யோக்கியன் ஆயிடுறான்.எப்டி?


ஆளுங்கட்சியா யார் வந்தாலும் அயோக்கியராகி விடுவதால்

=============

15 =====

மாப்ளை கண்டிஷன் போடாததால கல்யாணத்தை நிறுத்திட்டேன்

 ஏன் மேடம்?

 கார்ல ,  வீட்ல எங்கயும் ஏர் கண்டிஷன் போடலை., பேசிக்கலி ஐ ஆம் ஏசி ரோசி


==================


16 ஹோட்டல்ல இருந்து அந்த பிஜேபி பார்ட்டி தலை தெறிக்க ஓடறாரே? ஏன்?

ஹைட்ரோ கார்பன் பேப்பர் ரோஸ்ட் ஸ்பெஷல் இருக்கு, வேணுமா?னு சர்வர் கேட்டாராம்


==================

17  வெயிட் கல்லே போடாம, தராசில் நிறுத்தாம ரேஷன் ல பொருள் தர்றீங்களே?


நியாயவிலைக் கடைகளில் பாமாயில்,
பருப்பு வழங்குவதை ”நிறுத்தக்கூடாது”ன்னாங்க


====================

18 ஆதி யோகி சிலை ஏன் எடுபடலை?

 சிம்ப்பிள் லாஜிக் , விஜய் நடிச்ச ஆதி யும் அட்டர் ஃபிளாப், அமீர் நடிச்ச யோகி யும் அவுட், ஆதி யோகி மட்டும் எப்டி ஹிட் ஆகும்?


===================

19 சசிகலா வுக்குப்பிடிக்காத சத்யராஜ் படம் எது ?

 திருமதி பழனிச்சாமி


=======================

20 மாமா.பொண்ணு வாசல் தெளிச்சு கோலம் போடுமா?

என்ன இப்டி கேட்டுட்டீங்க?நெடுவாசல் லயே போராட்டம் பண்ணுது.இத செய்யாதா

==================

0 comments: